Friday, 11 May 2012


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடை கால முகாம்


4MAY
இம்மாதம் கோவை சந்தேகவுண்டன் பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஈஷா அவுட்ரீச் சார்பில் ஏப்ரல் 30 முதல் மே 2 வரை கோடைகால முகாம் நடைபெற்றது.
ஈஷா வித்யா ஏற்கனவே 7 பள்ளிகளை தமிழக கிராமப்புறங்களில் ஆரம்பித்து நடத்தி வருகிறது. ஈஷா வித்யா பள்ளிகள் ஆங்கில வழிக்கல்வியை கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் தரமான முறையில் வழங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கல்வி உதவித்தொகை மூலமாக படித்து வருகின்றனர்.
ஈஷா வித்யாவின் சீரிய முயற்சியை அடுத்து ஈஷா அறக்கட்டளையின் சமூகநலப் பணிகளுக்கான ஈஷா அவுட்ரீச் அமைப்பு, கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் மொத்தம் 26 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்திருக்கிறது. இந்தப் பள்ளிகளின் கல்வித் தரத்தினை மேம்படுத்தி, சுமார் 25,000 பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் தரமான கல்வி, மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் கணித அறிவினை மேம்படுத்துதல், இப்பள்ளிகளில் சரியான ஆசிரியர்-மாணவர் விகிதத்தை பராமரித்தல், திறன் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கி, மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களை பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவித்தல், மாணவர்களின் உடல், மனம் மற்றும் பொது இயல்பு ஆகியவற்றை யோகா, விளையாட்டுக்கள், நுண்கலைப் பயிற்சிகள் மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வுக் கல்வி போன்றவற்றின் மூலம் மேம்படுத்துதல், சமூக நலப் பணித் திட்டங்கள் மூலம் அவர்களுக்குள் சமூகப் பொறுப்பினை ஏற்படுத்துதல் மற்றும் இப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பராமரிப்பதில் உதவுதல் என பல செயல்பாடுகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இப்பள்ளி மாணவர்களின் பொது மற்றும் வாழ்க்கை அறிவை மேம்படுத்துவதற்காக கோடைகால சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் கோவை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 3 நாள் முகாம் ஏப்ரல் 30 முதல் நடந்தது. கோவை மாவட்டத்தின் 7 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு, கலை, கைத்தொழில், யோகா, விளையாட்டு, ஓவியம், வர்ணம் தீட்டுதல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். மேலும் இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வுக்காக, ஈஷா வித்யா பள்ளி மாணவர்களுடன் இணைந்து, கோவை அருகே நீலகிரி வனச்சரகத்தில் அமைந்திருக்கும் கல்லார் தோட்டக் கலைப் பண்ணைக்கு சுற்றுலா சென்று வந்தனர்.
அங்கு மாணவர்களுக்கு காடுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இயற்கையில் அனைத்து உயிரினங்களும் எப்படி ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன என்றும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் மற்ற உயிரினங்களின் வாழ்க்கைச் சூழலை குலைக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டியவற்றைப் பற்றியும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாம் மரங்களைப் பாதுகாக்கவில்லை, மரங்கள்தான் நம்மை பாதுகாக்கின்றன என்பதை மாணவர்கள் இங்கு அனுபவப்பூர்வமாக உணர்ந்தனர். நாம் அனைவரும் இயற்கையுடன் நெருக்கமான நட்புணர்வுடன் இருப்பதற்கு என்ன செய்வது என்பதைப் பற்றி தங்களது கருத்துக்களை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். பிறகு அனைவரும் அந்த பண்ணையை சுற்றிலும் மண்டிக் கிடந்த பிளாஸ்டிக் மற்றும் மற்ற குப்பைகளை சுத்தம் செய்தனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி பாடத்திட்டத்தைத் தவிர, வாழ்க்கைக்குப் பயன்படும் மற்ற விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும், தங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வரவும் இந்த முகாம் மிகவும் உதவி செய்தது.
இதே போன்ற மற்றொரு முகாம் தர்மபுரி மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்காக வரும் மே 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களை எப்போதும் தடுமாற வைக்கின்றன. நவீன வாழ்க்கை என்று சொல்லப்படும் தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மக்கள் துன்பப்படுகின்றனர். பள்ளிப் பருவம் ஒரே பதற்றம், விடலைப்பருவமோ பெரும் பாதிப்பு, நடு வயதோ தாங்க முடியவில்லை, முதுமைப்பருவம் ஒரே வெறுப்பு, இறப்போ கடும் பயம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமுமே மக்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில் வாழ்க்கையின் மாற்றத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள கஷ்டப்படுகிறார்கள். வாழ்க்கையின் இயல்பே மாற்றம்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அசைவின்மையை (stillness) நீங்கள் அனுபவித்திருந்தால், பின் மாற்றம் என்பதும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். அந்த அசைவின்மையோடு உங்களுக்குத் தொடர்பே இல்லாமல் இருப்பதால்தான் ஒவ்வொரு மாற்றமும் உங்களுக்கு துன்பத்தைத் தருவதாக இருக்கிறது.
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பயப்படுவதால்தான் அதை முன்னதாகவே கண்டு கொள்ள மக்கள் தற்போது வானத்து நட்சத்திரங்களைப் பார்க்கின்றனர், குனிந்து கை ரேகைகளைப் பார்க்கின்றனர். உங்களிலேயே உள்ள அசைவின்மையை ஒருமுறை நீங்கள் சுவைத்துவிட்டால், பிறகு மாற்றங்கள் உங்களைத் துன்புறுத்தாது. மாற்றம் என்பது மாறும் தன்மை கொண்டது. அசைவின்மை என்பது நிலைத்த தன்மை கொண்டது, விழிப்புணர்வைச் சார்ந்தது.
எனவே அந்த அசைவின்மையை, விழிப்புணர்வை நீங்கள் சுவைக்க முடிந்தால் பிறகு மாற்றம் நிகழும்போதும் அதை உங்களால் கொண்டாட முடியும். எனவே அந்த விழிப்புணர்வைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டும் வருடமாக இந்தப் புத்தாண்டு உங்களுக்கு அமையட்டும்.
அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்பும் அருளும்,

ருவர் உங்களுக்கு உயரதிகாரியாக இருக்கிறார் என்றால், அவர் ஏதோ ஒரு வகையில் உங்களை விட தகுதி பெற்றிருப்பதால்தான் அவர் அங்கு இருக்கிறார். அவரை விட நான் திறமையானவன் என்று கூட உங்களை நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனாலும் அந்த அதிகாரி அந்த பதவிக்கு வருவதற்காக ஏதோ ஒரு தகுதியை, திறமையை, செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் ஏதோ ஊழல் செய்துதான் அந்த பதவியை அடைந்திருந்தாலும், குறைந்தபட்சம் ஊழலைப் பயன்படுத்துவதில் அதிகத் திறமையானவராக இருக்கிறார். ஏதோ ஒரு வகையில், சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அவர் திறமையானவராக இருப்பதால்தான் அந்தப் பதவியில் இருக்கிறார்.
அவர் அந்தப் பதவியில் இருப்பதாலும், திறமை மிக்கவர் என்பதாலும், எல்லாவற்றையும் சரியாக செய்வார் என்பதில்லை. நீங்களுமே எல்லாவற்றையும் சரியாக செய்யும் வாய்ப்பில்லை. இந்த உலகத்தில் அப்படிப்பட்டவர் யாருமே இல்லை. அவர் அந்தப் பதவியில் இருப்பதற்குக் காரணம், உங்களை விட அதிக விஷயங்களை அவர் சரியாகச் செய்வார் என்ற எதிர்பார்ப்பிலும் மற்றும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் உங்களை விட அவர் நன்றாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கலாம்.
ஒரு டைப்பிஸ்ட் மிக நன்றாக டைப் அடிப்பார், ஆனால் அவரது உயரதிகாரிக்கு நன்றாக டைப் அடிக்க வராது. எனவே, இந்த டைப்பிஸ்ட், ‘இவருக்கு சரியாக டைப் கூட அடிக்கத் தெரியவில்லை, இவர் எனக்கு உயரதிகாரியா?’ என்று கூட நினைக்கலாம். அவர் உங்களுக்கு உயரதிகாரி என்பதால் அவர் உங்களை விட நன்றாக டைப் அடிக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவருக்கு டைப்பிங்கைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் உங்களுக்குத் தெரியாத மற்ற பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பதனால்தான் அவர் உங்களுக்கு உயரதிகாரியாக இருக்கிறார், இல்லையா?
எனவே அவர் உயரதிகாரியாக இருப்பதைப் பற்றிய கேள்வி, அவரது குறிப்பிட்ட சில திறமைகளையும், ஒட்டு மொத்த பார்வையையும் பொறுத்துதான் அமைகிறது; பெரும்பாலான சமயங்களில் ஒரு உயரதிகாரி குறிப்பிட்ட ஏதாவது ஒரு விஷயத்தில் அதிகத் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனாலும் எல்லாவற்றைப் பற்றியும் அவருக்கு ஒரு மேலோட்டமான கண்ணோட்டம் இருக்கிறது. மக்களை ஒன்று சேர்த்து அவர்களிடம் வேலை வாங்கும் திறமை அவரிடம் இருக்கிறது. உங்களிடம் தனிப்பட்ட திறமைகள் இருந்தாலும், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துச் செய்வதில் நீங்கள் திறமை குறைந்தவராக இருக்கலாம். உங்களுக்கு உண்மையிலேயே எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து விஷயங்களை சாதிக்கும் திறமை இருந்தால், இயல்பாகவே, உங்கள் வாழ்க்கையில், இதே நிறுவனத்திலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ அத்தகைய பதவிக்கு உயர்வீர்கள். உங்களை யாரும் தடுக்க முடியாது, இல்லையா?
எனவே, நீங்கள் ஒரு பதவியில் இருக்கும்போது, உங்கள் உயரதிகாரியைப் பற்றி குறை சொல்லாமல், நீங்கள் இல்லாவிட்டால் உங்கள் உயரதிகாரியும், அலுவலகமும் இயங்க முடியாது என்கிற அளவுக்கு மிக நன்றாக பணியாற்றுங்கள். உங்களை அவர்கள் தவிர்க்க முடியாத அளவுக்கு செய்து விடுங்கள். இப்படி செய்தால், அதிகாரம் தானாக வரும். மாறாக உங்கள் வேலைகளைச் செய்யாமல் குறைசொல்லிக் கொண்டிருந்தால், ‘இந்த மனிதன் ஒரு முட்டாள், இவருக்காக நான் ஏன் மெனக்கெட்டு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்?’ என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், உங்களை அந்த நிறுவனமும், உங்கள் உயரதிகாரியும் எப்போது வேண்டுமானாலும் சுலபமாக வெளியேற்றிவிட முடியும். நீங்கள் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது என்ற நிலையை உருவாக்குங்கள். அந்த அளவுக்கு உங்கள் பயன்பாடு இருக்க வேண்டும். அதுதான் வளர்ச்சிக்கு வழி. யாரைப் பற்றியாவது குறை கூறிக் கொண்டிருந்தால், நீங்கள் வளர மாட்டீர்கள்.
உயர்ந்த பதவிகளை அடைந்த மனிதர்கள், யாரைப் பற்றியும் குறை சொல்லி வளரவில்லை. அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதால்தான் வளர்ந்தார்கள். நாமும் கூட நமது திறமைகளை சிறப்பாகவே வெளிப்படுத்தியிருப்போம். ஆனாலும் அனைவரது திறமையும் ஒரே அளவில் வெளிப்படுவதில்லை. எனவே ஒவ்வொருவரும் அவரது திறமைக்கேற்பவே வளர்வார்கள்.
யாருடனாவது உங்களை எப்போதும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்காதீர்கள். ஏனென்றால் நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுக்கும் மேலே யாராவது ஒருவர் இருந்து கொண்டேதான் இருப்பார். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு பெரிய அளவில் வளர்ந்தாலும், யாராவது ஒருவர் கண்டிப்பாக உங்களுக்கும் மேலே இருப்பார். அதனால் எப்போதுமே உங்களுக்கு ஏதாவது குறை இருந்து கொண்டேதான் இருக்கும். ‘இந்த மனிதர் என்னளவுக்கு திறமையானவராக இல்லாவிட்டாலும், எப்படி என்னை விட உயர்ந்த நிலையில் இருக்கிறார்’ என்று சிந்தித்துக் கொண்டேதான் இருப்பீர்கள்.அதனால் எங்கிருந்தாலும், மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள்.
அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு நூறு சதவீதம் செயல் புரிந்தால், உங்கள் நிறுவனத்துக்கும், உயரதிகாரிக்கும், அந்த சூழ்நிலைக்கும் நீங்கள் தவிர்க்க முடியாதவர் ஆகிவிடுவீர்கள். இதனால் நீங்களும் வளர முடியும். இப்போதிருக்கும் அதிகாரியைவிட நீங்கள் அதிகத் திறமையை வெளிப்படுத்தினால், எப்படியும் உங்கள் நிறுவனம் உங்களை அந்த இடத்திற்கு நியமிப்பார்கள்.

கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். 

கணவன், மனைவி மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசை தான். அது சிலருக்கு எளிதாகவும், அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.
* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை...? 

* கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன..?

* குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி..?

* குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன..?

* வரவு, செலவை வரையறுப்பது எப்படி..?



குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....?

1. வருமானம்.
2. ஒத்துழைப்பு.
3. மனித நேயம்.
4. பொழுதுபோக்கு.
5. ரசனை.
6. ஆரோக்கியம்.
7. மனப்பக்குவம்.
8. சேமிப்பு.
9. கூட்டு முயற்சி.
10.குழந்தைகள்.



கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு, மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.



மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...? 

1. பள்ளி, அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக்கூடாது.
8. அதிகாரம் பண்ணக்கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக்கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக்கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்து பேசக்கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராக குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேசவேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையை கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாக சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்து கொள்ள வேண்டும்.



பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி...?

தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.

1.சுயமாக சிந்திக்க, சுயமாக செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். 2.படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்கு பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
3.குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டு விடவும் கூடாது.
4.குழந்தைகளுக்கு அன்புப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப்படுத்தவேண்டும்.
5.’நீ ராசா அல்லவா..? ராசாத்தி அல்லவா..?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும்.
6.“மக்கு,மண்டு,மண்டூகம்” போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.
7.பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.



மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது.....?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால் தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக "டிக்" செய்து கண்டுபிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கை காப்பாற்ற தவறுதல்.
4. விரும்பியதை பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இல்லை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாக பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.



உங்கள் பங்கு என்ன...?

உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து, இல்லாததை கொண்டு வர வேண்டும்.

1. அன்பாகப் பேசுவது.
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5.சொன்னதை செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
10. பணிவு.
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு.
16. சிறிய விசயங்களைக் கூட பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாக பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பது.


எதற்கும் யார் பொறுப்பு.....?

நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு.
அன்றாடம் அனேகம் பேரை சந்திக்கிறோம். உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா..?
பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன.
விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை..?

நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற, பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்து கொள்ள பத்து கட்டளைகள்.



பத்து கட்டளைகள்.

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள்.
8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.


“வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்”

Thursday, 10 May 2012

ோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர். இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.

பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.

மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர விஸ்கி அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது. வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.

ஆப்பிளிலுள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்கி குடற்பாதையிலுள்ள நுண்கிருமகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட வாய் மற்றும் தொண்டைப் பகுதியிலுள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன. வயதானவர்களுக்கு ஆப்பிள் மேற்தோலானது செரிக்கக் கடினமாக இருக்குமென்பதால் மேற்தோலை நீக்கி உட்கொள்வது நல்லது. ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டாம் என்பது ஆங்கில பழமொழி. நீர்ச்சத்து ஏராளமாக உள்ள ஆப்பிள் பழத்தை கோடைக்காலத்தில் நன்கு உட்கொள்ளலாம். இதில் ஏராளமான மாவுச்சத்து நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித சம உணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகள் ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.

Tuesday, 8 May 2012

 மூட்டைப் பூச்சியைப் போல் பிறரைத் துன்புறுத்தி வாழக்கூடாது. எலியைப்போலத் திருடி வயிறு வளர்க்கக் கூடாது. கரையான்களைப் போல் பிறர் பொருளை நாசப்படுத்தி வாழக்கூடாது. தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுவதே அமைதியான வாழ்க்கை.

* நல்ல நூல்களை சிரமப்பட்டு படிக்க வேண்டும். உயர்ந்தோருடன் பழக வேண்டும். ஆசிரியருக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஞானமும் கல்வியும் பெற வேண்டுமென்றால், ஒரு பெண் தன் கணவனைக் கொன்றுவிட்டுப் பிள்ளை வரம் கேட்ட கதை போலாகும். நல்லாசிரியன் ஒருவனை நாடிப்பெறும் கல்வியே ஞானத்தை கொண்டதாகும்.

* குடும்பம் மரத்தைப் போன்றது. அதற்கு வேர் மனைவி, அடிமரம் கணவன், கிளைகள் குழந்தைகள். பலவித பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் நிழல் தந்து, மரம் உறைவிடமாக உதவுவது போல், குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்.

* நல்ல உணவுகளை உண்பதால் உடல் வளரும். நல்ல நூல்களைப் படிப்பதால் உணர்வு வளரும். நல்ல உள்ளத்துடன் சதா இறைவனை நினைப்பதனால் உயிர் வளரும். இம்மூன்றும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள்.

*எப்போதும் இறைவனின் நினைவு வேண்டும். அது முடியவில்லையானால் எழுகின்ற போது, சாப்பிடும் போது மற்றும் படுக்கும் போதாவது நினைக்க வேண்டும்