Saturday, 8 September 2012

விச உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

அதற்கான முதல் உதவி:

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.

Tuesday, 4 September 2012

தன் வாயிற்றில் தன் உ யிரை தங்கும் 
தாயை போல எனக்குள்ளேயே 
உன் காதலை சுமக்கிறேனடா !!!!
நான் குள்ளம் என்று கவலை படும்
என் அன்னைக்கு நான் எப்படி சொல்வேன் 
உன் நெஞ்சில் என் இதழ் பதியும்
உயரம் தான் நான் விரும்புவது என்று!!!!!
அன்று ஆற்றங்கரையின் ஓரத்தில்
நீ முத்தம் இட்டு எனக்கு பரிசளித்த
கொலுசும் கூட உன்னால் ஏக்கப்படு
சப்தம் எழுப்புவது இல்லையடா !!!!
என்னை கொண்டு செல்ல
வெண் புரவி தேவை இல்லையாட
உன் ஆண்மை கொண்ட கைகள் போதும்
இளவரசியாய் இங்கு இருப்பதை விட
உன் இதழ் இளவரசியாய் இருக்கத்தான்
என் மனம் ஏங்குதடா !!!!!
உனக்காக நான் அனுப்பிய கடிதம்
எல்லாம் என்னை போலவே
கண்ணீர் விட்டு கதறுதடா!!!!
காதலை தந்துவிட்டு
உறக்கத்தை கொள்ளையிட்டுப்
போய்விட்டாய் கனவுகளுக்குகூட
வழியில்லாமல் கண்ணீராகிறது என்இரவு!!!!
அந்தபுரத்தில் பூக்கள் கூட ஜீவன்
இல்லாமல் பூத்து இருக்கிறது
முகவரியை தொலைத்த முகில் கூட்டதை போல 
நல்லதொரு நாளிலே ஓவியமாய் நான் நிற்க

என் கவிதை நாயகனே என் பக்கத்தில் 
ஒய்யாரமாய் நீ விற்றுருக !!!!!

பசும் மஞ்சள் பூசிய என் வதனம்
உன் பாதம் பார்த்து தளர்ந்து இருக்க

என் கார்மேகம் போன்ற கூந்தலில்
உன் அன்னை அவள் மல்லிகை பூச்சுட்ட!!!

பிறை போன்ற என் நெற்றியிலே
பெருமையோடு நீ பொட்டு வைக்க !!!

விண்மீன்கள் பூத்துவ
பனித்துளிகள் புது பாட்டு இசைக்க
பூங்காற்றும் புது தென்றலும் சேர்ந்து ராகம் இசைக்க !!!!!

மஞ்சள் வேர்தனிலே புது தாலி ஊஞ்சல் ஆடிடுமே
குங்குமமும் என் கன்னத்தில் அழகாக சிவந்திடுமே

என் வீணை போன்ற கழுத்தினிலே
நீ தாலி என்னும் நரம்பினை மீட்ட
அது நாதஸ்வரமாக ஒலிக்கிறது!!!!!

மருதாணி பூசிய பட்டு போன்ற என் பாதத்தில்
தங்க மெட்டி போட்டு என்னை நிமிர்ந்து பார்த்தவனே
மகையவள் காத்து இருந்த மணநாள் இது தான்!!!!

Monday, 3 September 2012

ஏகாந்தமான நேரத்திலே ஈரா முகிலுக்காய்
காத்திருக்கும் மயிலை போல என் ஏக்கங்கள் 
எல்லாம் சேர்த்துவைத்து காத்திருக்கிறேன் உனக்காக !!!

உன் காதலை என்னுள் மழையாக நீ தூவ
அதை நான் மட்டும் வாங்கும் நிலமாக ஆசைப்படுகிறேன் !!!!
பால் நிலவை தங்கும் மேகத்தை போல
என் பருவத்தை உன்னுள் புதைக்கவே
உயிர் உருகி பார்த்திருக்கிறேன் !!!!!

என் வதனத்தில் பூத்திருக்கும்
செண்பக பூவை போன்ற இதழில் வண்டாக மாறி
நீ தேன் அருந்தவே பூத்திருக்கிறேன் !!!!!

உன் தழுவலில் நான் சிவக்கிறேனோ
இல்லையோ ஒவ்வொரு முறையும்
உனக்காக கவிதை எழுதும் பொழுது
சிவந்து விடுகிறேன் எனை அறியாமல் !!!!!

நாணமெனும் ஆடை உடுத்தி
உன்னோடு கலந்திடவே இமை
துஞ்சாமல் காத்திருக்கிறேன் !!!!!!
வெட்கத்துடன் பூங்குழலி !
இன்று சுரைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்.

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிரா
க காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
· உடலை வலுப்படுத்தும்.
· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.
· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
· குடல் புண்ணை ஆற்றும்.
· மலச்சிக்கலைப் போக்கும்
· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்

Thursday, 30 August 2012


197 ·  · 

Monday, 27 August 2012

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..

இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி..

அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்...?

உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது என்று தெரிந்துதான் நம்மீது ஆங்கிலேயர்கள் படையெடுத்து நாட்டைப் பிடித்தார்கள்.


தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது.

உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல். இந்த மிளகு இந்தியாவிற்கு மிகுந்த அன்னிய செலாவணி ஈட்டித் தருகிறது.


மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.

நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது. வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.

உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள்.

இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்