Sunday, 14 October 2012

உடலின் மூல ஆற்றல் உடலெங்கும் 72000 நாடிகளின் வழியாக பரவுவதாக சித்தர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை மூலத்திலிருந்து மூன்றாகப் பிரிந்து, பின்பு அவை பலகிளைகளாகப் பிரிந்து ஆற்றலை உடலெங்கும் எடுத்துச் செல்கிறது. அந்த முக்கிய மூன்று நாடிகளை இடகலை, பிங்கலை, சுழுமுனை (இவற்றை சந்திர கலை, சூரிய கலை, சுசும்னா ) என்பர். இவை முதுகு தண்டில் முறையே இடது, வலது, நடு மையத்தில் கீழிருந்து மேலாக செல்கிறது. சாதாரணமாக நாம் மூச்சு விடும்போது இடது நாசித்துவாரத்தின் மூலமோ அல்லது வலது நாசித்துவாரத்தின் மூலமோ தான் காற்று செல்லும். இடது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் இடகலை நாடியின் மூலமும், வலது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் பிங்கலை நாடியின் மூலமும், இரண்டு நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் சுழுமுனை நாடி வழியாகவும் உடலில் பரவுகிறது. ஆற்றல் சுழுமுனை நாடி வழியாக பரவும் போதுதான் நாளமில்லா சுரப்பிகள் நன்முறையில் செயல்பட்டு உடலில் (cosmic energy) வான் காந்த ஆற்றல் கிரகிக்கப் படுகிறது. இதற்காகவே நாடிசுத்தி, தண்டுவட சுத்தி ஆகிய பிராணாயாம பயிற்சிகள் அவசியமாகிறது.

Saturday, 6 October 2012

மனைவி எப்படி இருக்க வேண்டும் ? - என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச
்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.

ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.

பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள் என்கிறார்களே, அந்த மகாலட்சுமியை போன்ற திருத்தமான அழகு அந்த பெண்ணுக்கு இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.

காஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, மகாலட்சுமி போன்ற அழகு என்கிறார்கள். அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.

எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்

கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.

பள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.

மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.

- இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.

நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.

சரி... நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும் அவரே ஐடியா தருகிறார்.

தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல், தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள் என்பது இதன் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால் தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும் என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும் போது, பெண்ணின் குலம், கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள். இத்தகைய நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், 100க்கு 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன. ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்"என்கிறார் கண்ணதாசன்.

தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை 

Thursday, 4 October 2012


இன்றுஅகத்திக்கீரையின் மருத்துவக் குணங்கள் பற்றிய தகவல்.

அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி 100 
மி.லி. அளவு இருவேளை குடித்து வர காய்ச்சல், தாகம், கைகால் எரிச்சல், மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.

அகத்தி இலைச்சாறும், நல்லெண்ணெய்யும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமாகக் காய்ச்சி வடிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக்கிழங்கு, விளாமிச்ச வேர் வகைக்கு 20 கிராம் பொடி செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்துவரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.

சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடவும் செய்யும்.

இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.

காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.

சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.

குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும். அகத்தியிலையை அவித்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.

அகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தன் வேர் சம அளவாக எடுத்து அரைத்து வாதவீக்கத்திற்கும், கீல் வாயுக்களுக்கும் பற்றிட குணமாகும். இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.
 
யோக தட்சிணாமூர்த்தி: 
************www.fb.com/thirumarai
சிவபெருமான் திருக்கையிலையில் தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கும் போது நான்முகனின் நான்கு மகன்களான சனகாதி முனிவர்களுக்கு பதி, பசு, பாசம் பற்றி உபதேசித்துக் கொண்டே வந்தார். அப்போது அவர்கள், இறைவா ! எங்கள் மனம் விரிவடைந்துள்ளது, ஆகையால் அவை ஒடுங்கும் யோக மார்க்கங்களை எங்களுக்கு உரைக்கவும் என்று விண்ணப்பித்தனர். உடனே அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசா
ய்த்த சிவபெருமான் கீழ்கண்டவாறு யோக மார்கங்களை கூறலானார்.

அவையாவன யோகம் என்பது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கலப்பது. அது எப்படியெனில் வெளிக்காரணத்தை அந்தக்காரணத்தில் அடக்கி மனதை ஆன்மாவில் அடக்கி தூய்மையான ஆன்மாவை பரத்தில் சேர்த்தலாகும். அத்துடன் யோகப்பயிற்சி இருந்தால் மட்டுமே பரம்பொருளை தரிசிக்க முடியும்.

தசவாயுக்களான பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனும் தசவாயுக்களை அடக்குவது யோகமாகாது.

யோகத்தை எட்டாகப் பிரிக்கலாம் அவை
இயமம்,
நியமம்,
ஆதனம்,
பிராணாயாமம்,
பிரத்தியாகாரம்,
தாரணை,
தியானம்,
சமாதி என்பனவாம்

இயமம் என்பது கொல்லாமை, பிறர்பொருளுக்கு ஆசைப்படாமை, நியமம் என்பது தவநிலை,
ஆதனம் என்பது சுவந்திகம், கோமுகம், பதுமம், வீரம், பத்திரம், முத்தம், மயூரம், சுகம் என எட்டாகும்,

பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, பிரத்தியாகாரம் நம்மைப் பார்ப்பது, தாரணை என்பது ஏதாவது, ஒரு உடலுறுப்பின் மீது சிந்தையை வைப்பது,
தியானம் என்பது மனத்தை அடக்குதல்,
சமாதி என்பது மேற்சொன்னவற்றுடன் பொறுத்தி ஆதார நிலையங்கள் ஆறுடன்,
நான்கு சக்கரங்களை வியாபித்து அனைத்துமாகிய,
சகலமான பரம்பொருளை தியானித்தலே சிவயோகம் என்றழைக்கப்படும் சமாதி நிலையாகும்.

இவ்வாறு யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப்பற்றியும் சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு உரைத்ததுடன் தாமே சிறிது நேரம் அந்நிலையில் இருந்து காட்டினார்.

இதனால் விரிவடைந்த மனம் ஒடுங்கியது.
உடனே சனகாதி முனிவர்கள் சிவபெருமான் பாதத்தைத் தொட்டு வணங்கி விடைபெற்றனர்.
சனகாதி முனிவர்களுக்குப் புரியும்படி யோக முறையை கற்பித்து அத்தகைய யோக நிலையில் இருந்துக் காட்டிய உருவமே "யோக தட்சிணாமூர்த்தி யாகும்.

Friday, 21 September 2012

கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்

பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் ப
ூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.
முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

ஞாபக சக்தியைத் தூண்ட
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

தாது புஷ்டிக்கு
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

Tuesday, 18 September 2012

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.



சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.
(இந்த தகவலை பகிர்ந்த அந்த நல்லுள்ளதிர்க்கு "தேடலின்" மனமார்ந்த நன்றிகள் ...!)

Thursday, 13 September 2012

நல்லெண்ணெய்யைக் கொண்டு சமையல் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அத்தகைய நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக் கொப்பளிப்பது ‘ஆயில் புல்லிங்' என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நோய்களும் குணமாகின்றன.

இத்தகைய ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், பல் துலக்கியதும் சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்கவும். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெய்யின் தன்மை இருக்கும்.
பின்னர் நீரினால் வாயையும், பற்களையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் இதனை நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். மூன்று முறையும் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.
ஆயில் புல்லிங் எதற்கெல்ல
ாம் நல்லது?
மூட்டு வலி, முழங்கால் வலி, இருமல் மற்றும் சளி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு, குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்துகிறது.
மேலும் தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. அதிலும் ஒற்றைத் தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை.
நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்கவாதம், நரம்பு சம்பந்தமான நோய்களையும் கட்டுப்படுத்துவதாக மருத்துவர்களில் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.