Friday, 23 August 2013

வில்வத்தின் மகிமை :

சிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டு.லிங்கம் தொடர்பானதில் பூஜிக்க மிக உகந்தது இந்த வில்வ இலைகள் ஆகும் . இந்த வில்வ தழைகள் கிடைப்பதற்காக அனேகமாக ,சிவன் கோவில்களில் எல்லாம் வில்வ மரம் வளர்க்கப் படும் .வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது அதாவது இதை உண்டால் உடலாகிய பஞ்ச பூதம் வெகு எளிதில் அதிக சக்தியை செலவழிக்காமல் ஜீரணம் செய்த சக்தியும் சேமிப்பாகும் .சிவத்துக்குள் சக்தியை அதிகம் சேமிக்க செய்யும் ஒரு மூலிகையாக இது இருப்பதால் இது ஈசார்சனைக்குமிக உகந்ததாகும்.இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர் .

இந்த இலைகளை கொண்டு ஈசனை பூஜிப்பதால் சகல பாவங்களும் நீங்கும் இந்த வில்வ மரத்தினை வளர்ப்பதால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் .ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும் .புண்ணிய நீர் ஆடிய பலன் கிடைக்கும் .காசி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள சிவ தல தரிசனப் பலன் கிடைக்கும் .

வில்வ மரத்தில் அபார மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.வில்வ காயை பறித்து பார்த்தால் ,உருண்டையாகவும் ஓடு கடினமாகவும் வெளிர் மஞ்சள் நிறத்தையும் கொண்டது .இதன் பழமானது குடற் கோளாறுகளை நீக்கவும்,மலக்கட்டை நீக்கி உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.

வில்வ இலை கசாயம் பருக கைகால் பிடிப்பு,உடல் வலி முதலியவை குறையும் மேலும் இந்த கசாயமானது கபம்,மூச்சுத் திணறல் ,பித்தம் போன்றவையை குணமாக்கும் .அது போல இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வீக்கம் உள்ள உடல் பகுதியில் ஊற்றினால் அவை குறைந்து விடும் ., இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்புகுணப்படுத்தப்படும்.

வில்வ வேர் கஷாயம் பருக அது நாடி நரம்புகளில் ஏற்படும் அதிர்வை போக்கி சாந்தமடையும் செய்யும் தன்மை கொண்டதாகும்

ப்ரோட்டின்,கொழுப்பு.கால்சியம் ,பாஸ்பரஸ் ,இரும்பு,உலோகச்சத்து ,மாசத்து ,கலோரி போன்றவை ஆப்பிள் ,மாதுளை போன்ற பழங்களில் இருப்பதை விட வில்வ பழத்தில் அதிகமாக உள்ளது என்பது வியக்க தக்கதே.

ஆரோக்கியத்திற்கு அரணாகவும் ,ஆன்மீகத்தில் முக்கிய இடம் பெற்றும் இருப்பதுமான வில்வமரத்தை புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோமாக.

Thursday, 22 August 2013

வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்

"அழகானவள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத
பெண்ணே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் அவளைப் பொருத்தவரை
வாழ்கையே அஸ்தமனமாகிவிடும். ஆனாலும் சிலரிடம் சித்து விளையாட்டுக்களைக்
காட்டி இயற்கை கொட்டமடிக்கும். வெண்புள்ளி நோயால் எந்த ஊனமும் இல்லை
என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகிவிடும். மேலும்
மனதிற்குள் அழுவது மங்கையர்க்கு கைவந்த கலை. உடல் நோய் உடலை மட்டும்
வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும். அழகு தேவதையாய்
அடியெடுத்து வைத்தவள்தான் எங்கள் மருமகள் ஹேமா.

எந்தக் குறையுமில்லை – மருமகளின் காலில் தோன்றிய கடுகளவு வெண்புள்ளி தவிர.

சிரிப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள் சில காலம், பின்னர் சிரிப்பை
மறந்தாள் சில காலம். அவளுக்கு ஓர் குற்ற உணர்வு காரணமே இல்லாமல். பூவைத்
தொடுவது போல் நாங்கள் அவளைத் தொட்டாலும், தீயைத் தொடுவதுபோல் அவள் எங்களைத்
தீண்டினாள். அதிக அன்பு செலுத்திப் பார்த்தும், தோல்வியே மிஞ்சியது
எங்களுக்கு.

எங்களைவிட ஆங்கில மருத்துவத்தின் மீது அபார நம்பிக்கை
அவளுக்கு. மருந்துகளின் எண்ணிக்கையும், டாக்டர்களின் எண்ணிக்கையும்
கூடக்கூட வெண்தேமல் பரவும் வேகம் அதிகமாயிற்று. முடிவு???? வழக்கம்போல்
தான் ---கிட்னி பிராப்ளம், ஹார்ட் பிராப்ளம், மூச்சுத் திணறல்....... பிறகு
ஒரு நாள் ஹேமாவுக்கு வந்தது கோமா. அவளாக பயந்து, ஆங்கில வைத்தியத்தை
அடியோடு விட்டு விட்டாள். அவள் முகத்தில் சிரிப்பு இல்லாததால் நாங்களும்
சிரிக்க முடியவில்லை. ஒரு நாள் சித்த வைத்தியர் வடிவில் தெய்வம் அவளுக்குக்
காட்சி அளித்தது.

“சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்வாயா?” என்று கேட்டார்.

“ சீரியஸான வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம்
என்னை என்ன செய்துவிடும்? சொல்லுங்கள் செய்கிறேன் ” என்றாள்.

“காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து
அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று
விழுங்கிவா” என்றார்.

“ப் பூ .... இவ்வளவுதானா? ” என்றாள்.

“நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு” என்றார்.

“பத்தியம் ஏதேனும் உண்டா?” என்றாள்

“சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது ” என்றார்.

சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள்.

“உலகத்திற்கு இதைச் சொல்லவேண்டும் மாமா ” என்றாள்.

“இணைய தளத்தில் பரிமாரக் காத்திருக்கிறார்கள் இனிய நண்பர்கள், உன்னுடைய போன் நம்பர் கொடுக்கத் தயாரா? ” என்றேன்.

அதற்கு “போட்டோக்களும் தருகிறேன் மாமா” என்றாள்.

”எத்தனை வேதனைப்பட்டிருந்தால் அடுத்தவர்க்கு இது பயன்படட்டும் என்ற
துணிவோடு போட்டோக்களைக் கொடுக்க முன் வருவாள்” என்று எண்ணி நாங்கள்
பாராட்டினோம் அவளை. நீங்களும் வாழ்த்துங்கள். வாழட்டும் அவள் இன்னுமொரு
நூறாண்டு சுமங்கலியாக

மது. இராமகிருஷ்ணன்
இயற்கை விவசாயி
சந்தோஷ் பார்ம்ஸ்
பொள்ளாச்சி -642 114.

திருமதி. ஹேமா உமாசங்கர்
கைபேசி எண்.85262 32442 ( தயவு செய்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)
By: Immam Kasali

Wednesday, 21 August 2013

உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?

நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து

நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு

நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி

மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி

மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்

மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்

மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்

இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு

வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை

வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்

நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்

கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்

இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்

தலை – பேராசை, பொறாமை குணம்

தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை

தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்

தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்

வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை

அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்

இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்

வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை

Sunday, 11 August 2013

மூலிகை நீர்:

சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.

ஆவாரம்பூ நீர்

“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்

“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,
தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

வல்லாரை நீர்

யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.
இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்!

1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.

3. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள்,பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.

4. ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள்,முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது.

5. ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

5.ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்”அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி"பிளேட்லட்”அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்” போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

6. பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர். வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்ததை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

7. ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா” என்ற பொருளும் உள்ளது.

8. ரத்த அழுத்தம் என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

9. உடலில் ரத்த பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?

ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.

10. மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன்,அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

11.உடலில் ரத்தம் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

12. ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

13. 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா?

24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

14. தலசீமியா என்பது தொற்றுநோயா?

இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந்நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந்நோய் வரவாய்ப்பில்லை.

15. மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?

மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

16. ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன் உள்ளது.

17.ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர ‘A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு ‘யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

18. ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்கவேண்டும் அல்லது குழந்தைப்பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்கவேண்டும்..

19.ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் ரத்தப்பிரிவை சோதனை செய்வது அவசியம். கணவன்-மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தரித்தவுடனேயே மகப்பேறு மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.

20. கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.

21. ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

22. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின் போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்துவிடும் அபாயம் உண்டு.

23. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில்,கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசிபோட வேண்டும். இந்த ஊசிக்கு “Anti D” என்று பெயர்.

24. ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை(45கி)லோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச்சோதனைகள் அவசியம்.

25. யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்,எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள்,நுரையீரல் நோய் உள்ளவர்கள்,ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர்,போதைப் பழக்கம் உள்ளவர்கள்,உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.

26. மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் தானம் செய்தாலே,ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும்.

27. தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு,24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

28. ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்தம் தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்ப தும் நல்லது. ரத்தம் தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.
...இரத்த சேவை மையம் - blood donors

Wednesday, 7 August 2013

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல் ..

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.