Thursday, 19 December 2013

திருமண வயதாகியும் ஒரு இளைஞன் எந்த வேலைக்கும்
செல்லாமல் சோம்பிக் கிடந்தான். வெறுத்துப்போன அவன் தந்தை கோபமாக ஒரு நாள்,''இன்றிலிர
ுந்து தினசரி நூறு ரூபாய் கொண்டு வந்தால்தான்
உனக்கு சாப்பாடு,''என்றார்.இளைஞன் நொந்து போய்விட்டான்.என்ன
செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.தாயிடம்
புலம்பினான். தாயும் இரக்கப்பட்டு, ''நீ வெளியில்
போய்வா.நான் உன்னிடம் நூறு ரூபாய் தருகிறேன்.நீ அதை அப்பாவிடம் கொடுத்துவிடு'' என்று சொல்ல அவனும்
சம்மதித்தான்.அன்று நூறு ரூபாயை அப்பாவிடம்
கொடுத்தபோது அவர் அதை வாங்கி,''நீயும் உன் ரூபாயும்,''என்ற
ு கூறி தூக்கி எறிந்து விட்டு வெளியே சென்று விட்டார்.இள
அமைதியாக இருந்தான்.சில நாட்கள்
இப்படியே போயிற்று.ஒரு நிலையில் தாயிடம் கொடுக்கப் பணமில்லை.சில நாட்கள் கடன் வாங்கிக் கொடுத்தாள் .ஆனால்
ஒவ்வொரு நாளும் அவன் தந்தை ,''நீயும் உன் ரூபாயும்,''என்ற
ு கூறி விட்டெறிந்து கொண்டிருந்தார்.
இப்போது தாய்க்கு கடன் யாரும் கொடுக்கத் தயாராயில்லை. மேலும் கொடுத்த பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர்.தாய்
வேறு வழியில்லாது,''மகனே,இனி நான்
செய்வதற்கு ஒன்றுமில்லை.இனி நீ போய்
ஏதாவது வேலை செய்து பணம் கொண்டு வருவதைத்தவிர
வேறு வழியில்லை.உன் தந்தையும் இவ்விசயத்தில் பிடிவாதமாக
இருக்கிறார்.நான் என்ன செய்ய முடியும்? என்று கூறி கை விரித்து விட்டார்.இளைஞன்
வேறு வழியின்றி வெளியே சென்று மூட்டை தூக்குவதிலிருந்
து எந்த வேலையானாலும் செய்து அன்று நூறு ரூபாய்
சம்பாதித்து விட்டான்.அன்று பெருமையாகத் தந்தையிடம்
ரூபாயைக் கொடுத்தான்.அன்றும் வழக்கம் போலத் தந்தை,''நீயும் உன்
ரூபாயும்,''என்று கூறித் தூக்கி எறிந்தார். இளைஞனுக்கு வந்ததே கோபம்!''அவனவன் மூட்டை தூக்கி கல்
சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால்
இப்படித் தூக்கி எறிகிறீர்களே,என்ன நியாயம்?''என்று
கேட்டான்.தந்தை சிரித்துக் கொண்டே கீழ குனிந்து எறிந்த
பணத்தை எடுத்து,அதை முத்தமிட்டு தனது பைக்குள்
வைத்துக்கொண்டு,''இது என் மகன் உழைப்பில் வந்த பணம்,இனி அவனைப்பற்றி எனக்குக்
கவலை இல்லை''என்று கூறி மகிழ்ச்சியுடன்
வெளியே சென்றார்.-
1. வளர்ந்த மனித உடலில் 600 தசைகள். நூற்றுக்கும் மேலான இணைப்புகள். ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள இரத்தக் குழாய்கள் 13000 மில்லியன் உயிரணுக் களும் உள்ளன.
2. மனிதனுக்குள்ள 206 எலும்பு களில் பெரும்பாலானவை கைகளிலும் கால்களிலும் உள்ளன.
3. ஆண்களில் விந்துவை உண்டாக்கும் விரை (விந்தகம்) நாள் ஒன்றுக்கு 10 மில்லியன்வரை விந்து உயிரணுக்களை உற்பத்தி செய்யும். இவை அப்படியே உயிருடன் ஆறு மாத காலம் இருந்தால் மற்றொரு உலக ஜனத்தொகையை உருவாக்கக்கூடும்.
4. மனித இதயம் ஒரு இயல்பான வாழ்நாளில் 2000 மில்லியன் முறை துடிக்கும். இந்த கால கட்டத்தில் 500 மில்லியன் இரத்தத்தை பம்ப் செய்யும். மனிதன் தூங்கும்போது கூட இதயம் ஒரு மணி நேரத்தில் சுமார் 340 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்யும். ஒரு நாளைக்கு 1 லட்சம் முறைதுடிக்கும்.
5. இளைஞனின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 லிருந்து 72 முறை. ஆனால் இளம் பெண்ணின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 78 லிருந்து 82 முறைஇருக்கும்.
6. மனிதனின் சிறுநீரகத்தில் ஒரு மில்லியன் வடி கட்டிகள் இருக்கின்றன. அவை ஒரு நிமிடத் திற்கு 1.3 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகின்றன. அந்த வடிப்பில் ஏற்பட்ட கழிச்சலை சிறுநீரகம் வெறியேற்றுகின்றன.
7. மனித உடலில் உள்ள இரத்தத்தை நிமிடத்திற்கு 4.5 லிட்டர் விகிதம் நுரையீரலில் சுத்தப் படுத்தும்.
8. மனித உடலில் சிவப்பணுக்களை எலும்புச் சோறு (எலும்பின் மச்சை) தயாரிக்கிறது. அந்த அணுக்கள் 100லிருந்து 120 நாட்கள் வாழ்கின்றன. மனித வாழ்வில் சுமார் அரை டண் சிகப்பணுக்கள் தயாராகும்.
9. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50 டண் உணவை சாப்பிடுகிறான். 50 ஆயிரம் லிட்டர் திரவத்தை குடிக்கிறான்.
10. நாம் தினமும் கண் இமை களை திறக்கவும் மூடவும் செய்கிறோம் அல்லவா? இந்த செயல் 6 வினாடிக்கு கொருமுறை நடக்கிறது. அதன்படி இந்த சிமிட்டலை நாம் நம்முடைய வாழ் நாளில் 250 மில்லியன் முறை (25 கோடிமுறை) செய்கிறோம்.
11. மனிதனுக்கு 15 வயது வரையில்தான் மூளை வளரும்.
12. சாதாரண மனிதனின் தலையில் 10 ஆயிரம் ரோமங்கள் உள்ளன.
13. ஒரு விஞ்ஞானி, மனிதனின் மரணத்திற்கு சில நொடிகளுக்கு முன்பு இருந்த எடையும் மரணமடைந்த உடனே இருந்த எடையும் ஒப்பிட்டு பார்த்து 21 கிராம் குறைவாக இருந்ததை அறிந்து அதன்மூலமாக ஜீவான்மாவின் எடை 21 கிராம் என்று நிரூபித்தார்.
14. நாம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 25 முறை கண் இமை களை மூடி திறக்கிறோம்.
15. ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளில் (24 மணிகளில்) 23000 முறை மூச்சிழுப்பான்.
16.பெரும்பாலோர் இரவுத் தூக்கத்தில் 40 முறை அப்படியும் இப்படியும் புரளுவார்கள்.
17. மனித உடலில் உள்ள அனைத்து இரத்தக் குழாய்களை வரிசையாக இணைத்தால் மொத்தம் ஒரு லடசம் கி.மீ நீளத்திற்கு சேரும். அந்த நீளம் பூமத்திய ரேகையை நான்கு தடவை சுற்றிவரக்கூடும்.
18. மனிதன் மனமார சிரிக்கும் பொழுது 17 தசை களும், கோபப்படும்பொழுது 43 தசைகளும் சுருக்கமடைகின்றன.

Wednesday, 11 December 2013

ஆறு வகைக் காலங்களில் தற்போது கார்காலத்தில் இருத்து முன்பனிக்காலத்திற்கு [ கார்த்திகை to மார்கழி ] மாறிக் கொண்டிருக்கிறோம் . தம் வரிகளில், "காலங்களில் அவள் வசந்தம் "
மாதங்களில் அவள் மார்கழி ! எனப் பாடியது ஏனோ
அதிகாலைப் பனியில் குளித்து முடித்து பல வண்ண மாக்கோலம் இடுவதும் ,இறை நாமம் சொல்வதும் ,மாலை வேளைகளில் சங்கீதம் ,நாட்டியம் என லயிப்பதும் ரசனையாய் நகரும் மார்கழிப்பொழுதுகளின்
செயல்முறைகளை உற்று நோக்கினால், பரந்த ஆன்மீக அறிவியலின்
பின்புலத்தை அறியலாம் .
தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்திற்கு காலம் பெயர்ச்சி செய்யும்
வேளையில் பக்தி எனும் விதையை நம் மனதில் தீவிரமாக மார்கழியில் விதைத்து விட்டால் , தையில் அதன் பலன்களை அறுவடை செய்யலாம் என்கிற ஒரு மென்மையான ஆன்மீக செயல்முறைதான் மார்கழியோ
நவீன மார்கழி !
வண்ணக் கோலங்கள் இட எங்கே ? ஐ-போன் கால மாணவிகளுக்கும்
சாஃப்ட்வேர் யுவதிகளுக்கும், ஆண்களுகோ அதிகாலைக் குளிரில் போர்வையை இழுத்துப் போர்த்தி தூங்குவதில்தான் எத்தனை இன்பம் .
அடியேன் உட்பட !..
இவ்வாறு மார்கழிக் கால ஆன்மீக அடிப்படையிலிருந்து நாம் சற்று தொலைவில் வந்தாலும் கூட , நம் ஆரோக்கிய அடிப்படையும் அல்லவா
குளிரில் ஆட்டம் காண்கிறது ! ஆம் - காது, முக்கு , தொண்டையில் Infection , சைனஸ் , தும்மல் , ஆஸ்துமா , வீசிங் போன்றவைக்கு வயதானோர் , குழந்தைகள் , நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தோர் எளிதாக சிக்குகின்றனர்
நோய் தடுக்கும் உபாயங்கள் உடல் வெப்பத்தைத் தக்க வைத்து , நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக் கூடிய உணவு முறைகளை அறிந்து கொள்வது அவசியம் . " 10 மிளகு இருத்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் " சுவாசக் கோளாறுகளை தடுக்கவும்
முறை : 35 மிளகுகளை இரவு வேளையில் தேனில் ஊற வைத்து (8-10 மணி நேரம் ) பின் அவற்றை வெறும் வயிற்றில் மென்று உண்டால் சிறந்த பலன்களை அடையலாம் .
விளையாட்டு வீரர்களே உலர் திராட்சைகளை சாப்பிடுங்க உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இந்த உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றன. மேலும் பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவையான உடல் வலிமையை உலர் திராட்சை தருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்கமளிக்க கூடிய உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக தொலைதூர ஓட்டப்பந்தயங்கள் போன்றவற்றில் எண்டியூரன்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் நீண்டநேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல்வலிமை மிக மிக அவசியம். தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்பவர்கள் உலர் திராட்சையை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றது. பொதுவாக தாக்குப்பிடிக்கத் தக்க உடல்வலிமையை பெறுவதற்காக போட்டியாளர்கள் பலவகையான வழிமுறைகளை கடைபிடிப்பார்கள். கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் செயற்கையான இனிப்பு மிட்டாய்களை மெல்வது போட்டியாளர்கள் பலரும் செய்யக்கூடிய ஒன்று. ஆனால் அப்படியான செயற்கை இனிப்புக்களை மெல்வதை விட, இயற்கையான முறையிலேயே இப்படியான தாக்குப்பிடிக்கத்தக்க வலிமையை பெறமுடியும் என்று கலிபோர்னிய பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது உலர் திராட்சைப்பழங்களை மென்று சாப்பிடுவதன் மூலம் விளயாட்டுப்போட்டிகளில் தேவைப்படும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல் வலிமையை பெற முடியும் என்று இவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். உலர் திராட்சையை சாப்பிட்டவர்கள் ஒரு புறமும், தண்ணீர் மட்டும் குடித்து விட்டு செல்பவர்கள் ஒரு புறமும், வேறு சிலர் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் இனிப்புகளை சாப்பிட்டவர்கள் ஒரு புறமுமாக ஒடினார்கள். போட்டியின் இறுதியில் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு ஓடியவர்களை விட, இனிப்புகளையும் உலர் திராட்சைகளையும் சாப்பிட்டுவிட்டு ஓடியவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை ஒரு நிமிட நேரம் முன்னதாக ஓடி முடித்தார்கள். இதிலிருந்து, கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் இனிப்புக்களுக்கு சம்மாக உலர் திராட்சைகளும் நீடிக்கத்தக்க உடல் வலிமையை தருவதாக தெரிவித்திருக்கும் ஆய்வாளர்கள், உலர் திராட்சைகள், இயற்கையான ஊக்கசக்தியாக விளங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள். உலர் திராட்சைகளில் காணப்படும் அதிகமான பொட்டாஷியம் மற்றும் இரும்புசத்து, விளையாட்டு போட்டிகளுக்கு தேவைப்படும் நுண்ணிய சக்தியாக செயற்படுவதால் இவை போட்டியாளர்களுக்கு இயற்கையான ஊக்கமருந்தாக பயன்படுவதாகவும், செயற்கையான இனிப்புகளில் இருக்கும் கூடுதல் சர்க்கரை இதில் இல்லாமலிருப்பது கூடுதல் நன்மை பயக்கும் என்று சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன் தெரிவித்துள்ளார்
வாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள். வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம். வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும். வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும். தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்
உங்கள் தட்டில் உணவா...விஷமா ? ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டென்று கடந்த தடவை கூறினேன். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு. இந்தோனேஷியாவின் பாலி தீவில் வழங்கும் கதை இது - கடவுள் சிவா (ciwa என்கிறார்கள் அங்கே. நம்ம ஊர் 'சிவன்’ -& sivan), ஒரு பறவையை பூமிக்கு அனுப்பினார். அந்தப் பறவை, நான்கு வகையான நெல் மணிகளைச் சுமந்து சென்றது. மஞ்சள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை. போகும் வழியில் மஞ்சள் அரிசியை அந்தப் பறவை தின்றுவிட்டது. மீதமுள்ள மூன்று வண்ண நெல் மட்டுமே மனிதனுக்கு கிடைத்ததாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப் படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக்கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இப்போது நாம் பேசப்போவது... சிவப்பு அரிசியைப் பற்றி. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள். சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி. சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. சபரிமலை செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வொயிட் ரைஸ் போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேஜையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன். இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன. நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்! பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்! சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன. இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து. இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன? சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள். ஏன்..? ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர். தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! ! 1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது... எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது... 2. உடலின் pH ஐ சீராக்குகிறது... எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது... 3. உடல் எடையைக் குறைக்கிறது... எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை... 4. சமிபாட்டை வேகப்படுத்துகிற து... 5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறத ு. 6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது. 7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது... 8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. 9. stress ஐ குறைக்கிறது. இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை. 10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.
    Like ·  ·  · 4 · 4 hours ago · 
  • மோர்/ நீர்மோர் (Buttermilk): தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி. ஆதிகாலத்தில் நம்மவர் தயிர் சாப்பிடுவது குறைவு. ஆனால் மோர் நிறையக் குடிப்பர். சித்தர் தேரையர் கூறுகிறார் தண்ணீரைவிட மனிதர் மோர் கூடுதலாகக் குடிக்க வேண்டுமென்று. மோர் குடித்தால் உடற்சூடு தணிக்கப்பட்டு மேலும் அதிலள்ள உடலக்குத் தேவையான நுண்ணுயிர்கள் (friendly bacteria) எமக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன. So, MOOR(மோர்) is a FRIENDLY BACTERIA drink. ‪#‎Drink‬ MOOR, Live HEALTHY. எத்தனைதான் கலர்க்கலரான குளிர்பானங்கள் மார்கெட்டில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும். கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குளுகுளுவென மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றல்லவா? மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது. மலிவானது. எங்கள் ஊரில் வெயில் காலத்தின்போதும், கோவில் திருவிழா நேரங்களிலும் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பொதுவாக நீர்மோரும், பானாக்கமும் வழங்குவார்கள். இந்த இரண்டு பானங்களில் அறுசுவையும் அடங்கிவிடும். அறுசுவை உணவு நமது உடலில் சேரும்போது உடல் கொண்ட மொத்த களைப்பும் நீங்கி தனி புத்துணர்ச்சி கிடைத்துவிடும். மோர் தயாரிக்க.. தேவையான பொருட்கள்: தயிர் – 1/2 கப் தண்ணீர் – 1 ½ கப் கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.) மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.) இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.) பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 கப் மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.) உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றி பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும். குறிப்பு: வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும். கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்