ஆரத்தி நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. பழங்காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் துவங்குவர். இதுபோன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக அவர்கள் நம்பினர். தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம். ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது. வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது. எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். புதுமணத் தம்பதிகள், பச்சிளம் குழந்தைக்கு ஆரத்தி எடுப்பது ஏன்? ஆரத்தி எடுப்பதற்காக பயன்படுத்தும் பொருட்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, கற்பூரம், நீர். ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும் போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்றுவிடும். இதனை நீர் வலம் விடுதல் என்று கூறுவர். பழங்காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் துவங்குவர். இதுபோன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக அவர்கள் நம்பினர். புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வரும் காலத்தில் காத்து, கருப்பு உள்ளிட்ட தீவினைகள், சில கெட்ட சக்திகள், கண் திருஷ்டி உள்ளிட்டவையும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக அவர்களுடன் வந்திருக்கலாம் எனக் கருதப்படும் தீய சக்திகளை அகற்ற திருஷ்டி கழிக்கப்படுகிறது. இதேபோல் வீட்டின் வாரிசை சுமந்து வரும் தாயின் மீதும், குழந்தையின் மீதும் கண் திருஷ்டி இருக்கும் என்பதால் அந்த குழந்தை முதன் முதலாக தந்தை வீட்டிற்கு வரும் போது ஆரத்தி எடுக்கின்றனர். இதனை கவுரவிக்கும் விதமாகவும் கருதலாம். ஆரத்தி எடுக்கும் போது பயன்படுத்தப்படும் நீர், நெருப்பு (கற்பூரம்), இலை (வெற்றிலை) ஆகியவற்றுக்கு எந்த தீய சக்தியையும் விரட்டும் ஆற்றல் உண்டு. திலகம் இடும் பழக்கமும் சங்க காலம் முதலே இருந்து வந்தததும் குறிப்பிடத்தக்கது. அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்
Thursday, 19 December 2013
பெண்களுக்கான சிவாங்கா சாதனா
"பைரவியின் அருளைப் பெற்றவர்கள் வாழ்வு, மரணம், ஏழ்மை, தோல்வி குறித்து அக்கறையோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை. பைரவியின் அருளைப் பெற்றால், எவையெல்லாம் நல்வாழ்வு என ஒரு மனிதர் கருதுகிறாரோ, அத்தனையும் அவருக்குக் கிடைக்கும்." - சத்குரு
-
பூமியின் வடக்கு பாகத்தில், சூரியன் பயணிக்கும் 6 மாத காலகட்டத்தை உத்தராயணம் என்று குறிப்பிடுகிறோம். அருளையும் ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்வதற்கு இது மிகச் சரியான நேரம். அதிலும் குறிப்பாக உத்தராயணத்தின் முதல் பாதி அதாவது மார்ச் மாதம் முடியும் வரை அதிகபட்சமான அருளைப் பெறுவதற்கு மிகச் சிறப்பான நேரம். இந்தக் காலகட்டத்தை ஒருவர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதற்காக, சத்குருவின் வழிகாட்டுதலில் பெண்களுக்கான சிவாங்கா சாதனா லிங்கபைரவியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
27 டிசம்பர் 2013ல் துவங்கி 17 ஜனவரி 2014 வரை, 21 நாட்கள் பக்தர்கள் விரதமிருந்து, தைப்பூச தினத்தன்று தேவி லிங்கபைரவியை தரிசித்து, விரதத்தை பூர்த்தி செய்யலாம்.
தேவியின் அருள் நம் இல்லத்தில் நிறைய, இது ஓர் அற்புதமான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது.
விவரங்களுக்கு
தொலைபேசி: 83000 30666

எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி ! ஒத்த பைசா கூட செலவில்லாமல் ஒரு நாளைக்கு 50 கிமீ வரை செல்லும் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் சோலார் காரை பெங்களூரை சேர்ந்த இளைஞர் வடிவமைத்து அசத்தியுள்ளார். பெங்களூரை சேர்ந்தவர் சையது முசாக்கீர் அகமது. ஆட்டோமொபைல் ஆர்வலரான இவர் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில்தான், எரிபொருள் பிரச்னையால் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் பிரச்னைகளை கருத்தில்க்கொண்டு புதிய காரை வடிவமைக்க முடிவு செய்தார். அதன்படி, சுற்றுச் சூழலுக்கு துளி கூட மாசு ஏற்படுத்தாத, முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் காரை வெற்றிகரமாக வடிவமைதத்து அசத்தியுள்ளார். இது கான்செப்ட் மாடல் என்றாலும், ஸ்பான்சர் கிடைத்தால் வணிக ரீதியில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் கூறுகிறார். இதுகுறித்து சையது முஜாகீர் அகமது கூறுகையில்," இந்த காரில் முன்பக்க பேனட், கூரை மற்றும் பின்பகுதியில் மூன்று சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து பகல் வேளையில் சூரிய சக்தியிலிருந்து பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரம் மூலம், ஒரு நாளைக்கு 50 கிமீ தூரம் ஒத்த பைசா செலவில்லாமல் செல்ல முடியும். ஸ்பான்சர் கிடைத்தால் இந்த காரை மேம்படுத்தி வணிக ரீதியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். இந்த காரை பிரபலப்படுத்துவதற்காக பெங்களூருவிலிருந்து கொச்சி வரை 600 கிமீ தூரம் சென்று வந்துள்ளேன். மேலும், ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் செய்யவதற்காக இந்த காரில் டெல்லி செல்லவும் திட்டமிட்டுள்ளேன். 50 கிமீ.,க்கு மேலும் பயணம் செல்ல வேண்டியிருந்தால் வீட்டு மின்சாரத்தை சார்ஜ் செய்தும் செல்லும் வகையில் பிளக் கொடுக்கப்பட்டுள்ளது," என்றார். இந்த இளம் சாதனையாளரின் திட்டத்தை ஊக்குவிக்க விரும்புவோர் பின்வரும் இமெயில் மற்றும் மொபைல்போன் நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம். solarahmed1@yahoo.com என்ற இமெயில் முகவரியிலும், 9845229757 என்ற மொபைல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். நன்றி, பயனுள்ள தகவல்
கொல்லி மலை: கொல்லி மலை தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழல் மற்றும் மலேரியா உள்ளிட்ட பல நோய் தாக்குதல் பரவலாக இருந்ததன் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன. ஆகாய கங்கை அருவி கொல்லி மலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த நீர்வீழ்ச்சியை அடைய சுமார் 760 படிகட்டுகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும். படிகள் இறங்கி, ஏறுவது கடினமாக இருக்கும்ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் குளிக்க முடியாதவர்கள் மாசிலா அருவி என்று ஒன்று உள்ளது . மிக எளிதாக செல்லலாம் அருமையாக உள்ளது .ஆகாய கங்கைநீர் வீழ்ச்சிக்கு செல்ல 1062 படிக்கட்டுகள் இறங்க வேண்டும் வியூ பாயிண்ட் சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் வியூ பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீதுள்ள 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது. வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. வாசலூர்பட்டி படகுத் துறை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும் .அன்னாசி பழ ஆராய்ச்சி பண்ணை ஒன்றும் இங்கு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லி மலையில் அதிகளவில் அபூர்வ மூலிகைகள் கிடைக்கின்றன. சித்த வைத்தியத்திற்கு இந்த மூலிகைகள் பெரிதும் உதவுகின்றன. இம்மலையில் சித்தர்கள் பலர் வாழ்ந்து, நோய் தீர்க்கும் மருந்துகளை கண்டறிந்து கொடுத்துள்ளனர். கொல்லை மலையில் பல சரக்குகளை விற்கும் சந்தை வாரந்தோறும் நடக்கிறது.
- பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதில் கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை. பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்... நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.
பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு! குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்துஉண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. பச்சைத்தண்டு கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும். செங்கீரைத்தண்டு பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும். உடல் சூட்டினை கட்டுப்படுத்தும். பெண்கள் நோய் குணமாகும் பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய நோயான பெரும்பாடு நோய்க்கு செங்கீரைத்தண்டு சிறந்த மருந்தாகும். அதிக ரத்தம் வெளியேறி சத்துக்கள் குறைந்து காணப்படுபவர்களுக்கு, செங்கீரைத்தண்டினை சமைத்து தர பெரும்பாடு நோய் குணமடையும். செங்கீரைத் தண்டானது மாதவிடாய் காலத்தில் மிகுதியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல் வலி வேதனைகளைப் போக்கும். வெண்கீரைத் தண்டு வெண்கீரைத் தண்டினை சமைத்து சாப்பிட நீர்க்கடுப்பும், மூலக்கடுப்பும் குணமடையும். யார் சாப்பிடக்கூடாது.கீரைத்தண்டில் பெருமளவு இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன. இது குளிர்ச்சியைத் தரக்கூடியது. எனவே சீதள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாள் அன்று இதனை சாப்பிட சளி பிடிக்கும்
திருமண வயதாகியும் ஒரு இளைஞன் எந்த வேலைக்கும்
செல்லாமல் சோம்பிக் கிடந்தான். வெறுத்துப்போன அவன் தந்தை கோபமாக ஒரு நாள்,''இன்றிலிர
ுந்து தினசரி நூறு ரூபாய் கொண்டு வந்தால்தான்
உனக்கு சாப்பாடு,''என்றார்.இளைஞன் நொந்து போய்விட்டான்.என்ன
செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.தாயிடம்
புலம்பினான். தாயும் இரக்கப்பட்டு, ''நீ வெளியில்
போய்வா.நான் உன்னிடம் நூறு ரூபாய் தருகிறேன்.நீ அதை அப்பாவிடம் கொடுத்துவிடு'' என்று சொல்ல அவனும்
சம்மதித்தான்.அன்று நூறு ரூபாயை அப்பாவிடம்
கொடுத்தபோது அவர் அதை வாங்கி,''நீயும் உன் ரூபாயும்,''என்ற
ு கூறி தூக்கி எறிந்து விட்டு வெளியே சென்று விட்டார்.இள
அமைதியாக இருந்தான்.சில நாட்கள்
இப்படியே போயிற்று.ஒரு நிலையில் தாயிடம் கொடுக்கப் பணமில்லை.சில நாட்கள் கடன் வாங்கிக் கொடுத்தாள் .ஆனால்
ஒவ்வொரு நாளும் அவன் தந்தை ,''நீயும் உன் ரூபாயும்,''என்ற
ு கூறி விட்டெறிந்து கொண்டிருந்தார்.
இப்போது தாய்க்கு கடன் யாரும் கொடுக்கத் தயாராயில்லை. மேலும் கொடுத்த பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர்.தாய்
வேறு வழியில்லாது,''மகனே,இனி நான்
செய்வதற்கு ஒன்றுமில்லை.இனி நீ போய்
ஏதாவது வேலை செய்து பணம் கொண்டு வருவதைத்தவிர
வேறு வழியில்லை.உன் தந்தையும் இவ்விசயத்தில் பிடிவாதமாக
இருக்கிறார்.நான் என்ன செய்ய முடியும்? என்று கூறி கை விரித்து விட்டார்.இளைஞன்
வேறு வழியின்றி வெளியே சென்று மூட்டை தூக்குவதிலிருந்
து எந்த வேலையானாலும் செய்து அன்று நூறு ரூபாய்
சம்பாதித்து விட்டான்.அன்று பெருமையாகத் தந்தையிடம்
ரூபாயைக் கொடுத்தான்.அன்றும் வழக்கம் போலத் தந்தை,''நீயும் உன்
ரூபாயும்,''என்று கூறித் தூக்கி எறிந்தார். இளைஞனுக்கு வந்ததே கோபம்!''அவனவன் மூட்டை தூக்கி கல்
சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால்
இப்படித் தூக்கி எறிகிறீர்களே,என்ன நியாயம்?''என்று
கேட்டான்.தந்தை சிரித்துக் கொண்டே கீழ குனிந்து எறிந்த
பணத்தை எடுத்து,அதை முத்தமிட்டு தனது பைக்குள்
வைத்துக்கொண்டு,''இது என் மகன் உழைப்பில் வந்த பணம்,இனி அவனைப்பற்றி எனக்குக்
கவலை இல்லை''என்று கூறி மகிழ்ச்சியுடன்
வெளியே சென்றார்.-

1. வளர்ந்த மனித உடலில் 600 தசைகள். நூற்றுக்கும் மேலான இணைப்புகள். ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள இரத்தக் குழாய்கள் 13000 மில்லியன் உயிரணுக் களும் உள்ளன.
2. மனிதனுக்குள்ள 206 எலும்பு களில் பெரும்பாலானவை கைகளிலும் கால்களிலும் உள்ளன.
3. ஆண்களில் விந்துவை உண்டாக்கும் விரை (விந்தகம்) நாள் ஒன்றுக்கு 10 மில்லியன்வரை விந்து உயிரணுக்களை உற்பத்தி செய்யும். இவை அப்படியே உயிருடன் ஆறு மாத காலம் இருந்தால் மற்றொரு உலக ஜனத்தொகையை உருவாக்கக்கூடும்.
4. மனித இதயம் ஒரு இயல்பான வாழ்நாளில் 2000 மில்லியன் முறை துடிக்கும். இந்த கால கட்டத்தில் 500 மில்லியன் இரத்தத்தை பம்ப் செய்யும். மனிதன் தூங்கும்போது கூட இதயம் ஒரு மணி நேரத்தில் சுமார் 340 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்யும். ஒரு நாளைக்கு 1 லட்சம் முறைதுடிக்கும்.
5. இளைஞனின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 லிருந்து 72 முறை. ஆனால் இளம் பெண்ணின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 78 லிருந்து 82 முறைஇருக்கும்.
6. மனிதனின் சிறுநீரகத்தில் ஒரு மில்லியன் வடி கட்டிகள் இருக்கின்றன. அவை ஒரு நிமிடத் திற்கு 1.3 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகின்றன. அந்த வடிப்பில் ஏற்பட்ட கழிச்சலை சிறுநீரகம் வெறியேற்றுகின்றன.
7. மனித உடலில் உள்ள இரத்தத்தை நிமிடத்திற்கு 4.5 லிட்டர் விகிதம் நுரையீரலில் சுத்தப் படுத்தும்.
8. மனித உடலில் சிவப்பணுக்களை எலும்புச் சோறு (எலும்பின் மச்சை) தயாரிக்கிறது. அந்த அணுக்கள் 100லிருந்து 120 நாட்கள் வாழ்கின்றன. மனித வாழ்வில் சுமார் அரை டண் சிகப்பணுக்கள் தயாராகும்.
9. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50 டண் உணவை சாப்பிடுகிறான். 50 ஆயிரம் லிட்டர் திரவத்தை குடிக்கிறான்.
10. நாம் தினமும் கண் இமை களை திறக்கவும் மூடவும் செய்கிறோம் அல்லவா? இந்த செயல் 6 வினாடிக்கு கொருமுறை நடக்கிறது. அதன்படி இந்த சிமிட்டலை நாம் நம்முடைய வாழ் நாளில் 250 மில்லியன் முறை (25 கோடிமுறை) செய்கிறோம்.
11. மனிதனுக்கு 15 வயது வரையில்தான் மூளை வளரும்.
12. சாதாரண மனிதனின் தலையில் 10 ஆயிரம் ரோமங்கள் உள்ளன.
13. ஒரு விஞ்ஞானி, மனிதனின் மரணத்திற்கு சில நொடிகளுக்கு முன்பு இருந்த எடையும் மரணமடைந்த உடனே இருந்த எடையும் ஒப்பிட்டு பார்த்து 21 கிராம் குறைவாக இருந்ததை அறிந்து அதன்மூலமாக ஜீவான்மாவின் எடை 21 கிராம் என்று நிரூபித்தார்.
14. நாம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 25 முறை கண் இமை களை மூடி திறக்கிறோம்.
15. ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளில் (24 மணிகளில்) 23000 முறை மூச்சிழுப்பான்.
16.பெரும்பாலோர் இரவுத் தூக்கத்தில் 40 முறை அப்படியும் இப்படியும் புரளுவார்கள்.
17. மனித உடலில் உள்ள அனைத்து இரத்தக் குழாய்களை வரிசையாக இணைத்தால் மொத்தம் ஒரு லடசம் கி.மீ நீளத்திற்கு சேரும். அந்த நீளம் பூமத்திய ரேகையை நான்கு தடவை சுற்றிவரக்கூடும்.
18. மனிதன் மனமார சிரிக்கும் பொழுது 17 தசை களும், கோபப்படும்பொழுது 43 தசைகளும் சுருக்கமடைகின்றன.

Subscribe to:
Posts (Atom)