Friday, 6 June 2014


வாழை இலையின் பயன்கள்

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.
ஞ்சள் காமாலைக்கு எலுமிச்சை

எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, கண் நோய், ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவை குணப்படும். எலுமிச்சம் பழங்களை ஊறுகாய் போடும் முறை தவறானது. கிச்சிலி மற்றும் நார்த்தங்காய் போன்ற எலுமிச்சங் காய்களையே ஊறுகாய் தயார் செய்ய சிறந்ததாகும். எலுமிச்சம் பழத்தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவுக்கு பொரித்த படிகாரம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் தேமல் என்ற சரும நோய்க்கு இப்பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து இரவு நேரத்தில் தேகத்தின் மேல்பூசி காலையில் குளித்து வர விரைவில் தேமல் மறையும்.
மருந்தாகும் அகத்தி

அகத்திக் கீரையை உண்பவருக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்துக்கு ஒருமுறையேனும் தவறாமல் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் தேகத்தில் உஷ்ணம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும். மலம், சிறுநீர் தாரளமாக கழியும். குடல் புண் ஆற்றும்.
அகத்திக்கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிட நோய்கள் அகலும்.
பிமருத்துவம் வெந்தயம்

வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

வெந்தயம் ஒரு மா மருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள்.

இஸ்லாமியர்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கூட்டும் ஒன்றாகும். பொதுவாக சமையல் பொருளாக அனைவரின் பழக்கத்திலிருக்கும் வெந்தயத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கின்றது.

நம் நாட்டில் அனைத்துப் பாகங்களிலும் வெந்தயச் செடியைப் பயிரிடுவார்கள். இதன் இலைகளைக் கீரையாகக் சமையலில் பயன்படுத்துவார்கள்.

மழைக்காலங்களில் அதிகமாக விளையும் வெந்தயச் செடியில் பூக்கள் பூத்தபிறகு சுமார் இரண்டு செண்டி மீட்டர் நீளமான காய்கள் காய்க்கும். உலர்ந்த காய்களில் மஞ்சள் நிற விதைகள் இருக்கும். இதைத்தான் வெந்தய விதைகள் என்று கூறுவார்கள்.

மருத்துவ விஞ்ஞானிகள் வெந்தயத்தை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் மீன் எண்ணெய்க்கு சமமாக எண்ணெய்ச் சத்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, பாஸ்பேட், லெசித்தின் மற்றும் நியூக்லோ அல்பூமிக் ஆகியவை அதிகளவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனவே ஊட்டச்சத்துக்காக மீன் எண்ணெய்க்கு மாற்றாக வெந்தயத்தைப் பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நரம்புத் தளர்ச்சி, நாள்பட்ட வியாதிகளுக்குப் பிறகு ஏற்படும் பலவீனம், நரம்பு வலி, தொண்டை வலி, கழலைக் கட்டிகள், வீக்கங்கள், மார்புச் சளி, நிமோனியா ஆகியவற்றுக்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம்.

மாதவிலக்கில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கைத் தடுப்பதற்கு 3 கிராம் வெந்தயத்தைத் தேனில் கலந்து இரண்டு வேளை தரலாம். வெட்டை நோயால் தொடை மடிப்புகளில் வரும் அரையாப்புக்கட்டி, கழலைக் கட்டிகள், பொதுவான வீக்கம் ஆகியவற்றைக் குணமாக்க வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துப் பற்றுப்போடலாம்.

5 கிராம் வெந்தயத்தைப் பவுடராக்கிச் சிறிது சமையல் உப்புடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொந்தரவு, இரைப்பை பலவீனம் ஆகியவை குணமாகும். 6கிராம் வெந்தயம், சர்க்கரை ஆகிய இரண்டையும் பாலில் கொதிக்க வைத்துப் பாயசமாகக் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். 9 கிராம் வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துத் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.

ஹைதராபாத்தில் ராஷ்டிரிய போசன் அனுசந்தான் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகள் சர்க்கரை வியாதியைப் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இருதய நோயாளிகளுக்கும் தினசரி 20 கிராம் வெந்தயத்தை அரைத்து 10 நாட்கள் கொடுக்கப்பட்டது. இதன் பலனாக இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் குறைந்திருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படவில்லை என்றும், தினசரி 20 கிராம் முதல் 100 கிராம்வரை தேவைக்கேற்றபடி சாப்பிடலாம் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்க்கரை வியாதியைக் குணமாக்க சில யுனானி வைத்தியர்கள் வெந்தயத்தை மட்டும் தனியாகப் பயன்படுத்துவார்கள். பலர் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வெந்தயம் அகியவைகளைச் சமஅளவில் கலந்து பவுடராக்கி ஒரு டீஸ்பூன் அளவில் தினசரி இரண்டு வேளை சாப்பிடுவார்கள். கிராமத்தில் சில யுனானி வைத்தியர்கள் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வேப்பிலை, பிரிஞ்சி இலை, வெந்தயம் ஆகிய 5 பொருட்களையும் பவுடராக்கி வேளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் இரண்டு வேளைதருவார்கள்.

டாக்டர் காலித் கஜனவி என்பவர் கருஞ்சீரகம் 12 கிராம், காசினி விதை 6 கிராம், வெந்தய விதை 6 கிராம் அளவில் சேர்த்துப் பவுடராக்கி மூன்று கிராம் வீதம் காலை- மாலை இரண்டு வேளை தருகின்றார். தொடர்ந்து 6 மாதங்கள் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும் என்றும் அவர் கூறுகின்றார். நம் நாட்டில்; வெந்தயத்தை மூலப் பொருளாக கொண்ட பல யுனானி மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன

நெல்லிக்காயின் மகிமை

நெல்லிக்காயை விதை நீக்கி இடித்து சாறு பிழிந்து சம அளவு சர்க்கரைத் சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம். அல்லது நெல்லி வற்றலை இடித்து தூளாக்கி சம அளவு சர்க்கரைத் சேர்த்து காலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வென்னீர் அருந்தலாம். இதனால் கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக மன உளைச்சலால் ஏற்படும் கை உதறல் குணமாகும்.

பெரும்பாலும் கைகள் நடுங்குவதை நரம்புத் தளர்ச்சி என்றோ, நடுக்கல்வாதம் என்றோ எண்ணி பல உயர்ந்த மருந்துகளை அளித்தும் பலன் கிட்டாத நிலையில் நெல்லி வற்றல் சம்பந்தப்பட்ட மருந்துகள் சிறப்பான குணத்தை அளிக்கும்.

மதுமேக நோயாளிகளுக்கு நெல்லியுடன் கறிமஞ்சளும், நாவல் கொட்டையும் சம அளவுக்கு சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர நோய் விரைவில் கட்டுப்படும்.

தர்பூசணிப் பழம்

கோடைக்காலத்தில் அதிகமாக விற்கப்படும் தர்ப்பூசணி கோடைக் கனி என்றும் கூறப்படும். தாகத்தையும் நாவறட்சியையும் தவிர்க்கும் தன்மை கொண்ட தர்ப்பூசணிப்பழம் நீர்ச்சத்து மிகுந்தது இவைகள் சிவந்த நிறத்தில் மட்டுமல்லாமல் வெண்மையாகவும் கூட காணப்படும். நிறம் எதுவாயினும் இதை உண்ணலாம். சில இனிப்பாகயிருக்கும். சில ருசியே இல்லாமல் சப் பென்றும் இருக்கும். இதில் 90 சதவிகிதம் நீர் சத்தும் 3.37 சதவீதம் நார்ச் சத்தும் உண்டு. தவிர இரும்பு சத்து, தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து பாஸ்பரஸ் போன்றவைகள் சிறிய அளவில் கொண்டது. இது வைட்டமின் சி, பி. ஆகியவைகளுடன் நியாசினும் உண்டு. உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது இது, சிறுநீரை நன்கு பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்ட சத்து மிகுந்த பானம் இது.
பொன்னாங்கண்ணி

தினமும் இந்த கீரையை தினந்தோறும் உண்டு வாழ்வோருக்கு உடல் பொன்போல பளபளப்பாகும் என்பர். புரதம், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் சீயும் நிறைந்த இந்தக் கீரை குளிர்ச்சி தரக் கூடியது. பத்தியக் கீரை இது. உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலுக்கு பலம் தரவல்ல இந்தக் கீரை சொறி சிரங்குகளை போக்கி மேனியின் அழகைக் கூட்டும். கண்கள் சம்பந்தமான நோய்கள் அனைத்தையும் போக்கி நல்ல பார்வையைத் தரவல்லது இது, மூல நோய், மண்ணீரல் பாதிப்புகள் போக்கும் தன்மை இதற்கு உண்டு.

பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி என்றும், நாட்டுப் பொன்னாங்கண்ணி எனவும் இரு வகை உண்டு. வைட்டமின் ஏ செறிந்த இந்தக் கீரை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் நல்ல பளிச்சென்ற பார்வை கிடைக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும். சத்து மிகுந்த நாட்டுப் பொன்னாங்கண்ணிதான் மருத்துவத்திற்குப் பயன்படுவது, பலன் பல கொடுத்து, பலவித நோய்களையும் தீர்க்கும் இந்த கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும்.