Tuesday, 24 February 2015

கிஸ்மிஸ் பற்றி சில கிசுகிசு
திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த கிஸ்மிஸ் பழம். இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது. மேலும், விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால்
அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
உலர் திராட்சையின் பயன்கள்!:
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சைப் பழத்தில், 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கஷாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வரலாம்.
குழந்தைகள் வளர்ச்சிக்கு: வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.
இரத்த விருத்திக்கு: எலும்பு மஜ்ஜைகளிலிருந்து ரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஜ்ஜைகள் பலமடைந்து ரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு
புத்துணர்வைக் கொடுக்கும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு:கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்
ஹோமங்களில் போடும் பொருட்களால் கிடைக்கும் பலன் ..
முக்கனிகளை இட்டால் - திருமணத் தடை அகலும்.
பச்சரிசியை இட்டால் - கடன் சுமை குறையும்.
தேன் ஊற்றினால் - பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.
சர்க்கரையை இட்டால் - புகழ், கீர்த்தி அதிகரிக்கும்.
பால் ஊற்றினால் - வாகன யோகம் கிட்டும்.
நெய் இட்டால் - சுகபோகமான வாழ்க்கை அமையும்.
தயிர் இட்டால் - சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உருவாகும்.
அரசு சமித்துக் குச்சிகளை இட்டால் - பதவி வாய்ப்புகள் கிடைக்கும்.
அருகம்புல்லை இட்டால் - நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும்
அற்புதமான மனிதராக வாழ சத்குரு வழங்கிய செயல்முறை
மஹாசிவராத்திரி நிறைவில் சத்குரு அவர்களின் வார்த்தைகள் இதோ:
"இந்த மஹாசிவராத்திரியின் ஒரு அம்சமாக, நீங்கள் ஒரு எளிமையான செயல்முறை செய்ய வேண்டும். ஒருவரை அற்புதமான மனிதராக உருவாக்கும் மூன்று விஷயங்கள் என்று நீங்கள் கருதுவதை ஒரு தாளில் எழுதுங்கள். அதனை உங்கள் வாழ்க்கையின் உண்மை நிலையாக்குங்கள். நான் நினைப்பதை அல்ல, நீங்கள் உயர்வாக நினைப்பதை எழுதி செயல்படுத்துங்கள். இந்த வாழ்க்கையில், நீங்கள் விரும்புவதையே நீங்கள் செய்யவில்லை என்றால் இது ஒரு வீணாக்கப்பட்ட வாழ்க்கை. அந்த மூன்று விஷயங்களை உங்கள் வாழ்வில் உண்மையாக்குங்கள். மாறிய உங்களை அடுத்த வருடம் சந்திக்கக் காத்திருக்கிறேன்."
"நான் என்னை எப்படி அற்புதமான மனிதராக மாற்றிக்கொள்வது" என யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?
நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??
கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.
சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்
புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.
Raja Kannan added 2 new photos — with Swami Nirakara and 9 others.
சத்குரு பரப்பிரம்மாவைத் தேடி...
பகுதி I
நேற்று தேனிக்கு அருகிலுள்ள போடி நாயக்கனூரில் நண்பரின் திருமணம். 7.30 லிருந்து 9 மணிக்குள்ளாக முகூர்த்தம், நான் காலை 10 மணிக்கு போடி நாயக்கனூர் பஸ் நிலையத்தில் இறங்கி,
"பாஸ்...! நான் பஸ் ஸ்டேன்டுல எறங்கிட்டேன்"
அலைபேசியில் அறிவித்தேன்.
"கல்யாணம் முடிஞ்சு நாங்க கிளம்பப்போறோம், சீக்கிரம் வந்தால் சாப்பாடு காலியாகாது" என்றது எதிர்முனை. அடித்துப்பிடித்து ஓடியதில் பலனில்லாமல் இல்லை, கல்யாண சாப்பாடு கல்யாண சாப்பாடுதான்!
அங்கிருந்த நண்பர்கள் யாரும் ஈஷா அன்பர்கள் அல்லர். ஆனால், அவர்கள் திருப்பூரில் பணியாற்றுவதால் சத்குருவைப் பற்றியும் ஈஷாவை பற்றியும் அறிவர். அவர்களிடம், சத்குரு சென்ற ஜென்மத்தில் வாழ்ந்த இடத்திற்கு செல்லலாம் என்றால் அது செல்லுபடி ஆகாது. இந்தியா-தென் ஆப்ரிக்கா உலகக் கோப்பை ஆட்டம் வேறு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அவர்கள் திருப்பூர் வண்டியில் ஏறிவிட்டார்கள். நான் தனியாகத் தான் மதுரையிலிருந்து வந்திருந்தேன். இப்போதும், தனியாகத்தான் செல்ல வேண்டும். கல்யாணம் தேனிக்கு அருகில் என்றதுமே, M.சுப்புலாபுரம் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால், தனியாக செல்வதில் சற்று தயக்கம். மணி 11 மணிக்கும் மேலாக ஆகியிருந்தது. வெய்யில் ஒருவித களைப்பைத் தந்தது. சிவனே என்று மதுரைக்குத் திரும்பிடலாம் என எனக்குள் பேசியவாறே "ஒரு டீ" ஆர்டர் செய்தேன்.
"அண்ணே இங்க M.சுப்புலாபுரம் எங்க இருக்கு, எப்படி போகணும்!"
"தெரியாது! ஆனா... பஸ் இங்க வரும்!"
டீ குடித்து முடிப்பதற்குள் பஸ் வந்தால் போகலாம்! இல்லையென்றால் வீட்டிற்குத் திரும்பலாம்! என்றிருந்தேன்.
சத்குரு முந்தைய பிறவியில் பிறந்த ஊர் (விருதுநகர் அருகில் நடுவப்பட்டி) என்னுடைய ஊருக்கு 15கி.மீ தொலைவில்தான் இருக்கிறது என்று தெரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அங்கிருந்து கோபத்துடன் சத்குரு நீங்கியதாகவும் அவர் வாழ்ந்த வீடு கூட இடிந்து இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். எனவே அங்கு செல்வதற்கு எனக்கு அதிக ஆர்வமிருக்கவில்லை. இப்போது கண் முன்னே நம்முடன் நேரடியாக சத்குரு நமக்கு அருளிச் செல்கிறார். பின்பு ஏன் அங்கு சென்று அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வேறு!
ஆனால், முன் ஜென்மம் பற்றி அரட்டை அடிப்பது அலாதியான சுவாரஸ்யம் உண்டு. எனக்குமட்டுமல்ல பலருக்கும். இன்றும் கூட பல திரைப்படங்களும் முன் ஜென்மக் கதைகளை மையமாக வைத்து வந்த வண்ணம் உள்ளன.
"அண்ணே ஸ்கோர் என்ன.." ஒரு ஆட்டோ காரர் டீக்கடைக் காரரிடம் கேட்டார். அவர் சொன்ன ஸ்கோரை கேட்டுவிட்டு "அப்பாடா எப்படியும் முன்னூறுக்கு கொண்டாந்துருவாய்ங்க!" என்று சொன்னபோது அவர் முகத்தில் பெரிய சவாரி கிடைத்த சந்தோஷம்.
சுமாராக இருந்த அந்த டீயைக் குடிக்க சற்று நேரம் பிடித்தது. சரி! பஸ் வருவதாகத் தெரியவில்லை. மதுரை பஸ் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தேன். அங்கு M.சுப்புலாபுரம் பஸ் நின்றுகொண்டிருந்தது. ஆம்! அந்த டீக்கடைக்காரர் தவறுதலாகச் சொல்லியிருக்கிறார்.
உடனே எதுவும் யோசிக்காமல் ஏறி அமர்ந்துகொண்டேன். பஸ் கிளம்பியது. பயணக் களைப்பில் லேசான தலைவலி இருந்தது. பஸ் நகரத்தை விட்டு M.சுப்புலாபுரம் கிராமம் நோக்கிச் செல்ல செல்ல எனது களைப்பும் தலைவலியும் காணமல் போய் ஒருவித சுகமான நிலையை உணர்ந்தேன்.
பஸ் விட்டு இறங்கியதும் சத்குரு பரப்பிரம்மா கல்வி அறக்கட்டளை என்ற போர்டு என்னை வரவேற்றது. அந்த தெருவிலேயே நடந்து சென்றேன்.
"இங்க சத்குரு கோயில் எங்க இருக்கு" ஒரு அம்மாவிடம் கேட்டேன்.
"இப்புடி போயி, அப்புடி போனா அங்க இருக்கு" என்று கைகளை அசைத்துச் சொன்னார்.
அங்கு சென்றேன். அங்கே ஒரு காளியம்மன் கோயிலும் ஒரு விநாயர் கோயிலும் இருந்தது. தயங்கியபடியே விநாயகர் கோயில் வாசலில் நின்றபடி,
"சத்குரு கோயில்...?!" என்றேன்.
"வாங்க உள்ள வாங்க!" காவி வேட்டி கட்டியவர் வரவேற்றார்.
உள்ளே நுழைந்தவுடன் ஒரு விநாயகர் தெரிந்தார். இடது புறத்திலிருந்து அறைக்கு முன்னே சத்குரு பரப்பிரம்மா படம் கொண்ட காலண்டரும் உள்ளே சத்குருவின் திருவுருவங்களும் இருந்தன.
அந்த பூசாரி எல்லா கோயிலிலும் செய்வதுபோல் முதலில் விநாயகருக்கு தீபம் காட்டிவிட்டு, பின் சத்குரு உருவங்களுக்கு தீபம் காட்டி திருநீரை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
பொதுவாக கிராமத்துப் பூசாரிகள் தங்கள் கைகளாலேயே பூசி விட்டு விடுவார்கள். ஆனால், அவர் என்னை எடுத்துக்கொள்ளச் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. அந்த திருநீரு ஈஷா திருநீரைப் போலவே இருப்பதை என்னால் உணரமுடிந்தது.
சத்குரு சந்நிதியின் முன்பிருந்த இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்ய நினைத்தேன். ஆனால், பூசாரி என் அருகில் வந்து உட்கார்ந்தார். என்னிடம் அவர் கேள்விகள் கேட்க நினைப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
பூசாரி என்னிடம் என்ன கேட்டார், அங்கு நான் உணர்ந்த அனுபவங்கள் என்ன, சுப்புலாபுரம் போக நினைப்பவர்கள் எப்படிப் போகலாம்! எப்போது போகலாம்? நாளைக்கு சொல்கிறேன்!
ஏழரை சனி இருந்தால் என்ன செய்யலாம்?
கேள்வி சத்குரு, ஏழரை சனி வந்தால் துன்பம் நேரும் என்று கூறுகிறார்களே, அந்தப் பரிகாரம் செய்யுங்கள், இந்தப் பாடலை ஒன்பது தடவை உச்சரியுங்கள் என்றெல்லாம் கூறுகிறார்களே? இதற்கு உங்கள் பதில் என்ன?
சத்குரு:
இங்கு எவ்வளவு பேருக்கு ஏழரை சனி இருக்கிறது? (பலர் கை உயர்த்துகிறார்கள்) இவர்கள் எல்லாம் ஆனந்தமாக நன்றாகவே இருக்கிறார்களே! வாராவாரம் சனி வந்தால் நல்லதுதானே? ஏனென்றால்… அடுத்த நாள் ஞாயிறு! நமக்கு மற்ற கிரகங்கள் பற்றி அதிக கவனம் வந்துவிட்டது. நீங்கள் வாழும் இந்த கிரகத்தைப் பற்றி கவனமே இல்லை. நமது உயிருக்கு அடிப்படையாக இருப்பது இந்த கிரகம். நமது உடல் இந்த கிரகத்திலிருந்து தானே வந்திருக்கிறது? இந்த பூமியிலிருந்துதானே இந்த உடல் வந்திருக்கின்றது? மண்தானே இது? ஆனால் இது பற்றி நமது கவனமில்லை. எங்கேயோ இருக்கும் சனி கிரகம் பற்றி கவனம் வந்துவிட்டது. ஏமாற்றிய ஜோசியர்… கிரகங்கள் போவது மாதிரி போக வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? இல்லை நீங்கள் விரும்புகிற மாதிரி போகவேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? ஒரு முறை பீஜப்பூர் சுல்தான், கிருஷ்ணதேவராயர் மீது போர் செய்ய நினைத்து பெரிய படையுடன் வந்தார். ஆற்றில் மிகவும் அதிகமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. எனவே அக்கரையில் கூடாரம் போட்டு அங்கேயே உட்கார்ந்தார்கள். கிருஷ்ணதேவராயர் ஆற்றின் இந்தப்பக்கத்திலிருந்து அந்த பெரிய சேனையைப் பார்த்தார். உடனே கிருஷ்ணதேவராயரின் ஆட்கள், “நாம் ஆற்றை சில இடங்களில் தாண்ட முடியும். நாம் உள்ளூர் மனிதராக இருப்பதால், நாமே இந்த ஆற்றைக் கடந்து அவர்களை முதலில் முடித்துவிடலாம். ஆற்றில் வெள்ளம் வடிந்துவிட்டால், அவர்கள் இங்கே வந்து நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்” என்றார்கள். இவருக்கும் ஒரு போர் வீரனாக இது தான் சரி என்று தோன்றியது. அவருடைய ஆஸ்தானத்தில் ஒரு ஜோசியர் இருந்தார். “நேரம் எல்லாம் நன்றாக இருக்கிறதா? இப்போது போகலாமா?” என்று அவரைக் கேட்டார்கள். அதற்கு அந்த ஜோசியர் “இப்போது நீங்கள் சென்றால் உங்கள் உயிருக்கு ஆபத்து, நீங்கள் இப்போது போகவே கூடாது” என்று சொல்லிவிட்டார். அரசருக்கு ஒரே கவலை வந்துவிட்டது. இது தெனாலிராமன் காதில் விழுந்தது. அவர் அந்த ஜோசியரை வரவழைத்து, “உங்கள் ஜாதகப்படி நீங்கள் எத்தனை வருடம் இருப்பீர்கள்?” என்று கேட்டார். “80 வருடம்” என்று ஜோசியர் பதில் சொன்னார். “சரி, நான் உன் உயிரை இப்போது எடுக்கப்போகிறேன். நீதான் எப்படியிருந்தாலும் சாக மாட்டாயே” என்று தெனாலிராமன் மிரட்ட, ஜோசியர் பயந்து தனது தப்பை ஏற்றுக்கொண்டார். “பீஜப்பூர் சுல்தானிடம் பணம் வாங்கிக்கொண்டு இப்படிச் செய்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்” என்று சொன்னார். எப்படியும் அவர் தலையை துண்டித்துவிட்டார்கள். வாழ்க்கை யார் கையில்? அந்த கிரகம் எங்கே போகிறது? இந்த கிரகம் எங்கே போகிறது? அவையெல்லாம் எங்கோ போகட்டும். அந்த கிரகங்கள் போவது மாதிரி போக வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? இல்லை நீங்கள் விரும்புகிற மாதிரி போகவேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? படைத்தலுக்கு மூலமானது உங்களுக்குள்ளேயே இருக்கும்போது ஜடப்பொருளைப் பார்த்து எதற்கு அதன் பின்னால் போகிறீர்கள்? ஏழரை வருடம் சனி இருக்கட்டுமே, அல்லது பதிமூன்று வருடம் இருக்கட்டுமே, நமக்கென்ன? இப்பொழுது உங்களுக்கெல்லாம் விசா கொடுத்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பினால், சனி இருந்தாலும் கவலைப்படாமல் போய்விடுவீர்கள்தானே? மனதில் பயம் வந்துவிட்டால், உங்களை எதை வேண்டுமானாலும் நம்ப வைக்கலாம். எல்லாவற்றையும் தாண்டிப் போகவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? இதிலேயே சிக்கிவிடவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? படைத்தலுக்கு மூலமானது நமக்குள்ளே இருக்கிறபொழுது, இந்த கிரகமோ, நட்சத்திரமோ நம்மைத் தடுக்க முடியுமா? நாம் உள்ளே இருக்கிற படைத்தவன் கூட தொடர்பு வைத்துக்கொண்டால், எந்த கிரகம் எங்கே போனாலும், நாம் எங்கு போக வேண்டுமோ, அங்குதான் போவோம். எப்பொழுது நீங்கள் ஆன்மீக வழியில் இருக்கிறீர்களோ பின்னர் அவையெல்லாம் பொருட்டல்ல. ஆன்மீகம் என்றால் என்னவென்றால் நம்முடைய விதியை நம் கையில் எடுத்துக் கொள்வது. “என்னுடைய கர்மா என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். என் அப்பா கர்மா என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் முக்தி நோக்கத்தில் போகிறேன்!” அப்படியென்றால் என்ன அர்த்தம்? என்னுடைய விதியை என் கையில் எடுத்துக்கொண்டுவிட்டேன் என்றுதானே அர்த்தம். எப்பொழுது படைத்தலுக்கு மூலமாக இருக்கிற தன்மையுடன் உங்களுக்கு தொடர்பு வந்துவிட்டதோ, அதற்குப் பிறகு கிரகங்களோ, நட்சத்திரங்களோ, சுற்றியிருக்கிற சூழ்நிலையோ உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்க முடியாது

Thursday, 19 February 2015

ிசிஸ் செய்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,நோயாளிகள் நேரில் செல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை அவர்களை சார்ந்து மற்றொருவர் சென்றால் போதும், நீங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் டாக்டர்களால் கை விடப்பட்ட நோயாளியா.? இங்கு சென்றால் பூரண குணம் அடைந்து தீர்வு காணப்படுகிறது,ஓரு வாரத்திற்கு 2000லிருந்து3000பேர் வரை இங்கே பூரண குணமடைந்து செல்கிறார்கள்.
பார்வை நாள் ;-
வியாழன், ஞாயிறு நாட்களில் மட்டும் . வைத்தியர் மற்றும் மருந்தின் செலவு 100 மட்டுமே.இடம்.கர்நாடக மாநிலம் ஷிமோகாவிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அனந்தப்பூரிலிருந்து 7 கிலோ மீட்டரில் உள்ளது நரசிபுரா கிராமம்.அனைவருக்கும் சொல்லுங்கள் பகிருங்கள் ...டி.வி மோகன் 8056960537..