Tuesday, 17 March 2015

 பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.
12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

Tuesday, 24 February 2015

அற்புத மூலிகை அறுகம்புல்
நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் அமிலத்தன்மை உடையவை ஆகும். இவை உடல் நலத்தைக் கெடுக்கின்றன. அதேவேளை அறுகம்புல் சாறு காரத்தன்மை உடையது. இது எமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். இன்றைய காலகட்டத்தில் அறுகம்புல் சாற்றைக் குடிக்க விரும்புவோர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது அறிவுறுத்தலின்படி அருந்தலாம்.
அறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது..
அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான மலமிளக்கி. இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும். இனி அறுகம் புல்லின் அற்புதத்தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டொனிக் ஆகச் செயற்படுகின்றது.
உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம உப்புக்கள் பலவும் உண்டு
காலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இதனை மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும் உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய வழியாகும்
உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக்கும்.
துளசி: தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.
பூண்டு: வயிற்றில் உண்டாக்கும் வாயு கோளாறுகள் அனைத்தையும் போக்கும் தன்மை கொண்டது.
இளநீர்: உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்களுக்கு சிறந்த பானம்.
வெண்ணெய்: வாய் மற்றும் வயிற்று புண்களை குணப்படுத்தும்.
மிளகு : ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.
சோம்பு: இது செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.
காளான்: தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.
சிவப்பு முள்ளங்கி: வயிற்று புண்ணை அகற்றும், மஞ்சள்காமாலைக்கு மிகவும் சிறந்த மருந்து.
வாழைத்தண்டு: சிறுநீரகத்தில் தோன்றும் கற்களை கரைக்கும். உடல் பருமனை குறைக்கும். சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்.
முட்டைக்கோஸ்: புற்றுநோய் வராமல் தடுக்கும். தொற்று நோய் வராமல் தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
பாகற்காய்: சர்க்கரை வியாதிக்கு நல்லது. வாய்நாற்றம் போக்கும். வயிற்றுப்பூச்சியை கொல்லும்.
பச்சைபட்டாணி: உடலுக்கு வலிமையும், புத்துணர்ச்சியையும் தரும். குடல் புண்களை ஆற்றும், களைப்பை நீக்கும்.
குழந்தையை தொடர்ந்து அழ விடாதீர்கள்!
குழந்தைகள் தொடர்ந்து அழுவதால், அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நேரம் குழந்தை அழும்போது பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன் குறைந்து போவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் அழுவது, பசியை தாய்க்கு உணர்த்தவே என்பது எல்லோரும் அறிந்தது. உடலில் உள்ள வலியையும், தனக்கு ஏற்படும் பிரச்னைகளையும், தாய்க்கு உணர்த்த குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே வழி அழுகை மட்டும்தான். குழந்தைகள் நீண்ட நேரம் அழும்போது, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டி÷சால் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக, மனநலம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இருபது நிமிடங்கள் வரை, குழந்தைகள் அழ அனுமதிக்கலாம். ஆனால் அதற்கு மேலும் யாருடைய கவனிப்பும் இன்றி, அழுது ஓய்ந்து போகும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நடவடிக்கைகள், மற்ற குழந்தைகளிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். இதனால், அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்குவதில்லை. ஆளுமைத்திறன் குறைந்து, மந்தத்தன்மையோடு காணப்படுவார்கள் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். அழும் நேரத்தில் குழந்தைகளை அரவணைப்பதோடு, அதற்கான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும்.
இரவு நேரத்தில் தொட்டிலில் உறங்கும் குழந்தைகள், அழும்போது பசிக்கு அழுவதாக நினைக்கும் தாய்மார்கள், அவசரமாக பாலை புகட்டி உறங்க வைக்கின்றனர். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு, சத்தமில்லாமல்
மரணமடைகின்றன. குறிப்பாக, ஆண் குழந்தைகள்
மத்தியில், தொடர் அழுகையால் சத்தமில்லாத மரணம் அதிகளவில் ஏற்படுகிறது. இதுபோன்ற தொட்டில்
மரணங்கள், குளிர்காலத்தில்தான் ஏற்படுகின்றன.
எடைகுறைவான, ப்ரீமெச்சூர் குழந்தைகளுக்கே இந்த ஆபத்து அதிகம். குழந்தைகளை குப்புறப் படுக்க வைக்கும்போது, குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது. கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டக் கூடாது. பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும், ஏப்பம் எடுத்து விட்ட பிறகே குழந்தையை படுக்கையில் கிடத்த வேண்டும்.
நம் நாட்டில் பெரும்பாலும், தாய்மார்களின் அணைப்பிலேயே குழந்தையை (மல்லாக்க) படுக்க வைத்து மென்மையாகத் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பதால், அந்த ஸ்பரிசமும், அணைப்பும் கிடைத்த நிம்மதியில் குழந்தை பெரும்பாலும் அப்படியே தூங்கி விடுகிறது. தாயின் அணைப்பும் ஆதரவும், குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தருவதால் நிம்மதியாக உறங்குகிறது
சிறுநீரின் நிறம் மாறினால் என்ன பிரச்சனை தெரியுமா.?
சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி என்ன கூறுகிறது என்பதை பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு கூற போகிறோம். சில சிறுநீர் நிறங்களை பற்றியும், உடல் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்படுத்தி பார்க்கையில் அதற்கான அர்த்தங்களையும் இப்போது பார்க்கலாம். இது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்..........
தெளிவாக தெரிதல்;உங்கள் சிறுநீர் தெளிவாக தெரிந்தால், நல்ல நீர்ச்சத்துடன் உள்ளீர்கள் என்பதை அது குறிக்கும். அளவுக்கு அதிகமான நீர்ச்சத்து என்றால் நீங்கள் தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என அர்த்தமாகும். இதனால் உடலில் உள்ள உப்புகளை நீர்த்து போக செய்து உடலுக்கு தீங்கை விளைவிக்கிறீர்கள். இது எந்த ஒரு ஆபத்தான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தாது தான். ஆனாலும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் என உடலை கஷ்டப்படுத்தாதீர்கள்.
நிறமில்லாத சிறுநீர்;நல்ல தெளிவாக, நிறமே இல்லாமல் சிறுநீர் இருந்தால் அது சர்க்கரை நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். ஆம், உங்கள் சிறுநீரில் நிறமே இல்லையென்றால், அது சர்க்கரை நோய்க்கான அறிகுறியாக தான் இருக்கும். தொடர்ச்சியான தாகம் மற்றும் தொடர்ச்சியான சிறுநீர் கழித்தால் ஆகியவை இதற்கான மற்ற அறிகுறிகளாகும்.
வைக்கோல் நிற சிறுநீர்;வைக்கோல் மஞ்சள் நிறத்தில் இருந்தால் சிறுநீர் ஆரோக்கியமாக உள்ளது என அர்த்தமாகும். ஆனால் சிறுநீரின் நிறம் அடர்த்தியாக மாறிக்கொண்டே போனால் நீர்ச்சத்து குறைந்து கொண்டே வருகிறது என அர்த்தமாகும். நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டி வரும்.
பழுப்பு நிற சிறுநீர்;உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருந்தால், சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறும். நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறலாம். உங்கள் நுரையீரல் சரியாக செயல்படவில்லை என்றால், மலம் மூலமாக வெளியேற வேண்டிய பித்த உப்புகள் சிறுநீர் வழியாக வெளியேறும். அதற்கு காரணம் இரத்தத்தில் அவைகள் அடர்த்தியாக இருப்பதே. ஹெபடைடிஸ் (ஈரல் அழற்சிபறை) எனப்படும் நுரையீரல் அழற்சி, இதற்கான ஒரு உதாரணமாகும். நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் கூட இப்படி ஏற்படலாம். அதனால் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
சிவப்பு நிற சிறுநீர்;சிறுநீரில் இரத்தம் கலக்கும் போது சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேற்றும் . இதனை ஹீமெச்சூரியா என கூறுகிறார்கள். சிவப்பு என்றாலே பொதுவாக எச்சரிக்கைக்கான நிறமாகும். சிறுநீரக பாதையில் தொற்றுக்கள், கிட்னி மற்றும் சிறுநீர்ப்பைகளில் கற்கள், கிட்னி, புரோஸ்டேட் அலது சிறுநீர்ப்பையில் புற்று நோய் போன்ற காரணங்களால் இரத்த கசிவும் சிவப்பு சிறுநீரும் வெளியேறும். இந்த நிலை ஏற்படும் போது சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். பீட்ரூட், ப்ளாக்பெர்ரி மற்றும் இளவேல் சீனி போன்ற உணவுகள் இதற்கு காரணமாக இருக்கும். ஆனால் உணவுகளால் இந்த நிறம் மாற்றம் ஏற்படாமல், பல முறை நடந்தால், அது ஆபத்தான உடல்நல பிரச்சனையாக கூட இருக்கலாம்
நீல நிற சிறுநீர்;இந்த அரிதான நிலையை பார்ஃபிரியா என கூறுவார்கள். இது ஒரு மரபுரிமை என்சைம் நிலையாகும். இது ஒருவரின் சிறுநீர் நிறத்தை நீலம் அல்லது ஊதா நிறத்தில் மாற்றும். இருப்பினும், இந்த சிறுநீரில் நீலம் கலந்த இளஞ்சாயம் தென்படும். இது சாயங்கள் கலந்துள்ள சில உணவுகள் மற்றும் மருந்துகளை உண்ணுவதாலும் கூட ஏற்படலாம். ட்ரையம்டெரென் அல்லது வயாக்ரா போன்ற மாத்திரைகளை உண்ணுவதால் சிறுநீர் நிறம் இப்படி மாறும்.
பச்சை நிற சிறுநீர்;சிறுநீரில் சீழ் இருந்தால், சிறுநீர் பச்சை நிறத்தில் வெளியேறலாம். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது சிறுநீரக பாதை தொற்றுக்கள் தான். தண்ணீர் விட்டான் கொடி போன்ற உணவுகளாலும் கூட இது ஏற்படலாம். இவைகளை சாப்பிட்ட பின் சிறுநீர் கழிக்கையில் ஒரு வித மனமும் உண்டாகும். கருப்பு அதிமதுரம் அல்லது குடல்களில் உறிஞ்சப்படாமல் இருக்கும் அடர்த்தியான நிறங்களை கொண்டுள்ள சில உணவுகளும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆண்டி-பையாடிக்ஸ் போன்ற சில மருந்துகளை உண்ணுவதாலும் கூட சிறுநீர் பச்சையாக வெளியேறும்.
பால் நிற சிறுநீர்;நுண்ணிய இரத்தம் இருப்பதால் பால் நிறத்திலான சிறுநீர் வெளியேறலாம். சிறுநீர் பாதையில் தொற்று, பித்தப்பை தொற்று அல்லது கிட்னி கற்கள் போன்றவைகளாலும் கூட இது ஏற்படலாம். வெட்டை நோய் போன்ற பாலியல் ரீதியான நோய்களால் கூட உங்கள் சிறுநீரின் நிறம் மாறலாம். யோனிமடற்கழிவு ஏற்பட்டாலும் கூட சிறுநீர் பால் நிறத்தில் வெளியேறும்...
வாழையடி வாழை! வாழைத்தண்டின் மருத்துவக் குணங்கள்..!
என்ன சத்துக்கள்?
அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது.
பலன்கள்
கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.
ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும்.
அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.
இரண்டு ரெசிபி
1) வாழைத்தண்டு ஜூஸ்
வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
2) வாழைத்தண்டு மோர்
வாழைதண்டு- 6
தயிர்- 1 லிட்டர்
இஞ்சிச் சாறு- 1 ஸ்பூன்
எலுமிச்சை இலை - 5 அல்லது 6
பெருங்காயத்தூள்- சிறிது
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை:
வாழை தண்டிலிருந்து நாரினை நீக்கவும்.
வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும்.
இஞ்சிச்சாறு, உப்பு, பெருங்காயத்தூள்சேர்க்கவும்.
எலுமிச்சை இலையை கசக்கி மோரில் போடவும்.
வயிற்று உப்பிசம், வயிற்று கோளாறு நீங்கும். கிட்னி ஸ்டோன் உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த பலனை தரும். நீர் கடுப்பு நோய் உள்ளவர்களுக்கு உபாதைகளை நீக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்
திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து
இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
திரிபலா என்றால் என்ன?
திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானமின்மை
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
மலச்சிக்கல்
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தசோகை
இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
உடல்பருமன்
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்
இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.
தலைவலி
தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.
புற்று நோய்
புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது