Friday, 22 May 2015

சர்க்கரைநோய் தீர்க்கும் சரியான
ஆசனங்கள் (பாகம் 6)
(5-ம்பாகத் தொடர்ச்சி)

மூவகைக் கழிவுகள்:- (இரண்டாம் பயன்)
இரண்டாவது பயனாக சலபாசனத்தில் கிட்டுகின்ற மாபெரும் பயன் நமது சிறுநீரகங்களைப் பற்றியதாகும். மானுடதேகத்தின் ஒட்டுமொத்மான நலனைக் காப்பதில் ஒவ்வொரு உறுப்பும் அயராது பணியாற்றி உழைத்துக்கொண்டு இருக்கின்றன. இவற்றுள் சிறுநீரகத்தின் பணியும்,அதன்பங்கும் தலையாய இடத்தை வகிக்கிறது. இரவும் பகலுமாக அற்புதமாக ஒரு ஆலையைப்போல் சிறுநீரகங்கள் இயங்கி வருகின்றன. நமது உடம்பிலுள்ள எல்லா உறுப்புக்களும் ஓய்வின்றி இயங்குவதன் காரணமாக நமது இரத்தத்திலும், குடலிலும் கழிவுகள் சேருகின்றன. இக்கழிவுகள் திடநிலைக் கழிவுகள், திரவநிலைக் கழிவுகள், வாயுநிலைக் கழிவுகள் என மூவகைக் கழிவுகளாக நமது உடம்பினின்றும் வெளியேறுகின்றன.
திடநிலைக் கழிவுகள் குதத்தின் வழியாகவும், திரவநிலைக் கழிவுகள் சிறுநீர்ப்புற வழியாகச் சிறுநீராகவும், தோல் வழியாக வியர்வையாகவும், வாயுநிலைக் கழிவுகள் மூக்கின் வழியே கரியமில வாயுவாகவும், குதத்தின் வழியே அபான வாயுவாகவும் வெளியேற்றப்படுகின்றன. இக்கழிவுகள் முறையாகவும் சீராகவும் வெளியேறாவிட்டால் நமது உடலின் ஆரோக்கியம் பாழாகிவிடும். இக்கழிவுகள் முறையாக வெளியேறுகின்ற போது நாம் அமைதி பெறுகிறோம்.
சிறுநீரகங்கள்:
நாம் உண்ணுகின்ற உணவு ஜீரணமாகி உணவிலுள்ள சாரங்கள் கிரகிக்கப்பட்டு இரத்தத்தோடு கலக்கின்றன. இவ்வாறு இரத்தத்தோடு கலக்கின்ற போது இரத்தத்தில் நீரஇ உப்புஇ ய+ரியாஇ பலவகை அழுக்குகள்இ சர்கரைஇ அமிலங்கள், பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் இன்னும் பலவகைப் பொருட்கள் கலக்கின்றன. இந்தக்கலப்பான இரத்தம் சிறுநீகங்களுக்குச் செல்லுகின்றபோது சிறுநீரகங்கள் வேண்டாத பொருட்களையும், அதிகப்படியாக இருக்கின்ற நீரையும் வடிகட்டிப் பிரித்துச் சிறுநீராக்கி சிறுநீர்ப்பைக்கு அனுப்பி வைக்கின்றன.

இவைதவிர சிறுநீரில் சிலசமயம் வைட்டமின்களும், ஹார்மோன்களும் கல்லீரலால் மாற்றப்பட்டோ அல்லது மாற்றப்படாமலோ, நச்சுத்தன்மைகள் நீக்கப்பட்டோ நீக்கப்படாமலோ வெளியாவதுண்டு. சீறுநீரில் புரதங்கள் தொடர்ந்து அதிமாகக் காணப்பட்டால் அதை அல்புமினூரியா என்று மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இவ்வாறு சிறுநீரில் அல்புமின் அதிகமாக வெளிப்படுவது சிறுநீரக நோயின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.
சிறுநீரில் சர்க்கரை மிகுதியாகக் காணப்பட்டால் அது சரக்கரைநோயின் அறிகுறியாகும். இவ்வாறு ஜீரணத்தின்போது சரியான வேதிவினைக்கு உள்ளாகமலும், உள்ளாகித் தகுந்த மாற்றத்துக்கு உள்ளாகாமலும் இரத்தத்தோடு கலந்துவரும் பொருள்களை சிறுநீரகம் பிரித்து வெளியேற்றுகிறது.
பொதுவாகச் சிறுநீரை சோதித்துப் பாரப்பதன்மூலம் நமது உடம்பிலுள்ள பெருவாரியான குறைபாடுகளை மருத்துவர்கள் கண்டறிகிறார்கள். வேண்டாத பொருட்கள் பிரித்து அனுப்பப்படாமல் அவை நமது இரத்தத்தில் கூடுகின்றபோது நமது உடல்நலம் வெகுவாகப் பாதிககப்படுகிறது. உதாரணமாக இரத்தத்தில் பொட்டாசியத்தினுடைய அளவு கூடிவிட்டாலும் இதயம் நின்றுபோய் மரணம் சம்பவிக்கும். இரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்துவிட்டாலும் கலங்கள் இயங்கமுடியாமல் போய்விடும். நீரின்அளவு இரத்தத்தில் குறைந்து விட்டால் கலங்கள் உலர்ந்து போய்விடும். இதேபோன்று அமிலங்கள் இரத்தத்தோடு கலந்து நிலைபெறுவதும் அபாயத்தைத் தரக்கூடியதாகும். இப்படியான தீமைகளைத் தரக்கூடியவைகள் நமது இரத்தத்தில் சேராமல் சிறநீரகங்கள் நம்மைக் காப்பாற்றுகின்றன.
இருவகை இடர்கள்:
இத்தகைய அற்புத உறுப்பான சிறுநீரகத்துக்கு இரண்டு வகையில் நோய்த் தாக்கங்கள் வருகின்றன. சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், சிறுநீரகக்காசம், சிறுநீரகக்கட்டிகள், சிறுநீரகப்புற்று ஆகியவை முதல்வகை இடர்களாகும். இரண்டாவது வகையில் சிறுநீரகத்துக்கு வருகின்ற இடர்பாடு சிறுநீரகத்தொற்று என்பதாகும். சிறுநீர் கழிக்கின்றபோது சிறுநீர் வெளியேறும் புறவழி மூலமாகக் கிருமிகள் உள்ளே புகுந்து சிறுநிரகங்களைப் பாதிக்கின்றன. இதனால் வலியோடு சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர்ப்பாதையில் எரிச்சல், சிறுநீர்ப் பாதையிலும் சிறுநீர்ப்பையிலும் கட்டிகள் உருவாதல், சிறுநீரகங்களிலும் சிறுநீர்க் குழாய்களிலும் ஒவ்வாமை (அலர்ஜிகள்) போன்றவை நேர்கின்றன. இவற்றில் ஓரிரண்டு காரணங்களால் வருகின்ற இடர்பாடுகள் தொடர்ந்து நீடித்து சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்வதுமுண்டு.
இரண்டு சிறுநீரகங்களில் ஏதேனும் ஒன்று செயலிழந்து போனாலும் ஒரு சிறுநீரகம் மட்டும் தனியாக எல்லாப் பணிகளையும் தடங்கல் இல்லாமல் செய்யும் திறமை கொண்டதாகும். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துபோனால் நமக்குப் பெரும்தீங்கு வருகிறது. அப்போது நவீனமுறையில் டயாலிசிஸ் செய்துகொள்வதும், மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக் கொள்வதும் அவசியமாகிறது.
சிறுநீரகக் கல்:-
இக்காலத்தில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி துயரப்படுபவர்களின் தொகையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படடு சிறுநீரகக்கற்கள் அகற்றப்பட்டாலும் திரும்பவும் சிறுநீரகக்கற்கள் உருவாகிக் கொணடேயிருக்கும். ஆனால் யோகாசனங்கள் மூலமாக சிறநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுத்துவிடலாம். கற்கள் உருவாகி இருந்தாலும் ஆசனங்கள் மூலமாக அவற்றை வெளியே கொண்டு வந்துவிடலாம். இப்படி என் சொந்த அனுபவத்தில் சிலரை நலம்பெறச் செய்திருக்கிறேன்.
அத்துடன் செயலிழந்து போகும் தறுவாயிலுள்ள சிறுநீரகங்களை மீண்டும் செயல்படச் செய்துவிடலாம். சிறுநீரகங்கள் முற்றும் செயலிழந்துபோய், வாரத்துக்கு இரண்டு மூன்று டயாலிசிஸ் செய்துகொண்டுவரும் சிறுநீரக நோயாளிகளையும் டயாலிசிஸ் தேவைப்படாத அளவுக்கு ஆரோக்கியத்துக்கு மீட்டு வந்து விடலாம். சிறுநீரகங்களின் செயல்திறன், சிறுநீரக்கற்கள் போன்ற விடயங்களில் யோகாசனங்களின் வெற்றி நம்மை மலைக்க வைக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. அவற்றுள் முக்கியமான இடத்தை இந்தச் சலபாசனம் வகிக்கின்றது என்பது முக்கியமான விடயமாகும்.
இரண்டு ஹார்மோன்கள்:-
சிறு நீரகம் இரண்டுவகையான ஹார்மோன்களைச் சுரக்கிறது. ஒரு ஹார்மோனின் பெயர் எரித்ரோபொயட்டின் எனப்படும். நமது உடல் எலும்புகளுக்குள்ளே அமைந்திருக்கும் எலும்பு மச்சை என்ற பொருள் இரத்தத்துக்கு வேண்டிய சிவப்பு அணுக்களைப் படைக்கிறது. இந்தப் படைப்பாற்றலை சிறுநீரகம் சுரக்கும் எரித்ரோபொயட்டின் என்ற ஹார்மோன் தூண்டி ஊக்கப்படுத்துகிறது. சிறுநீரகம் சுரக்கும் மற்றொரு ஹார்மோன் ரெனின் என்பதாகும். இந்த ஹார்மோன் சிறுநீரில் உப்பு, நீர் இவற்றின் சமநிலையைப் பேணிக்காக்கிறது. சலபாசனத்தில் சிறுநீரகம் வளம்பெற்று இயங்கி நமது உடல் நலத்தைப் பாதுகாக்கிறது.
பெண்களும் சலபாசனமும் (மூன்றாம் பயன்)
பெண்ணின் கருப்பையைப் பேணிக் காப்பாற்றுவதில் சலபாசனம் ஓர் பெரும் துணைவன் என்று கூறலாம். இன்று நமது குடும்பத்திலுள்ள கன்னிப் பெண்களிடம் காணப்படும் துயரம், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி போன்ற இன்னோரன்ன துன்பங்களை சலபாசனம் மூலமாகத் தீர்த்துக்கொள்ளலாம்.
கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பை முன்பின்னாகவோ பக்கவாட்டிலோ சாய்ந்திருந்தால் இவ்வாறு மாதவிலக்கு நாட்களில் வயிற்றுவலி ஏற்படுமென்று யோகசாஸ்திரம் கூறுகிறது. கருப்பை, ஓவரி ஆகிய நுட்பமான உறுப்புக்களில் இந்த சலபாசனம் மென்மையாக இயங்கி மேற்சொன்ன குறைபாடுகளை அடியோடு தீர்த்துவைக்கிறது. இதனால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் வயிற்றவலி அகன்று விடுகிறது. கருவுற்ற பெண்கள் தயவுசெய்து சலபாசனம் செய்ய வேண்டாம்.
உத்திதபாதாசனம்:-
உத்தி + இதம் + பாதம் + ஆசனம் என்று இது விரிவுபடும். உத்தி என்றால் தொப்புள், வயிறு என்று பொருள்படும். உத்தியாகிய தொப்புள் (உந்திக்கமலம்), வயிறு ஆகிய பகுதிகளுக்கு நலம் சேர்க்கின்ற ஆசனம் இது.
செய்முறை:-
படுக்கையில் மல்லாந்து படுக்க வேண்டும். இரண்டு கைகளையும் பக்கத்துக்கு ஒன்றாகக் கவிழ்த்து வைத்துக்கொண்டு மூச்சை உள்ளே இழுத்து அடக்கிக் கொள்ள வேண்டும் இப்போது இரண்டு கைகளையும் சேர்த்து மேலே தூக்கி 45 பாகை அளவில் நிறுத்த வேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் பொதும்.

பின்னர் மூச்சை மெதுவாக வெளியேற்றியபடியே கால்களை இறக்கித் தரையில் வைத்துக்கொள்ளலாம். கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டு பின்னர் மீண்டும் உத்திதபாதாசனம் செய்யவேண்டும். இவ்வாறு மூன்று அல்லது நான்கு முறைகள் இவ்வாசனத்தைச் செய்தால்போதும். இதற்குமேல் தேவையில்லை.
பயன்கள்:-
இவ்வாசனத்தில் நமது உந்திக்கமலம் சுறுசுறுப்படைகின்றது. வயிற்றிலுள்ள ஜீரண உறுப்புக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் ஜீரணம் துரிதப்படுகிறது. குடல் உறிஞ்சிகள் உணவிலுள்ள சாரத்தை சுத்தமாக உறிஞ்சிக் கொள்ளுகின்றன. இடைஇ பிங்கலை ஆகிய கால்நரம்புகள் வலிமை பெறுகின்றன. இடுப்பில் நளினமாக இயங்கி இடுப்பு வலியைப் போக்குகிறது. தொடைகள் கால்களிலுள்ள தொளதொளத்த தசைகள் கரைந்து வலிமை பெறுகின்றன. கால் பாதங்களிலுள்ள பித்தவெடிப்புக்கள் அகலுகின்றன. பாதங்களில் ஏற்படும் புண்களை இவ்வாசனம் அடியோடு களைகிறது. மூல நோயால் கஷ்டப்படுபவர்கள் இவ்வாசனத்தை ஆறுமுறை செய்தால் போதும். நோயின் கடுமை நீங்கிப் படிப்படியே பூரண நலம் கிடைக்கும்.
உந்திக்கமலம்:-
தொப்புளிலிருந்து மேலே இரண்டும், கீழே இரண்டுமாக நான்கு பிரதான இரத்தக் குழாய்கள் செல்வதாகவும், இவை பிரிந்து 700 இரத்தக குளாய்களாக விரிவடைவதாகவும் யோக நூல்கள் கூறுகின்றன. இவ்வாசனத்தைச் செய்கின்றபோது தொப்புளிலிருந்து இந்த 700 இரத்துக் குழாய்களுக்கும் சுகமான ஒரு அழுத்தம் பரவி இரத்த ஓட்டத்தத்தைத் துரிதப்படுத்தியும் சமநிலைக்குக் கொண்டுவந்தும் நமது உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் சமச்சீரான இரத்த ஓட்டம் கிடைக்கச் செய்கின்றது. வயிற்று இரைச்சல், அடிக்கடி பேதியாதல் போன்ற குடல் சம்பந்தமான குறைபாடுகளும் உத்திதபாதாசனம் செய்வதால் அகலுகின்றன.
இவ்வாசனம் பார்ப்பதற்கு மிக எளிமையானது. நல்ல உயர்வான பலன்களளைத் தரக்கூடியது. சும்மா ஏனோ தானோ என்று செய்யாமல் மெதுவாக இசைக்கு அசைவதுபோல நன்கு அனுபவித்து இவ்வாசனத்தைச் செய்யவேண்டும். அவ்வாறு செய்கின்றபோது உண்டாகும் சுகம் ரொம்ப அலாதியானதாக இருக்கும். சிலரால் பத்து நொடிகள்வரை இப்படிக் கால்களை வைத்திருக்க முடியாது. கால்கள் நடுங்கும், உடம்பு தடதடவென்று உதறும். அப்படிப்பட்டவர்கள் சகித்துக்கொண்டு இதைச் செய்யவேண்டியதில்லை. தங்களுக்குச் சிரமமில்லாத வகையில் ஐந்து அல்லது ஆறு நொடிநேரம் அளவுக்கு இருந்தாலும் போதும். பழக்கத்தில் சரியான காலஅளவைக் கொண்டுவந்துவிடலாம்.
இன்னும் சிலர் பழக்கத்தில்வர சுகமாக இருக்கிறது என்பதற்காக 15, 20 நொடிகள்வரை இவ்வாசனத்தில் கால்களை உயர்த்தி வைத்துக்கொண்டே இருப்பார்கள். அப்படியும் செய்யக்கூடாது. யோகாசனங்கள் சுகமாக இருக்கின்றன என்பதற்காக எந்த ஆசனத்தையும் பத்து நொடிகளுக்குமேல் நீடிக்கக்கூடாது. வேண்டுமானால் ஒன்றிரண்டு நொடிகள் மட்டும் கூட்டிக்கொள்ளலாம். அதற்குமேல் நேரத்தை அதிகரிக்கக்கூடாது. நான்கு முறை செய்வதை, ஐந்து அல்லது ஆறுமுறை செய்யலாமே தவிர பத்துநொடி நேரம் என்பதைப் பதினைந்து, இருபது நொடிகளென நீடிக்கக்கூடாது. தேவைப்பட்டால் நானே நேரத்தைக் கூட்டிச் சொல்லுவேன். அப்படிக் கூட்டிச்சொல்லியுள்ள ஆசனங்களில் மட்டும் கூடுதலான நேரம் இருக்கலாம். ஆகவே நான் குறிப்பிட்டுச் சொல்லுகின்ற கால அளவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். கருவுற்ற பெண்கள் யோகாசனங்களைச் செய்யக்கூடாது. ஆசனப்பயிற்சியுள்ள பெண்கள் கருவுற்றால் அவர்கள் இவ்வாசனத்தை நான்கு அல்லது ஐந்து மாதங்கள்வரை செய்யலாம்.
சிலருக்கு இரண்டு கால்களையும் சேர்;த்து உயர்த்தி இவ்வாசனத்தைச் செய்ய முடியாமலிருக்கும். அவர்கள் உத்திதபாதாசனத்தைச் செய்வது போலவே ஒவ்வொரு காலாக உயர்த்திப் படத்தில் காட்டியிருப்பது போலச்செய்யலாம். இதனை ஏகபாதஉத்தானாசனம் என்று கூறுவார்கள்.

சில நாட்கள் பயிற்சியின் பின்னர் இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்திச் செய்யச் சுலபமாக வந்தவிடும். இரண்டுக்கும் பலன்கள் ஒன்றுதான். இருப்பினும் இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்திச் செய்யும்போதுதான் இதன் முழுப்பயனையும் விரைவில் பெற்றுக்கொள்ளலாம்
சர்க்கரைநோய் தீர்க்கும் சரியான
ஆசனங்கள் (பாகம் 4)
(3-ம்பாகத் தொடர்ச்சி)
கணையம்:-
கணையம் என்ற ஜீரண உறுப்பு வயிற்றில் இரைப்பைக்குக் கீழே அமைந்திருக்கிறது. இது திராட்சைக் குலையினைப் போன்ற அமைப்பினையுடையது. நாளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் பணியாற்றும் இரட்டைச் சுரப்பியென்று இதனைக் குறிப்பிடுவார்கள். உணவு இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு இறங்கும்போது கணையம் கணையநீரைச் சுரந்து ஜீரணத்துக்கு உதவி, நாளச்சுரப்பியாக இயங்குகிறது. கணையத்தில் நாளமில்லாச் சுரப்பிகள் இன்சுலின் என்ற ஜீவரசத்தைச் சுரக்கின்றன. இந்த இன்சுலின் என்ற ஹார்மோன் தான் நாம் உண்ணும் உணவிலுள்ள சர்க்கரைப் பொருளை ஜீரணித்து உதவுகிறது. அப்போது கணையம் நாளமில்லாச் சுரப்பியாகப் பணியாற்றுகிறது.
சர்க்கரைநோய்:-
நமது உணவில் நார்ச்சத்து, தாது உப்புக்கள் மாவுப் பொருட்கள் கொழுப்பு, இரும்புச்சத்து, புரதச்சத்து, சர்க்கரை போன்ற பலவகையான சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஜீரணத்தின்போது மாற்றங்களுக்கு உள்ளாகி இரத்தத்தோடு கலக்கின்றன. இந்த வகையில் நாம்சாப்பிட்ட உணவிலுள்ள சர்க்கரையும் இரத்தத்தோடு கலந்து எடுத்தச் செல்லப்படுகிறது. இப்படிச் சர்க்கரைச்சத்து கலந்த இரத்தம் கணையத்தின் வழியே செல்லுகின்றபோது கணையத்திலுள்ள கணையத் திட்டுக்கள் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரந்து இரத்தத்தோடு கலக்கச்செய்து சர்க்கரையை ஜீரணித்து மாற்றிவிடுகின்றன. ஏதாவதொரு காரணத்தால் கணையம் தனது செயல்திறன் குன்றி இன்சுலினைச் சுரக்கத்தவறினால், இரத்தத்திலுள்ள சர்க்கரை வேதிமாற்றத்துக்க உள்ளாகாமல் இரத்தத்தோடு கலந்த உடம்பில் ஓடுகிறது.
விஞ்ஞானமும் மருத்தவமும் எவ்வளவோ முன்னேறி வந்திருக்கின்றபோதும் மனிதனை வாட்டுகின்ற சில நோய்களை விரட்டிவிட முடியவில்லை. அத்தயைக தீர்க்கவே முடியாத நோய்களுள்ளே மருத்துவ உலகுக்கு ஒரு மாபெரும் சவாலாக இன்றுவரை சர்க்கரைநோய் இருந்துவருகிறது. கிணற்றில் தண்ணீர் வற்றிப்போனால் கிணற்றைத் தூர்வாரியோ, ஆழப்படுத்தியோ சரக்கும் தண்ணீரைப் பெறவேண்டு மேயல்லாது, வேறு கிணற்றிலேயிருந்து தண்ணீரைக் கொண்டுவந்து, வறண்ட கிணற்றில் ஊற்றிக்கொண்டு பயன்பெறுவது போன்ற முறைதான் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதாகும். என்ன செய்யமுடியும். மருத்துவத்தில் இதைத்தவிர வேறுவழிமுறைகள் எதுவுமில்லை.
சர்க்கரைநோய் பரம்பரையாக வருகின்ற நோய், அது நம்மையும் பற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்துடன் பலபேர் வாழ்கிறார்கள்;. யோகாசனங்கள் போன்ற சரியான முறையொன்று இருக்கின்றதே என்பதையும் இதன்மூலம் சர்க்கரை நோயை முற்றாகக் குணப்படுத்த முடியுமே என்பதையும், பரம்பரையாக வருவதென்றாலும் அதைத் தடுத்து ஒரு புதிய பாரம்பரியத்தைப் படைத்துவிடலாமே என்பதையும் மக்கள் உணரத் தொடங்கிவிட்டால் சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோயும் அணுகாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
பிறப்பிலேயே யாரும் பிறவிச்சர்க்கரை நோயாளியாகப் பிறப்பதில்லை. இயற்கை ஒவ்வாருவருக்கும் கணையத்தைப் படைத்துத்தான் வதை;திருக்கிறது. இருப்பினும் இந்நோய் இடைக்காலத்தில் வருவதற்குக் காரணம் உடல்உழைப்பு இல்லாததுதான் என்றாலும், கடினாக உழைப்பவர்களுக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. நல்ல உடற்பயிற்சி செய்யும் பயில்வான்கள்கூடச் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். வயிற்றிலுள்ள உறுப்புக்களுக்கு சரியானபடி இரத்தஓட்டமும், பயிற்சியும் இல்லாமையே இதற்கெல்லாம் காரணமாகும்.
உடற்பயிற்சிகள் உடம்மை எடுப்பாக வைத்திருக்க உதவலாம். ஆனாலும் வயிற்றின் உள்ளுறுப்புக்களுக்கும் ஜீவ ஆதாரமான கோளங்களுக்கும் (Glands) சரியான பயிற்சி வேண்டும். அப்போதுதான் அந்த உறுப்புக்கள் நல்ல நிலையில் ஆரோக்கியமாகத் தமது பணி குன்றாமல் நெடுநாள் உழைத்துப் பணியாற்றக் கூடியனவாக இருக்கும். இவவாறு உடம்பின் வெளி உறுப்புக்களுக்கும், உள்ளுறுப்புக்களுக்கும் சேர்த்துப் பயிற்சி தரவேண்டுமானால் அது யோகாசனங்களால் மட்டுமே முடியும். வேறெந்த வழியிலும் எளிதாக இதைப் பெறமுடியாது. ஆகவே மனித உடம்பு பூரண நலத்தோடு விளங்க வேண்டுமானால் யோகாசனப் பயிற்சி அவசியமாகும். இவ்வாறு யோகாசனப்பயிற்சி செயவதன்மூலம் விஞ்ஞானத்துக்கும், மருத்துவத்துக்கும் சவாலாக இருக்கின்ற சர்க்கரை நோய்க்கு மட்டுமன்றி மற்ற எல்லாக் கொடிய நோய்களுக்கும் யோகாசனங்களால் முடிவுகட்டிவிடலாம். இனி ஆசன விளக்கத்துக்கு வருவோம்.
ஹஸ்த வஜ்ராசனம்:-
செய்முறை:-

வஜ்ராசனத்தில் அமரவேண்டும். இடதுகையை முழங்கைவரை மடித்து மடிமேல் வைத்துக் கையை வயிற்றோடு பொருத்திக்கொள்ள வேண்டும். பின்னர் மூச்சை நன்கு வெளியேற்றிவிட்டு முன்னால்குனிந்து நெற்றியைத் தரையை நோக்கிக் கொண்டுவரவும். வலது கையைப் பக்கத்தில் ஊன்றிக் கொள்ளலாம். அல்லது எப்படி வேண்டுமானாலும் வசதிப்படி வைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் பத்துநொடி இருந்தால் போதும் பின்னர் நிமிர்ந்து மூச்சை இழுத்துக்கொளலாம்.
இரண்டொரு சுவாசங்கள் இளைப்பாறிய பின்னர் வலது கையை மடக்கி மடிமேல்வைத்து வயிற்றோடு பொருத்திக்கொண்டு, மூச்சை வெளியேற்றிவிட்டு, முன்னால் குனிந்து முன்போலவே பத்து நொடிகள் இருந்தபின் நிமிர்ந்துகொள்ளவும். இவ்வாறு இடதுகை ஒருமுறை வலதுகை ஒருமுறை என்று செய்தால் அது ஒருசுற்று ஹஸ்தவஜ்ராசனம் செய்ததாகும். இதைப்போல ஆரம்பத்தில் மூன்று சுற்றுக்கள் செய்தால் போதும். ஒருவாரம் அல்லது பத்துநாள் பயிற்சிக்குப் பின்னர் நான்கு அல்லது ஐந்து சுற்றுக்கள் செய்தால் போதும். அதற்குமேல் தேவையில்லை. இதைப்போலவே இரண்டு கைகளையும் பொருத்திக் கொண்டும் செய்யலாம் (படத்தைப் பார்க்கவும்).
குறிப்பு:-
இவ்வாசனத்தைச் செய்யும்பொழுது சிலர் மூச்சை உள்ளே அடக்கி வைத்துக்கொண்டு செய்வார்கள். அப்படிச் செய்யக்கூடாது. மூச்சு நுரையீரலிலும் வயிற்றிலும் நிறைந்திருந்தால் முன்னால் குனிவது சிரமமாக இருக்கும். கை வயிற்றில் புதைந்து அழுத்துகின்ற போது இன்னும் கடினமாக இருக்கும். ஆகவே மூச்சை வெளியெற்றி விட்டுத்தான் செய்யவேண்டும். வேறுசிலர் நன்றாகப் படியும்படி குனிய வேண்டுமென்பதற்காகப் பிருஷ்டங்களைத் தூக்கிக் கொள்வார்கள். அப்படியும் செய்யக்கூடாது. குனியும்போது நெற்றி தரையில் படவேண்டும் என்ற அவசியமில்லை. தொந்தி இருப்பவர்கள் அப்படிச் செய்யவும் முடியாது. ஆகவே பயிற்சியாளர்கள் சரியான ஆசனநிலையை மனதிற்கொண்டு, தங்களால் முடிந்தவரை குனிந்து செய்யலாம். நாளடைவில் சரியான நிலைக்கு வந்தவிடும். எந்த யோகாசனமாக இருந்தாலும் அது மிகச்சரியாக வரவேண்டுமென்று கருதி உடம்பை வருத்திக்கொண்டு ஆசனங்களைப் பயிலக்கூடாது.
வஜ்ரமுத்ரா
செய்முறை:-
முதலில் வஜ்ராசனத்தில் அமரவேண்டும் நிமிர்ந்த நிலையில் மூச்சை வெளியேற்றிவிட்டுப் படத்தில் காட்டியுள்ளது போலக் கைகளைப் பின்பக்கமாக் கோர்த்துக்கொண்டு மேலே உயர்த்தியபடி முன்னால் குனிந்து பத்து நொடிகள் இருக்கவும். பின்னர் நிமிர்ந்து கொள்ளலாம். இரண்டொரு சுவாசங்கள் இளைப்பாறிக் கொண்டு நான்கு அல்லது ஐந்து முறைகள் செய்தால் போதும். அதற்குமேல் வேண்டாம்.
ஹஸ்த வஜ்ராசனத்துக்குச் சொல்லப்பட்ட கவனிப்பு முறைகளை இதற்கும் எடுத்துக் கொள்ளவும்: பின்னால் கைகளை உயர்த்துகின்றபோது கைகள் சரியாக உயரவில்லை என்பதற்காக முரட்டுத்தனமாக முயற்சி செய்யவேண்டாம். நன்கு படியும்படியாகக் குனிய வேண்டுமென்பதற்காகவும் உடம்பை வருத்தவேண்டாம். கருவுற்ற தாய்மார்கள் இவ்விரண்டு ஆசனங்களையும் செயயவேண்டாம்.
வஜ்ராசனத்தின் பொதுப்பயன்கள்:-
வஜ்ராசனம் என்பது ஒரே ஆசனம்மதான் ஹஸ்தவஜ்ராசனம், வஜ்ரமுத்ரா என்று நான் பிரித்து எழுதியிருப்பவை வஜ்ராசனத்தின் கிளை ஆசனங்களாகும். இம்மாதிரிப் பதினைந்திற்கும் அதிகமான கிளையாசனங்கள் வஜ்ராசனத்துக்கு உண்டு. என்றாலும் சர்க்கரை நோய்க்காக இரண்டு கிளையாசனங்களை மட்டுமே இங்கே அறிமுகம் செய்திருக்கின்றேன்.
வஜ்ராசனத்தால் இடுப்புஎலும்புகள், முதுகெலும்பு, தோள்பட்டைஎலும்புகள், முழங்கால், கணுக்கால்கள் வலிமைபெறுகின்றன. யானைக்கால் நோய் ஆரம்பநிலையில் இருந்தால்; அதை வஜ்ராசனம் முற்றாகக் குணப்படுத்துகிறது. முறையாக ஐந்து வேளையும் தொழுகை செய்யும் இஸ்லாமிய சகோதரர்கள் யாருக்கும் யானைக்கால்நோய் வருவதில்லை. காரணம் அவர்கள் தொழுகையின் போது அதிகநேரம் வஜ்ராசனத்திலே இருப்பதுதான்.
இது நமது ஜிரணமண்டலத்தில் இயங்கும் சுரப்பிகளின் சுரப்புக்களைக் கட்டுப்படுத்துகிறது. நல்ல பசியையும் சுகமான ஜீரணத்தையும் தருகிறது. இவ்வாசனத்தின்போது சுவாசம் நிதானப்படுவதால் நுரையீரல், இதயம் இவைகளின் இயக்கமும் இதயத்துடிப்பும் சிறப்பாகச் சமப்படுகின்றன. இதனால் இதயபலவீனம் அகன்று இதயம் வலிமை பெறுகிறது. ஹஸ்தவஜ்ராசனம், வஜ்ரமுத்ரா இவ்விரண்டு ஆசனங்களால் வயிற்றுத் தொந்தி வேகமாகக் கரைகிறது. குடல்புண்இ வயிற்றுப்புண் ஆகியவை குணமாகின்றன. மலச்சிக்கல் அடியோடு அகலுகிறது. சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை ஆகியவை வலிமை பெறுகின்றன. சிறநீரகக் கோளாறுகள் வேகமாக அகலுகின்றன. சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவது தடுக்கப்படுகிறது.
கல்லீரல் வலிமையும் புத்துணர்வும் பெறுகிறது. இன்சுலின் என்ற ஹர்மோனைச் சுரக்கும் கணையம் சுறுசுறுப்படைகிறது. தனது பணியைச் செம்மையாகச் செய்கிறது. இதனால் சர்க்கரைநோய் வெகுவாகக் கட்டுப்படுகிறது. தொடர்ந்து காலை, மாலை என இருவேளையும் இவ்வாசனங்களைப் பழகுவதால் செயலிழந்த நிலையில் இருக்கும் கணையம் செயற்படத் தொடங்கி, தொடர்ந்த பயிற்சியால் சர்க்கரை நோய் குணமாகிறது. நாள்பட்ட சர்க்கரை நோயாளிகள் இவற்றோடு இன்னும் கூடுதலாகச் சில ஆசனங்களைச் செய்ய வேண்டியிருக்கும். என்றாலும் சர்க்கரை நோயாளிகள் இதுவரை அறிமுகமாகியுள்ள இந்த ஆசனங்களைத் தொடர்ந்து செய்தால் படிப்படியாக நலம்பெற்று வருவதை உணரலாம்.
பெண்களுக்கு இவ்வாசனத்தொகுப்பு அற்புதமான பயன்களைத் தரவல்லதாகும். வயிற்றுத் தொந்தியைக் குறைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. ஓவரி, கருப்பை சமபந்தமான உபாதைகள் அகலுகின்றன. மறறும்படி பொதுவாக எல்லோருக்கும் இதில் சொல்லப்பட்டுள்ள எல்லாப் பலன்களும் கிட்டுகின்றன. இவ்வாசனங்களைச் சிறுவர் சிறுமியர்களும் முதியவர்களும் பொதுவான உடல்நலத்திற்காக் காலை மாலை இரண்டு வேளைகளிலும் பழகலாம். சர்க்கரை நோயாளிகள் மட்டும்தான் பழகவேணடுமென்ற அவசியமில்லாமல் இவை எல்லோருக்கம், எல்லா வயதினருக்கும் பயன்தரக் கூடியவை. பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் ஆசனப்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். கருவுற்ற பெண்கள் ஹஸ்தவஜ்ராசனம், வஜ்ரமுத்ரா இவை இரண்டையும் செய்யக்கூடாது. வஜ்ராசனம் மட்டும் செய்யலாம்

சர்க்கரை நோய் தீர்க்கும்
சரியான ஆசனங்கள்.!!!!
தம்மை நாடி வருவோருக்கு எவ்வித மருந்து முறையும் இல்லாமல் எல்லா வகையான நோய்களையும் யோகாசனங்கள் மூலமாகவே குணப்படுத்தியுள்ள ஸ்ரீ ஞானஜோதி சம்பங்கி அவர்களின் ”சர்க்கரை நோய் தீர்க்கும் சரியான ஆசனங்கள்” என்ற படைப்பிலிருந்து முக்கியமானவற்றைத் தொகுத்து எமது வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
பஞ்ச பூதங்களின் விகிதாசாரம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மனித உடல்நலம் இரண்டே வழிகளில் கெடுகிறது. ஒன்று வெளிப்புறத்தில் இருந்து வந்து நம்மைத் தாக்கும் கிருமிகளால் உடல்நலம் கெடுகிறது. இரண்டாவது நமது உடம்புக்குள்ளே அமைந்திருக்கும் ஜீவாதாரமான சுரப்பிகள் தமது பணியிலிருந்து குன்றுவதால் உடல்நலம் கெடுகிறது. இந்த இரண்டு காரணங்களும் நம் எல்லோருக்கும் மிக நன்றாகத் தெரிந்த காரணங்களாகும்.
இந்த இரண்டு காரணங்களில் முதல் காரணமான வெளிப்புறக் கிருமிகள் நீர், காற்று, உணவு வழியாக நமது உடம்புக்குள்ளே புகுந்துவிடுமானால் அவற்றை எதிர்த்துத் தாக்கி அழிக்க நமது உடம்பிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியும், வெள்ளணுக்களும் வலிமையுள்ளனவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது கிருமிகள் நம்மை நோய்வாய்ப்படச்செய்து வீழ்த்தி விடுகின்றன.
இதற்கான சில எளிய யோகாசனங்களை தினசரி பழகிவருவதன் மூலம் நாம் நமது இரத்தத்தை இயற்கையான முறையில் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம். உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் சமசீராக இரத்தஓட்டம் செல்லுமாறு செய்து, போதிய பிராணவாயுவைப் பெற்றுக் கொண்டு நலம்பெறவும் முடியும். தூய இரத்தமும், உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் குறைவில்லாமல் செலுத்தப்படும் இரத்தஓட்டமும், போதியளவு பிராணவாயுவும் மானிட நலனுக்குப் பிரதானமானவை என்பது நாமெல்லாம் அறிந்த உண்மை. இவை மூன்றும் யோகப் பயிற்சியால் நமக்குக் கிட்டுகின்றன. நமது உடம்பிலுள்ள பஞ்சபூதங்களின் சமநிலை காக்கப்படுவதோடு, நமது உடம்பின் உள்ளுறுப்புக்கள் அனைத்தும் நல்ல பயிற்சி கிட்டி அவை சீராகவும் நிலை மாறாமலும் தமது பணியைச்செய்ய யோகாசனங்கள் துணைபுரிகின்றன. ஆகவே யோகப்பயிற்சி செய்யும் ஒருவருக்கு உடல்நலம் கெடுவதற்கான வாய்ப்பு இல்லை. ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் அவை யோகப்பயிற்சியால் மிகத் துரிதமாக அகன்று ப+ரணநலம் கிட்டுகிறது.
யோகாசனங்கள் பற்றிய தவறான கருத்து:-
யோகாசனங்கள் என்றால் அவை பழகுவதற்கு மிக்க சிரமமானவை. எல்லோராலும் அவற்றைச் செய்ய முடியாது. அதற்கான தனி உடல்வாகு வேண்டும். அவர் இப்படித்தான் யோகாசனம் பழகி துன்பத்துக்கு ஆளானார்இ யோகாசனங்களை இல்லறத்தில் இருப்பவர்கள் செய்யக்கூடாது, தாம்பத்திய சுகம் கெட்டுப்போகும், வாழ்க்கையில் பற்றற்ற விரக்திநிலை உண்டாகிவிடும் என்றும் சிலர் புழுகுவார்கள். இன்னும் சிலர் ஆசனப்பயிற்சிகளைப் பற்றி ரொம்பத் தெரிந்தது போல், யோகாசனங்களைப் பொழுது விடிவதற்குள் செய்துவிட வேண்டும், அதற்கென்று தனியான உணவு முறைகளைப் பழகிக்கொள்ள வேண்டும்இ அசைவ உணவு அடியோடு ஆகாது, கணவன் மனைவி உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது, அப்படியே இருந்தாலும் உடலுறவு நாட்களில் ஆசனப்பயிற்சிகளைத் தவிர்த்துவிட வேண்டும், மொத்தத்தில் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் ஒத்துவராது, இவற்றையெல்லாம் சன்னியாசிகள் தான் செய்யவேண்டும் என்றெல்லாம் கதைவிடுவார்கள். இவையனைத்தும் பொய்களே. அனுபவமின்மையாலும், அறியாமையாலும் சொல்லப்படும் கதைகளேயாகும்.
யோகாசனங்களைக் காலை, மாலை இரண்டு வேளையும் செய்யலாம். வயிறு காலியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். ஏந்த உணவும் சாப்பிடலாம். தாம்பத்திய உறவுக்கும் இதற்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. தாம்பத்தியக் குறைபாடுகள் இருந்தாலும் அவை யோகப்பயிற்சிகளால் தீர்ந்து நல்ல மனநிறைவு உண்டாகும். ஆகவே பொய்யான வதந்திகளுக்கு இடம்தராமல் நீங்கள் யோகப்பயிற்சிகளைத் தொடங்கலாம். அனுபவத்தில் அந்த அற்புத நலத்தைத் தெரிந்து கொள்வீர்கள்.
யோகாசனங்கள் என்ன செய்கின்றன:
யோகாசனங்கள் பழகுவதற்கு மிகவும் எளிமையானவை. ஆண், பெண் பேதமில்லாமல் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆசனங்களை எவரும் பயிலலாம். ஒரு குழந்தையைத் தட்டிக் கொடுப்பதுபோல இவை மனித உள்ளுறுப்புக்களிலும் வெளிஉறுப்புக்களிலும் இயங்கி நமது நலத்தை காக்கக்கூடியவை. யோகாசனங்கள் உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் வேண்டிய இரத்த ஓட்டத்தையும் பிராணவாயவையும் எடுத்துச் செல்ல உதவுகின்றன. நமது உடம்புக்குள்ளே அமைந்துள்ள ஜீவாதாரமான சுரப்பிகள் சீராக இயங்கவும், அவை நீண்டநாட்கள் ஆரோக்கியத்தோடு உழைக்கவும் ஆசனப்பயிற்சி வகைசெய்கின்றது. தேவையில்லாத ஊளைச்சதைகள் கரைந்து உடம்பு அளவான தோற்றப் பொலிவோடு விளங்கும். நீடித்த இளமையைத் தரும். இதனால் முதுமை தடுக்கப்படுகிறது. உடல்காந்தம், உடல்மின்சாரம் ஆகிய இரண்டையும் பேணிக்காப்பதோடு அவற்றை மேம்படுத்துகிறது. மூளைக்கு வேண்டியளவு இரத்த ஓட்டமும், பிராணவாயுவும் கிட்டுவதால் மனப்பதட்டம், எதிர்வினை நினைவுகள், தீயபழக்கங்கள், கோபம், பொறாமை, துர்சிந்தனை ஆகியன தொலைந்து நல்ல எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகள், நல்லபண்புகள் ஆகியவற்றோடு அசைக்கமுடியாத சுயகட்டுப்பாட்டையும் தருகிறது. அமைதியும் நிம்மதியும் மனதில் நிலைத்துpருக்கச் செய்கிறது. இதற்குமேல் மனிதனுக்கு என்ன வேண்டும்?
இதற்காக நாம் தினசரி இருபது நிமிடமோ, அரைமணி நேரமோ ஒதுக்கிக் கொண்டு பயிற்சிகளை ஒழுங்காக செய்துவிட்டால் போதும். நமக்கு வேண்டிய நலத்தை அவை பார்த்துக்கொள்ளும். போகாசனங்களைக் காலை ஐந்துமணி முதல் எட்டுமணிக்குள்ளாகவும், அதேபோல் மாலை ஐந்துமணி முதல் இரவு எட்டுமணிக்குள்ளாகவும் இரண்டு வேளையும் வயிறு காலியாக இருக்கும்போது செய்யவேண்டும். இரண்டு வேளையும் செய்ய முடியாதவர்கள் ஏதேனும் ஒருவேளை செய்தாலும்போதும். இதற்காக உணவுக்கட்டுப்பாடுகளோ, தாம்பத்திய உறவுக்கட்டுப்பாடுகளோ இல்லை. அதிகளவு சர்க்கரை உள்ள சர்க்கரை நோயாளிகள் மட்டும் பயிற்சிகள் முழுவதும் கைவருகின்றவரை கொஞ்சம் உணவுக் கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது. சர்க்கரை நோய்க்காக மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் அல்லது இன்சுலின் போட்டுக் கொள்ளுபவர்களும் கொஞ்சக்காலம் முழுப்பயிற்சி முறையையும் பின்பற்றிச் செய்கின்றவரை சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம் பிறகு மருந்து மாத்திரைகளைக் கைவிட்டுவிடலாமா அல்லது அவற்றைக் குறைத்துக் கொள்ளலாமா என்பதை சிறுநீரிலோ இரத்தத்திலோ சர்க்கரையின் அளவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைச் சோதித்து அறிந்த கொள்ளலாம். ஆகையால் பயிற்சியாளருக்கு இதைப்பற்றிய துன்பம் இல்லை.
குளித்துவிட்டுத்தான் ஆசனங்கள் செய்யவேண்டும் என்பதில்லை. வசதிப்படி செய்யலாம். குளித்தபின்பு ஆசனங்கள் செய்வதானால் பத்தநிமிடமும், ஆசனங்கள் செய்தபின்னர் குளிக்க நேருமானால் இருபது நிமிடமும் இடைவெளி தரவும். யோகாசனங்களைச் செய்துமுடித்த உடனே அப்படியே போய்ச் சு+டாகவோ குளிர்ச்சியாகவோ சாப்பிட வேண்டாம். ஆசனப்பயிற்சிகளை முடித்துக் கொண்டு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இடைவெளி கொடுத்து அதன்பின்னர் தண்ணீரோ, காப்பி, தேநீர் போன்ற திரவ உணவுகளோ அல்லது சாப்பாடோ சாப்பிடலாம். பெண்கள் மாதவிலக்கின்போதும் கருவுற்றுள்ளபோதும் ஆசனங்கள் செய்யக்கூடாது. நீங்கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் இவ்வளவுதான். இனி ஆசனப்பயிற்சிகளைத் தொடங்கலாம். உங்களுக்கு மங்களம் உண்டாக வாழ்த்துக்கள்.
சர்க்கரைநோய் தீர்க்கும் சரியான
ஆசனங்கள் (பாகம் 2)

பத்மாசனம்:
அனைத்து ஆசனங்களுக்கும் அரியாசனம். எண்பத்து நாலாயிரம் ஆசனங்களின் தலையாசனம். தவத்துக்கோர் தனியாசனம். ஆன்மாவை ஈடேற்றவந்த அமராசனம். கர்மவினைகளைப் போக்கும் கமலாசனம். இதனைப் பத்மாசனம், பதுமாசனம், பங்கயவாசனம், பங்கஜவாசனம், தாமரையாசனம் என்றெல்லாம் யோகிகள் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.
அதுமட்டுமன்றி மனிதனை மானிடத் தன்மைகளோடு வாழ்வித்து, மானுடத் தன்மைகளிலிருந்தும் மேம்படுத்தி அவனைத் தேவனாக்கி வைக்கின்ற தேவாசனம் என்றும் இதன் புகழை ஞானிகள் போற்றுவார்கள்.
பத்மாசனம் செய்யும்முறை:-
தரையில் ஒரு நல்ல போர்வையை மடித்துப் போடவேண்டும். அல்லது ஒரு பாயைப் போட்டுக்கொண்டு அதன்மேல் போர்வையை உறுத்தாமல் மெத்தென்று இருக்கம்படியாகப் போட்டுக் கொள்ளலாம். போர்வையில் படிய அமர்ந்து கொண்டு வலது பாதம் இடது தொடையின்மேலும், இடதுபாதம் வலது தொடையின்மேலும் பொருந்தும்படியாக அமைத்துக் கொள்ளவேண்டும். பாதங்கள் மலர்ந்து தாமரை மலர்போலத் தோற்றம் தருவதால், இதனைப் பத்மாசனம், கமலாசனம், தாமரை ஆசனம் என்று அழைப்பார்கள். அமரும்போது எத்திசையை நோக்கி வேண்டுமானாலும் அமரலாம். ஆனாலும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்வது உத்தமம். வளையாமல் நிமிர்ந்து அமரவேண்டும். அதேசமயம் உடம்புக்குத் தேவையற்ற விறைப்பைத் தரவேண்டாம்.
சின்முத்திரை:-
பத்மாசனத்தில் அமர்ந்து கையின் கட்டைவிரலின் முதல் அங்குலாஸ்தியை ஆள்காட்டி விரலின் நுனி தொடுமாறு அமைத்துக் கொள்வதை சின்முத்திரை என்று சொல்லுவார்கள். இவ்வாறு இரண்டு கைகளையும் சின்முத்திரையிட்டு முழங்கால் முட்டிகளின்மேல் கைகளை நீட்டிப் பொருத்திக் கொள்ள வேண்டும். நமது கையினுடைய கட்டை விரலில் அமைந்துள்ள நரம்புத் தொகுதிக்கும், மூளைக்கும் தொடர்பு இருக்கின்றது. சிந்தனையின் சலனங்களைக் கட்டுப்படுத்துவதால் இதற்குச் சின்முத்திரை என்று பெயரிட்டார்கள்.
பிரார்த்தனை:-
இப்படிப் பத்மாசனத்தில் கைகளைச் சின்முத்திரையிட்டு அமர்ந்து கொண்டு, கண்களை மூடி யோகாசனங்களை நமக்குக் கற்றுக் கொடுத்த குருவை தியானித்து நமஸ்கரிக்க வேண்டும். பொதுவாக யோகாசனங்களைப் பயிலுகின்றபோது அனுசரிக்கப்படும் பொதுவிதி இது. இதற்காக அதிகபட்சமாக ஒரு நிமிடநேரம் போதுமானதாகும். தெய்வநம்பிக்கை உடையவர்கள் தங்கள் இஷ்டதெய்வத்தை வணங்கிக் கொள்ளலாம். ஆக, யோகாசனங்களைப் பயிலத் தொடங்குவதற்கு முன்னால் முதலாவது ஆசனமாகப் பத்மாசனம் போட்டு, குருவணக்கமோ, கடவுள் வணக்கமோ முடித்துக் கொள்ள வேண்டும்.
சில மாற்றங்கள்
சிலருக்கு பத்மாசனம் போட்ட உடனேயே ஒரு சுகமான பரவசம் வந்துவிடும். இவர்கள் ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ இப்படியே பத்மாசனத்தில் இருந்தபடி கடவுளைத் தியானத்தால் சுகமாக இருக்கும்போல் தெரிகிறதே, இன்னும் சிறிது நேரம் இதில் நீடித்து இருந்தாலென்ன என்று எண்ணுவார்கள். இப்படி நினைப்பவர்கள் ஆசனப்பயிற்சி முழுவதையும் முடித்துக்கொண்டு கடைசியாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், கால வரையறையின்றி பத்மாசனத்தில் அமர்ந்தபடி தியானம் செய்துகொண்டு இருக்கலாம். கால்கள் வலிப்பெடுக்க ஆரம்பிக்கின்றபொழுது பிரித்துக்கொள்ளலாம்.
இங்கே முதல் ஆசனமாகப் பத்மாசனத்தை விளக்கியிருக்கின்றேன். இதைப் பின்பற்றி ஆசனங்கள் செய்யத் தொடங்குபவர்களுக்குக் கற்பிக்கப்படும் முதல் ஆசனம் இதுதான். ஆகவே ஒரு நிமிடம் முதல் அரைமணிநேரம் வரையில்கூடப் பத்மாசனத்தில் இருந்து பழகலாம் என்றாலும் ஆசனப்பயிற்சிகளின் தொடக்கத்தில் பத்மாசனமிட்டு ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தால் போதும். அதற்காக முரட்டுத்தனமாகக் கால்கள் வலிக்க வலிக்க வலியைப் பொறுத்துக்கொண்டு பத்மாசனம் பயிலக்கூடாது. பத்மாசனம் மடடுமல்ல எந்த ஒரு யோகாசனத்தையும் கடினமாக உடலை வருத்திக்கொண்டு பயிலக்கூடாது. ஆகவே பத்மாசனம் போட்டுக் கொஞ்சநேரத்திலோ, அதிக நேரத்திலோ கால்கள் வலிக்கும்போது பிரித்துவிட வேண்டும்-
சிலருக்கு முதலில் வலது காலைத்தூக்கி இடது தொடைமேல் அமைத்துக்கொண்டு அதன் பின்னர் இடது காலைத்தூக்கி வலது தொடைமேல் பொருத்தமுடியாது சிரமப்படுவார்கள். அவர்கள் முதலில் இடது பாதத்தைத் தூக்கி வலது தொடைமேல் பொருத்திக் கொண்டு அதன்பின்னர் வலது பாதத்தைத் தூக்கி இடது தொடையின்மேல் பொருத்திக் கொள்ளலாம். இதில் பிழையேதுமில்லை. இருப்பினும் முதலில் வலது பாதத்தை எடுத்துச் செய்வது சுபமானது.
இன்னும் சிலர் ஒரு பாதத்தைத் தூக்கிப் பொருத்தி விடுவார்கள். மற்றப் பாதத்தைத் தூக்கிப் பொருத்த முடியாமல் போய்விடும். பொருத்த முயன்றால் முதலில் போட்ட கால் விசுக்கென்று கீழேநழுவி இறங்கிவிடும். எவ்வளவு முயன்றாலும் வராது. அப்படிப் பட்டவர்கள் ஒரு காலைமட்டும் தூக்கிப் போட்டுக்கொண்டு வணக்கத்தைத் தொடங்கலாம். பின்னர் படிப்படியாக மற்றக் காலையும் தூக்கி அமைத்துக்கொண்டு பழகிக்கொள்ளலாம். சிலநாட்கள் பயிற்சிக்குப் பின்னர் இரண்டு கால்களும் சரியான இணக்கத்துக்கு வந்து பத்மாசனம் சரியாக அமைந்துவிடும். இப்படி ஒருகாலை மட்டும் போட்டுச் செய்வதால் அதற்கு அர்தத பத்மாசனம் என்று பெயர்.
இவ்வாசனத்தை ஆண், பெண் இருபாலரும் வயது பேதமில்லாமல் செய்யலாம். கருவுற்ற தாய்மார்கள்கூட இப்படிப் பத்மாசனத்திலோ அல்லது அர்த்த பத்மாசனத்திலோ இருந்து பழகுவதும்இ தியானம் செய்வதும் மிகவும் நல்லது.
பயன்கள்:-
பத்மாசனத்தில் இருக்கின்றபோது மனிதநரம்பு மண்டலம் முழுவதும் சுறுசுறுப்படைந்து புத்துணர்ச்சியைப் பெறுகிறது. நமது உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் ஒழுங்குபட்டு நடப்பதால் சுவாசம் சீரான இயக்கத்துக்கு வருகிறது. நுரையீரல்களுக்குச் செல்லும் காற்றிலுள்ள பிராணவாயு இரத்தத்தோடு பூரணமாக் கலக்கிறது. கரியமிலவாயு செம்மையாக வெளியேறுகிறது. இவ்வாறு சுவாசமும் இரத்த ஓட்டமும் சீரானகதிக்கு வருவதால் இரத்த அழுத்தமும் இயல்புநிலைக்கு வருகிறது. மன அமைதியின்மையும் மனச்சஞ்சலங்களும் மறைகின்றன. மனத்தின் இறுக்கநிலை தளர்ந்து மனம் அமைதியைப் பெறுகி;றது. மனோபலம் வருகிறது. முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள், கால் எலும்புகள் ஆகியன வலிமை பெறுகின்றன. கூனல் விழுவது தடுக்கப்படுகிறது.
மானிடநரம்பு மண்டலமும் பத்மாசனமும்:-
பண்டைக்காலத்தில் ஞானிகள் மனித உடம்பின் இயக்கங்களை மிகத் துல்லியமாக அறிந்திருந்ததைப் போன்று தற்காலத்து அறிஞர்கள் மனித உடம்பின் இயக்கங்களை அறியமுடியவில்லை. அல்லது அறிந்து முடிக்கவில்லை. மானுட தேகம் ஒரு அதிஅற்புதமான இயந்திரமாகும். மனித உடம்பில் 72,000 நரம்புகள் பின்னிப் பிணைந்துள்ளன. இத்தனை நரம்புகளுக்கும் ஜீவ ஆதாரமாக இடை, பிங்கலை, சுஷூம்ணா (தண்டுவடம்) ஆகிய மூன்று நரம்பு இயக்கங்களும் இயங்கி மனிதனைச் செயல்பட வைத்துக் கொண்டுள்ளன. மனித முதுகெலும்பும் பல எலுமபுகளால் அமைந்த ஒரு எலும்புத்தொடராகும். இதன் இடையேயுள்ள துளை வழியேதான் தண்டுவடம் மூளைக்குச் செல்கிறது. இதனை சுஷூம்ணாநாடி என்று யோகிகள் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தண்டுவடம்தான் நமது உடம்பைப்பற்றிய எல்லாச் செய்திகளையும் மூளைக்கு அறிவிக்கிறது. மனித உடம்பில் வலதுகால் பெருவிரலில் இருந்து ஒரு நரம்பு ஆரம்பித்து, முழங்கால் தொடை வழியே சென்று தண்டுவடத்தைச் சுற்றியபடியே மேலேறிப் பின்பக்கமூளையில் இணைகிறது. இந்த நரம்பை யோகிகள் பிங்கலை நரம்பு (Right Nerve) என்று குறிப்பிடுகிறார்கள். இதைப்போலவே இடதுகால் பெருவிரலில் இருந்து தொடங்கி ஒரு நரம்பு முழங்கால், தொடை வழியே சென்று தண்டுவடத்தைச் சுற்றியபடியே மேலேறிப் பின்பக்க மூளையில் இணைகிறது. இந்த நரம்பை இடைநரம்பு (Left Nerve) என்று யோகிகள் குறிப்பிடுவார்கள்.
ஆறுவகை இணையங்கள: (six plexus)
இந்த இடைநரம்பும், பிங்கலை நரம்பும் கடைசி முதுகெலும்பு (இடுப்புப்பகுதி), அடிவயிறு, தொப்புள், இதயம், தொண்டை, புருவமத்தி ஆகிய ஆறு இடங்களுக்கு நேர்பின்பக்கமாக முதுகெலும்பிலுள்ள தண்டுவடத்தோடு ஆறு இடங்களில் எதிர்எதிராகச் சந்தித்துக் கொள்கின்றன. இந்தச் சந்திப்புக்களை ஆறு ஆதாரகமலங்கள் என்று யோகிகள் குறிப்பிடுகிறார்கள். அவை
1. மூலாதாரம் - Pelvic Plexus
2. சுவாதிஷ்டானம் -- Hypogastric Plexus
3. மணிப்பூரகம் - Solar Plexus
4. அநாதகம் - Cardiac Plexus
5. விசுக்தம் - Pharyngeal Plexus
6. ஆக்ஞை – Commanding Plexus
ஆகும். இவைகளை யேயோகிகள் ஆதாரகமலங்கள் என்றும், உடற்கூற்று விஞஞானிகள் (Plexus) என்றும் குறிப்பிடுகிறார்கள். உடம்பில் இவற்றின் இயக்கங்களை ஜீவனாடிகள் என்று சொல்லலலாம். இவைகளின் இயக்கத்தை முறையே கணுக்கால்கள் அல்லது பாதங்கள், பிறப்புறுப்புக்கும் தொடைக்கும் இடையேயுள்ள மடிப்புக்கள், தொப்புள், இதயம், தொண்டை, கன்னப்பொட்டுக்கள் இவற்றில் விரல்களைப் படியவைத்துப் பார்த்தால் இங்கெல்லாம் நாடிகள் துடிப்பதை எவரும் உணரலாம்.
பெரும்பாலும் இடை, பிங்கலை நரம்புகள் ஆதாரகமலங்களில் இணைகின்ற இணைப்புக்களில் பலவீனம் நேர்வதால்தான் முதுகுவலி, இடுப்புவலி, கழுத்துப்பிடரி வலி, நரம்புத்தளர்ச்சி ஆகிய தொல்லைகள் ஏற்படுகின்றன. இதுமட்டுமன்றி புருவமத்தியில் (Commanding Plexus) நேருகின்ற கோளாறும் உண்டு. இதனால் பக்கவாதம், மாறுகால் மாறுகைவாதம், முகவாதம் ஆகிய வாதநோய்கள் தோன்றுகின்றன.
ஆறுவகை இணையத்தில் ஆடுகின்ற நாடிகள்.

1. ஆக்ஞை
2. விசுத்தம்
3. அநாதகம்
4. மணிப்பூரகம்
5. சுவாதிஷ்டானம்
6. மூலாதாரம்
7. முதுகெலும்புத்தொடர்
8. தண்டுவடம்
9. குண்டலினிசக்தி
10. இடைநரம்பு
11. பிங்கலைநரம்பு
பத்மாசனம் இந்தத் தொல்லைகளுக்கெல்லாம் ஒரு நல்ல தடுப்பானாகப் பயன்படுகிறது. புத்மாசனப் படத்தைப் பாருங்கள். வலதுகாலும், இடதுகாலும் எதிர் எதிராக அமையக் கால்களில் நாம் இன்னொரு புதிய இணையத்தை (Plexus) உருவாக்கி விடுகிறோம். இதனால் முதுகெலும்பிலுள்ள ஆறு ஆதாரஸ்தானங்களும் பரவசமும், சுறுசுறுப்பும் எய்தி நமது உடம்பின் நரம்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்கின்றன

Tuesday, 12 May 2015

சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் !!!
வணக்கம், நான் தமிழ் சித்த மருத்துவர் அருண் சின்னையா. உங்களோடு சிறகு இணைய இதழில் அளவளாவுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழர்களுடைய உணவுமுறை, மருத்துவம் எப்படி இருக்கிறது? எந்த வகையில் எல்லாம் முன்பு நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது? தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள்? நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாய் நாம் மாற்றப்பட்டிருக்கிறோம்? இதையெல்லாம் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.
இப்போது நாம் எதைப்பற்றி பேசப் போகிறோம், என்றால் சர்க்கரை வியாதி நோயைப்பற்றியே. சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய நாடு எது? என்றால் அது இந்தியா. இந்தியாவிலேயே சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக் கூடிய மாநிலம் எது? என்றால் நம்புங்கள் அது நம் தமிழ்நாடு தான்.
தமிழ் நாட்டிலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய ஒரு நகரம் எது என்றால் சென்னை. சக்கரை வியாதிக்கான மிகப் பெரிய வணிகச் சந்தையை தனக்குள்ளே உள்ளடக்கிக் கொண்டு, நடைப்பிணமாய் திரியக் கூடிய தமிழ் சமூகம் இன்று உருவாகி உள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? அது எப்படியெல்லாம் வருகிறது? அதை எப்படி தடுக்கலாம்? அதற்கான உணவு முறை கட்டுப்பாடுகள் என்ன? இதையெல்லாம் முழுமையாக அலசி ஆராயப்போகிறோம். முதலில் நீரிழிவு என்பது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது. இந்த மது மேகம் எப்படியெல்லாம் வரும் என்பதை விளக்கும் சித்தர் பாடலானது . . . .
“கோதையார் களவின் போதை
கொழுத்த மீனிறைச்சி போதை
பாலுடன் நெய்யும்
பரிவுடன் உண்பீராகில்
வருமே பிணி”
என்று மது மேகத்தைப் பற்றி சொல்கிறார்கள் சித்தர்கள். அதாவது கோதையார் களவின் போதை என்று சித்தர்கள் சொல்லக் கூடிய ஒரு பெரிய காரணி என்ன என்றால் உடலுறவில் ஈடுபடும் பொழுது முழுமையாக செயல்படக் கூடியது நாளமில்லாச் சுரப்பி மண்டலம் ஆகும். ஆதலால் மதுமேக நோய் என்பது ஒரு ஹார்மோனல் கிருமி என்கிறார்கள். உடலில் இன்சுலின் என்கிற ஹார்மோன் குறைவதால் வரக் கூடிய நோய் இதுவாகும்.
சித்தர்கள் அன்றே தெளிவாக கூறியிருக்கிறார்கள் “கோதையார் களவின் போதை, கொழுத்த மீனிறைச்சி போதை” என்றால் நிறைய அசைவ உணவுகள், மந்த உணவுகள் எடுத்துக் கொண்டால் இந்த உணவின் மூலம் பாலியல் சார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் அடிப்படையில் அடிக்கடி பாலியல் சார்ந்த உறவுகளில் ஈடுபடும் பொழுது மது மேகம் என்ற நோய்க்கு மனிதர்கள் ஆட்படுகிறார்கள் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
அதே போல் “பாலுடன் நெய்யும், பரிவுடன் உண்பீராகில்” என்பது பாலாக இருந்தாலும் சரி, நெய்யாக இருந்தாலும் சரி அதை அரிசியோடு சேர்த்து எடுக்கும் கால கட்டத்தில் நீரிழிவு கண்டிப்பாக வரும் என்பது சித்தர்களின் கூற்று. இந்த மதுமேகந்தான் இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய நீரிழிவு என்னும் நோயாகும்.. இந்த நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும் பொதுவாகிவிட்டது. நீரிழிவில் மூன்று வகையான நீரிழிவுகளைப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு வரக்கூடியது (Juvenile) நீரிழிவு என்று சொல்கிறார்கள் இது முதல் விதம். இரண்டாவது மருந்துகளால் கட்டுப்படக் கூடிய நீரிழிவாகும்.
மருந்தே இல்லாமல் இன்சுலினுக்கு கட்டுப்படக்கூடிய நீரிழிவு. இது மூன்றாவது விதம். என்று மூன்று விதமான நீரிழிவு இருக்கிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்து விட்டது என்றால் அவருடைய முழுமையான செயல்பாடுகள் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து விடும். உடல் மெலிந்து விடும், அடிக்கடி சிறுநீர் கழிக்கக் கூடிய தன்மை இந்த மாதிரி அதன் அறிகுறிகளை கொடுமையாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு கால கட்டம் உண்டு.
இன்று தமிழ் நாட்டில் தமிழ்ச் சமூகம் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சினை என்ன என்றால் நீரிழிவு நோய், இது ஒரு குறைபாடு தான். இக்குறைபாட்டிலிருந்து நாம் மீள முடியும் என்கிற தன்னம்பிக்கையை இழந்து விட்டு எப்பொழுதும் மருந்துகளையும், மருத்துவர்களையும் தேடி அவர்கள் பின்னாலேயே ஓடக் கூடிய ஒரு நிலையில் தான் தமிழ் மக்கள் இன்று இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், எவ்வளவோ உணவுப் பொருட்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நமக்கு அந்த பாரம்பரியமான உணவுப் பொருட்கள் இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில் இருந்தாலும் கூட அந்த உணவுகளை நாம் எடுக்கத் தயாராக இன்று இல்லை.
ஏன் என்றால் நாம் அந்த அளவுக்கு அரிசியை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். அரிசியிலிருந்து கிடைக்கக் கூடிய Carbohydrates என்ற மாவுச்சத்து மிகவும் அதிகமாக இருகிறது. இந்த அரிசியையே தொடர்ந்து 2 வேளை அல்லது 3 வேளையாகச் சாப்பிடக் கூடிய மக்களுக்கு என்ன ஆகும்? நீரிழிவு தொடர்ந்து உடலிலேயே இருக்க ஆரம்பிக்கிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக அது உணவுகளால் தான் சாத்தியமாகும். இந்த அவசர கால யுகத்தில், உணவுப் பொருட்களில் நிறைய உடனடி உணவுகளைப் (Instant food) பயன்படுத்துகிறோம்.
என்னுடைய நீரிழிவுக்கான மருத்துவ சிகிச்சையின் போது நான் பலரையும் பார்த்திருக்கிறேன், காலை வேளையில் 2 பிரட்டையும், ஒரு கோக், பெப்சி, மிராண்டா போன்ற குளிர் பானத்தை குடிப்பவர்களுக்கு, ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்லது ஆறு மாதமோ இதையே பழக்கப்படுத்திவர்களுக்கெல்லாம் நீரிழிவு வந்திருக்கிறது. எனவே உணவில் நிறைய துரித உணவுகள், ரசாயன உணவுகள் எடுக்கக் கூடியவர்களுக்கு கண்டிப்பாக நீரிழிவு வருகிறது.
இதை எப்படி தடுக்கலாம், என்றால் மருந்து ஓரளவிற்கு கட்டுப்படுத்தத்தான் செய்யும், ஆனால் முழுமையாக குணப்படுத்திவிடாது. ஆனால் உணவுகளை அடையாளப்படுத்தி, தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொழுது சர்க்கரை நோயை முழுமையாக நாம் குணப்படுத்த முடியும். அன்றைய சித்தர்கள் சொன்ன மதுமேகந்தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கக் கூடிய சர்க்கரை வியாதி.
இந்த சர்க்கரை நோய்க்கான காரணம் என்ன என்றால் அடித்துச் சொல்லலாம் உணவு முறைகளின் முரண்பாடுதான். இது பாரம்பரிய நோய், இது அம்மா அப்பாவுக்கு இருந்தால் நமக்கும் வரும் என்பது உண்மையாக இருந்தாலும் கூட அதைக் கண்டிப்பாகத் தடுக்க முடியும். எனவே அதற்கான உணவுகள் என்னென்ன? அதை எப்படியெல்லாம் நாம் பயன்படுத்தலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த . . .
வெந்தயம்:
சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தைப் பிரித்தால் வெந்த + அயம். வெந்த என்றால் பஸ்பமாகி விட்டது என்று அர்த்தம். அயம் என்றால் இரும்பு என்று பொருள். இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள் எது என்றால், அது வெந்தயம் தான். தொடர்ந்து வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
பாகற்காய்:
அடுத்து பாகற்காய். பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும். சர்க்கரை நோய் என்பது தனி நோய் கிடையாது. இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும்.
அதாவது முதலில் நீ செல் பின்னாடியே நான் வருகிறேன் என்று சொல்வது மாதிரி ஒருவருக்கு சர்க்கரை நோய் வர ஆரம்பித்தது என்றால் தொடர்ந்து ரத்த அழுத்தம் வரலாம், கொழுப்பு நோய் ,கொழுப்பு சீரற்ற நிலையில் மாறலாம். ரத்தத்தில் Try Glyceride என்கின்ற கொழுப்பு இருக்கிறது.
அதே மாதிரி LDL என்று சொல்லக் கூடிய கெட்ட கொழுப்பும் இருக்கிறது. இந்த இரண்டும் அதிகமாக மாறும் பொழுது இதயம் சார்ந்த நோயும் வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதயம் சார்ந்த நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. சர்க்கரை அதிகமாகி கட்டுப்படாத சூழலினால் சிறுநீரகப் பாதிப்பு சார்ந்த நோயும் வரலாம். இதனால் சிறுநீரக செயலிழப்பு கூட உண்டாகலாம்.
நினைவுத்திறன் குறைந்து போவது, மூளைத்திறன் குறைந்து போவது இப்படி பல நோய்களைக் கொண்டுவரக் கூடிய நோயாக சர்க்கரை நோய் உள்ளது. நீரிழிவு என்றால் உடலை நீராய் இழக்கச் செய்யக் கூடிய ஒரு வியாதி நீரிழிவாகும். நம் உடம்பில் இருக்கக் கூடிய அனைத்து ஆதாரங்களையும் சிறிது சிறிதாக வெளியே கொண்டு வந்து விடும். அதாவது எலும்பு நம் உடம்பிற்கு வன்மை தரக்கூடியதாக இருந்தால் கூட, அந்த எலும்பையே கரைக்கக் கூடிய தன்மை இந்த நீரிழிவுக்கு உண்டு.
ஆதலால் நீரிழிவை நாம் உண்ணும் உணவின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நம் உடம்பை மென்மையாக்குகிறது. அப்பொழுது நன்றாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், எந்த உணவுப் பொருட்களில் துவர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறதோ அவைகள் நீரிழிவை கட்டுப்படுத்தும்.
வாழைப்பூ:
நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டார் என்றால் கண்டிப்பாக நீரிழிவு கட்டுப்படும். ஆனால் வாழைப்பூவில் கடலைப்பருப்பைச் சேர்த்து இன்று நாம் பருப்பு வடையாகத்தான் சாப்பிடுகிறோம். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.
தென்னைமரப் பூ:
அதே மாதிரி தென்னம்பாலைக்குள் இருக்கும் தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும், இரவிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகள் அனைத்தும் சரியாகிவிடும். இதனால் நம் கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.
நீரிழிவால் நரம்பு பாதிக்கப்படுவதால் கண்ணில் வரக்கூடிய நோய்கள் நிறைய வரும். அதே போல் நம் பாதங்களிலும் பல நோய் வரும். இவை அனைத்தையும் சரி செய்யக் கூடிய தன்மை தென்னம்பாலைக்குள் உள்ள தென்னைமரத்துப் பூவுக்கு உண்டு.
நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் :
அது போல் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இதையும் சம அளவில் கலந்து வைத்துத் தொடர்ந்து திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும் பொழுது நீரிழிவு முழுமையாகக் கட்டுப்படக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அதே போல் இந்த சர்க்கரை நோய்க்கு என்ன செய்யலாம் என்றால், சமையலில் சீரகத்திற்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து சமையலில் ஈடுபடுத்தும் பொழுது சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.
அதே போல் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு ( Try Glyceride) அதாவது இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்த நாளங்களில் அடிக்கக் கூடிய ஒரு கொழுப்பு ட்ரை க்லீசரைடு. உலகம் முழுக்க அதற்கான மருந்துகள் குறைவு. அந்த மருந்துகளை உபயோகப்படுத்தினால் அதற்கான பக்கவிளைவுகள் அதிகம். இதை முழுமையாக சரி செய்ய நம் நாட்டு கருவேப்பிலை, லவங்கப் பட்டை, வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக அற்புதமான பலன் கிடைக்கும்.
அன்றைய மது மேகத்தில் சித்தர்கள் சொன்ன உணவுகள் எல்லாம் இதுதான். சித்தர்களுடைய விஞ்ஞான பார்வைக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லாம். அதாவது அன்றைய காலத்தில் மதுமேகம் வந்த நோயாளிகளுக்கு சித்தர்கள் கொடுத்த மருந்து பருத்தி கொட்டை, எள்ளுப் புண்ணாக்கு, கோரைக் கிழங்கு, ஆவாரம்பூ போன்றவைகளையே மருந்தாகக் கொடுத்தனர். என்ன இது எருமை மாடு சாப்பிடுவதை மருந்து எனச்சொல்கிறாரே என்று நினைத்தால் அது தவறு.
இந்த உலகத்தில் நீரிழிவு என்ற நோய் பரவத்தொடங்கிய போது இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கு மாத்திரையால் ஒரு சிலருக்கு சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு சிலருக்கு மாத்திரை பலன் கொடுக்க வில்லை. அப்போது என்ன செய்தார்கள் என்றால் பன்றிகளுடைய கணையம், எருமை மாட்டுடைய கணையம் இந்த இரண்டு கணையத்திலிருந்து இன்சுலின் நுண்ணுயிர் எடுக்கப்பட்டு அது மனிதருக்கு ஏற்புடைய வகையில் இன்சுலினாக மாற்றப்பட்டு அதன் பிறகு, அதை மனிதர்களுக்கு மருந்தாகச் செலுத்தினார்கள்.
இப்பொழுது DNA கூட்டமைப்பு உள்ள human Insulin இன்று உலகம் முழுக்க வந்துவிட்டது. ஆனால் அதற்கு முன்பு கோரைக் கிழங்கையே பிரதானமாகச் சாப்பிடக் கூடிய பன்றிகளின் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது, பருத்திக் கொட்டையையும், எள்ளுப் புண்ணாக்கையும் சாப்பிட்ட எருமை மாட்டுக் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது. இதில் ஒரு ஆச்சர்யம் என்றால் சித்தர்களுக்கு எவ்வாறு இது தெரிந்தது என்று தெரியவில்லை. ஏன் என்றால் பிரதானமாக பருத்திக் கொட்டையிலேயும், கோரைக் கிழங்கிலேயும், எள்ளுப் புண்ணாக்கிலேயும் இன்சுலின் அளவு அப்படியே இருக்கிறது. அதில் உள்ள கந்தகச் சத்து அப்படியே வரும். நம் உடம்பில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்- ஐ முழுமையாகக் கரைக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு.
அதனால் தான் இன்றும் எனது கிராமத்தில் சர்க்கரை நோய் என்று கூறினால் யாரும் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்களை பார்க்கவே முடியாது. மிக எளிமையாக அரைக் கிலோ எள்ளு புண்ணாக்கு, அரை கிலோ பருத்திக் கொட்டை, அரை கிலோ ஆவாரம்பூ , 100 கிராம் கருஞ்சீரகம் இவற்றை உரலில் இட்டு இடித்து வைத்துக் கொள்கிறார்கள். இதில் ஒரு கையளவு எடுத்து சிறிது கருப்பட்டி, பனைவெல்லம் சேர்த்து இக்கலவையை நன்கு கொதிக்க வைத்து, அதை நன்றாக வடிகட்டி காலையிலேயும், இரவிலேயும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் தானாகவே சரியாகிவிடும்.
சர்க்கரை நோய் வந்தவர்கள் எந்த மருந்தை எடுத்தும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அதற்குத் தகுந்த மாதிரி உடலில் வியர்வை உண்டாக்க வேண்டும். அதுதான் பிரதானமானது. நாம் சிறிது நடைப்பயிற்சி கூட செய்யாமல் இருப்பதனால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு இலகுவான நடைப்பயிற்சி, உடலை வருத்திச் செய்யக் கூடிய சில வேலை இவற்றையெல்லாம் செய்து வியர்வையை உண்டாக்கிக் கொள்ளவேண்டும். குறைந்தது 50 மில்லி அளவாவது சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை வர வேண்டும்.
இதில் இன்னும் பெரிய விசயம் என்னவென்றால் நீரிழிவால் வரக்கூடிய கால் புண்ணானது குழிப் புண்ணாக மாறிவிடும். அந்தப் புண்ணுக்கு ஆங்கில மருத்துவத்தில் டின்ஜர், டெட்டால், மற்றும் சில மருந்துகளையும் சேர்த்து குணப்படுத்துகிறோம் பேர்வழி என்று சொல்லி, பிறகு காலையே வெட்டக் கூடிய ஒரு நிலை வருகிறது. கிராமங்களில் வெறும் ஆவார இலையை அவித்து அந்த புண்ணில் வைத்து கட்டுகிறார்கள். அதன் பின் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அப்புண் குணமாகி விடுகிறது அவ்வளவு அதிசயமான விசயம் எல்லாம் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.
சர்க்கரை நோயில் ஆவாரம்பூவிற்கு ஒரு பிரதானமான இடம் இருக்கிறது. அதில் தங்கத்தின் சத்து இருப்பதாக சித்தர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானம் இப்பூவை ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொழுது அதில் தங்கத்தின் கூறுகள் இருப்பதை ஒத்துக் கொள்கிறது. ஆவாரம்பூ இந்நோய்க்கு அவ்வளவு அற்புதமானது. அதனால் சித்தர்கள் கூறுவார்கள் “ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ” என்று. இந்த ஆவாரையைத் தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு சாவே இல்லை என்று கூறுகிறார்கள். சர்க்கரை நோயில் அது முழுக்க முழுக்க உண்மை.
இன்று சர்க்கரை நோய்க்கு இனிப்புத் துளசி சாப்பிடுபவர்கள் நிறைய நபர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆவாரம் பூவை தேநீராகச் சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படுவதை நாங்கள் கண் கூடாக காண்கிறோம். சத்தாகச் சாப்பிடுங்கள் சர்க்கரையைக் கட்டுபடுத்துங்கள் என்று நாங்கள் கூறுகிறோம். உணவை கட்டுப்படுத்தும் பொழுது அந்த உணவின் ஊட்டமேல்லாம் குறைய ஆரம்பிக்கிறது. ஆக தேர்ந்தெடுத்த உணவை நாம் எடுக்கும் பொழுது நல்ல முழுமையான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
'ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.இது மிக எளிமையான வழிமுறைஆகும். தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சர்க்கரை நோய்க்கு சிறுகுருஞ்சான், நாவல் கொட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை, கடலலஞ்சில் இவை ஐந்தையும் சம அளவு கலந்து, பொடி செய்து வைத்துகொண்டு காலை, இரவு நேரம் தொடர்ந்து சாப்ப்பிட்டுக் கொண்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் இருக்கும்.
நீரிழிவு என்றால் உடம்பை மென்மைப் படுத்தக் கூடிய ஒரு வியாதி ஆகும், அந்த நீரிழிவைக் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் உடம்பு நல்ல சக்தி பெரும். நீரிழிவு நோயாளிகள் உடம்பில் அதிகம் நீர்ச்சத்து இழக்காமல், தண்ணீர் தாகம் அதிகம் இல்லாமல், நாவு வறட்சி இல்லாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். நாம் மேலே கூறிய உணவுகளை எல்லாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உணவில் நிறைய பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு, பீர்க்காய்ப் பிஞ்சு , புடலங்காய்ப் பிஞ்சு, பீன்ஸ், அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வாருங்கள். இன்று இருக்கும் அலோபதி மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளிடம் கேரட் சாப்பிடாதீர்கள், அது சர்க்கரை நோய்க்கு நல்லதில்லை என்று கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதனால் 10 வருடமோ அல்லது 15 வருடமோ கேரட்டையே சாப்பிடாத சக்கரை நோயாளிகள் எனக்கு தெரிந்து நிறைய பேர் இருக்கிறார்கள். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது.
இதில் பீட்டா கரோடினாய்ஸ் எனும் ஊட்டச் சத்து இருப்பதனால் நம் தோல் பகுதிக்கு கீழ் இருக்கக் கூடிய தசை பகுதியில் சக்தியை சேர்த்து வைக்கக் கூடிய தன்மை கேரட்டிற்கு உண்டு. அதனால் தாராளமாக நீரிழிவு நோயாளிகள் கேரட்டைச் சாப்பிடலாம் தவறில்லை.
அது போல் தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய ஆங்கில மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை பார்த்து இளநீர் சாப்பிடாதீர்கள் என்று கூறி திசை திருப்புகிறார்கள். இளநீர் சாப்பிட்டால் கண்டிப்பாக நீரிழிவு அதிகமாகிவிடும் என்று கூறி நோயாளிகளைப் பயமுறுத்துகிறார்கள். இது தவறான செயலாகும். நான் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், கரும்புச் சாற்றிலிருந்து சர்க்கரை தயார் செய்யலாம், இளநீரிலிருந்து சர்க்கரை தயார் பண்ண முடியுமா? இதை யோசித்து பாருங்கள். இளநீரில் அத்தனை கால்சியமும் இருக்கிறது. அச்சத்தில் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. ஒரு தட்டுச் சாப்பாட்டில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் இளநீரில்கிடையாது.
அதனால் என்னைப் பார்க்க வரும் நோயாளிகளுக்கு நான் கூறுவது, இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுங்கள் என்கிறேன். அப்படிச் சாப்பிட்டால் சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி மருதம்பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உண்ணும் உணவில் பல்வேறு உணவுகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் திணிக்கத் தயாராகி கிட்டத்தட்ட 17 வகையான நூடுல்ஸ்சில் அதிக பொட்டாசியம் சத்து , அதிக சோடியம் சத்து ஆகியவை அதிகமாக இருக்கிறது கூவிக் கூவி விற்பனை செய்து நம்மை வாங்க வைக்கிறது. இதை இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, இந்த பன்னாட்டு உணவுகள் உண்பதற்கு ஏற்ற உணவுகள் அல்ல, இவைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஆதாலால் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால் கூட, இவைகளை நிறுத்துவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை. ஏன் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கக் கூடிய மிகைமிஞ்சிய வரியே இதற்குக் காரணம் ஆகும்.
இந்தத் தொகை பெரிய தொகையாக ஆளுகின்றவர்களுக்கு தெரிவதால் மக்களுடைய அடிப்படை ஆரோக்கியத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத ஒரு சூழல் இருக்கிறது. ஆக ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான விழிப்புணர்வை அவன்தான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு உணவுக் கட்டுப்பாடு என்பது கண்டிப்பாக வேண்டும். உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விசயமும் நம் கையில் தான் இருக்கிறது.
சித்தர்கள் சொன்ன சிறு தானியங்கள் வரகரிசி, திணை அரிசி, குதுரவாலி, சாமை எல்லாமே நார்ச்சத்து உள்ள அற்புதமான உணவுகள். இந்த உணவுகளை ஒரு வேளையோ, இரு வேளையோ சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடும் பொழுது நோய் கட்டுப்படக் கூடிய ஒரு தன்மை உண்டு. சர்க்கரை நோய் வந்து விட்டாலே உடலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணச்சத்து இவைகள் குறைந்து விடும். இவற்றை ஈடுகட்ட துவர்ப்பான உணவுகளை எடுத்துக் கொண்டால் சர்க்கரையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவானது இன்று உலகத் தாயாரிப்புகளை விற்கும் பெரும் வணிகச் சந்தையாக, வளர்ந்த நாடுகளுக்கென மாறிவிட்டது. அதனால் தான் இங்கு நோய் மறைமுகமாக விதைக்கப்படுகிறது. அந்த நோய்களை இங்கு விதைத்து, மறைமுகமாக இங்குள்ள நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படுகிறது. எனவே நாம் தான் நுகர்ர்வுப் பொருட்களை வாங்கும் பொது மிகக்கவனமாக இருக்க வேண்டும்.
2007 கணக்குப்படி இந்தியாவில் சர்க்கரை வியாதிக்கான வணிக மதிப்பு 700 கோடி. அமெரிக்காவின் எலிலில்லி என்ற நிறுவனம் தயாரிக்கின்ற மருந்துகள் இங்கு மட்டும் 700 கோடி ரூபாய்க்கு விற்பனையாகக் கூடிய வணிகச் சந்தையாக நம் நாடு இருக்கிறது.. இது இன்று கிட்டத்தட்ட 1000 கோடியைத் தாண்டி சென்றிருக்கும். அதனால் நம்முடைய நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படாமல், நம்முடைய நாடு வளமையான நாடாக மாற வேண்டும் என்றால்,நாம் நல்ல உடல் நலத்தோடு, உடல் வளத்தோடு இருக்க வேண்டும்.
அவ்வாறு மாறும் பொழுதுதான் ஒரு முழுமையான, ஒரு ஆரோக்கியமான இந்தியாவை, ஒரு ஆரோக்கியமான தமிழ்ச் சமூகத்தை நாம் படைக்க முடியும். எப்பவுமே நோய்வாய்ப்பட்டவனிடம் படைப்பாற்றல் குறைந்து விடும். ஒரு நல்ல ஆற்றல் உள்ள, படைப்புத்திறன் உள்ள தமிழ் சமூகம் மறுபடியும் வரவேண்டும், வளரவேண்டும் என்றால் சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும்.
அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கு உணவே மருந்து மருந்தே உணவு என்ற சித்தர்கள் கோட்பாட்டின் படி அனைவரும் முயற்சி செய்யவேண்டும். நான் கூறிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவே அடிப்படையாகக் கொண்ட மருந்துப் பொருட்கள் எல்லாவற்றையுமே தொடர்ந்து சாப்பிடுங்கள். அடுத்த முறை சிறகு இணைய இதழில் சர்க்கரை நோயினால் வரக் கூடிய சார்பு நோய்கள் பற்றி விரிவாக எடுத்தியம்ப இருக்கிறேன்.
சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு ஆஸ்துமா, இதய நோய், சிறுநீரக நோய் ஆகிய நோய்களும் துணை நோய்களாக இருக்கிறது. நான் மறுபடியும் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி,
-படித்ததில் பிடித்தது

Friday, 1 May 2015

கண்களுக்கு சில அத்தியாவசிய எளிய பயிற்சிகள்.
யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற பல வகை உடற்பயிற்சிகள் எவ்வளவு உடலுக்கு முக்கியமோ அதே அளவு பயிற்சி நம் கண்களுக்கும் அவசியமானது. கண்களை ஆரோக்கியமாக வைத்து‌க்கொ‌ள்வது கண்களு‌க்கு ஏற்படும் களைப்புகளை குறைக்கும். கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கும் வழிவகுக்கும்.
கண்களுக்கு நாம் தர வேண்டிய அத்தியாவசிய பயிற்சி முறைகள்:
1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை உள்ளங்கையால் மூடிகொள்ளவும். அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ளும்படியாக முக்கோன வாக்கில் கைகள் அமைய வேண்டும்.
கண்களை மூடும் போது இருளை உணர்ந்து, அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட வேண்டும். இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும்.
2. கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.
3. கண் மசாஜ்:
வெப்பம் மற்றும் குளிர்ந்த நீர் மசாஜ்:
குளிர்ந்த மற்றும் சூடான நீரில் துண்டை நினைத்து புருவம், மூடிய இமைகள், மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும். இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும். ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக அமையும்படி செய்யவும்.
முழு முக மசாஜ்:
சூடான நீரில் ஒரு துண்டை நனைத்து, கண்களை தவிர, கழுத்து, தலை மற்றும் கன்னங்கள் என அனைத்து பகுதிகளிலும், தேய்த்தல் வேண்டும். பின்னர், விரல்களால் மெதுவாக நெற்றி மற்றும் மூடிய கண்களை மசாஜ் செய்யவும்.
கண்ணிமை மசாஜ்:
கண்களை மூடி 1-2 நிமிடங்கள் விரல்களால் வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். பின் கைகளை கழுவி சுத்தமாகவும், அதிகமாக அழுத்தாமல் சாதாரணமாக அழுத்துவது அவசியம்.
4. மெதுவாக இரண்டு கைகளால் மூன்று விரல்கள் கொண்டு மேல் கண் இமைகள் அழுத்தவும். பின்னர், 1-2 வினாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும்.
5. அமைதியாக உட்கார்ந்து, கண்களை இடதுபுறமாகவும் பின் வலதுபுறமாகவும் சுழற்ற வேண்டும். 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும்.
6. 10-15 வினாடிகள் ஒரு தொலைதூர பொருளைப் (150 அடி அல்லது 50 மீட்டர் மேல்) பார்க்கவும். பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள் மீது ( 30 அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15 வினாடிகள் நோக்கவும். மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும். இதனை 5 முறை செய்யவும்.
7. முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து, மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும். கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.
8. எதிரில் உள்ள சுவரை பார்த்தப்படியே உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும் தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்தால், பின் பழகிவிடும்.
9. தலையை அசக்காமல் மேலும் கீழுமாக பார்க்கவும். இதனை 8 முறை செய்தல் வேண்டும். பின்னர் இடது வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல் வேண்டும். கண்களை அதன் போக்கில் போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும்.
10. எப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும் போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது. நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும் சிறிது நேரம் செய்தல் நல்லது. இந்த மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு சிறந்ததாக இருக்கும்.
எளிதாக,
தினம் அலுவலகத்தில் உங்கள் கம்ப்யூட்டர் ஓவ்வொறு செயலாக்கத்திற்கும் சில நொடிகள் பிடிக்கும், அப்போது உங்கள் கண்களுக்கு மேல குறிப்பிட்டுள்ள பயிற்சிகளையோ அல்லது தூரத்தில் உள்ள விஷயங்களை நோக்கி பார்க்கவும்.
Like · Comment · 
கால் ஆணி:
பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.
அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது.
இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.
கால் ஆணி ஏற்படக் காரணம்:
பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.
கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.
காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.
கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.
கால் ஆணிக்கு உரிய சிகிச்சை:
கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.
இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.
மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.
பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.
மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.
1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
18. சுக்கு(Dry Ginger), மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்