Tuesday, 12 April 2016

ஷீரடி சாயி பாபா சக்தி
எண் யந்திரம்
ஷீரடி சாயி பாபாவை நினைவுகூர்ந்து, அவரது அற்புத சக்தியினை உணரும் பக்தர்களுக்கு அவர் பக்கத் துணையாக இருந்து, இன்பத்தைஅள்ளித்தர அயராது துணை நிற்பார். சாயி, சாயி, சாயி என உச்சரித்தால் பாவங்கள் தொலைந்துவிடும்.'-
சாயிபாபாஎண் 6-ன் ஆதிக்கம் பெற்ற- சுக்கிரனின் பலம்வாய்ந்த யந்திரம் இது. சித்திரை, மாசி, மார்கழி மாதங்களில் கோரிக்கைகளை வைத்தால் ஆறே மாதங்களில் வேகமான பலன் கிடைக்கப் பெறும். முயலுங்கள்; பாபா அருள்புரிவார்!
தீராத ஜென்ம பாவம் போக்கும் வில்வ மரம்
வில்வ மரத்தின் சிறப்புகள்
வில்வமரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும். இந்த வில்வத்திலும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது. வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும். இதன் தழை ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய பயன்படுகிறது.
தீர்த்தம்
வில்வ மரங்கள் குறிப்பாக சிவஸ்தலங்களில் மட்டுமே அதிகம் வளர்க்கப் படுகின்றன. வில்வ இலையுடன் தண்ணீரை கலந்தால் அது புனித நீராக ஈஸ்வரன் கோயில்களில் பயன்படுத்தப் படுகிறது.
வில்வ இலை பூஜை
சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது. ஆதலால் வில்வ மரங்களில் கிடைக்கும் இலைகள் ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய பயன்படுகிறது. வில்வ இலைக்கு ஒரு தனிச்சிறப்பும் உள்ளது, ஒருமுறை பூஜைக்கு உபயோகித்த வில்வ இலைகளை அலம்பி தூயமைப்படுத்தி மறுபடியும் பூஜைக்கு உபயோகப்படுத்தலாமாம்.
எது பூஜைக்கு ஏற்ற வில்வம்
பூஜைக்கு பரிக்கும் போது குளித்து உடல் சுத்தத்தோடு இருப்பதோடு மட்டும் உள்ளத் தூய்மையோடு பரித்தல் வேண்டும். ஒவ்வோரு இலையை பரிக்கும் போது சிவ நாமத்தை கூறியவாறு பரித்தல் வேண்டும். அசுத்தமான, சுடு காடு ஓரங்களில் இருக்கும் மரங்களில் இருந்து பரித்தல் கூடாது.
வில்வ மரம் வளர்ப்பு
வில்வ மரத்தை வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய மரங்களில் ஒன்று. அவ்வாறு வளர்க்கப் படும் தெய்வீக தன்மை பொருந்திய மரங்களை தீட்டுள்ள பெண்களோ அல்லது தீட்டு விசேசங்களுக்கு சென்று வந்து குளிக்காமல் நிழலுக்காக அம்மரத்தடியில் நிற்பதுமே பாவமாகும். முடிந்தால் பசும் பால் கலந்து நீர் ஊற்றி வளர்ப்பது சிறப்பு. வில்வ மரத்தடியில் மலர்த்தூவி விளக்கேற்றி வழிபடுதல் மிகச் சிறப்பு.
ஜீவ வழிபாடு
வில்வ மரத்தை முதன் முதலில் வீட்டில் வைப்பர்கள், செடியை வைத்து பின் பூமி தோஷம் நீங்க விபூதியை சுத்த நீரில் கலந்து புதிதாக வைத்த வில்லவ மரத்தை சுற்றி தெளித்து ஓம் மூலி ஜீவலட்சுமி மூலி மகாதேவ மூலி உன் உயிர் உடலில் சேர்ந்து ஜீவனாயிருக்க சுவாகா என்று செல்லுக.
வில்வ மரம் வழிபாடு
பௌர்ணமி நாள், வெள்ளிக் கிழமைகளில் லட்சுமி துதி கூறி கற்கண்டு, தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து வழிபடலாம். வில்வ விருட்சம் முன் அமர்ந்து விநாயகரை வணங்கி பிறகு
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் வில்வ ரூபிண்யை சௌபாக்ய லட்சுமியை தனதாண்ய கர்யை நமோ நம!
என்று துதிப்பதால் (16, 32, 54, 108 எண்ணிக்கையில்) அனைத்து வளமும் பெருகும்.
நரகமில்லை
வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
ஒரு வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும்.
வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை.
பாவம் நீக்கி பலன்தரும் வில்வ மரம்.
ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்..
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய நற்பலன் கிடைக்கும்.
108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
வில்வ மரம் இருக்கும் இடம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும்.
வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள்.
ஒரு வில்வ தனத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது.
இதை வளர்த்து வரும் அனைவருமே நலமாக இருப்பதாக கூறி உள்ளனர். வில்வம் வளர்த்தால் செல்வம் வளரும்.
வில்வ மரம் எங்கு வளர்க்கப்படுகிறதோ அங்கே மகாலட்சுமி நிரந்தரமாக வசிப்பாள்.
சிவ பூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகன்று தோஷங்கள் மறைந்து பகவான் ஈசனது அருட்பார்வை கிடைக்கும்.
காசி முதல் ராமேஸ்வரம் உள்ள சிவ ஸ்தலங்களை சென்று வந்த பலன் உண்டாகும்.
ஒரு வில்வ இலை ஒரு தங்க பூவிற்க்கு சமம், ஒரு வில்வ தளம் சிவனுக்கு அர்பித்தால். மகா பாவங்களும் விலகி சகல பாக்கியங்கள் உண்டாகும்.
எவ்வித உயர்ந்த தேவலோக தங்க பூவும் வில்வத்திற்க்கு இணையாக முடியாது என்று கூறுகின்றனர். வில்வத்தினால் சிவ பொருமானுக்கு பூஜை செய்தால் சகல சக்திகளை தனுக்குள் கொண்ட சிவபொருமான் மிகவும் திருப்தி அடைகிறான் அவ்வாறு வணங்கும் பக்தனுக்கு வறுமையை தொலைத்து அவனது விருப்பங்களை நிறைவேற்றி வைக்கிறது வில்வம் மரம்.
அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டாகும்.
கொலை செய்வதையே தொழிலாக கொண்டவர்களும் வில்வத்தை பற்றிக் கொண்டால் அவர்கள் பாவம் எல்லாம் தொலையும், உலகுக்குப் பொரும் பயனை விளைவிப்பார்கள் ஆகிவிடுவார்கள் என்று திருக்களத்தி புராணம் கூறுகிறது.
வேடனுக்கு மோட்சம்
ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வரவே அதனிடமிருந்து தப்பித்து ஓடி உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். இருள் சூழ்ந்த பின்னும் மரத்தடியில் படுத்துக் கொண்டு புலி நகர்வதாயில்லை. இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான் வேடன்.
விடிந்து நெடுநேரமாகிய பின்னும் கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம்.
அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம் இருந்தது. பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம். அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்னும் புராணக்கதை இன்றும் சிவராத்திரி அன்று கூறப்படுகிறது
LikeShow more reactions
Comment
எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை!

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாகக் காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும். இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும். மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் :
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம் - 75.9%
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%
இழைப்பண்டம் - 0.9%

கார்போஹைட்ரேட்கள் - 12.5%
தாதுக்கள், வைட்டமின்கள்,
கால்சியம் - 440 மி.கி
பாஸ்பரஸ் - 70 மி.கி
அயம் - 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்
முகவாத நோய்க்கு அருமருந்தான மாவிலங்கம்!

இந்தியாவினைச் சார்ந்த இலையுதிர் மரம் மாவிலங்கமாகும். இது ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக காணப்படும். இந்த மரத்தின் இலைகள் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலையாகும். மாவிலங்கத்தின் இலைகளும், பட்டையும் மருத்துவ பயன் கொண்டவை. 

கி.மு 8-ம் நூற்றாண்டிலேயே ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் மாவிலங்கத்தின் மருத்துவ பயன்பாடு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி 1100-ம் ஆண்டு முதல் சிறுநீரகக் கல் போக்க இந்திய மருத்துவத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தில் சபோனின்கள், பிளேவனாய்டுகள், தாவரஸ்டீரால்கள் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் வருனால், ரூட்டின், சிட்டோஸ்டிரால், பெட்டுலினிக் அமிலம், குளுக்கோகப்பாரின், கெடா பிசைன் போன்றவை காணப்படுகின்றன.

அலர்ஜிக்கு மருந்து

மாவிலங்கப் பட்டை ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும். மேலும் காய்ச்சல் வயிற்று எரிச்சல், வாந்தி ஆகியவற்றினையும் போக்கும். மூட்டுக்களின் வீக்கம் மற்றும் புண் போக்க பசுமை இலைகள் உதவுகின்றன. கசக்கிய இலைகளை வினிகர் சேர்த்து பயன்படுத்துவர்.

முகவாதத்தை குணமாக்கும்

குளிர்காலத்தில் பனிக்காற்று தாக்குவதினால் ஏராளமானோர் முகவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாவிலங்கம் அருமருந்தாகும். மாவிலங்கு மரப்பட்டை, மூக்கிரட்டைப் பட்டை வேர், வெள்ளைச் சாரணை வேர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் 'நண்டுகல் பஷ்பம்' சேர்க்க வேண்டும்.

தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை 'தோள்பட்டை உறைவு'. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பஷ்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.
சிறுநீரக கற்களை வெளியேற்றும்
சிறுநீரகக் கற்களை நீக்க மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிறுநீருடனேயே கல் வெளிவருவது போன்று உதவுகிறது. இன்றைய நவீன ஆய்வுகள் இதனை நிரூபித்துள்ளன. சிறுநீர்ப்பையில் வீக்கம், சிறுநீர்க்குழாய் அடைப்பு மற்றும் இனபெருக்க உறுப்புடனான சுரப்பியில் அதிக வளர்ச்சியினால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகளை குணப்படுத்துகிறது. பாரம்பரியமாக கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட தாவர மருந்தின் அதே பயன்பாடு அதே நோய்களுக்கு ஏற்றது என்று நிறுவப்பட்டதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மாவிலங்கம்
பல் வலி போக்கும் நந்தியா வட்டை

குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. 
நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால்பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. "டிரைகோடெஸ்மா இன்டிகம்" என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், "கழுதை தும்பை" என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. இலை மற்றும் வேரிலுள்ள எக்சாகோசேன், எக்சாகோசடினாய்க் அமிலம், எத்தில் எஸ்டர் ஆகியன தசை இறுக்கத்தை நீக்கி, திசுக்களின் இயல்பான செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

கவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, 25 கிராம் அளவில் செடி பாகங்களை 500 மி.லி. நீரில் கொதிக்கவைத்து, 120 மி.லி.யாக சுண்டியபின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்பு மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும். கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும். வீக்கம் வற்றும்.
தசை வலிகளை நீக்கும் கவிழ்தும்பை!

குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. 
நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. "டிரைகோடெஸ்மா இன்டிகம்" என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், "கழுதை தும்பை" என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. இலை மற்றும் வேரிலுள்ள எக்சாகோசேன், எக்சாகோசடினாய்க் அமிலம், எத்தில் எஸ்டர் ஆகியன தசை இறுக்கத்தை நீக்கி, திசுக்களின் இயல்பான செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

கவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, 25 கிராம் அளவில் செடி பாகங்களை 500 மி.லி. நீரில் கொதிக்கவைத்து, 120 மி.லி.யாக சுண்டியபின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்பு மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும். கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும். வீக்கம் வற்றும்.
இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மரமஞ்சள்...!

மரமஞ்சள் மர இனத்தைச் சேர்ந்ததாகும். இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மரப்பட்டை, இலை மருத்துவக் குணம் உடையது. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச் சுவையாகக் கார்ப்புச் சுவையுடனும் இருக்கும். வறட்சித் தன்மையும் சூட்டை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் கொண்டது. ரணம், நீரிழிவு, அரிப்பு ஆகியவற்றைப் போக்கும் குணமுண்டு. தமிழகம் எங்கும் காடுகளில் காணப்படுகின்றது.

வேறு பெயர்கள்: காலேயகம், தாறுவி
வகைகள்: தாளுகரித்ரா, கர்ப்பூரகரித்தா
ஆங்கிலத்தில்: Coscinium Fenestratum

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். மர மஞ்சளின் பட்டையை எடுத்து விழுதாய் அரைத்து ரணங்களில் பூசி வர குணமாகும். மரமஞ்சளின் விழுதை நெல்லிக்காயளவு அரைத்து 100 மில்லியளவு பசுவின் கோமியத்துடன் கலந்து காலையில் குடித்து வர சிலேத்தும நோய்கள் குணமாகும். மர மஞ்சளை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி மீண்டும் குடிநீர் நன்றாகக் கெட்டிப்படும் வரை, காய்ச்சி சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் வருகின்ற தோல் நோய்கள், நரம்புச் சிலந்தி குணமாகும்.
மரமஞ்சளின் சாறில் 200 மில்லியளவு எடுத்து சிறிது தேன் கலந்து 2 வேளை தொடர்ந்து 1 வாரம் குடித்து வர காமாலை குணமாகும்.

மரமஞ்சளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகக் காய்ச்சி, அத்துடன் சிறிது தேன் அல்லது அரிசி கழுவிய நீருடன் கலந்து 2 வேளை குடித்து வர வெள்ளை, பெரும்பாடு குணமாகும்.
மர மஞ்சளை இடித்து 10 கிராம் எடுத்து நூறு மில்லியளவு தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மூலநோய், சுவையின்மை, கணநோய், கணக்காய்ச்சல், உட்காய்ச்சல் குணமாகும். காய்ச்சலுக்குப் பின்னர் காணப்படும் அயர்வு நீங்கும்.

மரமஞ்சளை நீர்விட்டு அரைத்து தலையில் பற்றிட உடல் சூடு தணியும். மர மஞ்சளை அரைத்து இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மேல் பூச குணமாகும்