Friday, 23 August 2013

சாதகர் கேள்வி: "சத்குரு" என்பதன் அர்த்தம் என்ன??

"சத்குரு" பதில்: "சத்குரு"என்றால் படிக்காத "குரு". முறை சார்ந்த ஆன்மீகக்கல்வி என்று சொல்லப்படுகிற விஷயத்தை பயிலாதவருக்கு "சத்குரு" என்று பெயர். அவற்றையெல்லாம் அவர் உள்நிலை அனுபவத்தில் கொண்டிருக்கிறார். ஆன்மீகக்கல்வி என்று அவருக்கு ஏதுமில்லை. வேதங்கள்,கீதைகள்,உபநிஷதங்கள் போன்றவற்றிலிருந்து அவர் வருவதில்லை. அவற்றில் அவருக்கு பயிற்சியும் இல்லை. இது உள்நிலை அனுபவம். நான் என்கிற விஷயத்தை, என்னைக்குறித்த விஷயத்தை தவிர, எல்லாவற்றிலும் ஒருவித அறியாமையில் தான் இருக்கிறேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் 'நான்' என்பது தான். இது தெரிந்தாலே இந்த பிரபஞ்ச்சத்தைத் தெரிந்து கொண்டதாக அர்த்தம். உண்மையில் இந்த பிரபஞ்ச்சத்தில் தெரிந்து கொள்ளுகின்ற தகுதியுள்ள ஒரே விஷயம் 'நீங்கள்' எனும் உங்கள் தன்மைதான். உங்கள் தன்மை உங்களுக்குத் தெரிந்தால் என்னவெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதெல்லாம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. எனவே "சத்குரு" என்ற சொல்லுக்கு அர்த்தம், ஒருவர் தன்னிலிருந்து வருபவர் என்பது. இன்னொருவரால் பயிற்றுவிக்கப்பட்டவர் என்று இல்லை. அதாவது ஒரு குறிப்பிட்ட மரபிலேயிருந்து வருபவர் அல்ல"சத்குரு" என்பவர். அவர் தன்னிலிருந்து தோன்றியவர். ஒரு மரபினுடைய உறுதுணை அவருக்கு இருந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட பாரம்பரியத்தை அவர் சார்ந்திருக்க மாட்டார். அதனால்தான்,அவருக்கு முன்னோடிகள் என யாரும் இல்லை என்பதனால் தான் இந்த சமூகத்தில் அவரை அங்கீகரிப்பதற்கு நீண்டகாலம் ஆகிறது."

சாதகர் கேள்வி: அப்படியானால் இந்த பாதையில் புத்தகங்கள் பயனற்றவையா?

"சத்குரு" பதில்: "பாருங்கள், நான் பேசுகிற ஆன்மீகம் எல்லாம் நான் யாரிடமோ படித்தேன் என்பதாலோ அல்லது இந்த வேதங்கள், உபநிஷதங்களை எல்லாம் படித்தேன் என்பதனாலோ வருவதில்லை. நான் இயல்பாக சில விஷயங்களை, சில துணுக்குகளை இங்கும் அங்கும் படித்திருப்பேன். ஆனால் கீதையைக்கூட படித்ததில்லை. ஆனால் ஒரு வார்த்தையைக் கேட்டமாத்திரத்தில் அதன்பொருள் என்ன என்று எனக்குத் தெரிகிறது. எனக்கு இலக்கியம் பிடிக்கும். எனக்கு 'ஆஷ்டிரிக்ஸ்' பிடிக்கும், 'டென்னிஸ் த மேனஸ்' பிடிக்கும். அது வேறு விஷயம். அதிலும் நல்ல அறிவான விஷயங்கள் உள்ளன. வாழ்க்கை குறித்த எளிய அறிவான விஷயங்கள் இதில் உள்ளன. ஆனால் ஆன்மீகம் என்று வரும்போது நிச்சயம் படிக்க வேண்டியது என்று நான் ஒரு புத்தகத்தை கூடப் பார்த்ததில்லை. எனவே நான் அவற்றைப் படிப்பதில்லை. ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படிக்கிறேன். ஏதோ அங்குமிங்கும் ஒரு பக்கத்தை படிக்கிறேனென்றால், அந்த புத்தகத்தை எழுதியவருடைய மனம் என்ன இயல்பு என்று எனக்கு தெரிகிறது. அந்த மனதிலிருந்து என்ன வரும், என்னென்ன வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிகிறது. அதற்கு பிறகு அந்த புத்தகத்தின் 400 பக்கங்களை படிப்பதென்பது அவசியமில்லாதது!

No comments:

Post a Comment