22NOV
எங்கிருந்தாலும் தரிசனம்
தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.
மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…
“பிரம்மானந்த ஸ்வரூபா ஈஷா ஜெகதீஷா” சத்குருவின் குரலில் அந்த உச்சாடனையைக் கேட்டு சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று தரிசன நேரத்தில்,சாதகர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டியது. வெகுநாட்களுக்குப் பின் ஆசிரமத்தில் சத்குருவைக் கண்டவர்களில் சிலர், ஆர்ப்பரிக்க சத்குருவின் அருள் அதிர்வுகளுடன் துவங்கியது தரிசன நேரம்.
மதுவால் விளையும் கேடு
‘மது’ மக்களுக்கு சற்று நேரத்திற்கு தளர்வான நிலையைத் தருகின்ற அதே சமயத்தில் தன்னிலை இழக்கச் செய்து, பல கேடுகளுக்கும் வழி வகுக்கிறது என்பதை, தற்போதைய நடப்புகள் சிலவற்றை சுட்டிக்காட்டி, தனது வருத்தத்தை சங்கரன்பிள்ளை நகைச்சுவை மூலம் எடுத்துரைத்தார் சத்குரு.
ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப்படுத்த சங்கரன் பிள்ளையிடம் ‘ரயில் உன் மேல் சென்றால் நீ இறந்துவிடுவாய்’ எனக்கூறுகிறார் அவரது நண்பர். அதற்கு சங்கரன் பிள்ளை, “அங்கே பார்! அவ்வளவு பெரிய விமானம் எனக்கு மேலாகக் கடந்து செல்கிறது. அதனால் எனக்கு எதுவும் ஆகவில்லை. எனவே ரயில் என்மேலே சென்றாலும் ஒன்றும் ஆகாது,” என சத்குரு சொல்ல மக்கள் மத்தியில் சிரிப்பலை.
தொடர்ந்து சத்குரு பேசியபோது…
“ஆதியோகியான சிவன் மிகவும் தளர்வுநிலையில் இருந்தாலும், அவர் விழிப்புணர்வுடன் இருந்தார். தன்னை நாடி வந்த சப்தரிஷிகளிடம், பஞ்சபூதங்களை நம் ஆளுமையில் எடுத்துக்கொண்டால் இந்தப் பிரபஞ்சமே உங்கள் வசப்படும் என்ற உண்மையை எடுத்துரைத்தார் அவர்,” என ஆதி வரலாற்றை எடுத்துரைத்தார்.
“எல்லை கடந்த நிலைக்குச் செல்லும் பாதையின் கதவு திறப்பதற்கு பக்தியே மிக எளிமையான வழி. நீங்கள் புத்திசாலித்தனதைப் பயன்படுத்தினால் பல கதவுகள் திறக்காமல் போகலாம். உங்கள் விழிப்புணர்வைப் பயன்படுத்தி அதை அடைய நினைத்தால் பல கதவுகள் திறக்கக் கூடும். ஆனால் பக்தி என்பதைத் தேர்ந்தெடுத்தால் எல்லாக் கதவுகளும் முழுமையாகத் திறக்கும்,” எனக் கூறிய சத்குரு பக்தியின் மகத்துவத்தை நமக்கு உணர்த்தினார்.
ரிதம்பர பிரக்னா…
ஒலியைப் பற்றிய ஒரு கேள்விக்கு சத்குருவின் பதில்…
ஒலியைப் பற்றிய ஒரு கேள்விக்கு சத்குருவின் பதில்…
“இந்த பிரபஞ்சமே ஒலி வடிவமாகவே உள்ளது. பெரிய சிக்கலான ஒரு கட்டிடத்திற்குள், ஒரு குறிப்பிட்ட அறையை நீங்கள் அடைய வேண்டுமென்றால், அங்கே உள்ள வழிகாட்டும் வரைபடத்தை வைத்து எளிமையாக அடைந்து விடலாம். அந்த வரைபடம் இல்லாவிட்டால் நீங்கள் அந்த கட்டிடத்திற்குள் தொலைந்துபோக வாய்ப்புள்ளது. அதுபோலவே இந்தச் சிக்கலான பிரபஞ்சத்தை நீங்கள் அறிந்துகொள்ள முயன்று,விண்கலம் மூலம் பயணம் செய்ய ஆரம்பித்தால், நிச்சயம் தொலைந்து போவீர்கள். ஏனென்றால், இந்தப் பிரபஞ்சம் எல்லையற்றது. ஆனால் பஞ்சாக்ஷரம் மற்றும் ஓம்காரம் ஆகிய ஒலிகளைப் பயன்படுத்தி நீங்கள் இந்த முழுப் பிரபஞ்சத்தையும் அறிந்திட முடியும். அந்த ஒலியில் நீங்கள் கரைவதன் மூலம் இது சாத்தியம்”
சீனாவின் அக்குப் பஞ்சர் செயல்முறையைச் செய்யலாமா? என்ற கேள்விக்கு,
“நம் உடலின் நரம்பு மண்டலம், மிகவும் சூட்சுமமானது; அதனை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். அந்த செயல்முறையால் பலன் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், ஊசியைக் கையாள்பவர் கவனமாக இல்லையென்றால் விபரீதம் நிகழ வாய்ப்புள்ளது. பிறரின் உதவியால் குத்தப்படும் ஊசியை விட, நாமே நம் உள்நிலை நோக்கிச் செய்யும் ஆன்மீகப் பயிற்சிகளே சிறந்தது.” என்றார்.
கண்ணீர் தீவிரத்தின் அடையாளம்!
கண்ணீர் பற்றிய கேள்விக்கு, “எந்த உணர்ச்சி தீவிரமடைந்தாலும் அது கண்ணீரால் வெளிப்படும் ஆனால், பலருக்கும் வலிதான் தீவிரமாக உணரப்படுகிறது. லிங்கபைரவியின் முன் எந்த வேண்டுதலும் இல்லாமல், வெறுமனே அமர்ந்தால், அவள் உங்களைத் தீவிரமாக ஆட்கொள்வாள்,” எனக் கூறினார்.
இந்திப் பாடல் ஒன்று மெல்லிசையாய்த் தவழ்ந்து வர, திருநீறை ஆசிர்வதித்து அருள் தந்து விடைபெற்றார் சத்குரு.
இந்திப் பாடல் ஒன்று மெல்லிசையாய்த் தவழ்ந்து வர, திருநீறை ஆசிர்வதித்து அருள் தந்து விடைபெற்றார் சத்குரு.
இன்னொரு தரிசன நிகழ்வில் அருள் பெறக் காத்திருப்போம்!
No comments:
Post a Comment