Baskar Jayaraman added 2 new photos.
சர்க்கரைநோய் தீர்க்கும் சரியான
ஆசனங்கள் (பாகம் 3) !!!
(2-ம்பாகத் தொடர்ச்சி)
ஆசனங்கள் (பாகம் 3) !!!
(2-ம்பாகத் தொடர்ச்சி)
பத்மாசன நேரம்:-
பத்மாசனத்தின் நரம்பியல் ரீதியான விளக்கங்களையும், பயன்களையும் படிக்கும் வாசகர்களுக்கு, இவ்வளவு நல்ல ஆசனத்தை நீண்டநேரம் பழகினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் வரலாம். பொதுவான மானுட உடல் நலத்துக்குப் பத்து அல்லது பன்னிரண்டு ஆசனங்கள் போதுமானவை. இப்படி ஆசனங்களைப் பயிலுபவர்கள் பத்மாசனத்தில் ஒரு நிமிடம் இருந்து குருவணக்கத்தை முடித்துக்கொண்டு, அடுத்து எல்லா ஆசனப்பயிற்சிகளையும் முடித்துக்கொண்டு, கடைசியாக தியானம் செய்வதற்காகப் பத்மாசனத்தில் கால்கள் வலிக்காத வகையில் எவ்வளவுநேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
கமலசாதகன்:-
பத்மாசனத்தில் சாதாரணமாக ஒரு நிமிடம் முதல் அரைமணி நேரம்வரை இருக்கலாம். இதனால் மானுடஉடம்பும், மனமும் அற்புதமான இயற்கைப் பயன்களைப் பெற்றுக் கொள்கின்றன. இப்படி அரைமணி நேரம் பத்மாசனம் பழகும் சாதகனைக் கமலசாதகன் என்றும், ஒரு பெண் இப்படிப்பழகினால் அவளைக் கமலசாதகி என்றும் யோகாசாத்திரம் குறிப்பிடுகிறது. இவனது உடம்பும்இ நரம்பு மண்டலமும் உன்னதமாக இயங்கும். அதுமட்டுமல்லாமல் இவனைச்சுற்றி ஒரு காந்தசக்தி வளையம் உருவாகி இவனுக்குத் தெய்வீக சக்திகளைத் தரும். இவனுக்கு வாழ்க்கiயில் துன்பங்கள் வரமாட்டா. வந்தாலும் இவை எளிதாக நசிந்து போய்விடும் என்றும் யோகசாத்திரம் வாக்களிக்கிறது.
கமலபீபத்சு:-
ஒரு கமலசாதகன் அரைமணி நேர பத்மாசன சாதகத்தில் தெய்வீக சக்திகளைப் பெற்றுக் கொள்ளுகிறான். இந்தப்பயிற்சிளை ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒன்றரை மணிநேரம் பத்மாசனம் பழகி அதைக் காலை, மாலை தினசரிப் பழக்கமாக்கிக் கொண்டுவிட்டால் இவனைக் கமலபீபதச்சு என்று யோகசாத்திரம் போற்றுகிறது. இந்தக் கமலபீபத்சன் தெய்வத்துக்குச் சமமானவன். இவன் கைபட்டால் துயரங்கள் அகலும. இவன் பாதங்கள் பட்ட இடம் தோஷங்கள் அகன்று சுபம் பெறும்.
பெண்கள் இந்தப் பத்மாசனத்தைக் காலை, மாலை இரண்டு வேளையும் அப்பியாசம் செய்துவந்தால் அவள் எல்லாவிதப் பயன்களையும் அடைவதோடு, தெய்வீகசக்திகள் மிகுந்த தேவதைக்கு ஈடானவள் ஆவாள். இவளே ஒரு கன்னிப் பெண்ணாக இருந்தால் நல்ல கணவனும், நவநிதியங்களும், சற்புத்திரப் பேறும் உண்டாகும். இப்படிக் கமலசாதகம் செய்கின்ற பெண் எவளும் அமங்கலி ஆகமாட்டாள். இருக்கும் காலம்வரை மஞ்சள், குங்குமம், புஷ்ப பூஷணாதிகளோடு தீர்க்க சுமங்கலியாகவே இருப்பாள். கல்வியும், ஞானமும், ஒழுக்கமும், தேகசுகமும், நிறைஆயுளும் கொண்ட நல்ல சந்ததிகள் அவள் வயிற்றில் பிறப்பார்கள். இவர்களின் காந்த சக்தியானது கோள்களின் தீய சக்திகளை வென்றுவிடுவதால், ஜாதகரீதியான கிரகங்களின் தீய பலன்களும் மாறி விடுகின்றன என்று யோகசாத்திரம் கூறுகிறது.
ஒரு வேண்டுகோள்:-
ஏதோ பத்மாசனத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்று கருதி நான் இவற்றையெல்லாம் ஜோடனை செய்து எழுதியிருப்பதாக யாரும் கருதவேண்டாம். இதைச் சோதனைக்காக எடுத்துக்கொண்டு பழகி எவரும் சோதித்துப் பார்க்கலாம். சில நாட்களிலேயே இதன் நிஜத்தை உணர்வீர்கள். மனித காந்தசக்தி என்பது அளப்பெரிய வல்லமையுடையது. பத்து அல்லது இருபதுபேர் சேர்ந்து இதை அப்பியாசம் செய்து, சொந்த அனுபவங்களையும் சுற்றுப்புற விளைவுகளையும் ஆய்வு செய்து பார்த்தால் அதன் உண்மைகள் வியப்பளிப்பனவாக இருக்கும்.
இந்த யோகாசன விளக்கத்தின் மூலமாச் சர்க்கரைநோயை அடியோடு தீர்த்துப் பூரண நலத்தைத் தரக்கூடிய ஆசனங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பயில இருக்கிறோம். ஆதலால் வாசகர்களின் ஆர்வத்தையும் வேகமான எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு இப்போது அடுத்த ஆசனப்பயிற்சிக்கு வருகிறோம். இந்த ஆசனத்தைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். ஒரு ஆசனத்தைப்பற்றிய நம்பிக்கை வரவேண்டுமானால், அது உடம்பில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டியது அவசியமானதாகும். அவ்வாசனம் உடம்பில் செயற்படும் சிறப்பை விபரிக்கும்போது நமது உடம்பின் உள்ளுறுப்புக்களின் இயக்கத்தையும், அந்த இயக்கங்களில் யோகாசனத்தின் செயற்பாடுகள் என்ன என்பதையும் ஒப்பிட்டு விளங்கிக் கொள்ளுகின்ற போது பயிற்சியாளருக்குப் பூரணமான நம்பிக்கையும் உற்சாகமும் பிறந்துவிடுகிறது. இந்த நம்பிக்கைதான் அவர் பயிற்சியைக் கைவிடாமல் தொடர வழிவகுக்கும். இனி அடுத்த ஆசனம்பற்றிய விளக்கத்துக்கு வருவோம்.
வஜ்ராசனம்:-
செய்முறை:-
தரையில் ஒரு நல்ல விரிப்பை மெத்தென்று மடித்துப் போட்டுக்கொள்ள வேண்டும். படத்தில் காட்டியுள்ளபடி முழங்கால்களை மடித்து இரண்டு பாதங்களையும் மலர்த்தி பிருஷ்டங்களைப் பாதங்களுக்கு இடையில் வசமாகப் பொருத்தி அமர்ந்துகொள்ள வேண்டும். நன்கு நிமிர்ந்து உட்கார்ந்து இரண்டு உள்ளங்கைகளையும் இரண்டு முழங்கால் முட்டிகளின்மேல் கவிழ்த்துப் பொருத்திக் கொள்ள வேண்டும். இயல்பாகச் சுவாசித்துக்கொண்டு இருக்கலாம். இவ்வாறு இரண்டு நிமிடம் முதல் பத்து நிமிடம்வரை இருக்கலாம். சிரமம் இல்லாத பட்சத்திலோ அல்லது தேவைப்படுகின்ற பட்சத்திலோ அரைமணி நேரம்கூட வஜ்ராசனத்தில் இருக்கலாம்.
ஒரு வாய்ப்பு:-
யோகாசனங்களைச் செய்யத் தொடங்குவதற்கு முன்னால் பத்மாசனம் போட்டுக் குருவணக்கம் அல்லது இறைவணக்கம் செய்ய வேண்டுமென்று எழுதியிருந்தேன். அப்படிப் பத்மாசனம் போடமுடியாதவர்கள் ஒருகாலை மட்டும் தூக்கிப்போட்டு வணங்கலாம். இப்படி ஒருகாலை மட்டும், அதாவது வலது பாதத்தை மட்டும் இடது தொடையின்மேல் போட்டுச்செய்வதற்கு அர்த்த பத்மாசனம் என்று பெயர் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதைக்கூடச் செய்ய முடியாதவர்கள், பத்மாசனத்தைச் செய்யாமலே நேராக வஜ்ராசனத்துக்கு வந்துவிடலாம். வஜ்ராசனத்தில் இருந்தபடியே குருவணக்கமோ, இறைவணக்கமோ செய்துவிட்டு அதற்குமேல் ஆசனங்களைத் தொடர்ந்து செய்யலாம். இதில் ஒரு பிழையும் இல்லை. சிலபயிற்சிகளைச் செய்து உடம்பு இணக்கத்துக்கு வருகின்றபோது பத்மாசனம் எளிதாக வந்துவிடும்.
நமது ஜீரணமண்டலம்:-
இப்போ வஜ்ராசன விளக்கத்துக்கு வருகிறோம். வஜ்ராசனம் செய்வதால் கிட்டும் பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், நமது உடம்பில் ஜீரணம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் உபயோகமாக இருக்கும்.
நமது வாயில் எப்பொழுதும் உமிழ்நீர் சுரந்துகொண்டே இருக்கும். இதை எச்சில் என்று கூறுவோம். சாதாரணமாக வெறும் வாயில் சுரக்கின்ற எச்சிலுக்கும், ஏதாவது சாப்பிடுகின்றபொழுது வாயில் சுரக்கின்ற உமிழ்நீருக்கும் விசேஷமான சில வேறுபாடுகள் உண்டு. நாம் வாயில் உணவைப் போட்டு மெல்லுகின்ற போது வாயிலுள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் உமிழ்நீரைச் சுரந்து வாயிலுள்ள உணவோடு கலக்கச்செய்கின்றன. உணவு விழுங்கப்பட்டு தொண்டையிலே செல்லுகின்றபோது அங்கே காஸ்ட்ரிக் அமிலம் சுரந்து உணவோடு கலந்து இரைப்பையை அடைகிறது. இரைப்பையில் ஐதரக்குளோரிக் அமிலம், பெப்சின் என்ற ஒருவகை ஜீரணநீர் ஆகியவை சுரந்துஇ உணவை இரைப்பை பிசைகின்றபோது உணவோடு கலந்து விடுகின்றன. இவ்வாறு அமிலங்கள் உணவோடு கலப்பதால் உணவானது மென்மைத் தன்மையை அடைகிறது. பின்னர் இரைப்பையின் அசைவுகளினால் அந்த உணவு கூழ் போன்ற நிலைக்கு வருகிறது.
தொண்டையிலும் இரைப்பையிலும் சுரக்கின்ற அமிலங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். இவ்வளவு சக்திவாய்ந்த அமிலங்களால் இரைப்பையை ஒன்றும் செய்யமுடிவதில்லை. காரணம் இரைப்பையலுள்ள உணவு இவ்வமிலங்களின் தாக்கத்தை ஏற்றுக்கொள்கிறது. அதுமட்டுமன்றி இரைப்பையின் சுவர்களில் மெல்லிய வெல்வெற் போன்ற ஒருவகையான பூச்சு இருக்கின்றது. இந்த இயற்கைப் பாதுகாப்பும் அமிலங்களால் இரைப்பை சேதமடைவதைத் தடுக்கிறது
சிலருக்கு இந்த அமிலங்களின் சுரப்பு அதிகமாக இருக்கும். சிலருக்கு வயிற்றில் உணவு இல்லாதபோதும் அமிலம் சுரக்கும். இம்மாதிரியான விளைவுகளால் வயிற்றுப்புண் குடற்புண் ஆகியவை உண்டாகின்றன. இதையே அல்சர் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். வஜ்ராசனப் பயிற்சி இவ்வமிலச் சுரப்புக்களையும், அவற்றின் வீரியங்களையும் அளவுடையதாக்கிக் கட்டுப்படுத்துகிறது. இதனால் சுகஜீரணம் உண்டாகி அல்சர் உபாதைகளிலிருந்து தப்பிக்கொள்ள முடிகிறது.
இரைப்பையில் பிசையப்பட்டுப் பக்குவமாக்பட்ட உணவு இப்போது சிறுகுடலுக்கு தள்ளப்படுகிறது. சிறுகுடலின் நீளம் இருபது அடி என்று சொல்லாப்படுகிறது. சிறுகுடலிலுள்ள குடல் உறிஞ்சிகள் என்ற நுண்ணிய உறிஞ்சிகளால் உணவிலுள்ள சத்துப்பொருட்கள் கிரகிக்கப்பட்டு இரத்தத்தோடு கலக்கின்றன. சிறு குடலில் அமிலங்கள் தேவையில்லை. அப்படியிருந்தால் சிறுகுடல் புண்ணாகிவிடும். ஆகவே பக்குவமான உணவு சிறுகுடலுக்குள் செல்லுகின்றபோதே கல்லீரல்; கணையம் (பாங்கிரியஸ்) போன்ற சுரப்பிகள் சிலவகையான ரசங்களைச் சுரந்து, சிறுகுடலுக்குள்ளே வரவிருக்கும் வீரியமுள்ள அமிலங்களைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றன. இதனால் சிறுகுடல் அமிலங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதனை மருத்துவர்கள் அல்கலீன் ஜூஸ் என்று சொல்லுவார்கள். நமது வயிற்றின் உறுப்புக்கள் செய்யும் எத்தனையோ வகையான அற்புதமான பணிகளில் இதுவும் ஒன்று
No comments:
Post a Comment