Wednesday, 18 April 2012


Moni Kandan4:22am Apr 18

சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.

தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம்.

Monday, 16 April 2012


முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள்
உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.

ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம்.

குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

Sunday, 15 April 2012

ஜன கன மன என்று எங்காவது ஒலிக்க ஆரம்பித்தால் போதும், தன்னை அறியாத அளவுக்கு மதுவினாலோ பணத்தினாலோ போதை ஏறி போனவர்கள் தவிர, மூப்பேறி போனவர்களும் கால் ஊன்ற முடியாதவர்களும் கூட எழுந்து நிற்க முனையும் அளவுக்கு தேசிய கீதத்தின் மீது பற்று வைத்திருக்கும் நாடு இந்தியா.இனம், மதம், மொழி மற்றும் மாநில வித்தியாசம் இல்லாமல் தேசிய கீதத்திற்கு மரியாதை தரும் இந்திய மக்கள், இந்த தேசத்தின் மீது எந்த அளவுக்கு அக்கறை வைத்துள்ளார்கள்?

அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவு கண்டால் பொருமித்தள்ளும் இந்தியர்கள் எத்தனை பேர் இங்கு காணாமல் போன வங்கிகள் எத்தனை என்பதை அறிவார்கள்?

சச்சினோ தோனியோ சரியாக விலாயாடாமல் போனால் அவர்களின் வீட்டில் கல்லெறியும் மக்கள் எத்தனை பேர் அரசியல்வாதியோ ஒரு பணக்காரனோ தவறு செய்தால் அவர்களின் வீட்டில் கல்லேரிந்தார்கள்?

நைஜீரியாவிலும் கம்போடியாவிலும் பட்டினியால் இறக்கும் உயிர்களை கண்டு கண்ணீர் விடும் இந்திய மக்கள், தினம் தினம் தெருவில் பார்க்கும் எத்தனை பிச்சைக்காரர்களுக்கு ஒரு ரூபாய் தானம் செய்திருப்பார்கள்?

சாம், ஜேகப், பீட்டர், மார்டின் என்று தனக்கு கூலி தரும் வெளிநாட்டினனின் பெயரை மனப்பாடமாய் வைத்து அவனிடம் சொந்தக்காரன்போல் பேசி பழகும் IT கம்பெனி கூலிக்காரர்கள் எத்தனை பேருக்கு அவர்கள் வீட்டில் அலுவகத்தில் வேலை செய்யும் துணி துவைப்பவர் பெயரோ சுத்தம் செய்பவர் பெயரோ தெரியும்?

ஏன் இந்த அக்கறையின்மை? ஏன் இந்த போலி வேடம்? ஏன் இந்த இரு முகம்? ஏன் இந்த பாரபட்சம்?
தேசத்தின் மீது அக்கறை உண்டு என்று நடிக்கும் திராவிடன் ஒவ்வொருவனும் தான் செய்யும் தவறுகளை மறைக்க பார்க்கிறான், அல்லது நியாயப்படுத்த பார்க்கிறான்.
அப்படி நடக்கும் தவறுகளின் உச்சகட்டமாய் தவறுகளின் திருவுறுவையே தேசத்தின் தலைமையிலும் ஒவ்வொரு மாநிலத்தின், ஊரின், கிராமத்தின் தலைமையிலும் அமர வைத்து அழகு பார்க்கும் மக்களையும் தவறுகளையும் அவர்கள் அறியும் வண்ணம் தெரிவிப்பதே இந்த பதிவின் நோக்கம்.

அரசுப்பேருந்துகளில் 50 பைசா திருட்டும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் லட்சக்கணக்கான கோடிகள் திருட்டும் மக்கள் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்.
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதையும் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதையும் அரசு நினைத்தால் நிறுத்தியிருக்கலாம்.
அனால் திருட்டுக்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. வசை பாடும் மக்கள் தவறுகள் செய்துகொண்டே இருக்கின்றார்கள்.

Saturday, 14 April 2012

திருநீறு அணிவது ஏன்!

நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும் :

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.

மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
சிந்தாதிரிப்பேட்டையிலே சிங்காரம்னு ஒருத்தர். தினமும் சிவபூஜை பண்ணுவார். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கன்னு சொல்லிக்கிட்டு பன்னீர் இலையிலே முள்ளு மூக்களவு கிள்ளிக் கிள்ளி போடுவார். ஒரே ஒரு இலை. ஓம் சிவாயநம, ஓம் சிவலிங்காய நம, ஓம் ஆத்மாய நம, ஓம் ஆத்மலிங்காய நம.. இலை தீர்ந்து போனா சும்மா கையை ஆட்டுவார். சுவாமி சிரிப்பார். என்னையே ஏமாத்துறாயான்னு. சூடத்தைக் காட்டி அந்தச் சூடம் எரியதற்குள்ள அணைச்சிடுவார். சூடம் அணைஞ்சவுடனே, விளக்கையும் அணைச்சிட்டு அந்தப் பூஜைக்கு வைத்த திராட்சையை அவரே தின்னுட்டு வெளியே வருவார். வடிகட்டின கஞ்சன்.

அவருக்கு மயிலாப்பூரில் ஒருத்தர் விருந்துக்கு சொல்லிட்டார். அண்ணா நீங்க சிவபூஜா துரந்தரர். நீங்க சாப்பிட்டா ஆயிரம்பேர் சாப்பிட்ட மாதிரி அதுக்கென்ன காலை யிலேயே, ஒண்ணும் சாப்பிடாமே வந்துடறேன். 12 மணிக்குச் சாப்பாடு. 11.30 மணிக்கே வந்துடறேன். சம்சாரத்துக்கிட்டே சொல்றாரு. இஞ்சி கசாயம் மட்டும் கொடு. அதைக் குடிச்சிட்டு, பூஜையை முடிச்சிட்டு, திராட்சையை சாப்பிட்டு விட்டு, குடையைப் பிடிச்சிக்கிணு, செருப்பு போட்டுக்கிணு மூணு மைல் (5 கி.மீ.,) நடந்தே போனார். மூணுபேரு ஆகாரத்தை மொத்தமா சாப்பிடலாம்னு பிளான் பண்ணிக்கிணு போறார். மைலாப்பூருக்கு முன்னாடி லஸ்சுன்னு ஒரு இடம் வருதே. அங்கே போனவுடனே, ஐயோ... மறந்துட்டேன்னு,.

திரும்ப ஒரே ஓட்டம். குடல் தெரிக்க ஓடினார். சிந்தாதிரிப் பேட்டைக்கே. அடியே... என்னாங்க..... மறந்துட்டேன் என்னத்த மறந்துட்டேள் பூஜையிலே விளக்க நிறுத்த (அணைக்க) மறந்துட்டேன். அநியாயமா எண்ணெய் உரிஞ்சி போயிருக்கும். இது கூட எனக்குத் தெரியாதா? நீங்க கிளம்பின உடனே வெளக்கை நிறுத்திட்டேன். அது சரி, நீங்க மூணு மைல் திரும்பி நடந்து வந்துருக்கேளே... செருப்பு தேஞ்சிருக்குமே. ஏண்டி, நானென்ன மடையனா? செருப்பை அங்கேயே எடுத்து காயிதத்திலே சுத்தி, கக்கத்திலே வச்சிக்கினேன். இதை அங்கே போய் தான் கால்லே போடுவேன். இந்த மாதிரி கஞ்சன்கள் வாழ்ந்தா நாடு எப்படி இருக்கும்?

Tuesday, 27 March 2012

இறைவன் இருக்கிறாரா?

மன்னன் ஒருவனுக்கு இறைவன் இருக்கிறானா, இல்லையா என்ற சந்தேகம் வந்தது. அரசவைப் புலவரிடம் விளக்கம் கேட்டார். மறுநாள் அரசவைக்கு கறுப்பு நிற பசுவுடன் வந்தார் புலவர்.

அரசர் முன் பசுவை நிறுத்தி, காவலனை அழைத்து பால் கறக்கச் சொன்னார்.

"மன்னா, இது என்ன நிறப்பசு? கேட்டார் புலவர். பதில் - கறுப்புநிறப்பசு என்றார்."

"இதன் பால் என்ன நிறம்? வெண்மை என்றார்."

"இதன் உணவான புல் என்ன நிறம்? பசுமை என்றார்".

"அரசே... பச்சைநிறபுல்லை தின்னும் கறுப்பு நிற பசு, வெண்மை நிறப்பாலைக் கறந்திட எவர் காரணமோ, அவரே கடவுள்.

புலவர் சொன்னதைக் கேட்டதும் மன்னனின் சந்தேகம் தீர்ந்தது.
ஒரு நாள் ஸ்ரீராமசந்திர மூர்த்தி குளிக்க ஆற்றுக்கு போனார். கையில் வில் இருந்தது. பொதுவாக வீரர்கள் கையில் வில்லை எடுத்தால் எய்யாமல் வைக்க கூடாது. 

அப்படி வைக்கும் நிலைமை வந்தால் அதை பூமியில் தான் குத்தி வைக்க வேண்டும். அந்தநாள் ராமன் வில்லை ஆற்று கரையில் குத்தி வைத்து விட்டு குளிக்க சென்றார். 

திரும்பி வந்து அம்பை எடுத்த போது, வில்லின் நுனியில் ஒரு தேரை குத்து பட்டு துடித்து கொண்டிருந்தது. அதை பார்த்த ராமன் துடித்து விட்டார். 

யே.... தேரையே நான் வில்லை குத்தும் போதே நீ சத்தம் போட்டுருந்தால் இவ்வளவு நேரம் நீ வழியால் துடித்துருக்க மாட்டாயே. ஏன் மௌனமாக இருந்து விட்டாய் என்று கேட்டார். 

அதற்கு அந்த தேரை... பகவானே... எனக்கு எதாவது துன்பம் வந்தால் ராமா என்றுதான் அழைப்பேன். ஆனால் அந்த ராமனே என்னை துன்புறுத்தும் போது நான் யாரை அழைப்பது என்று தெரியவில்லை... அதனால் தான் அமைதியாக இருந்து விட்டேன் என்று சொன்னதாம். ராமனால் பதில் சொல்ல முடியவில்லை