Wednesday, 11 December 2013

வாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள். வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம். வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும். வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும். தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்
உங்கள் தட்டில் உணவா...விஷமா ? ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டென்று கடந்த தடவை கூறினேன். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு. இந்தோனேஷியாவின் பாலி தீவில் வழங்கும் கதை இது - கடவுள் சிவா (ciwa என்கிறார்கள் அங்கே. நம்ம ஊர் 'சிவன்’ -& sivan), ஒரு பறவையை பூமிக்கு அனுப்பினார். அந்தப் பறவை, நான்கு வகையான நெல் மணிகளைச் சுமந்து சென்றது. மஞ்சள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை. போகும் வழியில் மஞ்சள் அரிசியை அந்தப் பறவை தின்றுவிட்டது. மீதமுள்ள மூன்று வண்ண நெல் மட்டுமே மனிதனுக்கு கிடைத்ததாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப் படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக்கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இப்போது நாம் பேசப்போவது... சிவப்பு அரிசியைப் பற்றி. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள். சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி. சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. சபரிமலை செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வொயிட் ரைஸ் போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேஜையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன். இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன. நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்! பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்! சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன. இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து. இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன? சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள். ஏன்..? ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர். தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! ! 1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது... எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது... 2. உடலின் pH ஐ சீராக்குகிறது... எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது... 3. உடல் எடையைக் குறைக்கிறது... எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை... 4. சமிபாட்டை வேகப்படுத்துகிற து... 5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறத ு. 6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது. 7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது... 8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. 9. stress ஐ குறைக்கிறது. இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை. 10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.
    Like ·  ·  · 4 · 4 hours ago · 
  • மோர்/ நீர்மோர் (Buttermilk): தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி. ஆதிகாலத்தில் நம்மவர் தயிர் சாப்பிடுவது குறைவு. ஆனால் மோர் நிறையக் குடிப்பர். சித்தர் தேரையர் கூறுகிறார் தண்ணீரைவிட மனிதர் மோர் கூடுதலாகக் குடிக்க வேண்டுமென்று. மோர் குடித்தால் உடற்சூடு தணிக்கப்பட்டு மேலும் அதிலள்ள உடலக்குத் தேவையான நுண்ணுயிர்கள் (friendly bacteria) எமக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன. So, MOOR(மோர்) is a FRIENDLY BACTERIA drink. ‪#‎Drink‬ MOOR, Live HEALTHY. எத்தனைதான் கலர்க்கலரான குளிர்பானங்கள் மார்கெட்டில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும். கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குளுகுளுவென மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றல்லவா? மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது. மலிவானது. எங்கள் ஊரில் வெயில் காலத்தின்போதும், கோவில் திருவிழா நேரங்களிலும் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பொதுவாக நீர்மோரும், பானாக்கமும் வழங்குவார்கள். இந்த இரண்டு பானங்களில் அறுசுவையும் அடங்கிவிடும். அறுசுவை உணவு நமது உடலில் சேரும்போது உடல் கொண்ட மொத்த களைப்பும் நீங்கி தனி புத்துணர்ச்சி கிடைத்துவிடும். மோர் தயாரிக்க.. தேவையான பொருட்கள்: தயிர் – 1/2 கப் தண்ணீர் – 1 ½ கப் கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.) மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.) இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.) பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 கப் மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.) உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றி பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும். குறிப்பு: வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும். கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்

Wednesday, 27 November 2013

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையதாக உள்ளது. இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று. "சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்" இதன் விளக்கம் : இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும். வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரகளுக்கு பற்பல நோய்கள் கவிக் கொள்ளும். எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர். உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு. கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்தவதால் உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும். வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும். ஏதோ படுத்தோமா தூங்கினோமா என்றில்லாமல் மேலே சொன்ன வழிமுறைகளையும் பின்பற்றினால் வாழும் காலம் வரை ஆரோக்கியமாக வாழலாம்.. இந்த இணையத்திற்கு சென்றுபாருங்கள்.. ஏராளமான பயனுள்ள உடல் சம்மந்தமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றது.. http://www.neckpainsupport.com/

22NOV

எங்கிருந்தாலும் தரிசனம்


 
 
தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.
மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…
sadhguru, darshan, isha, yoga, meditation, kriya, isha kriya, q&a, shambavi
sadhguru, darshan, isha, yoga, meditation, kriya, isha kriya, q&a, shambavisadhguru, darshan, isha, yoga, meditation, kriya, isha kriya, q&a, shambavi
“பிரம்மானந்த ஸ்வரூபா ஈஷா ஜெகதீஷா” சத்குருவின் குரலில் அந்த உச்சாடனையைக் கேட்டு சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று தரிசன நேரத்தில்,சாதகர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டியது. வெகுநாட்களுக்குப் பின் ஆசிரமத்தில் சத்குருவைக் கண்டவர்களில் சிலர், ஆர்ப்பரிக்க சத்குருவின் அருள் அதிர்வுகளுடன் துவங்கியது தரிசன நேரம்.
மதுவால் விளையும் கேடு
‘மது’ மக்களுக்கு சற்று நேரத்திற்கு தளர்வான நிலையைத் தருகின்ற அதே சமயத்தில் தன்னிலை இழக்கச் செய்து, பல கேடுகளுக்கும் வழி வகுக்கிறது என்பதை, தற்போதைய நடப்புகள் சிலவற்றை சுட்டிக்காட்டி, தனது வருத்தத்தை சங்கரன்பிள்ளை நகைச்சுவை மூலம் எடுத்துரைத்தார் சத்குரு.
ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப்படுத்த சங்கரன் பிள்ளையிடம் ‘ரயில் உன் மேல் சென்றால் நீ இறந்துவிடுவாய்’ எனக்கூறுகிறார் அவரது நண்பர். அதற்கு சங்கரன் பிள்ளை, “அங்கே பார்! அவ்வளவு பெரிய விமானம் எனக்கு மேலாகக் கடந்து செல்கிறது. அதனால் எனக்கு எதுவும் ஆகவில்லை. எனவே ரயில் என்மேலே சென்றாலும் ஒன்றும் ஆகாது,” என சத்குரு சொல்ல மக்கள் மத்தியில் சிரிப்பலை.
தொடர்ந்து சத்குரு பேசியபோது…
“ஆதியோகியான சிவன் மிகவும் தளர்வுநிலையில் இருந்தாலும், அவர் விழிப்புணர்வுடன் இருந்தார். தன்னை நாடி வந்த சப்தரிஷிகளிடம், பஞ்சபூதங்களை நம் ஆளுமையில் எடுத்துக்கொண்டால் இந்தப் பிரபஞ்சமே உங்கள் வசப்படும் என்ற உண்மையை எடுத்துரைத்தார் அவர்,” என ஆதி வரலாற்றை எடுத்துரைத்தார்.
“எல்லை கடந்த நிலைக்குச் செல்லும் பாதையின் கதவு திறப்பதற்கு பக்தியே மிக எளிமையான வழி. நீங்கள் புத்திசாலித்தனதைப் பயன்படுத்தினால் பல கதவுகள் திறக்காமல் போகலாம். உங்கள் விழிப்புணர்வைப் பயன்படுத்தி அதை அடைய நினைத்தால் பல கதவுகள் திறக்கக் கூடும். ஆனால் பக்தி என்பதைத் தேர்ந்தெடுத்தால் எல்லாக் கதவுகளும் முழுமையாகத் திறக்கும்,” எனக் கூறிய சத்குரு பக்தியின் மகத்துவத்தை நமக்கு உணர்த்தினார்.
ரிதம்பர பிரக்னா…
ஒலியைப் பற்றிய ஒரு கேள்விக்கு சத்குருவின் பதில்…
“இந்த பிரபஞ்சமே ஒலி வடிவமாகவே உள்ளது. பெரிய சிக்கலான ஒரு கட்டிடத்திற்குள், ஒரு குறிப்பிட்ட அறையை நீங்கள் அடைய வேண்டுமென்றால், அங்கே உள்ள வழிகாட்டும் வரைபடத்தை வைத்து எளிமையாக அடைந்து விடலாம். அந்த வரைபடம் இல்லாவிட்டால் நீங்கள் அந்த கட்டிடத்திற்குள் தொலைந்துபோக வாய்ப்புள்ளது. அதுபோலவே இந்தச் சிக்கலான பிரபஞ்சத்தை நீங்கள் அறிந்துகொள்ள முயன்று,விண்கலம் மூலம் பயணம் செய்ய ஆரம்பித்தால், நிச்சயம் தொலைந்து போவீர்கள். ஏனென்றால், இந்தப் பிரபஞ்சம் எல்லையற்றது. ஆனால் பஞ்சாக்ஷரம் மற்றும் ஓம்காரம் ஆகிய ஒலிகளைப் பயன்படுத்தி நீங்கள் இந்த முழுப் பிரபஞ்சத்தையும் அறிந்திட முடியும். அந்த ஒலியில் நீங்கள் கரைவதன் மூலம் இது சாத்தியம்”
சீனாவின் அக்குப் பஞ்சர் செயல்முறையைச் செய்யலாமா? என்ற கேள்விக்கு,
“நம் உடலின் நரம்பு மண்டலம், மிகவும் சூட்சுமமானது; அதனை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். அந்த செயல்முறையால் பலன் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், ஊசியைக் கையாள்பவர் கவனமாக இல்லையென்றால் விபரீதம் நிகழ வாய்ப்புள்ளது. பிறரின் உதவியால் குத்தப்படும் ஊசியை விட, நாமே நம் உள்நிலை நோக்கிச் செய்யும் ஆன்மீகப் பயிற்சிகளே சிறந்தது.” என்றார்.
கண்ணீர் தீவிரத்தின் அடையாளம்!
கண்ணீர் பற்றிய கேள்விக்கு, “எந்த உணர்ச்சி தீவிரமடைந்தாலும் அது கண்ணீரால் வெளிப்படும் ஆனால், பலருக்கும் வலிதான் தீவிரமாக உணரப்படுகிறது. லிங்கபைரவியின் முன் எந்த வேண்டுதலும் இல்லாமல், வெறுமனே அமர்ந்தால், அவள் உங்களைத் தீவிரமாக ஆட்கொள்வாள்,” எனக் கூறினார்.
இந்திப் பாடல் ஒன்று மெல்லிசையாய்த் தவழ்ந்து வர, திருநீறை ஆசிர்வதித்து அருள் தந்து விடைபெற்றார் சத்குரு.
இன்னொரு தரிசன நிகழ்வில் அருள் பெறக் காத்திருப்போம்!
வாராகி அம்மன்;
எதிரிகளை அழிப்பவள். செய்வினை, கண்திருஷ்டி இவற்றை போக்குபவள். பயத்தினை போக்குபவள். வெற்றியைத் தருபவள். எல்லா நலன்களையும் தருபவள். ராசராச
சோழனின் வெற்றி தெய்வம் இவளே. இவளை வழிபட்டே ராசராசன் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டான். ராசராசனுக்கு தோல்வியில்லா நிலையை தந்தவளும் இவளே.
நீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப வி்வசாதயத்தின் தெய்வம் இவளே. கலப்பை இவளது ஆயுதம். பஞ்சபூத தலங்களில் நீர் தலமான திருவானைக்கா தலத்தின் நாயகி அகிலாண்டேஸ்வரி வாராகியின் வடிவமே. ராசராச சோழன் இவளை வழிபட்டே எக்காரியத்தை தொடங்குவான் என்று வரலாறு தெரிவிக்கிறது. தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு முன்பிருந்தே வாராகி வழிபாடு செய்திருக்கிறான் ராசராச சோழன்.
இன்றும் தஞ்சை பெரிய கோவிலில் ஒரு வழக்கம் உண்டு. பொதுவாக எல்லா கோவில்களிலும் முதலில் விநாயகருக்குத் தான் வழிபாடுகள் நடக்கும். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் முதலில் வாராகிக்குத் தான் பூசைகள் நடக்கும். சோழர்களின் குலதெய்வம் துர்க்கை. துர்க்கையின் தளபதி வாராகி ஆவாள்.
பாவங்கள் தீர புனித நீராடு! எங்கே ? நெக்கு நெக்கு உள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச் செக்கர் போலும் திரு மேனி திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப் புக்கு நிற்ப தென்று கொல்லே என் பொல்லா மணியை புணர்ந்தே நமது கண்மணியில் உணர்வை வைத்து தவம் செய்தால் நெகிழ்ச்சி உருவாகும்! நெகிழ்ந்து கண்ணீர் அருவியில் நாம் குளிக்கனும். நாம் செய்த பாவங்கள் தீர புனித நீராட வேண்டும் ! உண்மையான புனித நீராடல் ஒவ்வொருவரும் அவரவர் கண்ணீர் அருவியில் குளிப்பதே!! இப்படிப்பட்ட தவம் நின்று கொண்டே செய்யலாம்! இருந்து கொண்டே செய்யலாம், படுத்துக்கொண்டே செய்யலாம் நடந்து கொண்டே செய்யலாம் இது தான் ஒப்பற்ற ஞான சாதனை! வேறு எந்த சாதனையும் இருந்து-ஆசனம் அமைத்து கொண்டுதான் செய்ய வேண்டும் என்பர்! எங்கும் இருக்கும் கடவுளை எல்லா காலத்திலும் இருக்கும் கடவுளை எங்கே இருந்து எப்படி கும்பிட்டால் என்ன?! இராகு காலம் எமகண்டத்திலும் கும்பிடலாமே!? எந்த திசையை பார்த்தும் கும்பிடலாமே! நின்றோ இருந்தோ படுத்தோ நடந்தோ தவம் செய்யலாமே! உன்னுள் இருக்கும் இறைவனை வணங்க எந்த தடையும் இல்லை! எதுவும் யாரும் நம்மை தடுக்க முடியாது !அதுதான் ஞானம்! இறைவனை நாடி நம் மெய்யுள்ளே கூடி பாடலாம் ஆடலாம் வாழ்த்தலாம் மகிழலாம் யார் நம்மை தடுக்க முடியும்?! இப்படி எதையாவது செய்யுங்கள். உங்கள் கண்கள் திருவடி சிவந்து கோவை பழமாக வேண்டும். தவத்தால் கண்களில் சுத்த உஷ்ணம் மிகுதிப்பட வேண்டும்! உங்கள் உடல் சிலிர்க்க வேண்டும். கண்ணீர் மழை பொழிய வேண்டும். உள்ளே போக கண்மணியோடு நீங்கள் சேர வேண்டும்! உங்களுக்கு தேவை விழிப்புணர்வு! அதாவது விழியில் புணர்ச்சி! அப்போது தான் ஆனந்த அனுபவங்கள் கை கூடும்! விழியில் உணர்வை வையுங்கள்! விழிப்புணர்ச்சி பெறுவீர் பெற்று பேரின்பம் அடைவீர் ! திருவாசக மாலை எட்டாம் திருமுறை