Tuesday, 12 April 2016

கை, கால் எரிச்சலா?

மருதோன்றி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. மருதோன்றியில் அளப்பரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். சிலர் வீடுகளின் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர். மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் இந்தியப் பெண்கள் இதனை அதிகம்பயன்படுத்துவார்கள்.

இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Maruthonri
English - Henna
Sanskrit - Rakta garba
Malayalam - Mailanchi
Telugu - Goranti
Hindi - Mehandhi
Botanical Name - Lawsonia inermis

கை, கால் எரிச்சல்

கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.

நகக்கண்

நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். இதனால் நகங்கள் அழகாகின. ஆனால் தற்காலத்தில் நகப் பாலீஷ் என்ற பெயரில் பல வந்துள்ளன. இவை இரசாயனம் கலந்தவை. இவற்றால் மருத்துவப் பயன்கள் ஏதும் கிடையாது. ஆனால் மருதோன்றி அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டது. நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது. நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

மேக நோய்கள் நீங்க

பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். அதிக காரம், புளி கூடாது.

சுளுக்கு நீங்க

மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.

நல்ல தூக்கம் பெற

மருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.
மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமூ தெரபி சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடுகின்றன. எனவே முடியில்லா குறை தெரியாமல் இருக்க தலையில் பல டிசைன்களில் மருதாணி இட்டுக்கொள்கின்றனர்.
மருதோன்றி இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மருதோன்றியின் மருத்துவப் பயன்களை பல மேல்நாட்டு மருத்துவர்கள் சோதனை செய்து கண்டறிந்தனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவத்தில் மருதோன்றியை பயன்படுத்தி நலம்பெறச் செய்துள்ளனர் நம் சித்தர்கள்.
டாக்டர் எமர்சன் மருதோன்றி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும் என்று கண்டறிதுள்ளனர். டாக்டர் எய்ன்சிலிக் மருதோன்றியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர். வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு என்று டாக்டர் ஹொன்னி பெர்க்கர் கூறுகிறார்.
மாதவிலக்கு : வாழ்வியல் சார்ந்த ஒழுங்கும், எளிய மூச்சு பயிற்சியும்!

வாழ்வியல் சார்ந்த ஒழுங்குகள் என்பவை நம் உடல் மற்றும் மனம் ஆகியவைகளை பிரச்சினையின்றி இயங்க உதவுகின்றன என்பதால் கடந்த இரு பதிவுகளில் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள நேரிட்டது.

இன்றைய பதிவில் இந்த ஒழுங்கின் மூன்றாவது ஒரு அங்கம் குறித்த தகவலை சேர்த்திட விரும்புகிறேன். இது பற்றி ஏனோ நம்மில் யாரும் பெரிதாய் கவனிப்பதில்லை. உயிர் சக்தி என்றும் பிராண சக்தி என்றும் குறிப்பிடப் படும் ஒன்றையே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்

(1) வைகறையில் துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).
(2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
(3) உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.
(4) நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்)
(5) உணவும் மருந்தும் ஒன்றே.
(6) அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.
(7) கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான்.
(8) படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.
(9) பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே
(10) சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.
(11) சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.& ஜப்பானிய பொன்மொழி
(12) சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.&ஸ்பெயின் பொன்மொழி
(13) 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை)
5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)
(14) வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்&ஜெர்மன் பழமொழி.
(15) பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.
(16) சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.
பெண்கள்... வழுக்கை... தேரையரின் தீர்வு!

முடி உதிர்வது பற்றிய கவலை அநேகமாய் எல்லாப் பெண்களுக்குமே உண்டு. இது தவிர்க்க முடியாதது. இதற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு காரணங்கள் உண்டு. பெரும்பாலும் பொட்டு, பொடுகு ஏற்படுவதன் மூலமே அதிகமாய் முடி உதிர்கிறது.

டைபாயிடு சுரம் எனப்படும் பித்த கபவாத சுரம் வந்து குணமான பின்னரும் பெரிய அளவில் முடி உதிரும். இதனால் அக்காலத்தில் பித்தகபவாத சுரம் வந்து குணமான உடன் மொட்டை அடிக்கும் பழக்கமும் இருந்தது. மொட்டை அடித்தால் மட்டுமே கருகருவென புது முடி வளருமாம். இல்லையேல் ஆங்காங்கே முடிஉதிர்ந்து திட்டுத்திட்டாய் வழுக்கையாகி விடுமாம்.

இப்படி முடி கொட்டி வழுக்கைத் தோற்றமுள்ள பெண்களுக்கான தீர்வு ஒன்றினை
வீட்டு வைத்தியம் ...!

எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும்.

நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.

குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

உடல் வலிமை பெற : அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.

அஜீரணம் சரியாக: ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.

மூட்டு வலி குணமாக: அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.

இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் நிறைய கிடைக்கும்.

சிறுநீரக கோளாறு: முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும்.

படர்தாமரை, முகப்பரு: சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி விரைவில் குணமாகும்.

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நேரம் குணமாகும்.

கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை: இருமல் குணமாகும்

புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.
முருங்கைக் கீரையின் பயன்கள்!

• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

• முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.

• முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

• இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

• முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

• கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்.....

முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%
கார்போஹைட்ரேட்கள் - 12.5
எடை அதிகரிக்கும் உருளைக் கிழங்குச் சிப்ஸ்

உணவுப் பழக்கத்தில் ஏற்படுகின்ற சிறிய மாற்றம்கூட உடல் எடையை பாதிக்கும், உருளைக் கிழங்குச் சிப்ஸ் மற்றும் பொரியல் ஆகியவற்றை சாப்பிடுவது எடை அதிகரிப்பு காரணம் ஆகி விடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட இருபது வருட கால ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

ஒரு இலட்சத்து இருபது ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். குறையச் சாப்பிட்டு நிறைய உடல் பயிற்சிகள் செய்கின்றமைதான் சிறந்த ஆரோக்கியத்துக்கு வழி என்று ஆய்வின் முடிவு கூறுகின்றது.

மாவுச்சத்து கொண்ட பொருட்கள், இறைச்சி வகைகள் ஆகியவற்றை சாப்பிடுகின்றவர்களுக்கும் உடல் எடை அதிகரிப்புக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சாதாரண இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் 0.45 கிலோ எடை அதிகரிப்பு பெறுவர். ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஒவ்வொரு நான்கு வருடமும் 1,5 கிலோ எடை அதிகரிக்கப் பெற்றனர்.

சாப்பாட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்ட உருளைக் கிழங்கு பொரியல்கள் 3.35 பவுண்டு எடை அதிகரிப்பை ஏற்படுத்தி இருந்தன.
அதே போல உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் 1.69 பவுண்டு எடையை அதிகரிக்க வைத்தன.

உணவுக்கு அதிகமாக (குளிர்பானம்) சீனி கலந்த பானம் அருந்தியவர்கள் மற்றும் இறைச்சி உண்டவர்கள் ஆகியோரின் எடைகளும் கணிசமான அளவில் அதிகரித்தன.

ஆனால் தயிர், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டவர்களின் எடையில் அதிகரிப்பு ஏற்பட்டு இருக்கவில்லை.
 — with Bala MuruganNisha Anandh and Zakeer Zain.