Tuesday, 12 April 2016

எடை அதிகரிக்கும் உருளைக் கிழங்குச் சிப்ஸ்

உணவுப் பழக்கத்தில் ஏற்படுகின்ற சிறிய மாற்றம்கூட உடல் எடையை பாதிக்கும், உருளைக் கிழங்குச் சிப்ஸ் மற்றும் பொரியல் ஆகியவற்றை சாப்பிடுவது எடை அதிகரிப்பு காரணம் ஆகி விடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட இருபது வருட கால ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

ஒரு இலட்சத்து இருபது ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். குறையச் சாப்பிட்டு நிறைய உடல் பயிற்சிகள் செய்கின்றமைதான் சிறந்த ஆரோக்கியத்துக்கு வழி என்று ஆய்வின் முடிவு கூறுகின்றது.

மாவுச்சத்து கொண்ட பொருட்கள், இறைச்சி வகைகள் ஆகியவற்றை சாப்பிடுகின்றவர்களுக்கும் உடல் எடை அதிகரிப்புக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சாதாரண இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் 0.45 கிலோ எடை அதிகரிப்பு பெறுவர். ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஒவ்வொரு நான்கு வருடமும் 1,5 கிலோ எடை அதிகரிக்கப் பெற்றனர்.

சாப்பாட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்ட உருளைக் கிழங்கு பொரியல்கள் 3.35 பவுண்டு எடை அதிகரிப்பை ஏற்படுத்தி இருந்தன.
அதே போல உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் 1.69 பவுண்டு எடையை அதிகரிக்க வைத்தன.

உணவுக்கு அதிகமாக (குளிர்பானம்) சீனி கலந்த பானம் அருந்தியவர்கள் மற்றும் இறைச்சி உண்டவர்கள் ஆகியோரின் எடைகளும் கணிசமான அளவில் அதிகரித்தன.

ஆனால் தயிர், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டவர்களின் எடையில் அதிகரிப்பு ஏற்பட்டு இருக்கவில்லை.
 — with Bala MuruganNisha Anandh and Zakeer Zain.

No comments:

Post a Comment