Saturday, 9 April 2016

நல்ல வாழ்கை வாழ


நீங்கள் இங்கே யாருடனும் போர் புரிவதற்காக வரவில்லை.எனவே அடுத்தவரை எதிரியாக நினைக்காதிர்கள் .

இந்த கணத்தில் நீங்கள் உங்களுக்குள் எந்த அளவுக்கு அமைதியாகவும் ,ஆனந்தமாகவும் இருக்கிறீர்களோ......அது மட்டும்தான் உங்கள் வாழ்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது .

ஒவ்வொரு ஆணும் ,பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளும் வரை அவன் தன்னை உணர வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவனின் பாதியே பெண்மை தான் .

ஓர் எறும்பு என்ன செய்ய வேண்டுமோ,அதற்குத் தேவையான அறிவு அதற்கு இருக்கிறது .இது ஒவ்வொரு உயிரினத்துக்கும் பொருந்தும் .நமக்கும் பொருந்தும்.

என்ன நடக்கும் என்று மற்ற கிரகங்களை எல்லாம் கவனித்து கணக்குப் போடுவதை விடுத்து ,நீங்கள் வாழும் கிரகத்தை கொஞ்சம் பொறுப்புடன் கவனியுங்கள்.

ஆனந்தத்தை உங்களால் கொடுக்கவும் முடியாது .....வாங்கவும் முடியாது .அதை அனுபவிக்கதான் முடியும். அது எப்போதும் உங்களுக்குள்தான் இருக்கிறது.

மனச் சோர்வு என்பது ,உங்களுக்குள் இருந்து கொண்டே உங்களை உபயோகமில்லாமல் அழித்து விடும் ஒரு ஆயுதம் .

வாழ்க்கையிலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி இருந்தால் நோய்கள் நம்மை எட்டிகூட பார்க்காது .

தவறுகளை ஒப்புகொள்வது என்பது ,எதிரிகளையும் நண்பர்களாக்கி தரும் வரம் போன்றது.எதிர்த்து வீழ்த்த முடியாத பலம்.

வன்முறையை முன்வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் கோழைகள்.அன்பை முன்வைத்து வாழ்க்கையை வாழ்பவர்களே வீரமானவர்கள்.

உங்களை திருத்திக் கொள்ளாமல் ,வாசலை இடித்து ஜன்னலாக்குவதாலோ ,கழிவறையை இடித்து சமையலறையைக் கொண்டு வருவதாலோ ,வசதிகள் மாறலாம்.ஆனால் வாழ்க்கை மாறிவிடாது .

மனிதனுக்கு அடுத்த கிரகத்தைப்பற்றி ஆயிரம் ஆராய்சிகள் செய்யத் தெரியும்.வசிக்கும் கிரகத்தில் சந்தோசமாக வாழ்வது எப்படி என்று மட்டும் தெரியாது.

விருப்பத்தோடு எதையும் செய்யும்போது , வாழ்க்கை சொர்க்கம் , விருப்பம் இல்லாமல் செய்யும்போது , வழக்கை நரகம்.

உண்டியலில் காசு போட்டு விட்டான் என்பதற்காக கடவுள் ஒருவனை காப்பாற்றவும் மாட்டார். போடாததற்காக இன்னொருவனை தண்டிக்கவும் மாட்டார் .

நன்றாக வாழத் தெரியாத மக்களே ,நன்றாக ஆளத் தெரியாதவர்களை தேர்ந்தேடுகிறார்கள்.

தங்களால் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் மற்றவரை குறை சொல்வதன் அடிப்படை.

உங்களை விட பலம் குறைந்தவரிடமோ உங்களை எதிர்க்க முடியாதவரிடமோ உங்கள் பலத்தை பிரயோகிப்பதை விட அருவெறுப்பான செயல் எதுவும் இல்லை .

மனிதர்கள் தமக்குள் சமாதானமாக இருந்தால்தான் , உலக சமாதானம் ஏற்படும்.
- சத்குரு ஜக்கி வாசுதேவ் உரைகள்

No comments:

Post a Comment