Tuesday, 12 April 2016

பெண்கள்... வழுக்கை... தேரையரின் தீர்வு!

முடி உதிர்வது பற்றிய கவலை அநேகமாய் எல்லாப் பெண்களுக்குமே உண்டு. இது தவிர்க்க முடியாதது. இதற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு காரணங்கள் உண்டு. பெரும்பாலும் பொட்டு, பொடுகு ஏற்படுவதன் மூலமே அதிகமாய் முடி உதிர்கிறது.

டைபாயிடு சுரம் எனப்படும் பித்த கபவாத சுரம் வந்து குணமான பின்னரும் பெரிய அளவில் முடி உதிரும். இதனால் அக்காலத்தில் பித்தகபவாத சுரம் வந்து குணமான உடன் மொட்டை அடிக்கும் பழக்கமும் இருந்தது. மொட்டை அடித்தால் மட்டுமே கருகருவென புது முடி வளருமாம். இல்லையேல் ஆங்காங்கே முடிஉதிர்ந்து திட்டுத்திட்டாய் வழுக்கையாகி விடுமாம்.

இப்படி முடி கொட்டி வழுக்கைத் தோற்றமுள்ள பெண்களுக்கான தீர்வு ஒன்றினை
வீட்டு வைத்தியம் ...!

எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும்.

நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.

குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

உடல் வலிமை பெற : அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.

அஜீரணம் சரியாக: ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.

மூட்டு வலி குணமாக: அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.

இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் நிறைய கிடைக்கும்.

சிறுநீரக கோளாறு: முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும்.

படர்தாமரை, முகப்பரு: சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி விரைவில் குணமாகும்.

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நேரம் குணமாகும்.

கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை: இருமல் குணமாகும்

புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.
முருங்கைக் கீரையின் பயன்கள்!

• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

• முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.

• முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

• இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

• முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

• கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்.....

முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%
கார்போஹைட்ரேட்கள் - 12.5
எடை அதிகரிக்கும் உருளைக் கிழங்குச் சிப்ஸ்

உணவுப் பழக்கத்தில் ஏற்படுகின்ற சிறிய மாற்றம்கூட உடல் எடையை பாதிக்கும், உருளைக் கிழங்குச் சிப்ஸ் மற்றும் பொரியல் ஆகியவற்றை சாப்பிடுவது எடை அதிகரிப்பு காரணம் ஆகி விடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட இருபது வருட கால ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

ஒரு இலட்சத்து இருபது ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். குறையச் சாப்பிட்டு நிறைய உடல் பயிற்சிகள் செய்கின்றமைதான் சிறந்த ஆரோக்கியத்துக்கு வழி என்று ஆய்வின் முடிவு கூறுகின்றது.

மாவுச்சத்து கொண்ட பொருட்கள், இறைச்சி வகைகள் ஆகியவற்றை சாப்பிடுகின்றவர்களுக்கும் உடல் எடை அதிகரிப்புக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சாதாரண இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் 0.45 கிலோ எடை அதிகரிப்பு பெறுவர். ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஒவ்வொரு நான்கு வருடமும் 1,5 கிலோ எடை அதிகரிக்கப் பெற்றனர்.

சாப்பாட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்ட உருளைக் கிழங்கு பொரியல்கள் 3.35 பவுண்டு எடை அதிகரிப்பை ஏற்படுத்தி இருந்தன.
அதே போல உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் 1.69 பவுண்டு எடையை அதிகரிக்க வைத்தன.

உணவுக்கு அதிகமாக (குளிர்பானம்) சீனி கலந்த பானம் அருந்தியவர்கள் மற்றும் இறைச்சி உண்டவர்கள் ஆகியோரின் எடைகளும் கணிசமான அளவில் அதிகரித்தன.

ஆனால் தயிர், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டவர்களின் எடையில் அதிகரிப்பு ஏற்பட்டு இருக்கவில்லை.
 — with Bala MuruganNisha Anandh and Zakeer Zain.
சுவாசக் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்க - உஷ்ட்ராசனம்

உஷ்ட்ராசனம்- ஒட்டகம் போன்று உள்ளதால் இந்த பெயர் ஏற்பட்டது.

செய்முறை:

1. விரிப்பின் மீது மண்டியிட்டு நிற்கவும். பாத விரல்கள் வெளி நோக்கி இருக்க வேண்டும்.
2. முட்டி, பாதங்கள் சிறிது இடைவெளி விட்டு அகட்டி வைக்கவும்.
3. இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும்.

பலன்கள்:

முதுகுத் தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. முதுகு வலி, சுவாசக் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்குகின்றன. தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
தா‌ய்மா‌ர்களு‌க்கு பூ‌ண்டு அவ‌சிய‌ம்

குழ‌ந்தை பெ‌ற்ற ‌ெபண்க‌ள் ‌தினமு‌ம் ச‌த்தான அதே சமய‌ம் உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உணவை தே‌ர்வு செ‌ய்து உ‌ண்ண வே‌ண்டு‌ம். குழ‌ந்தை‌க்கு பா‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உதவு‌ம் உணவுகளையு‌ம் அ‌திகமாக உ‌ண்ண வே‌ண்டு‌ம்.

எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

சுறா போ‌ன்ற ‌மீ‌ன்களுட‌ன் அ‌திகமாக பூ‌ண்டை போ‌ட்டு பு‌ட்டு செ‌ய்து ‌பி‌ள்ளை பெ‌ற்றவ‌ர்களு‌க்கு‌த் தருவா‌ர்க‌ள். இதுவு‌ம் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

இதனா‌ல்தா‌ன் ‌பி‌ள்ளை பெ‌‌ற்ற பெ‌ண்களு‌க்கு தலை‌க்கு ஊ‌ற்று‌ம் போது ந‌ல்லெ‌ண்ணையை‌க் கா‌ய்‌ச்‌சி அ‌தி‌ல் பூ‌ண்டு போ‌ட்டு அ‌ந்த எ‌ண்ணெயை தே‌ய்‌த்து உட‌ல் முழுவது‌ம் மசா‌ஜ் செ‌ய்‌கி‌ன்றன‌ர்.

பூ‌ண்டி‌ற்கு இ‌த்தகைய மரு‌த்துவ குண‌ம் இரு‌ப்பதா‌ல் ‌பி‌ள்ளை பெ‌ற்ற பெ‌ண்க‌ள் பூ‌ண்டினை ஏராளமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி!

விட்டமின்-சி அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால்,இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.

சி ரியாக்டிவ் புரோட்டீன்-சிஆர்பி ஏற்படுவதாலேயே இதய நோயும்,சர்க்கரை நோயும் எளிதில் தாக்கக்கூடும் என்றும்,சிஆர்பி பாதிப்பை வைட்டமின்-சி சத்து கட்டுப்படுத்துவதால்,அந்நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்றும் கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மேலும் வைட்டமின்-ஈ கொண்ட உணவுப் பொருட்களை அன்றாடம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பெரிய அளவில் பலன் ஏதும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

என்றாலும் விட்டமின்-சி மற்றும் ஈ சத்துள்ள உணவை சாப்பிடுவதால்,மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.