Wednesday, 20 June 2012

பொதுவாக சிலர் சொல்வார்கள், “இப்போதெல்லாம் வீட்டில் அமாவாசை பூஜை செய்ய நேரமே இல்லை, வருடத்திற்கு ஒருமுறை திதி கொடுத்து விடுகிறோமே அது போதாதா?” என்று. 

உடலை பரிசோதிக்க ஒரு மருத்துவமனைக்கு சென்றால் பாதி நாட்கள் அந்த மருத்துவமனையிலேயே தவம் கிடக்கிறோம். அப்பொதெல்லாம் கிடைக்கும் நேரம், ஒரு சில நிமிடங்கள் மட்டும் போதுமான அமாவாசை பூஜை செய்ய மட்டும் நேரம் இல்லை என்பதற்கு அக்கறையின்மை ஒரு காரணமாக இருந்தாலும் இன்னொரு காரணம், தமது குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு முன்னோர்களின் ஆசியை கிடைக்கவிடாமல் கொடிய விதி அவர்களை தடுக்கிறது.

இந்த முன்ஜென்ம கர்மாவானது, முன்னோர்களை வணங்கி பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவர்களின் மனதில் உருவாகாமல் செய்யும்.

பித்ருக்களை வணங்கவில்லை என்றால், அவரவர் குடும்பத்திற்கு திரும்பி வரும் ஆத்மாக்கள், தலைவாசலோடு நின்றுவிடும். நம் குடும்பத்தினரே நம்மை மதிக்கவில்லையே என்று அந்த ஆத்மாக்கள் வேதனை அடைந்து கண்ணீர் விடும்.

சங்கை காதில் வைத்தால் கடலோசை கேட்பது போல, பித்ருக்களின் அழுகை ஒலி ஸ்ரீமகாலஷ்மிக்கு கேட்கும். தன் கணவரால் அனுப்பப்பட்ட அவரவர் குடும்பத்தினரின் ஆத்மாகளை மதிக்காமல் இருக்கிறார்களே என்ற கோபத்தில் அந்த இல்லத்தை விட்டு ஸ்ரீமகாலஷ்மியும் விலகி விடுவாள்.

இறைவனை வணங்கினாலும், இறந்தவர்களையும் வணங்கினால்தான் சகல வளங்களையும் கொடுத்து செல்வந்தராக்கும் என்கிறது கருடபுராணம். ஸ்ரீமந் நாராயணனே கருடபுராணத்தில், “முன்னோர்களுக்கு பூஜை செய்தால்தான் தெய்வத்தின் ஆசியும், நன்மையும் கிடைக்கும்“ என்றார். மேலும் படிக்க 

No comments:

Post a Comment