எதிர்காலத்தை முன்னதாகவே தெரிந்துகொள்ள பலரும் விரும்புகிறீர்கள்.உங்கள் வாழ்கையின் இறுதிக்கட்டம் எது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்,என்னெனில் ,அதில் ஒன்றும் ஒளிவு மறைவு இல்லை .இறுதிக்கட்டம் என்பது இறப்புதான்,இல்லையா ?எனவே நாளை என்ன நடக்கும் என்று தெரிந்து என்ன செய்யபோகிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் இன்று என்ன நடக்கிறது என்பதே தெரியாதபோது,நாளைபற்றி என்ன பிரச்சனை?அது உபயோகமில்லாத வேலை.எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்று நீங்கள் தெரிந்துகொண்டால் , அது நிச்சயமாக இப்பொது இருபதையும்விட முட்டாள்தனமான வாழ்க்கையைத்தான் வாழ்வீர்கள். எங்கோ ,கணித்து வந்தவர்கள்தான் ,மிக மோசமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
நீங்கள் இந்தப் பூமிக்கு வந்ததே வாழ்க்கையை உணர்வதற்குதான்.நாளை நரகமேதான் நடக்கட்டுமே!அதை மனம் கோணாமல் ஏற்றுக்கொண்டு அதில் இருந்து எதாவது கற்றுக் கொள்ளுங்களேன்!ஏனெனில்,வெளிப்புறத்தில் எது நடந்ததோ அது எபோதும் முக்கியமில்லை.ஓரளவு முக்கியம்தான்,இருந்தாலும் நீங்கள் அதை மனதளவில் எப்படி எதிர்கொண்டீர்கள் என்பதுதான் அதைவிட முக்கியமானது.எப்போதோ ஒரு முறை உங்கள் வாழ்வில் மிகவும் கடினமான காலத்தை மிகவும் எளிதாக எதிர்கொண்டு ,இப்பொது நன்றாக இருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்,கடந்து வந்த அந்தச் சோதனையான காலத்தை இப்பொது பெருமிதத்தோடு நினைத்து கொள்வீர்கள்தானே!எனவே,சோதனையானே காலம் என்பது எபோதுமே பிரச்னை இல்லை,அதை நீங்கள் எந்த அளவு வேதனையாக மாற்றிகொண்டீர்கள் என்பதுதான் பிரச்சனை.எது நடந்தாலும் அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருந்தால்,உங்கள் வாழ்க்கையில் வேதனையைவிட சாதனைதான் அதிகமாக இருக்கும் .எனவே வாழ்க்கையை அதன்போக்கில் உணர்வதற்கு கற்றுக்கொள்ளுங்கள்..------- சத்குரு ஜக்கி வாசுதேவ்..
No comments:
Post a Comment