Sunday, 5 August 2012


என் வாழ்க்கை மாறும் – 600 ரூபாயில்


3AUG
அரசுப் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகளைப் பார்த்து, “நீ எதுக்கு ஸ்கூலுக்குப் போறே?,” என்று கேட்டால்… “வீட்டுல சாப்பாடு இல்ல, அங்க சத்துணவுல சோறு போடுவாங்க அதான் ஸ்கூலுக்கு போறேன்,” என்று சொல்லிவிட்டு ஓடுகிறார்கள்…
பள்ளிச் சீருடை இல்லததால் பள்ளிக்குப் போக முடியாமல் தெருவோரம் விளையாடும் குழந்தைகள்! துவைத்துப் போட்ட சீருடை உலரக் காத்திருக்கும், மாற்று உடை இல்லாத குழந்தைகள்! இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டும் அவற்றை பள்ளிக்கு எடுத்துச் செல்ல பைகூட இல்லாத குழந்தைகள்! இந்த குழந்தைகளிடம், “நீ பெரியவன் ஆனா என்ன ஆகப் போறே?” என்று கேட்டால்…
பெண் குழந்தைகள் குடைக்கு ஆசைப்பட்டு, “டீச்சர்” என்றும், பையன்கள் தம்மை ஆக்ஷன் ஹீரோக்களாக பாவித்து “போலீஸ்” என்றும் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் என்னவானார்கள்?
பணவசதியற்ற எத்தனை ஏழை மாணவர்களின் கனவு காற்றோடு போனது? எங்கோ குப்பைப்பொறுக்கிக் கொண்டும், வீட்டு வேலைகள் செய்து கொண்டும் வயிற்றைக் கழுவும் அவர்களின் அவல நிலையை, கண்டும் காணாததுப் போல எவ்வித குற்ற உணர்வுமின்றி நாம் கடந்து செல்லப் பழகி விட்டோம்.
இவர்கள் எதிர்காலம் சிறக்க நாம் கல்வி கொடுக்கவில்லை என்றால், நாம் நிச்சயமாக வேதனையுடன் வெட்கப்பட வேண்டியதுதான்.
கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகளில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சுமார் 50 சதவீத மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு புத்தகத்தைப் படிக்கத் தெரியவில்லை, இது திடுக்கிடும் உண்மை.
ஈஷாவின் தமிழ் மாத இதழ்
“ஈஷா காட்டுப்பூ”


ஆன்லைனில் படிக்க
ஆன்லைனில் பதிவு செய்ய
இக்குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் மேல்வகுப்பு கல்வித் திட்டத்தை உள்வாங்கிக் கொள்ள இயலாமல் தடுமாறுவதோடு, படிப்பென்பது தனக்கு வராத வித்தை என்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
எந்தவொரு குறிக்கோளும் இல்லாத, குழம்பிய மனநிலையில் உள்ள ஒரு பெரும் இளைஞர் கூட்டம் இது போல உருவாகிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் இவர்கள் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிறார்கள்.
இவர்களின் நல்வாழ்வு கருதி ஈஷா அறக்கட்டளை, தமிழக அரசுடன் கைக்கோர்த்துள்ளது. ஆம்! இந்த ஒப்பந்தப்படி 2011 முதல் 2016 வரை, 32 அரசுப் பள்ளிகளை சேர்ந்த சுமார் 25,000 மாணவர்களின் கல்விப் பொறுப்பை தற்போது ஈஷா கையில் எடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நுண்கலைகள், கைவினை, விளையாட்டு போன்ற மனத்திறன் ஊக்குவிப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுத்தரத் தகுந்த ஆசிரியர்கள் உருவாக்கப்படுவார்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மாணவர்களின் திறமைகளை கண்டறிவதற்கும் சிறப்பு பட்டறைகள் நிகழும்.
சிறப்பான முறையில் ஆங்கில வகுப்புகளுடன் யோகமும் கல்வியின் பாகமாய் அமையும். இத்திட்டத்தை முழு வீச்சுடன் செயல்படுத்த கூடுதலாக 155 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உங்களால் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க முடியும். ஒரு குழந்தைக்கு ஒரு வருடத்திற்கு ரூ.600/- தான். உங்களால் எத்தனை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்று பாருங்கள்!
இது தனியொரு குழந்தையின் வாழ்வை பற்றியது அல்ல, இது நம் தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முயற்சி…
இவர்களின் தேவை… நீங்கள்!
நாம செய்யலன்னா இவங்களுக்கு வேற யாருங்க செய்வாங்க?
ஆன்லைனில் உதவ
அரசுப் பள்ளி தத்தெடுப்புத் திட்டம்
தொடர்புக்கு: +91 94425 90065/ 94425 04737
மின்னஞ்சல்: govtschool@ishaoutreach.org
இணையதளம்: www.ishaoutreach.org

No comments:

Post a Comment