Friday, 17 August 2012


ஆண்டொன்று போனால் வயதொன்று குறையும்!

வயது ஏற ஏற அழகாயும் பொலிவாயும் இருக்கணுமா? இதை கொஞ்சம் படிங்க...

வயது ஆக ஆக உடலில் வரும் மாற்றங்கள் உங்களை சோர்வடையச் செய்யும். எப்போதும் இளமையாகவே தோன்ற வழியில்லையா என்று கேட்டால் அதற்கு பதில் "இருக்கிறது' என்பதுதான்!

அன்றாட உணவு பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்துவிட்டாலே நீங்கள் என்றும் "ஸ்வீட் 16' தான். நவீன உலகத்தில் குளிர்பானங்கள், பீஸô, பர்கர் என்று வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் தேடித் தேடித் சாப்பிட்டால், சமூகத்தில் எளிதில் உங்களுக்கு "மூத்த குடிமகன்' அந்தஸ்து கிடைத்துவிடும். எனவே உணவில் கவனம் செலுத்துங்கள்.

தோலின் ஈரத்தன்மை குறையாமல் இருந்தால் இளமையாய் காட்சியளிக்கலாம். தினமும் தண்ணீரை நன்றாகக் காய்ச்சி ஆற வைத்து 5 லிட்டர் குடித்தால் போதும். செல்கள் ஆரோக்கியமாகத் திகழ நீர்ச்சத்து அவசியம். எனவே குளிர்பானங்களைத் தவிர்த்து தண்ணீரைப் பருகத் தொடங்குங்கள்.

கார்போஹைட்ரேட் செல்களை சோர்வடையச் செய்யும். அதனால் லட்டு, ஜாங்கிரி, அல்வா போன்ற நேரடி இனிப்பு வகையறாக்களைத் தவிர்க்கவும். வயதாவதைத் தடுப்பதில் பழங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

நெல்லிக்காய் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலுள்ள வைட்டமின் சி, மற்றும் துவர்ப்புச் சுவை வயோதிக மாற்றத்தை தடுக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பன்னீர் திராட்சை, மாதுளை, சிகப்பு கொய்யா, ஆப்பிள், அத்திப்பழம் ஆகியவையும் இளமைக்கு காரண கர்த்தாக்கள்.

காலையில் நவதானியக் கஞ்சி அல்லது ஓட்ஸ், வரகரிசி பொங்கல், ராகி இட்லி என்று தானிய உணவு வகைகள் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்.

மதியம் பட்டைத் தீட்டப்படாத அரிசியை சமைத்துச் சாப்பிடுங்கள். தயிர் மதிய வேளையில் சேர்க்க வேண்டாம். ஆனால் மோர் கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவில் சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெந்தயம் இருக்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment