Friday, 15 March 2013

ரத்தத்தை தூய்மை படுத்தும் எலுமிச்சை

ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை  விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும்  சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல  பாதுகாக்கிறது.

குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சம் பழம். இதன் மருத்துவப் பலன்களை இப்படி  பட்டியலே போடலாம். பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியை போக்கும். வாந்தியை நிறுத்தும்,  காலராக் கிருமிகளை ஒழிக்கும். பல் நோய்களை குணப்படுத்தும், வாய் நாற்றத்தைப் போக்கும். சர்ம நோய்களைக் குணப்படுத்தும். 

டான்சிலைத் தடுக்கும். விஷத்தை முறிக்கும். வாய்ப்புண்ணை ஆற்றும். தேள் கடிக்கு உதவும். மஞ்சக் காமாலையை நீக்கும். வீக்கத்தைக் குறைக்கும்.  வாயுவை அகற்றும். பசியை உண்டாக்கும். விரல் சுற்றிக்கு உதவும். யானைக்கால் வியாதியைக் குணப்படுத்தும்.

ஓட்டலில் சாப்பிடுவோர் கவனிக்க

ஓட்டல் சாப்பாட்டுக்காரர்கள் சுத்தமற்ற வேகாத சமையலை, உண்ண நேர்வதால் ஏற்படக்கூடிய பல தொல்லைகளை நீக்க 2 எலுமிச்சம் பழத்தைச்  சாறு பிழிந்து, நல்ல பெருங்காயத்தைக் கலந்து, உப்பு சேர்த்துத் தினமும் குடிப்பது நல்லது. அணுகுண்டு கதிரியக்கத்திலிருந்து தப்ப அணுகுண்டு  சோதனைகள் நடத்துவதால் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள 'ப்யோபிளேன்' என்ற  சத்தில் உள்ளது. 

தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்  தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது. தாங்க முடியா களைப்பா, விளையாட்டு, ஓட்டப்பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை  நீக்க ஒரு எலுமிச்சப் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ, அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிடுங்கள். 

உடனடி தென்பு ஏற்படும். உண்ணாவிரதம் முறிப்போர், மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்தி உணவு உண்டால் தான் சீரணப்  பிரச்னைகள் நேர்வதைத் தடுக்க முடியும்.

No comments:

Post a Comment