தீபாவளிப் பண்டிகையின் தொடக்கமே எண்ணெய்க் குளியல்தான். கங்கா ஸ்நானம் என்று இதற்குப் பெயர். கங்கா ஸ்நானம் என்று இதற்குப் பெயர் வந்ததற்குக் காரணம் உள்ளது. தீபாவளியன்று காசிக்குச் சென்று கங்கையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். எண்ணெயில் லட்சுமியும், சீயக்காயில் ஓஷாதி தேவதைகளும் இருப்பதாக ஐதீகம். இந்தியாவில் பல நதிகள் இருந்தாலும் அவற்றை விட சிறப்பு வாய்ந்தது கங்கை என்பதால் அங்கு போய் குளிக்க வேண்டும் என்று வைத்துள்ளனர். இதனால்தான் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர் வந்தது. ஆனால் எல்லோராலும் கங்கைக்குப் போய் குளிக்க முடியாதே. அப்படி குளிக்க முடியாதவர்கள் வென்னீரில் நீராடலாம். வென்னீரில் குளிப்பது கங்கையில் குளிப்பதற்கு சமம் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. குளிப்பதற்கு முதல் நாள் இரவே அந்த நீரில் ஆல், அரசு, அத்தி, புசு மற்றும் மாவிலைகளைப் போட்டு வைக்க வேண்டும். பின்னர் காலையில் எப்போது குளிக்க வேண்டுமோ அதற்கு முன்பாக சூடுபடுத்தி அந்த நீரில் குளித்தால் சிறப்பு என்பது கங்கா ஸ்நானத்தின் வரலாறு. — at Madurai Meenakshi Temple
No comments:
Post a Comment