Tuesday, 8 May 2012
Jaya Shree commented on a album.ா வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது.அதற்க்க்காகவ ே அவர்களுக்கு கோடி நன்றிகள் சொல்லலாம்.வருடத்தின் நான்கு மாதங்கள் மட்டுமே அகஸ்த்தியரை காண கேரளா அரசு அனுமதி தருகிறது.அதுவும் முன் பதிவு முறையில்,தமிழ்நாடு வழியாகவும் அகஸ்தியர் மலையை சென்றடையலாம்.இந்த மலை இருப்பதே தமிழகத்தின் எல்லைக்குள் தான் ஆனால் தமிழக வனத்துறை இதை நான்கு வருடங்களாய அனுமதிப்பதில்லை தமிழகம் வழியாக சென்றால் 13 கிலோமீட்டர் தான்.ஆனால் விலங்குகள் அதிகம்..என்கிறார்கள்.நான் சென்றது இதுவே முதல் முறை என்னுடன் வந்தவர்கள் அனைவரும் சொன்ன ஒரே விடையம் பல வருடங்களாக முயற்சி செய்து இந்த வருடம் வந்துள்ளேன் என்பது.பலர் மலை அடிவாரம் வரை வந்து மலையேற முடியாமல் திரும்பி சென்றதாக சொல்கிறார்கள்.எது எப்படியோ அகஸ்தியர் அருள் இல்லாமல் இந்த மலையை நெருங்க இயலாது போலும்..அந்தி அகஸ்தியருக்கு அணைத்து விதமான அபிசெகங்களும் நாமே செய்யலாம்.அவர் ஒரு குருவாக அங்கு நிற்கிறார்.பூஜைகள் முடிந்து சில நிமிடங்களில் மேகம் முழுதுமாய் சூழ்ந்து கொண்டது,மேகங்களின் தழுவலில் நாம் பயணம் மேலும் இனிமையாகிறது அருவிகளில் கொட்டும் நீர் தேனாய் இனிக்கிறது அட்டைகள் மிக அதிகமாக உள்ளது நிறைய ரெத்தம் தானம் செய்யவேண்டியுள்ளது.தக்க பாதுகாப்புடன் செல்வது நல்லது ,மலை ஏறும்போதும் சரி இறங்கிய பின்பும் சரி கண்டவர் அனைவரையும் காணும் அனைத்தையும் வணங்கும் எண்ணம் தானாகவே மனத்தினுள் தளிர்கிறது.நாங்கள் சென்ற பாதை செங்கோட்டை->தென்மலை->போனக்கடு எஸ்டேட்.மேலும் தகவல்கள் வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும்.

Sunday, 6 May 2012
அத்திப்பழம்
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள.
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
Friday, 4 May 2012
சாதகர்: சத்குரு, ஆன்மீகப் பாதை எனக்கு ஒரு போதையாக இருக்கிறது. இதை நான் எப்படி கையாளுவது?
"சத்குரு" : "நீங்கள் ஆன்மீகப் பாதையில் நடையிடுகிறபோது உண்மையாகவே உண்மையாகவே அதில் நடையிடுகிறீர்கள் என்றால் போதைவயப்பட்டவர்களாக மட்டும் இருப்பது இல்லை. நீங்கள் அதன் பிடியில் இருக்கிறீர்கள். உங்கள் விழிப்பு நிலையின் உச்சத்தை நீங்கள் தொட்டே வேண்டுமேயானால், உங்கள் சக்தி முழுவதும் ஒரே திசையை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். உங்கள் சக்திகளை பத்து வேறு பக்கங்களில் சிதறடிக்கிறீர்கள் என்றால் நீங்கள் எதையும் செய்யப்போவதில்லை, இல்லையா? உங்கள் சக்தி முழுவதையும் ஒரே திசையில் ஒருமுகப்படுத்தினாலும் கூட அது போதாது. அதனால்தான் அந்த இடைவெளியை தேவைப்படும்பொழுது ஒரு குரு நிரப்பி உங்களை உயர்த்துகிறார். ஆனால் உங்கள் சக்தியை பத்து திசைகளில் பிரித்துத் தர நினைப்பீர்களேயானால் அது எந்தப் பயனையும் தராது. எனவே போதை வயப்படாதீர்கள். அந்த பாதையின் பிடியிலிருங்கள். இதில் நீங்கள் செய்ய வேண்டியது வேறு எதுவுமில்லை. உங்கள் மற்ற முயற்சிகள் எல்லாம் அந்தப் பாதையை அடைவதற்காகத்தான். ஆனால் பாதையினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும்போது தான், உங்கள் ஆன்மீகப் பயணம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
அப்படியில்லையென்றால், இந்த பயணம் உங்களில் எத்தனையோ விருப்பங்களில் ஒன்றாக இருக்கும்பட்சத்தில், எத்தனையோபேர், எத்தனையோ பொழுதுபோக்குகளைத் தேடுகிறார்கள். சிலருக்கு ஆன்மிகம் பொழுது போக்காயிருக்கிறது. அது உங்கள் விருப்பம். அத்தகைய மனிதர்களுக்கு நான் எதுவும் சொல்லப்போவது இல்லை. ஆனால் உண்மையிலேயே உணரவேண்டும் என்கிற தேடல் உங்களுக்கு இருக்குமேயானால், உங்கள் முழு இருப்பும் ஒரே திசையை நோக்கி இருக்கவேண்டும். அதன் பிடியில் நீங்கள் இருக்கவேண்டும். அதற்காக நீங்கள் அர்த்தமற்றவராக ஆகிவிடமாட்டீர்கள். ஒரு குடும்பத்தை நீங்கள் நடத்த முடியாது என்பது பொருள் அல்ல. உங்கள் சமூகக் கடமைகளை நீங்கள் நிறைவேற்ற முடியாது என்று அர்த்தம் அல்ல.அவற்றையெல்லாம் கூட உங்கள் ஆன்மீகப் பாதைக்கான ஒரு கருவியாக நீங்கள் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு மூச்சும், எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், செய்யும் ஒவ்வொரு செயலும், வாழ்வில் செய்யும் ஒவ்வொரு செயலும் ஓர் ஆன்மீக செயல்முறையாகிவிடுகிறது. அப்போதுதான் எந்த முரண்பாடும் நேராது. இது என் ஆன்மீகப்பாதை, இது என் குடும்பம், இது என் தொழில், இது நான் சேர்ந்திருக்கும் சங்கம், இவர்கள் எல்லாம் என்னுடன் மது அருந்தும் நண்பர்கள் என்று நீங்கள் தனித்தனியாகப் பிரிக்கமுயலும் பொழுதுதான் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. நீங்கள் உண்ணுகிறீர்கள் என்றால் உணர்வதற்காக உண்ணுங்கள். நீங்கள் ஒன்றைப் பருகுகிறீர்கள் என்றால் ஒன்றை உணர்ந்து கொள்வதற்காகப் பருகுங்கள். ஒருபணியை செய்கிறீர்கள் என்றால், உங்களை உணர்ந்து கொள்வதற்காகச் செய்யுங்கள். அப்படியிருந்தால் எந்த முரண்பாடும் ஏற்படாது."
ஞானத்தின் பிரம்மாண்டத்தில் "சத்குரு".

அதிர்ஷ்டசாலி யார்?
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது...
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.
அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது...பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே...அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.
தைரியம் என்பது தன்னம்பிக்கைக்கு மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விடும்.

Wednesday, 2 May 2012
பொன் மொழிகள்
* * * * * * * * * * *
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்..
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்...
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது...
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை...
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு....
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்...
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்..
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்...
13. நல்லவர்களோடு நட்பாயிருப்போம், நாமும் அப்படியே இருப்போம்....
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை...
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்வோம்...

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது

Subscribe to:
Posts (Atom)