சாதகர்: சத்குரு, ஆன்மீகப் பாதை எனக்கு ஒரு போதையாக இருக்கிறது. இதை நான் எப்படி கையாளுவது?
"சத்குரு" : "நீங்கள் ஆன்மீகப் பாதையில் நடையிடுகிறபோது உண்மையாகவே உண்மையாகவே அதில் நடையிடுகிறீர்கள் என்றால் போதைவயப்பட்டவர்களாக மட்டும் இருப்பது இல்லை. நீங்கள் அதன் பிடியில் இருக்கிறீர்கள். உங்கள் விழிப்பு நிலையின் உச்சத்தை நீங்கள் தொட்டே வேண்டுமேயானால், உங்கள் சக்தி முழுவதும் ஒரே திசையை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். உங்கள் சக்திகளை பத்து வேறு பக்கங்களில் சிதறடிக்கிறீர்கள் என்றால் நீங்கள் எதையும் செய்யப்போவதில்லை, இல்லையா? உங்கள் சக்தி முழுவதையும் ஒரே திசையில் ஒருமுகப்படுத்தினாலும் கூட அது போதாது. அதனால்தான் அந்த இடைவெளியை தேவைப்படும்பொழுது ஒரு குரு நிரப்பி உங்களை உயர்த்துகிறார். ஆனால் உங்கள் சக்தியை பத்து திசைகளில் பிரித்துத் தர நினைப்பீர்களேயானால் அது எந்தப் பயனையும் தராது. எனவே போதை வயப்படாதீர்கள். அந்த பாதையின் பிடியிலிருங்கள். இதில் நீங்கள் செய்ய வேண்டியது வேறு எதுவுமில்லை. உங்கள் மற்ற முயற்சிகள் எல்லாம் அந்தப் பாதையை அடைவதற்காகத்தான். ஆனால் பாதையினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும்போது தான், உங்கள் ஆன்மீகப் பயணம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
அப்படியில்லையென்றால், இந்த பயணம் உங்களில் எத்தனையோ விருப்பங்களில் ஒன்றாக இருக்கும்பட்சத்தில், எத்தனையோபேர், எத்தனையோ பொழுதுபோக்குகளைத் தேடுகிறார்கள். சிலருக்கு ஆன்மிகம் பொழுது போக்காயிருக்கிறது. அது உங்கள் விருப்பம். அத்தகைய மனிதர்களுக்கு நான் எதுவும் சொல்லப்போவது இல்லை. ஆனால் உண்மையிலேயே உணரவேண்டும் என்கிற தேடல் உங்களுக்கு இருக்குமேயானால், உங்கள் முழு இருப்பும் ஒரே திசையை நோக்கி இருக்கவேண்டும். அதன் பிடியில் நீங்கள் இருக்கவேண்டும். அதற்காக நீங்கள் அர்த்தமற்றவராக ஆகிவிடமாட்டீர்கள். ஒரு குடும்பத்தை நீங்கள் நடத்த முடியாது என்பது பொருள் அல்ல. உங்கள் சமூகக் கடமைகளை நீங்கள் நிறைவேற்ற முடியாது என்று அர்த்தம் அல்ல.அவற்றையெல்லாம் கூட உங்கள் ஆன்மீகப் பாதைக்கான ஒரு கருவியாக நீங்கள் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு மூச்சும், எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், செய்யும் ஒவ்வொரு செயலும், வாழ்வில் செய்யும் ஒவ்வொரு செயலும் ஓர் ஆன்மீக செயல்முறையாகிவிடுகிறது. அப்போதுதான் எந்த முரண்பாடும் நேராது. இது என் ஆன்மீகப்பாதை, இது என் குடும்பம், இது என் தொழில், இது நான் சேர்ந்திருக்கும் சங்கம், இவர்கள் எல்லாம் என்னுடன் மது அருந்தும் நண்பர்கள் என்று நீங்கள் தனித்தனியாகப் பிரிக்கமுயலும் பொழுதுதான் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. நீங்கள் உண்ணுகிறீர்கள் என்றால் உணர்வதற்காக உண்ணுங்கள். நீங்கள் ஒன்றைப் பருகுகிறீர்கள் என்றால் ஒன்றை உணர்ந்து கொள்வதற்காகப் பருகுங்கள். ஒருபணியை செய்கிறீர்கள் என்றால், உங்களை உணர்ந்து கொள்வதற்காகச் செய்யுங்கள். அப்படியிருந்தால் எந்த முரண்பாடும் ஏற்படாது."
ஞானத்தின் பிரம்மாண்டத்தில் "சத்குரு".

No comments:
Post a Comment