அன்பான இல்லத்தில்
அழகான உள்ளத்தில்
அமைதியாய் வாழ்ந்து வந்தேன்
கல்வியின் தாகத்தில்
கல்லூரியின் மோகத்தில்
பொறியியலில் சேர்ந்தேன்
இரண்டாம் வருடத்தில்
எதிர்பார்க்காத நேரத்தில்
தந்தையின் இறப்பு
பறிபோய்விட்டது அன்பின் வனப்பு
நீண்ட நாட்களாக
நீங்காத துயரத்தில்…………………….
சூழல் திரும்ப
எதிர்பாராத நட்பு ஏற்பட்டது உன்னுடன்
கடவுள் ஒன்றை பறித்தால் ஒன்றை கொடுப்பார்
அந்த ஒன்று நீதான் என்று நினைத்து வாழ்ந்தேன்
அலைபேசியில் மட்டும் அலைப்புகள் ஒவ்வொன்றும்
அறுபது நிமிடங்கள் சுகமான காலங்கள்
நாம் பேசாத நாட்கள் பாவம் புரிந்தவை
உபசரிக்ககூட ஆட்களிள்ளாத நேரத்தில்
மூன்று வேலைகளிளும் ஒவ்வொரு நாட்களிளும்
தவறாத குறுஞ்செய்தி
நாட்கள் நகர்ந்தோட வருடங்கள் உருண்டோட
மூன்றாம் வருடம் என் கல்வி காலத்தில்
நினைவில் நிற்கின்றது
நீ சொல்லிய அந்த வாசகம்
“என்னிடத்தில் முழு உரிமையும் உனக்கு உண்டு
என் நட்பின் கருவூலம் நீ” என்று
ஒன்றுபட்டு வாழ்ந்தோம் ஒய்யாரமாக இருந்தோம்
உதவி என்று வந்தேன் தோழி என்று உன்னிடத்தில்
இதுவரை உன்னிடம் கேட்டதில்லை எதுவும்
முடியாதென்றிருந்தால்
முயற்ச்சித்து முடித்திருப்பேன்
ஆனால்
செய்கிறேன் என்றாய்
செய்துவிட்டேன் என்றாய்
இருதியில் கேட்டேன்
முடியவில்லை என்றாய்
ஏன் இப்படி…………………?
என் கொள்கை தவறா……………….?
“அன்பாக பழகியவர்கள் பொய்யொன்று சொன்னால்
பொய்யென்று நினைப்பேன் அவர்களின் அன்பும்”
ஆனால்
விதிவிலக்காய் இருந்தது உன்னிடத்தில் மட்டும்
எதிர்பார்க்கவில்லை எதையும் உன்னிடம்
வேண்டிக் கேட்டுக்கொண்டேன்
“புறங்கூறாதே” என்று
உன்னையே நம்பிய எனக்கு
இறுதியில் ஒரு செய்தி
அதுவே நம் நட்பின் இறுதி செய்தியாக
“நான் இறந்துவிட்டேன் என்று நினைத்துக்கொள்”
ஆம் பெண்ணே…………………………………………………!
இதுவரையிலும் நினைத்துக்கொண்டிருக்கின்றேன்
நாம் அன்பாக பழகிய அந்த நாட்களை
சொல்லிய சொல்லால் இறந்து மடிந்துவிட்டேன்
உன்னிடத்தில் உதவி என்று வந்தது தவறா……..?
அல்ல என்மேல் உனக்கிருந்த அன்பு பொய்யா…..?
தெரியவில்லை எனக்கே
உயிர் தோழியே…………………….!
அன்பான உள்ளத்திலும்
அழகான நெஞ்சத்திலும்
உயிர் தோழியாய் மட்டுமே நீயிருந்தாய்
பிரிவை என்னுள் ஏற்படுத்தும் வரை
தோற்றத்தில் தோள்சாயும் தோழியாக மட்டுமே
எனக்கு தெரிந்தாய்
மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தும் வரை
இப்போதோ
சிந்தனையில் சிந்தாமணிகளாய்
மனதினுள் நீங்கா நினைவுகளாய்
என்னுள் உன் நினைவுகள்
இன்றும்
வாட்டி வதைக்கின்றது
வதைப்பட்டு தவிக்கின்றேன்
நட்பு
என்னும்
தாகம்
இன்னும்
தீரவில்லை
அன்பு தோழியே
அழகான உள்ளத்தில்
அமைதியாய் வாழ்ந்து வந்தேன்
கல்வியின் தாகத்தில்
கல்லூரியின் மோகத்தில்
பொறியியலில் சேர்ந்தேன்
இரண்டாம் வருடத்தில்
எதிர்பார்க்காத நேரத்தில்
தந்தையின் இறப்பு
பறிபோய்விட்டது அன்பின் வனப்பு
நீண்ட நாட்களாக
நீங்காத துயரத்தில்…………………….
சூழல் திரும்ப
எதிர்பாராத நட்பு ஏற்பட்டது உன்னுடன்
கடவுள் ஒன்றை பறித்தால் ஒன்றை கொடுப்பார்
அந்த ஒன்று நீதான் என்று நினைத்து வாழ்ந்தேன்
அலைபேசியில் மட்டும் அலைப்புகள் ஒவ்வொன்றும்
அறுபது நிமிடங்கள் சுகமான காலங்கள்
நாம் பேசாத நாட்கள் பாவம் புரிந்தவை
உபசரிக்ககூட ஆட்களிள்ளாத நேரத்தில்
மூன்று வேலைகளிளும் ஒவ்வொரு நாட்களிளும்
தவறாத குறுஞ்செய்தி
நாட்கள் நகர்ந்தோட வருடங்கள் உருண்டோட
மூன்றாம் வருடம் என் கல்வி காலத்தில்
நினைவில் நிற்கின்றது
நீ சொல்லிய அந்த வாசகம்
“என்னிடத்தில் முழு உரிமையும் உனக்கு உண்டு
என் நட்பின் கருவூலம் நீ” என்று
ஒன்றுபட்டு வாழ்ந்தோம் ஒய்யாரமாக இருந்தோம்
உதவி என்று வந்தேன் தோழி என்று உன்னிடத்தில்
இதுவரை உன்னிடம் கேட்டதில்லை எதுவும்
முடியாதென்றிருந்தால்
முயற்ச்சித்து முடித்திருப்பேன்
ஆனால்
செய்கிறேன் என்றாய்
செய்துவிட்டேன் என்றாய்
இருதியில் கேட்டேன்
முடியவில்லை என்றாய்
ஏன் இப்படி…………………?
என் கொள்கை தவறா……………….?
“அன்பாக பழகியவர்கள் பொய்யொன்று சொன்னால்
பொய்யென்று நினைப்பேன் அவர்களின் அன்பும்”
ஆனால்
விதிவிலக்காய் இருந்தது உன்னிடத்தில் மட்டும்
எதிர்பார்க்கவில்லை எதையும் உன்னிடம்
வேண்டிக் கேட்டுக்கொண்டேன்
“புறங்கூறாதே” என்று
உன்னையே நம்பிய எனக்கு
இறுதியில் ஒரு செய்தி
அதுவே நம் நட்பின் இறுதி செய்தியாக
“நான் இறந்துவிட்டேன் என்று நினைத்துக்கொள்”
ஆம் பெண்ணே…………………………………………………!
இதுவரையிலும் நினைத்துக்கொண்டிருக்கின்றேன்
நாம் அன்பாக பழகிய அந்த நாட்களை
சொல்லிய சொல்லால் இறந்து மடிந்துவிட்டேன்
உன்னிடத்தில் உதவி என்று வந்தது தவறா……..?
அல்ல என்மேல் உனக்கிருந்த அன்பு பொய்யா…..?
தெரியவில்லை எனக்கே
உயிர் தோழியே…………………….!
அன்பான உள்ளத்திலும்
அழகான நெஞ்சத்திலும்
உயிர் தோழியாய் மட்டுமே நீயிருந்தாய்
பிரிவை என்னுள் ஏற்படுத்தும் வரை
தோற்றத்தில் தோள்சாயும் தோழியாக மட்டுமே
எனக்கு தெரிந்தாய்
மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தும் வரை
இப்போதோ
சிந்தனையில் சிந்தாமணிகளாய்
மனதினுள் நீங்கா நினைவுகளாய்
என்னுள் உன் நினைவுகள்
இன்றும்
வாட்டி வதைக்கின்றது
வதைப்பட்டு தவிக்கின்றேன்
நட்பு
என்னும்
தாகம்
இன்னும்
தீரவில்லை
அன்பு தோழியே
No comments:
Post a Comment