இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்கள்
# கர்ப்ப காலத்தின் பல்வேறு நிலைகள் பற்றியும், பிரசவம், பச்சிளங்குழந்தை பராமரிப்பு, தாய்ப்பால் மகத்துவம், குழந்தை வளர்ப்பு ஆகியவை குறித்த விளக்கங்களும் எளிதாக புரியும் வண்ணம் ஒலி ஒளி காட்சிகளாக இடம் பெறும்.
# தன்னைப் போன்ற தாய்மார்களுடன் பழகுவதற்கும் பகிர்ந்து கொள்வதற்குமான சூழ்நிலை கிடைக்கும்.
# விளக்க வகுப்புகள், கலந்துரையாடல்கள், செயல்முறை விளக்கங்கள், குழு விளையாட்டுக்கள், பகிர்ந்து கொள்ளுதல், ஆக்கப்பூர்வமான சிந்தனையை தூண்டும் பயிற்சிகள், சத்தான உணவுமுறை பற்றிய செய்முறை விளக்கங்கள் போன்றவை இடம் பெறும்.
# மகப்பேறு மருத்துவர்களின் கர்ப்பகால கவனிப்பிற்கு உறுதுணையாக இந்தத் திட்டம் இருக்கும்.
# சக்திமிக்க தியானம், பிராணாயாமம் மற்றும் ஆசனா போன்ற யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப் படும்.
# இவ்வகுப்புகள் 15 வகுப்புகளாக வாரம் ஒரு முறை சுமார் 2 மணி நேரம் நடைபெறும்.
# வகுப்புகள் தகுதி, திறமை மற்றும் அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படுகிறது.
பலன்கள்
# வளரும் உயிரை பற்றிய விழிப்புணர்வை தாயிடம் அதிகரிக்க செய்கிறது. இதனால் கரு முதலே தாய்க்கும் சேய்க்கும் நல்ல பந்தம் உருவாகிறது.
# கருவின் சுமையை தாங்குவதற்கும், இயற்கையான முறையில் பிரசவிக்கவும், எலும்புகள், தசை மற்றும் தசை நார்கள் உறுதியாகவும், வளையும் தன்மை கொண்டதாகவும் இருக்க உதவுகிறது.
# இங்கு கற்றுத்தரப்படும் யோகப் பயிற்சிகள் பிரசவத்தின் போது ஏற்படும் பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
# பிறக்கப் போகும் குழந்தையின் உடல் ம்ற்றும் மூளை நன்கு வளர பெரிதும் உதவுகிறது.
# பேறு காலத்திற்குப் பிறகு உடல் விரைவில் பழைய நிலையை அடைய பெரிதும் உதவுகிறது.
# சிக்கல் இல்லா சுகமான பிரசவம் என்பது இயற்கையான நிகழ்வாயிருக்க உதவுகிறது
No comments:
Post a Comment