Sunday, 20 May 2012


லட்சியக் கனவு!!!

ஒவ்வொருவர் வாழ்விலும் லட்சியக் கனவு என்று ஒன்று இருக்கும். கண்டிப்பாக இருக்க வேண்டும்.இந்தக் கனவை எட்டிப் பிடிக்க நான் அறிந்து கொண்ட சில விஷயங்களை இங்கே சொல்ல ஆசைப் படுகிறேன். அது உங்களுக்கும் பயன் அளிக்கும் என்று நம்புகிறேன்.

நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வது நம் மனம் தான்." நான் சந்தோஷமாக இருக்கிறேன்", என்று நீங்கள் கருதினால் சந்தோஷமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால் சந்தோசம்' மிஸ்' ஆகிவிடும். ஆகையால், சந்தோஷமாக இருங்கள்.

ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் நிறைவேறவில்லையே என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.

பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருப்தியெனக் கொண்டால், இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.

"வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும்".
இந்தப் பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடாகவே மாறும்.

ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் வரும் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகளை சுமக்காத திறந்த மனது தான் ஆனந்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment