Friday, 18 May 2012


அம்மா!!!

உன்னை எதனோடு ஒப்பிட?

இறையோடு ஒப்பிட்டால்.....
ஓரிறையெனில் நிம்மதி.
அதுவே சமாதான சந்நிதி,
பல இறையெனில் கலகம்.
அதிலே மாயும் உலகம்.
மதமென்ற வேறுபாடு
மனதை நெருக்கும்....

காற்றோடு ஒப்பிட்டால்..........
தென்றலாகவா புயலாகவா?
மரங்களின் கிளையாடும்
தென்றலெனில் இதமாகும்.
மரங்களின் வேரசைக்கும்
புயலானாலோ வதமாகுமே.

மழையோடு ஒப்பிட்டால்....
விதைத்தது முளைப்பின்
மண்ணின் சிரிப்பாகும்.
முளைத்தது அழுகின்
முற்றும் வெள்ளமாகும்.

அகிலத்தில் குறையே
இல்லா நிறையேது?

ஒப்பீடுகள் எல்லாம்
ஒதுங்கி நிற்க
ஓருண்மை புரிகிறது..

அம்மாவிற்க்கு உவமை
அகிலத்திலும் இல்லை.
அகிலங்களிலும் இல்லை...

No comments:

Post a Comment