Thursday, 2 April 2015

சளிக் காய்ச்சல்:
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.
இருமல், தொண்டை கரகரப்பு:
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.
சளி :
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
டான்சில்:
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.
வாயுக் கோளாறு :
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்
பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !
இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,
இது எப்படி சாத்தியமானது ? ? ! !
கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.
படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..
பெரிய கோயில் அளவுகோல்...
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்
1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.
சாரங்களின் அமைப்பு
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.
மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது.
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலேபோதும்,
அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே
பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.
''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க.
அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும்
நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல
வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம்.
எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது. செம்பு குடம் இல்லனாலும்
பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு
தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும்
குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி
வெச்சி ருந்து குடிக்கறாங்க’’ என்று ஆதாரங்களை எடுத்து வைத்துப்பேசினார்.

1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்
ஈஷாவின் இந்த ஆன்மீக முறை மிகுந்த உயிரோட்டத்துடன் இன்னும் 600 முதல் 700 ஆண்டு காலம் தொடரும். பிறகு சற்றே குறைந்து போகும். ஆனால் குறைவான அளவில் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். எது எப்படி இருந்தாலும், ஈஷாவில் நாம் நிலைநிறுத்தியுள்ள சக்திநிலை மட்டும், அழிவே இல்லாதது. அதை அழிக்க முடியாது. எனவேதான் கற்பித்தல், சக்திநிலையிலான செயல்பாடுகள் என இந்த இரண்டிலும் ஒரு சமநிலையுடன் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
இப்போது ஈஷாவில் கற்றுக் கொடுத்தல் தான் பெரும் செயல் போல் தோன்றலாம். ஆனால் உண்மையில், என் வாழ்வில் கற்பித்தல் என்பது சிறிய பங்கு தான் வகிக்கிறது. என் செயல்முறைகள் எல்லாம் நான் பேசுவதிலோ, நான் உலகெங்கும் சென்று செய்யும் செயல்களிலோ இல்லை. என் உண்மையான செயல்முறை, நான் பல இடங்களில் தொடர்ந்து நிலைநிறுத்தும் சக்திநிலைகள் தான். அவை எப்போதும் அப்படியே நிலைத்திருக்கும்.
சக்திநிலையில் செயல்முறைகள் செய்யும் போது, அது சரியாக பராமரிக்கப்பட்டு வந்தால் ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருந்தாலும் சரி, அதை உணரும் திறனுடன் ஒருவர் அங்கு வந்தால், அங்குள்ள சக்திநிலை அவர் உள்தன்மையைத் தொட்டுவிடும். ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும், இந்த ஆன்மீக முறை உடனே புத்துயிர் பெற்றுவிடும். அப்படி திறன் கொண்ட ஒருவர் வந்து விட்டால்,அது இன்னும் பல காலம் நீட்டிக்கப்படும். அது எவ்வளவு காலம் நீட்டிக்கப்படும் என்று கணிக்க முடியாது. ஒருவர் இதே விதையைக் கொண்டு, வேறு விதமான ஒரு புதிய தோட்டத்தை உருவாக்கலாம். அதில் 500 மாம்பழங்களும் காய்க்கலாம், 5000 மாம்பழங்களும் காய்க்கலாம். அது இதைக் கையாள்பவரின் திறன் பொருத்தது.
-சத்கு
இந்த பிறவியில் எங்களால் தன்னை உணர இயலாத நிலை ஏற்பட்டால் நாங்கள் இப்போது மேற்கொள்ளும் பயிற்சிகள் அனைத்தும் அடுத்த பிறவியில் எங்களுக்குப் பயன்படுமா?
சத்குரு :- கர்மா என்பது அழிந்து போவதில்லை. அதற்காகக் கர்மாவை நீங்கள் சொல்வது போல புரிந்து கொள்ளக்கூடாது. தியானத்தை இங்கு விட்டேன். அங்கே தொடங்கலாமா என்பது போல புரிந்து கொள்ளாதீர்கள். ஒரு செயலை எந்த நோக்கத்துடன் செய்கிறீர்கள் என்பதுதான் உங்கள் கர்மாவைத் தீர்மானிக்கும். எனவே, கர்மா என்பது செயலை விட நோக்கத்தைதான் குறிக்கிறது. இப்போது ஆன்மீகப் பாதையில் இருக்கிறீர்கள். அடுத்த பிறவியில் தாயின் கருவிலிருந்து வெளிப்பட்டவுடனேயே, நீங்கள் எழுந்து, அமர்ந்து தியானம் செய்யப் போவதில்லை. மற்றவர்கள் போலவே முட்டாள்தனமாகத்தான் வாழ்வீர்கள். ஆனால் மெல்ல, மெல்ல ஒரு சூழ்நிலை உருவாகும். அதற்கான வாய்ப்புகளை வாழ்க்கை உங்களுக்கு வழங்கும். பொதுவாக, ஆன்மீகப் பாதையில் ஏற்கனவே இருப்பவர்கள் வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்காகக் கவலைப்படும் நிலை இருக்காது. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாமல், வசதிகள், பதவிகள், போன்றவற்றில் சிக்கி அவற்றிலேயே அமிழ்ந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது உங்கள் போராட்டம் மறுபடியும் வேறொரு நிலையில் தொடங்கும். ஆனால் வாய்ப்புகள் சரியாகப் பயன்படுத்தப் படுமானால், மிக நிச்சயமாக, அவர் விட்ட இடத்திலிருந்தே அது தொடங்குகிறது
ஏழு மையங்கள் / ஏழு சக்கரஸ் /
ஏழு நப்ஸ் . 9 மைய தவம் .
****************************************
இந்த ஏழு மையங்களை தூய்மை படுத்தாமல் , ஆத்மீகத்தில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாது , முதலில் இந்த மையங்களை உடலில் தெரிந்து கொள்ளா வேண்டும். அந்த அந்த மய்யத்திலேயே நினைவை செலுத்தி தவம் இயற்ற வேண்டும். அப்போது தான் அந்த மையங்கள் சுத்தம் அடைந்து , ஏழு நப்ஸ்களையும் ,
சீர் செய்து நப்ஸ் காமிலாவில் இருந்து
( துரியம் ) மேலும் உயர்ந்து சுத்தவெளியில் விரிந்து
பேரின்பத்தை அடையாளம் .
பிறந்த பயனையும் அடைய முடியும் .
காமிலான ஷெய்குவின் கரம்பிடித்து கண்களால் நைன தீட்சையும் / ஸ்பரிசதீட்சையும் , பெற்றாலும் நீங்கள் எந்த பயிச்சியும் செய்யாமல்
Enlightenment முக்தி பெற முடியாது.
( குரு வழி மட்டுமே காட்டுவார் நாம் தான் நடக்க வேண்டும் . )
1 மூலாதாரம் , நப்ஸ் அம்மார ,
நிறம் சிவப்பு தஸ்பிஹ் , லா இலாஹ இல்லல்லாஹூ.
இடம் முதுகுத்தண்டின் முனை
(கருமையம்) ( தவ நேரம் 3 நிமிடம் )
2 சுவாதிஷ்டானம் , நப்ஸ் லவ்வாமா , நிறம் ஆரஞ்சு , தஸ்பிஹ் , இல்லல்லாஹ் , இடம் அடி வயிறு
( தவ நேரம் 3 நிமிடம் )
3 மணிப்பூரகம் , நப்ஸ் முல்ஹிமா , நிறம் மஞ்சள் , தஸ்பிஹ் , அல்லாஹூ , இடம் தெப்புள் குழிக்கு மேல்
( தவ நேரம் 3 நிமிடம் )
4 அனாகதம் , நப்ஸ் முத்மயின்னா , நிறம் பச்சை, தஸ்பிஹ் , ஹூ
இடம் , நெஞ்சுகுழி , தஸ்பிஹ் ,
( தவ நேரம் 3 நிமிடம் )
5 விசுத்தி , நப்ஸ் ராழியா நிறம் நீலம் , தஸ்பிஹ் , யாஹக் இடம் தொண்டையில் முடிச்சு
( தவ நேரம் 3 நிமிடம் )
5 ஆக்கினை , நப்ஸ் மர்ளியா , நிறம் கிரே ,தஸ்பிஹ் , யாஹையு யாகையூம் , இடம் புருவமத்தி
( தவ நேரம் 5 நிமிடம் )
6 துரியம் , நப்ஸ் காமிலா
நிறம் வைல்ட் , தஸ்பிஹ் யாகஹ்ஹார் , இடம் உச்சந்தலை ,
( தவ நேரம் 5 நிமிடம் )
துவதசங்கம் உச்சிக்கு மேல் 12 " அங்குலம்
சந்திரனில் சற்று விரந்து
தவம் செய்து பிறகு
சூரியனில் விரிந்து பிறகு
சக்திகளத்தில் தவம் இயற்றி பிறகு
துரியாதீதம் , சுத்தவெளி , தூயவெளி / பிரம்மம் / ஆற்றல்களம் /சிவகளம்/
அநாதி / அல்லாஹ்.
இந்த இடத்தில் கரைந்து விட வேண்டும் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இருக்கலாம் , பிறகு படிப்படியாக இறங்கி ஆக்கினை சக்ராவில் இருந்து தவத்தை நிறைவு செய்யவும்.
இந்த முறையில் தியானம் வாரத்திற்கு இருமுறை செய்யவும்.
இப்படி செய்து வந்தால் நப்ஸ்கள் சீர் செய்யபட்டு அனைத்து விதமான
உணர்சிகளும் நமக்கு அடக்கம்.
இல்லை என்றால் உணர்ச்சிகளுக்கு
நாம் அடக்கம்.
'ஹக்' அல்ஹம்துலில்லாஹ்