ஈஷாவின் இந்த ஆன்மீக முறை மிகுந்த உயிரோட்டத்துடன் இன்னும் 600 முதல் 700 ஆண்டு காலம் தொடரும். பிறகு சற்றே குறைந்து போகும். ஆனால் குறைவான அளவில் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். எது எப்படி இருந்தாலும், ஈஷாவில் நாம் நிலைநிறுத்தியுள்ள சக்திநிலை மட்டும், அழிவே இல்லாதது. அதை அழிக்க முடியாது. எனவேதான் கற்பித்தல், சக்திநிலையிலான செயல்பாடுகள் என இந்த இரண்டிலும் ஒரு சமநிலையுடன் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
இப்போது ஈஷாவில் கற்றுக் கொடுத்தல் தான் பெரும் செயல் போல் தோன்றலாம். ஆனால் உண்மையில், என் வாழ்வில் கற்பித்தல் என்பது சிறிய பங்கு தான் வகிக்கிறது. என் செயல்முறைகள் எல்லாம் நான் பேசுவதிலோ, நான் உலகெங்கும் சென்று செய்யும் செயல்களிலோ இல்லை. என் உண்மையான செயல்முறை, நான் பல இடங்களில் தொடர்ந்து நிலைநிறுத்தும் சக்திநிலைகள் தான். அவை எப்போதும் அப்படியே நிலைத்திருக்கும்.
சக்திநிலையில் செயல்முறைகள் செய்யும் போது, அது சரியாக பராமரிக்கப்பட்டு வந்தால் ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருந்தாலும் சரி, அதை உணரும் திறனுடன் ஒருவர் அங்கு வந்தால், அங்குள்ள சக்திநிலை அவர் உள்தன்மையைத் தொட்டுவிடும். ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும், இந்த ஆன்மீக முறை உடனே புத்துயிர் பெற்றுவிடும். அப்படி திறன் கொண்ட ஒருவர் வந்து விட்டால்,அது இன்னும் பல காலம் நீட்டிக்கப்படும். அது எவ்வளவு காலம் நீட்டிக்கப்படும் என்று கணிக்க முடியாது. ஒருவர் இதே விதையைக் கொண்டு, வேறு விதமான ஒரு புதிய தோட்டத்தை உருவாக்கலாம். அதில் 500 மாம்பழங்களும் காய்க்கலாம், 5000 மாம்பழங்களும் காய்க்கலாம். அது இதைக் கையாள்பவரின் திறன் பொருத்தது.
-சத்கு
-சத்கு
No comments:
Post a Comment