அற்புதங்கள் செய்யும் அத்தி!
உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வகள கூறுகின்றன. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உள்ளன.
இப்பழத்தின் இரண்டு வகை உண்டு, ஒன்று நாட்டு
அத்திப்பழம். மற்றொன்று சீமை அத்திப்பழம்.
இரண்டிலும் ஒரே அளவு சத்துக்கள்தான் உள்ளன. புதிய பழங்களை விட உலரந்த பழங்களில் நான்கு மடங்கு தாது உப்புச்சத்துக்கள் அதிகமாக உள்ளன். இப்பழத்தின் சர்க்கரைச்சத்து எளிதில் சீரணிக்கக் கூடியது. உடல் மெலிந்தவர்கள் இதை அடிக்கடி உண்டால் உடம்பின் எடையும் பலத்தையும் அதிகமாக்கும்.

அஜீரணக் கோளாறுகளுக்கு அத்திக்காயை சுத்தப்படுத்தி அதை இடித்து சாறு எடுத்து அதனோடு ஓமத்தையும் அரைத்து, கரைத்துச் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும். அத்திப்பழத்தை சிறிதுசிறிதாக நறுக்கி அதை தேனில் ஊறவைத்து தினமும் சில துண்டுகளை சாப்பிட்டு வந்தால் இருதயத்திற்கு வலிமை தரும். தினமும் ஐந்து அத்திப்பழங்களை காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை குணப்படுத்தலாம்.
சீமை அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தினால் உண்டாகும் வறட்டு இருமலை குணப்படுத்தலாம். அத்திப்பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், நுரையீரலைப் பாதுகாக்கும், தினமும் இப்பழத்தை பசும்பாலில் போட்டு காய்ச்சி பருகிவர நல்ல தூக்கத்தை தரும். குழந்தைகளை நோயின்றிப் பாதுகாக்கும், வயதானவர்களை பலமுள்ளவர்களாக வைத்திருக்கும். வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும், சிறுநீரக நோயை அகற்றும். மூலவியாதிக்கு இது நல்ல மருந்தாகும். தோல் நோய்களை நீக்கும். கல்லீரலை பலப்படுத்தும். தசைவாதத்தைப் போக்கும், உடல் எடையை அதிக்கப்படுத்தும்
No comments:
Post a Comment