Tuesday, 21 April 2015

கொள்ளுப்பால் - உணவே மருந்து!
இயற்கைப்பால் பற்றி அனைவரும் அறிந்ததே. ”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உப்புதான் மிக முக்கிய காரணம் உடலில் ஊளை சதை போடுவதற்க்கு, அது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.
100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.
முளைவிட்ட (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.
பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு

No comments:

Post a Comment