Friday, 10 April 2015

ஆடம்பரமில்லா இயற்கை அங்கடி பயிற்சி &
" வீதியெங்கும் தேவை இயற்கை உணவகம் ( Natural Food Restaurants ) " :
முன்பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுவிட்டு மறுபடியும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டுமாறு அன்புடன் கேட்ட்குக்கொள்கிறோம். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் அடுத்த பயிற்சிக்கும் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வணக்கம் இயற்கை நண்பர்களே,
ஆடம்பரமில்லா இயற்கை அங்காடி :
******************************************
இன்று இயற்கை விவசாயத்தில் விளைந்த விளைபொருட்களை சந்தைப் படுத்துவதில் விவசாயிகளுக்கும் இயற்கை அங்காடிகளுக்கும் ஒரு புரிதல் தேவைப்படுகிறது. நம்மாழ்வார் ஐயா போன்ற பல இயற்கை போராளிகளின் கடின உழைப்பிற்குப் பிறகு இன்றைய சமுதாயத்தில் மிகப்பெரும் கொள்கை புரட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தால் நுகர்வோர் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள் என அனைத்திலும் உணவு கலப்படம் , நஞ்சு கலப்படம், மரபணுமாற்ற உணவுகள் சந்தையில் தொடர்ந்து திட்டமிட்டே பன்னாட்டு கம்பெனிகளால் திணிக்கப் பட்டு வருவதை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று மக்களால் பெரிதும் நம்பப் படுவது இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்து வரும் இயற்கை அங்காடிகளைத் தான். ஆனால் இயற்கை அங்காடிகளில் இன்று அந்த நம்பகத் தன்மை என்பது கேள்விக் குறிதான். முன்னொரு காலத்தில் ஒரு தொழிலை செய்வபர்கள் அந்தத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்களாக மற்றுமே இருந்து வந்தனர். ஆனால் உலகமயமாக்கல் என்பது ஏற்பட்ட உடன் ஒவ்வொன்றும் வணிக மயமாக்கப்பட்டுவிட்ட்து. அந்த வகையில் தகவல் தொழில்நுட்டபத்துறை சார்ந்த மற்றும் படித்த பலர் இயற்கை அங்காடிகள் என்கிற பெயரில் எது இயற்கை உணவுகள் என்றே தெரியாமல் தினம் தினம் அங்காடிகளைத் தொடங்கி வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க அதை விட வேகத்தில் பல இயற்கை அங்காடிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறனர். இதற்கு காரணம் என்ன?
புரிதல் தான். பொதுவாக மூடப்படும் இயற்கை அங்காடிகள் மூடப்பட்டத்தற்கான காரணம் என்ன என்பதைப் பார்த்தால் , இவர்களுக்கு விவசாயம் என்பதே தெரியாத நபர்களாகவும், இயற்கை அங்காடிகள் அமைத்து பெரும்பணம் செலவிட்டுப் பின் அவர்களின் பணி என்பது கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து கொண்டு பணம் வாங்கிப்போடுவது என்கிற மன நிலைதான்.
மற்றொரு புறம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அங்காடிகளில் கூட சில இயற்கைபற்றிய புரிதல் இல்லாமல் ” மக்காசோளம் “ உணவாக விற்கப்படுகிறது. சீனி , அதிலும் ஆர்கானிக் சீனி , Herbo Products, Packed Cookies, முக அழகு, தலை அழகு என ஒவ்வொன்றிற்கும் ஒரு இரசாயண கலப்புள்ள பொருட்கள் இயற்கை என்கிற பெயரில் விற்கப்படுகிறது. நன்கு விபரம் அறிந்த நுகர்வோர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இவர்களின் பெயர் கெடுகிறது.
இதற்கு மேலும் இவர்கள் விற்கும் பொருளின் விலையோ சாதரண மக்கள் இவர்களை நெருங்கி விட முடியாது. காரணம் இவர்கள் பொருளின் மீது வைக்கும் மரியாதையை விட தன்னுடைய அங்காடிகளின் அலங்காரத்திலும் , குளிரூட்டிகளிலும் செய்யப் படும் முதலீடும் அந்த இயற்கை உணவுப் பொருளின் விலை சேர்கிறது. ஆனால் இவர்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது விவசாயிகளுக்காவது கட்டுபடியான விலை அளிப்பார்களா என்பது கேள்விக்குறிதான் ?....
மேலும் தங்களுடைய அங்காடிகளில் உள்ள உணவுகளை சமைக்கும் முறை மற்றும் அதனுடைய மருத்துவத் தன்மை கூட தெரிந்திருக்க வாய்ப்பு என்பது மிகக் குறைவு தான்.
தீர்வு தான் என்ன?.....
****************************
இயற்கை அங்காடிகள் நடத்தி வருபவர்களும், புதிதாக அமைக்கவிருப்பம் உள்ளவர்களும் முதலில் இயற்கைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்டிருக்க வேண்டும். பின்னர் இயற்கை வழி விவசாயம்பற்றிய பயிற்சியும் முடிந்தவரை இயற்கை விவசாயம் செய்யக் கூடிய நபர்களாகவும் இருக்க வேண்டும். குறைந்தது வீட்டுத் தோட்ட அனுபவமாவது இருக்க வேண்டும். ஆங்கில மருத்துவம் தவிர்த்து மரபு வழி மருத்துவத்தை நடைமுறையில் கடைபிடிப்பவராகவும் இருக்க வேண்டும். பின்னர் சமூக பார்வையும் கொண்டிருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட நபர்களை சமூகத்தில் உருவாக்கும் பணியில் எங்களுடைய ”சிற்பி வாழ்வியல் மையம் “ தொடர்ந்து இயங்கி வருகிறது. ”
“ எந்த மாற்றத்தை சமூகத்தில் எதிர்பார்க்கிறோமோ... அந்த மாற்றத்தை உன்னிடமிருந்தே துவங்கு “ என்கிற காந்தி அடிகளின் கருத்தை நம்மாழ்வார் ஐயா அவர்கள் எங்களுக்குள் விளைத்தன் விளைவாக , எங்களுடைய சொந்த ஊரான சிவகாசியில் அதன் வளர்ச்சி அசுர வேகம் கொண்டுள்ளது.
அதன் விளைவாக
1. காலையில் வீதியெங்கிலும் சமைக்காத முளைகட்டிய உணவுகள் & மூலிகை சாறுகள்
2. திரும்பும் பக்கங்மெல்லாம் பழ வண்டிகள் , கம்பங்கூழ் வண்டிகள்
3. ஞாயிறு தோறும் உழவர்களின் தேன்கனி நேரடி இயற்கை விளைபொருள் சந்தை
4. சிறுதானிய சிற்றூண்டிகள் & வழக்கமான உணவுகடைகளில் கூட பாரம்பரிய உணவுகள்
5. இயற்கை விவசாயப் பயிற்சிகள் & மாடித் தோட்ட அமைக்க பயிற்சிகள்
6. மகளிர் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய மரபுவழி மதிப்புக்கூட்டல் உணவுகள் என எங்களுடைய செயல்பாடுகளில் சில....
7. இளைஞர்களுக்கு சுய தொழில்கள்
இவை எங்களை விளம்பரப்படுத்துவதற்காக சொல்லப்படுபவை அல்ல....
இது போன்ற ” சின்ன மாற்றங்கள் தான் மிகப் பெரிய சமூக கட்டமைப்பை உருவாக்கும் ”என்கிற நம்மாழ்வார் ஐயாவின் கூற்றை மெய்பிக்க எங்களின் சிறு உழைப்பில் விளைந்தவை. அதிகாராமும் அறிவும் ஓரிட்த்தில் இருக்காமல் அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற நம்மாழ்வார் ஐயாவின் சொல்லை நாங்களும் ஏற்று நடக்கிறோம்.
ஆகவே எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும் , தகவலையும் , நல்மனிதர்களையும், சாறுக்கல்களையும், போராட்டங்களையும் அறிவையும் பகிர நாங்கள் தயாராக இருக்கிறோம். இது ஒரு நாளில் எங்களுக்கு கிடைக்கப் பெற்றவை அல்ல. எனவே நண்பர்களே இவையெல்லாம் தொலைபேசி வாயிலாக ஒவ்வொரு நபருக்கும் பகிர்வதென்பது எஙகளுடைய வேலைப்பளுவுக்கு நடுவே மிகக் கடினம் . ஆகவே ஒரே சிந்தனையுள்ள, ஒத்த கருத்துள்ள , இதை விட மாற்றுவழிகளுடைய நபர்களே கூடுவோம் ஒரு அனுபவ பயிற்சியில்......
நல்லதொரு சமூக கட்டமைப்பை உருவாக்க......
ஆடம்பரமில்லா இயற்கை அங்காடி &
இயற்கை உணவகம் அமைத்திட பயிற்சி ( பகிர்வு) நாள் :
*********************************************************************
நாள்: ஏப்ரல் 24, 2015 வெள்ளி காலை 10மணி முதல்
ஏப்ரல் 26 ஞாயிறு மாலை 5 மணி வரை
இடம் : சிற்பி வாழ்வியல் மையம் & தேன்கனி உழவர் சந்தை,
அண்ணாமலையார் காலனி எதிரே விநாயகர் காலனி, சிவகாசி. விருது நகர் மாவட்டம்.
தங்குமிடம் & உணவு வழங்கப்படும்.
( எளிய சூழலிலும், கூட்டு குடும்ப வாழ்க்கையை சமூகத்தில் உருவாக்க வேண்டும் என்பது தான்
நம்மாழ்வார் ஐயா எங்களுக்கு இட்ட கட்டளை . எனவே பயிற்சி நடக்கும் இடமென்பது எங்கள் வாழ்வியல் மையத்தின் வீடு தான். விடுதிகள் அல்ல... )
பயிற்சிக்கான ( பகிர்வுக்கான) கட்டணம் : ரூ. 2000/-
( இந்தக் கட்டணம் என்பது இலாபம் சம்பதிக்க வேண்டும் என்கிற எண்ணத்திற்கானது அல்ல. எங்களுடைய அமைப்பின் அடிப்படை நிர்வாக செலவுக்கும், பயிற்றுநர்களுக்கான போக்குவரத்து செலவுகள் மற்றும் பயிற்சி பெறுவோரின் இயற்கை உணவுகள் மற்றும் பழச்சாறுகள், மூலிகைகளுக்கான செலவுகள்..... )
கட்டணத்தை பயிற்சி வருமுன்னரே செலுத்துவது எங்களுடைய கரங்களை வலுசேர்க்க உதவியாக இருக்கும்.
மிககுறைந்த நபர்களைக் கொண்டு மட்டுமே பயிற்சி நட்த்தப் படும்.
முன்பதிவு அவசியம்.
முன்பதிவு கடைசி நாள் ஏப்ரல் 20 திங்கள் கிழமை
வேலைப்பளுக் காரணமாக முன்பதிவு நேரம் :
காலை 6மணி முதல் 9மணி வரை
மதியம் 2மணி முதல் 3மணி வரை
இரவு 8.30 மணி முதல் 9.30 மணிவரை
முன்பதிவு செய்ய & ஆலோசனை பெற தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண்கள் :
ஜெ.கருப்பசாமி 9443575431 , கார்த்திக் 99442 07220
பயிற்சியில் மேலும் சரிபாதியாக
வீதியெங்கும் தேவை இயற்கை உணவகம் ( Natural Food Restaurants ) " &
சத்துமிகு சிறுதானிய உணவகம் அமைக்க பயிற்சி :
***********************************************************
இன்றைய சூழலில் பாஸ்ட் புட் உணவகங்களும், நவீன ஹோட்டல்களும் பெருத்த வண்ணம் உள்ளது. மறுபக்கம் அதற்கு இணையாக மருத்துவமனைகளும், மருந்து கடைகளும் பெருத்து, தினமும் தீராத புதிய புதிய நோய்களும் கண்டுபிடிக்கப்பட்டு , மருந்துகளையும், அறுவை சிகிச்சைகளையும் செய்து கொண்டே நம்மை சோதனை எலிகளாக மாற்றியுள்ளனர். ஆனாலும் நோய்கள் தீர்ந்த பாடில்லை.
இதற்கெல்லாம் தீர்வாக ஆரோக்கியத்திற்கு மதிப்பளிக்கும் மாறுபட்ட மக்களும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சிவகாசியை சேர்ந்த மாறன் ஜீ .
அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக “ தாய்வழி இயற்கை உணவகம் ” நடத்தி வருகிறார். அங்கு மறைந்து போன பாரம்பரிய உணவுகள் முதல் சமைக்காத இயற்கை உணவுகள் வரை அடங்கும். அதில் பல மூலிகைகளும் அடங்கும்.
இதன் மூலம் சிவகாசியில் பாஸ்ட் புட் கடைகளுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்வது முற்றிலும் தடைபட்டு , அலோபதி மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்வது தடைபட்டு , மற்ற நகரங்களைக் காட்டிலும் நோயுற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
காரணம் இது உணவகம் மட்டுமல்ல. இவர் மக்களுக்கு ஆரோக்கிய உ ணவை வழங்குவதோடு மட்டுமல்லாமல் , அந்த உணவுகளை தாயரிப்பது பற்றியும், அதன் மருத்துவத் தன்மைபற்றியும் எந்த ஒரு ” ஒளிமறைவுமில்லாமல் ” கற்றும் கொடுக்கிறார்.
மேலும் இன்று உணவுகளை எப்படி உண்பது என்பது வரைக்கும் நாம் மறந்து, நோயாளிகாளாய்ப் போன நிலையில் அதிலிருந்து நம்மை மீட்கத் தேவையான “ இயற்கை வாழ்வியல் கலைகளை “ பயிற்சியாகவும் அளிக்கிறார்.கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் முதல் பள்ளி, கல்லூரிகள் வரை ” இயற்கை வாழ்வியல் விழிப்புணர்வு ” கூட்டங்களும் நடத்திவருகிறார்.
நம்மாழ்வார் ஐயாவும் இவரை தன்னுடைய வானகத்தில் நடைபெறும் பயிற்சிகளில் கலந்து கொண்டு “ இயற்கை வாழ்வியலை “ கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை தொடர் நிகழ்வாகவே வைத்திருந்தார்கள்.
இதனால் இவரது கடைகளுக்கு வரும் நோயளிகள் முற்றிலும் குணமடைந்து , பயனாளிகளாக மாறுகின்றனர். இதனால் தன் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற “ வீதியெங்கும் இயற்கை உணவகம் “ என்ற கொள்கையை சமூகத்தில் விதைத்து வருகிறார்.
இதற்கு பெரிய முதலீடு ஏதும் தேவையில்லை எனவும் கூறுகிறார். இதனால் வேலை வாய்பில்லாமல் இருப்பவர்களும், சுய தொழில் செய்ய வேண்டும் என நினைப்பவர்களும் இவரை தொடர்ந்து நாடி வருகின்றனர்.
மேலும் செலவில்லாமல் இயற்கை விளைபொருள்கள் விற்பனை செய்ய இயற்கை அங்காடிகள் அமைக்கவும் தேவையான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதலும் வழங்கி வருகிறார்.தற்போது தேன்கனி உழவர் சந்தை என்கிற கூட்டு அமைப்பை உருவாக்கி விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்தி வருகிறார்.
இதன் மூலம் சிறுதானிய விளைபொருட்கள், கைகுத்தல் சிகப்பு மற்றும் கருப்பு அரிசிகள், கவுணி அரிசி, போன்ற பல ரகங்கள், காய்கறிகள், பழங்கள் செக்கு எண்ணெய்கள், சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட லட்டு வகைகள், பலகாரங்கள் மற்றும் வீட்டுக்குத்தேவையான பலசரக்குகளை ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தை அமைத்து விவசாயிகள் மூலம் நுகர்வோருக்கு இயற்கை விளைபொருள்களை நேரடியாக அறிமுகம் செய்து வருகின்றனர்.
மேலும் இய்ற்கை வாழ்வியல் முறைகளை வரும் நுகர்வோருக்கு கற்றுக் கொடுத்து சேவையும் செய்கிறார்கள்.
மேலும் தேன்கனி உழவர் சந்தையில் நேரடி களப்பயிற்சியும், இயற்கை அங்காடி அமைத்திட தேன்கனி உழவர் நேரடி விற்பனை சந்தையின் வழிகாட்டுதலுடன் கூடிய ஆலோசனைகளும் அளிக்கப்படும்.
பயிற்சியை சிவகாசி திரு.மாறன் ஜி மற்றும் தேன்கனி உழவர் நேரடி விற்பனை சந்தையின் உறுப்பினர்கள் பயிற்சி, வானகம்( நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்) விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அளிக்கிறார்கள்

No comments:

Post a Comment