Wednesday, 19 December 2012

மனிதன் எவ்வளவு நிரம்பியுளான் என்றால் அவனைக் கண்டால் எனக்கு இரக்கம் தான் மேலிடுகிறது. அவனில் கொஞ்சமும் வெற்றிடமே இல்லை. சிறிதும் சூனியவெளியே இல்லை. சூன்யவெளி இல்லாதவன் எப்படி முக்தி அடையமுடியும். முகதிக்கான சூன்யவெளி வெளியில் அல்ல, உள்ளே இருக்க வேண்டும். யாரிடம் அகத்திலே ஆகாயம் உள்ளதோ அவன் வெளியுலக ஆகாயத்தோடு ஒன்றி விடுகின்றான். உள்ளுலக ஆகாயமும் வெளியுலக ஆகாயமும் ஒப்பிடும்போது, அந்த இணைப்பு, அந்த சங்கமம், அந்த ஒன்றுபடுதலே முக்தியாகும். அதுவே இறை அனுபவம்.

ஆகவே நான் யாருக்கும் நீ இறைவனால் நிரம்பிவிடு என்று கூறுவதே இல்லை. மாறாக எல்லாவற்றிலுமிருந்தும் மனத்தை விடுவித்துவிடு என்றே கூறுகிறேன். அப்போது தான் இறைவன் உன்னை நிரப்பி விட்டதை நீ உணர முடியும்.

மழைக்காலத்தில் மழை பொழிய ஆரம்பிக்கும்போது, குன்றுகள் அதைக்கொண்டு ஏமாற்றம் கொள்கின்றன. பள்ளங்கள் முழுமையாகப் பயன் அடைந்துகொள்கின்றன. பள்ளங்களாக மாறுங்கள். குன்றுகளாகாதீர்கள். உங்களை நிரப்பிக்கொள்ளாதீர்கள். வெறுமையாக்கிக் கொள்ளுங்கள். பரமாத்மாவின் மழையோ ஒவ்வொரு கணமும் பொழிந்தவாறே இருக்கின்றது. அந்த நீரை தன்னுள் பெற்றுக்கொள்ள மனத்தை வெறுமையாக்குபவர்கள் உடனே நிரப்பப்பட்டு விடுகிறார்கள்.

பானை வெறுமையாக இருந்தால்தான் அதற்கு மதிப்பு அதிகம். அது எவ்வளவு வெறுமையாய் இருக்குமோ அதே அளவுக்கு கடல் அதனை நிரப்பி விடுகிறது.

மனிதனின் மதிப்பும் அது போலத்தான். அவன் வெறுமையாய் இருந்தால்தான் மதிப்பு அதிகம். ஆந்த வெறுமையில்தான் கடல் இறங்குகிறது.  அவனைப் பூர்த்தியாக்கி விடுகிறது.

No comments:

Post a Comment