Kannan Jegadeesh shared Samy Jeeva's photo.
பாமரருக்கும் குருவருள்!
ஈஷா யோகா மையத்தை சுற்றிலும் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் “இந்த மையத்தில் நடக்கும் ஆன்மீகம் நமக்கொன்றும் புரியவில்லை” என்ற நிலையில் இருந்தாலும் இவங்க எல்லாம் “சாமி” என்று மைய அன்பர்களுக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் ஆதரவும் கொடுத்துவருகிறார்கள்.
இவர்களது களங்கமற்ற அன்பிற்கு பரிசாக இவர்களுக்கு இன்று கிட்டியது குருவருள்!
இப்படி ஒரு நிகழ்வின் சக்தி சூழ்நிலையை இவர்களும் ஒரு சொட்டாவது ருசிக்கவேண்டும் என்று எண்ணிய சத்குரு அவர்களை இந்த சூழ்நிலையில் இருந்தவிட்டு செல்லும்படி கூறினார்.
ஈஷா யோகா மையத்திற்கு அருகில் வசிக்கும் ஊர்மக்களுக்கு அழைப்பு கொடுத்து அவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வரிசையில் நின்று இந்த லிங்கத்தை தரிசித்துவிட்டுச் செல்கின்றனர்.
இடைவேளைப் பொழுதில் அருள் காற்றை சுவாசிக்க இவர்களுக்கு பிரத்யேக அனுமதி
21 Dec - 2.54pm
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்
சத்குரு என்னும் ஆண்மை தாங்கியிருக்கும் பெண்மையின் வழி மூன்று லிங்கக் குழந்தைகள் உயிர் பெற்றுத் திகழும் விசித்திரம் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
வெறும் குதூகலப்படுவதற்கு இவை மானிடப் பிறப்பு அல்ல! சிவம் ஈன்ற லிங்கங்கள். நேற்று வரை திடப்படுத்தப்பட்ட பாதரசமாய் இருந்த லிங்கங்கள் இன்று தெய்வீகமாய் வீற்றிருக்கும் அழகை ஈஷா யோகா மையம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
தெய்வீகம் ஊற்றெடுக்கும் தியானலிங்க க்ஷேத்திரத்தில் சூர்யகுண்ட புனிதநீர் ஊற்றெடுக்கும் அந்த அற்புத நொடியை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது இன்றைய நிகழ்வு.
சத்குரு மூன்று லிங்கத்தின் மேலும் புனித தீர்த்தத்தினை ஊற்ற, லிங்கங்களை பிணைத்துள்ள நூலிலும் அந்த தீர்த்தம் தோய்க்கப்படுகிறது.
காண வேண்டாமோ, இரு கண்ணிருக்கும்போதே காணக் கிடைக்காத இந்த காட்சியை காண வேண்டாமோ!
21 Dec - 2.18pm
மதம்பிடிக்காத யானைகள்…
சூர்யகுண்டக் கட்டுமானப் பணியில் இயந்திரங்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக இந்த இயந்திரப் பளுதூக்கிகள் (crane) இங்கே இரட்டை இலக்க எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பல தமிழக கோயில்களின் கட்டுமானங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு வியக்கிறோம். அக்காலத்தில் இது மாதிரி இயந்திரங்கள் இருந்திருக்கவில்லை. சூர்யகுண்டம் அது மாதிரி காலத்தில் உருவாக்கப்பட்டிருக்குமானால் ஈஷா மையத்தில் யானைகளின் பிளிறல்கள் நம் காதுகளைப் பதம் பார்த்திருக்கும். இந்த ராக்ஷத பளு தூக்கிகளும் யானைகள் போல்தான். அதன் நீளமான தூக்கிகள் துதிக்கை போல் நீள்கின்றன. யானைகளுக்கும் பாகர்களுக்கும் வேலையில்லாமல் நம் பணியை எளிதாக்கியுள்ளன இந்த மதம் பிடிக்காத யானைகள்.
சூரியக்குண்டத்தில் தண்ணீர் நிரப்பப்படும் தரைப்பகுதியின் முதல் அடுக்கு கருங்கல்லாலும், அதன் மேலுள்ள அடுக்கு steelலாலும், அதற்கு மேலுள்ள இறுதி அடுக்கு செப்புத் தகடாலும் செய்யப்பட்டுள்ளது. கருங்கல் அடுக்கும் steel அடுக்கும் வெறும் 15 நாட்களிலேயே முடிக்கப்பட்டது. சந்திரக்குண்டத்தில் இதே வேலை 3 மாதங்கள் பிடித்தது. சந்திரக்குண்டத்தினை விட மூன்று மடங்கு பெரியது சூரியக்குண்டம் என்பது குறிப்பிடத்தக்கது…
நம் நாட்டின் புராதன கோயில்கள் பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து ஸ்திரமாக நிற்கும் ரகசியத்தையும், கரிகாலச் சோழன் கட்டிய அணை இன்றும் கட்டிட கலை தொழில்நுட்பத்திற்கே ஒரு சவாலாக இருப்பதையும், காணும்போது நவீன கட்டிட கலையையும் மிஞ்சுகிறது நம் நாட்டின் புராதன அறிவியல் என்பது புரிகிறது.
எவ்வளவு மண் அரிப்பு ஏற்பட்டாலும் அழியாத அமைப்பு, பல ஆயிரம் ஆண்டுகளை கண்டு வரலாறு பேச சூர்யகுண்டம் இன்று இந்த தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு உலகுக்கு அர்பணிக்கப் படுகிறது.
21 Dec - 1.30pm
சக்தி அலை
மந்திர உச்சாடனமும், உடுக்கை ஒலியும் பின் புலத்தில் ஒலிக்க இந்த இடத்தின் சக்தி அதிர்வுகள் உச்சத்தை தொட இங்கும் அங்கும் நடந்தவாறு சத்குரு என்ன செய்கிறார்?
எவருக்கும் புரியாத ஒரு மொழியில் சத்குருவுக்கும் ரசலிங்கக்களுக்கும் இடையே ஒரு தகவல் பரிமாற்றம்!
லிங்கங்களை சுற்றி வைக்கப்பட்ட கற்பூரம் எறிய விண்ணளவு ஏற்பட்ட புகையோடு இந்த இடைவேளை தொடங்கியது.
இடைவேளை அறிவித்த குரு இடைவிடாமல் அருள் கொடுக்க இடம் விட்டு நகராமலேயே இருந்தார்.
மக்களுக்குதான் இடைவெளி. இடைவெளி இல்லாமல் தொடரும் இந்த சக்தியலையுடன் தொடர்பில் இருங்கள்.

No comments:
Post a Comment