Thursday, 31 January 2013

a shared இன்றய பகிர்வு(Sharing Now)'s photo.
உங்கள் ""பேஸ்ட்''ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு ""தேஜாவதி !''?????

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நன்றாக இல்லாவிட்டாலும் பொறுத்து கொள்பவர்கள், வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தை பொறுத்து கொள்ள மாட்டர். "ஹாலிடோசிஸ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வாய் துர்நாற்றத்திற்கு வாய், மூச்சுப்பாதை, உணவுப்பாதை ஆகியவற்றில் பெருகும் நுண் கிருமிகளே காரணம். வாயிலிருந்து என்ன வாடை வருகிறது என்பதை ஆராய்வதைவிட, வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு முதற்காரணமான பற்களை, சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்று நாம் உபயோகிக்கும் பலவிதமான பற்பசைகளில், உயிருக்கே உலை வைக்கும் பல அபாயகரமான பொருட்கள் அடங்கியுள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டால், பலரும் நம் பாரம்பரிய பற்பொடியை பயன்படுத்த ஆரம்பித்து விடுவர். துணி துவைக்க பயன்படும் காஸ்டிக் சோடா என்ற டிடர்ஜென்ட் பொடி, ஆய்வகங்களில் கிருமிநாசனியாக கண்ணாடி கலன்களை கழுவ பயன்படும் பார்மால்டிஹைடு, பெட்ரோலியம் சுத்திகரிக்கும் பொழுது, கழிவாக கிடைக்கக் கூடிய பாரபின் மெழுகு மற்றும் கிளிசரின், கரும்பலகைகளில் எழுத பயன்படும் சாக்பீஸ், பெயின்ட் தயார் செய்ய பயன்படும் டைட்டானியம், கேக் தயார் செய்ய பயன்படும் சாக்கரின், துணிகளின் சாயத்திற்கு பயன்படும் சாய நிறமிகள். இது மட்டுமின்றி, இவற்றை அடைத்து வைக்க பயன்படும் ககீயம் பூசப்பட்ட அலுமினிய அல்லது பிளாஸ்டிக் குப்பி ஆகியவை தான், நாம் உபயோகிக்கும் பற்பசையிலுள்ள அபாயகர பொருட்கள். பாரம்பரியமாக நாம் பயன்படுத்திய பற்பொடிகளில், இது போன்ற அபாயங்கள் இருப்பதில்லை. கவர்ச்சியான, வண்ணமில்லாத, செயற்கை வாசமில்லாத இயற்கை மணத்துடன் கூடிய பெரும்பாலான மூலிகை பற்பசைகள், நமக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அதுபோன்ற மூலிகை பற்பசைகளில் பயன்படும் சிறப்பான மூலிகை தான் "தேஜாவதி!' "சேந்தோசைலம் அலாட்டம்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட "ரூட்டேசியே' குடும்பத்தை சார்ந்த தேஜாவதி, பல்வலி மரம் மற்றும் தும்புரு என்ற பெயர் கொண்டது. வடமாநிலங்களில் குளிர் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வகையான மரங்களின் பழம் மற்றும் பட்டைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவற்றிலுள்ள லினாலூன், சிட்ரால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், தம்புலின், தம்புலால் போன்ற பொருட்கள், பல் மற்றும் ஈறுகளில் வளரும் கிருமிகளை அழித்து வாய் துர்நாற்றத்தை நீக்கி, பற்களை சுத்தம் செய்கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் நறுமண எண்ணெய் பல்வேறு வகையான மூலிகை பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. உலர்ந்த தேஜாவதி பழங்கள், கருவேலம்பிசின், கடுக்காய் தோல், நெல்லி வற்றல், தான்றிக்காய் தோல், வாய்விடங்கம், நொச்சிப்பட்டை, வேம்புபட்டை, ஓமம், கிராம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து, பொடித்து, சலித்து பல் துலக்கி வர வாய் துர்நாற்றம், பல் வலி, ஈறில் ரத்தம் வடிதல் ஆகியன நீங்கும். சித்தா ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் இமாலயா மூலிகை டென்டல் கிரீம் மற்றும் பல்வேறு வகையான மூலிகை பற்பசைகளில் தேஜாவதி சேர்க்கப்படுகிறது.

அப்பறம் என்ன? ;-)

No comments:

Post a Comment