nda's photo.
துறவிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
1. சொந்த முக்தியை நாடும் துறவிகள்
2. பிறரது முக்திக்காக உழைக்கும் துறவிகள் (ஆச்சார்யர்கள்)
என இரண்டு வகை துறவிகள் இருக்கிறார்கள்
சொந்த முக்தியை நாடி இந்த உலக வாழ்வை விட்டுச்செல்லும் துறவிகள் எவ்வாறு வாழ்கிறார்கள்?
அவர்களைப்பற்றி சிறிதும் அறியாமல் அவர்களை தாக்கிபேசுவது சரியல்ல…….
.உணவுக்காக பிச்சையேற்று, தங்குவதற்கு இடம் இல்லாமல் வெயிலிலும் பனியிலும் மழையிலும் கஷ்டப்பட்டு,நோய் வந்தால் பராமரிக்க ஆள் இல்லாமல்.யாரிடமும் எந்த உதவியையும் எதிர் பார்க்காமல்,இறைவனை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் அந்த துறவிகள்.
இங்கே துறவிகளைப்பற்றி அவதுாறாக பேசும் யாரும் அவர்களைப்போல் ஒரு வாரம் கூட வாழ முடியாது.காமத்தையும்,இந்த உலக இன்பங்களையும் துறப்பது அவ்வளவு எளிதான காரியமா?
சொர்க்கத்தில் சென்றாலும் இறைவன் தங்களுக்கு பல கட்டழகிகளை கூட்டிக்கொடுப்பார் அந்த பெண்களோடு எல்லையற்ற காலம் உடலுறவில் ஈடுபடலாம் என்று நினைப்பவர்கள் தான் இப்படிப்பட்ட துறவிகளை குறை சொல்கிறார்கள்.
அவர்கள் உழைத்து சாப்பிடாமல் பிச்சையேற்று சாப்பிடுவது ஏன் என கேட்கிறார்கள். அந்த துறவிகளுடன் சில காலம் வாழ்ந்தவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்.அங்கே இருக்கும் துறவிகளில் பலர் நன்கு சம்பாதித்து,பணத்தை சம்பாதித்த பணக்காரர்கள்.
காதற்ற ஊசியும் கடைவழி வராது காண் என்று இந்த உலகை விட்டு சென்ற பட்டிணத்தார் எவ்வளவு பெரிய பணக்காரர் என்பது உலகம் அறியும்
இவ்வாறு இந்த உலகத்தை விட்டு தான் செல்ல வேண்டுமா?இல்லறத்தில் இருந்தால் இறைக்காட்சி கிடைக்காதா?.கிடைக்கும். அவ்வாறு இல்லறத்தில் இருந்து இறைவனை கண்டவர்கள் பலர் இருந்தார்கள்,இன்றும் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களைப்பற்றி வெளியில் தெரிவதில்லை.சிலருக்கு இல்லறம் சிறப்பாக அமைவதில்லை.அவர்கள் துறவறத்திற்கு செல்கிறார்கள்.
சிறுவயதிலேயே துறவியாக செல்பவர்களும் இருக்கிறார்கள்.ஏன் சிறுவயதிலேயே செல்கிறார்கள்?.அதற்கு காரணம் முன்ஜென்ம பலன்.முக்தியின் பாதையில் செல்பவர்கள் முக்தியை அடையாமல் இறக்க நேர்ந்தால்,மீண்டும் பிறந்து சிறுவயதிலே இறைவனை காண துறவறம் செல்கிறார்கள்.
கஞ்சா,பெண்களு்ன் உறவு போன்ற கெட்ட பழக்கங்களில் ஈடுபடும் துறவிகள் வழிதவறியவர்கள் என சொல்லப்படுகிறார்கள். இவர்களை பார்த்து நல்ல துறவிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாவம்,புண்ணியம்,நன்மை,தீமை,மான ம்,அவமானம்,குளிர்,வெப்பம் போன்ற இருமைகளை கடப்பவர்கள் முக்தியடைய தகுந்தவர்கள்.இந்த இருமை நிலையை கடந்து செல்வதற்கான பயிற்சி தான் துறவறம்.துறவறம் சென்ற உடனே ஒருவன் இறைவனை காண்பதில்லை.முக்தியிடைவதில்லை. அது நீண்ட நெடிய பயிற்சி.சிலர் வெற்றி பெறுகிறார்கள்.பலர் தோல்வியடைகிறார்கள்.
சொந்த முக்தியை நாடிச்செல்லும் இந்த துறவிகள் இந்த உலகத்தையோ சமுதாயத்தையோ பற்றி அக்கரை கொள்வதில்லை.அவைகளை விட்டு விலகி வாழவே விரும்புகிறார்கள்.சமுதாயமும் இவர்களைபற்றி அக்கரை கொள்வதில்லை.அக்கரை கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்.
3. 2. பிறரது முக்திக்காக பாடுபடும் துறவிகள் (ஆச்சார்யர்கள்.)
ஏன் பிறரது முக்திக்காக பாடுபட வேண்டும்?இவர்கள் யார்?. சிறுவயதிலே இறைவனைக்காண துறவறம் மேற்கொள்ளும் இவர்கள்.தங்கள் லட்சியத்தை விரைவிலேயே அடைந்துவிடுகிறார்கள்.அற்கு காரணம் முன்ஜென்ம பலன்.இறைவனை கண்ட பின்பு மீண்டும் இந்த சாதாரண உலகில் வாழ அவர்களால் முடியாது. எல்லையற்ற இன்பத்தை அனுபவிப்பவன்,அதை விட்டுவிட்டு இந்த துன்பம் நிறைந்த உலகில் வாழ விரும்புவானா?. இறைக்காட்சி அல்லது பிரம்மஞானம் என்று வேதங்கள் சொல்லும் அந்த நிலை சாதாரணமானதா? அது எல்லையற்ற இன்பத்தின் இருப்பிடம்.அந்த இன்பத்தை ஒரு முறை அனுபவித்தவர்களால் மீண்டும் இந்த உலக வாழ்க்கைக்கு வர முடியாது.அந்த இன்பத்திலேயே நிலைத்திருக்க,அதாவது வேதம் சொல்லும் அந்த பிரம்மத்துடன் ஒன்று கலக்கவே விரும்புவார்கள்.அவ்வாறு பிரம்த்துடன் ஒன்று கலந்தால் உடல் இயக்கம் நின்றுவிடும்,ரத்த ஓட்டம் நின்றுவிடும் மூச்சு நின்று விடும். ஏதோ ஒரு சிலரால் மட்டுமே அந்த நிலையை அனுபவித்து விட்டு மீண்டும் சாதாரண நிலைக்கு வர முடியும்.இந்த பிரம்மஞானத்தை விளக்க வேண்டுமானால், இந்த சிம்பத்தின் மூலம் அதை விளக்கலாம்..சிலர் கடலை பார்க்க சென்றார்கள் அவர்களில் சிலர் கடலின் ஓசையை கேட்கிறார்கள் கடலை பார்க்கவில்லை.சிலர் கடலை பார்த்தார்கள் அதில் இறங்க வில்லை.சிலர் கடலில் இறங்கினார்கள் மீண்டும் கரை திரும்பவில்லை,ஏதோ ஒரு சிலர் மட்டுமே கடலில் குளித்த பின்பு கரை சேர்ந்தார்கள் மற்றவர்களுக்கு கடலைப்பற்றி எடுத்து கூறினார்கள்.
இல்லற்த்தில் இருந்து இந்த உயர்ந்த பிரம்மஞானத்தை அடைந்து,பிறகு அதை மக்களிடம் தெரிவித்த ஆச்சார்யர்களும் இருக்கிறார்கள்.
1. சொந்த முக்தியை நாடும் துறவிகள்
2. பிறரது முக்திக்காக உழைக்கும் துறவிகள் (ஆச்சார்யர்கள்)
என இரண்டு வகை துறவிகள் இருக்கிறார்கள்
சொந்த முக்தியை நாடி இந்த உலக வாழ்வை விட்டுச்செல்லும் துறவிகள் எவ்வாறு வாழ்கிறார்கள்?
அவர்களைப்பற்றி சிறிதும் அறியாமல் அவர்களை தாக்கிபேசுவது சரியல்ல…….
.உணவுக்காக பிச்சையேற்று, தங்குவதற்கு இடம் இல்லாமல் வெயிலிலும் பனியிலும் மழையிலும் கஷ்டப்பட்டு,நோய் வந்தால் பராமரிக்க ஆள் இல்லாமல்.யாரிடமும் எந்த உதவியையும் எதிர் பார்க்காமல்,இறைவனை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் அந்த துறவிகள்.
இங்கே துறவிகளைப்பற்றி அவதுாறாக பேசும் யாரும் அவர்களைப்போல் ஒரு வாரம் கூட வாழ முடியாது.காமத்தையும்,இந்த உலக இன்பங்களையும் துறப்பது அவ்வளவு எளிதான காரியமா?
சொர்க்கத்தில் சென்றாலும் இறைவன் தங்களுக்கு பல கட்டழகிகளை கூட்டிக்கொடுப்பார் அந்த பெண்களோடு எல்லையற்ற காலம் உடலுறவில் ஈடுபடலாம் என்று நினைப்பவர்கள் தான் இப்படிப்பட்ட துறவிகளை குறை சொல்கிறார்கள்.
அவர்கள் உழைத்து சாப்பிடாமல் பிச்சையேற்று சாப்பிடுவது ஏன் என கேட்கிறார்கள். அந்த துறவிகளுடன் சில காலம் வாழ்ந்தவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்.அங்கே இருக்கும் துறவிகளில் பலர் நன்கு சம்பாதித்து,பணத்தை சம்பாதித்த பணக்காரர்கள்.
காதற்ற ஊசியும் கடைவழி வராது காண் என்று இந்த உலகை விட்டு சென்ற பட்டிணத்தார் எவ்வளவு பெரிய பணக்காரர் என்பது உலகம் அறியும்
இவ்வாறு இந்த உலகத்தை விட்டு தான் செல்ல வேண்டுமா?இல்லறத்தில் இருந்தால் இறைக்காட்சி கிடைக்காதா?.கிடைக்கும். அவ்வாறு இல்லறத்தில் இருந்து இறைவனை கண்டவர்கள் பலர் இருந்தார்கள்,இன்றும் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களைப்பற்றி வெளியில் தெரிவதில்லை.சிலருக்கு இல்லறம் சிறப்பாக அமைவதில்லை.அவர்கள் துறவறத்திற்கு செல்கிறார்கள்.
சிறுவயதிலேயே துறவியாக செல்பவர்களும் இருக்கிறார்கள்.ஏன் சிறுவயதிலேயே செல்கிறார்கள்?.அதற்கு காரணம் முன்ஜென்ம பலன்.முக்தியின் பாதையில் செல்பவர்கள் முக்தியை அடையாமல் இறக்க நேர்ந்தால்,மீண்டும் பிறந்து சிறுவயதிலே இறைவனை காண துறவறம் செல்கிறார்கள்.
கஞ்சா,பெண்களு்ன் உறவு போன்ற கெட்ட பழக்கங்களில் ஈடுபடும் துறவிகள் வழிதவறியவர்கள் என சொல்லப்படுகிறார்கள். இவர்களை பார்த்து நல்ல துறவிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாவம்,புண்ணியம்,நன்மை,தீமை,மான
சொந்த முக்தியை நாடிச்செல்லும் இந்த துறவிகள் இந்த உலகத்தையோ சமுதாயத்தையோ பற்றி அக்கரை கொள்வதில்லை.அவைகளை விட்டு விலகி வாழவே விரும்புகிறார்கள்.சமுதாயமும் இவர்களைபற்றி அக்கரை கொள்வதில்லை.அக்கரை கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்.
3. 2. பிறரது முக்திக்காக பாடுபடும் துறவிகள் (ஆச்சார்யர்கள்.)
ஏன் பிறரது முக்திக்காக பாடுபட வேண்டும்?இவர்கள் யார்?. சிறுவயதிலே இறைவனைக்காண துறவறம் மேற்கொள்ளும் இவர்கள்.தங்கள் லட்சியத்தை விரைவிலேயே அடைந்துவிடுகிறார்கள்.அற்கு காரணம் முன்ஜென்ம பலன்.இறைவனை கண்ட பின்பு மீண்டும் இந்த சாதாரண உலகில் வாழ அவர்களால் முடியாது. எல்லையற்ற இன்பத்தை அனுபவிப்பவன்,அதை விட்டுவிட்டு இந்த துன்பம் நிறைந்த உலகில் வாழ விரும்புவானா?. இறைக்காட்சி அல்லது பிரம்மஞானம் என்று வேதங்கள் சொல்லும் அந்த நிலை சாதாரணமானதா? அது எல்லையற்ற இன்பத்தின் இருப்பிடம்.அந்த இன்பத்தை ஒரு முறை அனுபவித்தவர்களால் மீண்டும் இந்த உலக வாழ்க்கைக்கு வர முடியாது.அந்த இன்பத்திலேயே நிலைத்திருக்க,அதாவது வேதம் சொல்லும் அந்த பிரம்மத்துடன் ஒன்று கலக்கவே விரும்புவார்கள்.அவ்வாறு பிரம்த்துடன் ஒன்று கலந்தால் உடல் இயக்கம் நின்றுவிடும்,ரத்த ஓட்டம் நின்றுவிடும் மூச்சு நின்று விடும். ஏதோ ஒரு சிலரால் மட்டுமே அந்த நிலையை அனுபவித்து விட்டு மீண்டும் சாதாரண நிலைக்கு வர முடியும்.இந்த பிரம்மஞானத்தை விளக்க வேண்டுமானால், இந்த சிம்பத்தின் மூலம் அதை விளக்கலாம்..சிலர் கடலை பார்க்க சென்றார்கள் அவர்களில் சிலர் கடலின் ஓசையை கேட்கிறார்கள் கடலை பார்க்கவில்லை.சிலர் கடலை பார்த்தார்கள் அதில் இறங்க வில்லை.சிலர் கடலில் இறங்கினார்கள் மீண்டும் கரை திரும்பவில்லை,ஏதோ ஒரு சிலர் மட்டுமே கடலில் குளித்த பின்பு கரை சேர்ந்தார்கள் மற்றவர்களுக்கு கடலைப்பற்றி எடுத்து கூறினார்கள்.
இல்லற்த்தில் இருந்து இந்த உயர்ந்த பிரம்மஞானத்தை அடைந்து,பிறகு அதை மக்களிடம் தெரிவித்த ஆச்சார்யர்களும் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment