Samy Jeeva shared Praphanjham Ngo's photo.
பிளாஸ்டிக் தட்டு + சூடான உணவு = கிட்னியில் கல்
++++++++++++++++++++++++++++++ ++++++++++++++
வீடுகளில், அலுவலகங்களில், துரித உணவகங்களில், பிக்னிக் செல்லும் குடும்பத்தினரின்
கைகளில் என்று பிளாஸ்டிக் தட்டுகளில் உணவு அருந்துவது என்பது மிகவும் சௌகரியமாக உணரப்பட்டு வருகிறது. ஆனால் அது கிட்னியில் கல் உருவாக வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிளாஸ்டிக் தட்டுகளில் சூடாக உணவை வைத்துக் கொண்டு சாப்பிட்டால் கிட்னி கல் உருவாகும் என்பதே அவர்களது ஆய்வின் முடிவாகும்.
தைவான் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் படி பிளாஸ்டிக்கில் சூடாக எதையாவது வைப்பது என்பது மெலாமைன் என்பதின் அளவை அதிகரிக்கும். இது கிட்னியில் கல் உருவாக வழிவகுக்கும். இது பற்றிய கட்டுரை டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.
சூப்களை பிளாஸ்டிக் கப்களில் அருந்தியவர்கள் மற்றும் செராமிக் கப்களில் அருந்தியவர்கள் என்று இந்த ஆய்வுக்கு இருவேறு தரப்பினர் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து உணவு அருந்துவதற்கு முன்பு சிறுநீர் மாதிரி எடுக்கப்பட்டது. பிறகு உணவு அருந்திய பிறகு 12 மணிநேரத்திற்கு ஒவ்வொரு இரண்டு மணிக்கொருதரம் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
3 வாரங்கள் கழித்து செராமிக் தட்டுகளில் அருந்தியவர்களுக்கு பிளாஸ்டிக் தட்டுகளில் உணவும், பிளாஸ்டிக் தட்டுகளில் உணவு அருந்தியவர்களுக்கு செராமிக் தட்டில் உணவும் கொடுத்து இதே போன்று சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இதில் சூடான உணவை பிளாஸ்டிக் தட்டுகளில் எடுத்துக்கொண்டவர்களின் சிறுநீர் மாதிரியில் வித்தியாசம் தெரிந்தது. மெலாமைன் அளவு கூடுதலாக இருந்தது தெரியவந்தது.
குறிப்பாக சூப்களை பிளாஸ்டிக் கோப்பைகளில் அருந்துவது என்பது கிட்னி கல் உருவாக பெரும் வாய்ப்புடைய ஒரு பழக்கமாகும் என்பது தெரியவந்தது.
பாதுகாப்பாக பிளாஸ்திக் தட்டுகள், கோப்பைகளை தவிர்ப்போமே!
++++++++++++++++++++++++++++++

No comments:
Post a Comment