கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
ஆதிமனிதன் எப்போது பார்த்தாலும் அதிகமாக பயந்து கொண்டிருந்தான். வானில் திடீரென்று தோன்றும் வெளிச்சக்கீற்றுக்கள்,தடதடவென் று ஓசையுடன் அருவியாக பொங்கி வரும் தண்ணீர்,அளவிடமுடியாத நீல வானத்தின் பரப்பு,கணக்கிடமுடியாத நட்சத்திரங்கள்,எல்லைகள் தெரியாத அலைகடல் ஆகியவற்றைப் பார்த்து அவன் மிரள ஆரம்பித்தான்.பரந்து விரிந்ததே பிரபஞ்சம் அதில் நாம் ஒரு தூசிதான் என்று எண்ணினான். அதனால் தனக்குப் புரியாத அந்த இயற்கையின் சக்திக்கு முன் பணிந்து தன்னை பாதுகாக்குமாறு வேண்டினான். மழை,சூரியன் என்று தன்னை மீறிய சக்தி எதை பார்த்தாலும் பயந்து பயந்து வணங்க ஆரம்பித்தான்.அன்று முதல் கடவுள் என்ற ஒருவர் உள்ளார் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.தொடர்ந்து பயந்து பயந்து வணங்கி வந்தமையால்தான் பயபக்தி என்ற வார்த்தை உருவாகியுள்ளது.
பிறந்ததில் இருந்தே தாயும் தந்தையும் சமூகமும் கடவுள் உண்டு உண்டு என்று சொல்லி சொல்லி வளர்த்து வந்ததால் கடவுள் உண்டு எண்பதை நீங்களும் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்.
கோவிலுக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?கடவுளை உணர்வதற்காகவா?அல்லது வேண்டுவது கிடைக்கவேண்டும் என்பதற்காகவா?கடவுள்நம்பிக்கை என்பது பெரும்பாலும் பேராசை மற்றும் பயத்தின் அடிப்படையில் தானே வளர்க்கப்பட்டு இருக்கின்றன.
கடவுள் அன்பின் வடிவம் என்றால் அவருக்கு ஏன் பயப்பட வேண்டும்?ஒரு சிறுவிதை பூமிக்குள் விழுந்தால் பெரியமரமாக வளர்ந்து விடுகிறது. இந்த விதையில் இப்படிப்பட்ட மரம் தான் வளரும் என்று நிர்ணயித்தது யார்?உங்களை மீறிய சக்தியை கடவுளின் சக்தி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்? அப்படிப் பார்க்கும் போது கடவுளை எங்கு இருந்து தொடங்கி ஆராய்ந்தோமோ அந்த இடத்திற்கே இப்போதும் வந்துவிட்டோம் என்பது புரிகிறது அல்லவா? ஆம் அது தான் இயற்கை.
”கடவுள் இருக்கிறார்” என்று யாரோ சொல்லிவிட்டார் என்பதற்காக கடவுளை நம்புவதும்,”கடவுள் இல்லை” என்று யாரோ சொல்லிவிட்டார் என்பதற்காக கடவுளை நம்பாமல் விடுவதும் எந்த வகையில் நியாயம்?
நீங்கள் எதை வோண்டுமானலும் செய்யுங்கள் ஆனால் அதன் பின்விளைவுகளை வேதனையில்லாமல் சந்தோசமாக ஏற்றுக்கொள்ள தயாராக வேண்டும். உங்கள் ஆசை அதிகமாக இருந்தால் அதை அடைவதற்கான பாதைகள் தானாகவே புலப்படும்.
ஆயிரம் கண்,பத்து கைகள்,ஆறுமுகம்,நான்கு தலை என்று கடவுளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது ஏன் தெரியுமா? நம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். அவற்றை தெரியாமல் வியாக்கியானம் பேசுவது அறிவீனம். உங்களுக்கே வீட்டில் ஒரு முகம் பகைவர்களிடம் ஒரு முகம் நண்பர்களிடம் ஒரு முகம் தெருவுக்கு தெரு மாற்றுவதற்க்கென்று எத்தனை முகங்கள்?அப்பிடியாயின் கடவுளை விட உங்களுக்குத்தான் அதிகமுகம் இருக்கின்றது.
வெறும் நம்பிக்கைகளை மட்டும் வைத்துப்பின்னப்படும் கற்பனைகளை எதற்காக நம்பவேண்டும்?
கடவுளை உருவமாகத் தேடாமல் கடவுள் தன்மையாக உங்களுக்குள் தேடிப்பருங்கள்.ஒரு விடயத்தை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்த தெரிந்தால் கடவுள் என்று ஒருவர் இல்லாமலும் சுகமாக வாழலா
ஆதிமனிதன் எப்போது பார்த்தாலும் அதிகமாக பயந்து கொண்டிருந்தான். வானில் திடீரென்று தோன்றும் வெளிச்சக்கீற்றுக்கள்,தடதடவென்

No comments:
Post a Comment