டிசம்பர் 21, 2012-ல் உலகம் அழியப்போகிறது?!

Posted on ஐப்பசி 27, 2009

ஏங்க…..உங்களுக்கு தெரியுமா டிசம்பர் 21, 2012 அன்னிக்கு உலகம் அழியப்போகுதாமே? அப்படின்னு  உங்ககிட்ட யாராவது சொன்னா…..அடக்கொடுமையே அப்படியா? ஐய்யையோ….நான் இன்னும் ஒன்னுமே அனுபவிக்கலியே முருகா?! அப்படின்னு பொலம்புர கூட்டத்துல ஒருத்தரா இருப்பீங்களா இல்ல, ஆஹா….ஆரம்பிச்சிட்டாய்ங்கடா திரும்பவும்! ஏண்டா நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா? அதான் 2000-துல ஒருமுற இப்படியெல்லாம் பிட்டப்போட்டு படுத்திட்டீங்களேடா….அது போதாதா? அப்படின்னு கடுப்பாகிற கூட்டத்துல ஒருத்தரா இருப்பீங்களா? நீங்க எந்தக் கூட்டத்துல ஒருத்தரா இருந்தாலும் சரி, 2012-ல உலகம் அழியப்போகுதுன்னு ரொம்ப நாளா ஒரு பிட்டு, இன்டர்னெட்டுள சுத்திகிட்டு இருக்குங்கோவ்!
நம்பிக்கையில்லன்னா இங்க போய் பாருங்க! இது ஒரு உதாரணம்தாங்க….ஆனா இது மாதிரி நூத்துக்கணக்குல இன்டர்னெட் முகவரிங்க இருக்கு! இதெல்லாம் ஒரு பொழப்பானு கேட்டாலும் சரி, ஆமா உண்மையிலே உலகம் 2012-ல அழியப்போகுதானு சந்தேக/பயப்பட்டாலும் சரி, இது ஒரு புரளி….புரளி….புரளி மட்டுமே! அப்படின்னு நான் சொல்லலீங்க! இந்த புறளியப்படிச்சுட்டு/பார்த்துட்டு உலக மக்கள்ல பல பேரு நாசாவைச் சேர்ந்த, உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வாளர் டேவிட் மோரிசனுக்கு மின்னஞ்சல் மழையா பொழிஞ்சாங்களாம்! அந்த மின்னஞ்சல் மழையில் தொப்பலா நனஞ்சி?! இம்ச தாங்காம இந்த புறளியில என்னதான் இருக்குன்னு கண்டுபிடிக்க ஒரு ஆய்வையே மேற்கொண்டதாகச் சொல்றாரு மோரிசன்.அந்த ஆய்வின் மூலம்தான் அது வெறும் புரளின்னு கண்டுபிடிச்சிருக்கார் அவர்!
சரி, அப்படி என்னதான் அந்த புரளின்னு கொஞ்சம் வெளக்கமாப் பார்போம் வாங்க. அதாவது, சமீபத்துல திடீர்னு இணையதளத்துல ஒரு புரளி கெளம்புச்சி. அது என்னன்னா, மாயன் நாள்காட்டி அப்படின்னு ஒரு நாள்காட்டி இருக்காம்.அந்த நாள்காட்டி இப்பொ நாம் பயன்படுத்துற “க்ரிகோரியன் காலண்டர்” மாதிரி இல்லையாம்.அது கிட்டத்தட்ட மூனு நாள்காட்டி ஒன்னா சேர்ந்த நாள்காட்டியாம் (சொல்லப்போனா இன்னும் நெறைய பிட்ட போடராங்கோ….!).இந்த மாயன் காலண்டர்லதான்  டிசம்பர் 21, 2012 அன்னிக்கு உலகம் அழியப்போகுதுன்னு போட்டிருக்காம்.அதாவது, ஒரு பெரிய விண்வெளிக்கல் தாக்கி நம்ம பூமி சுக்கு நூறா ஒடஞ்சி தூள் தூளாகப் போகுதாம்!?
மாயன் காலண்டர்?! ( படம்:கூகுள்)
மாயன் காலண்டர்?! ( படம்:கூகுள்)
இந்த கதை எல்லாமே உடான்ஸு/டுபாக்கூருங்க கெளப்பின வெறும் புரளின்னு தெளிவா சொல்லிட்டாரு மோரிசன்! அதாவது, நம்ம வடிவேலு காமெடியில வர்ர மாதிரி பல பேரு கெளம்பி, ஊர ஏமாத்தி பணம் சம்பாதிக்க போட்ட பிட்டு/பீலான்னு சொல்லிட்டாரு அவரு! ஹாங்…..அது எப்படி? அப்படிச் சும்மா சோலிட்டா வுட்ருவோமா? வெவரத்தக் கேப்போமுல்ல….அப்படின்னு நீங்க சட்டையப் புடிப்பீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும் மக்களே.அதுக்குத்தான் அவரு எப்படி இது ஒரு புரளின்னு  சொல்றாருன்னு அவரையே கேப்போம் வாங்க!
ஐய்யய்ய….என்னங்க அவரு, ஆய்வு பத்தி எதாவது சொல்லுவாருன்னு பார்த்தா, ஆய்வறிக்கை இருக்கிற இந்த பி.டி.எஃப் காப்பியக் குடுத்துட்டு கம்பி நீட்டிட்டாரு?! சரி சரி, ஒன்னும் டென்சன் ஆகாதீங்க.எனக்குப் புரிஞ்ச வரைக்கும் நான் சொல்றேன் (உண்மையச் சொல்லனும்னா விண்வெளின்னாவே நமக்கு “கண்ண கட்டி காட்டுல வுட்டது மாதிரி இருக்கும்!?).  அதாவது, உலகம் எப்படி அழியப்போகுதுங்கறதுக்கு பல யூகத்தை சொல்ற விஞ்ஞானிங்க/டுபாக்கூருங்க,   நிபிருங்கர ஒரு கிரகம் இருக்கறதாவும், அந்த கிரகத்தோட மோதிதான் உலகம் சுக்கு நூறாப் போகப்போகுதுன்னும்  புரளியக் கெளப்பி விட்ருக்காங்க இணையத்துல! ஆனா மோரிசன் என்ன சொல்றாருன்னா, இது எல்லாம் ஒரு வித விண்வெளி சம்பந்தப்பட்ட பயம்னும், அந்த வகையான பயத்துக்கு “காஸ்மோ ஃபோபியா” அப்படின்னு பேருன்னும் சொல்றாரு!
உலகப் புகழ் பெற்ற டேவிட் மோரிசன் அவர்கள்,  நாசாவின் விண்வெளித்துறை ஆராய்ச்சியில் ஒரு புலின்னு சொல்றாங்க. ஆனா அவருதான், நாசாவோட ஒரு பொதுமக்கள் சேவையான “கேளுங்கள் ஒரு விண்வெளித்துறை ஆய்வாளரை” (“Ask an Astrobiologist”) சேவையோட பொதுமக்கள் விஞ்ஞானியாம்.அந்த சேவையில அவரு, பொதுமக்களோட விண்வெளி சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லுவாராம். இந்தச் சேவை மூலமாத்தான் அவரு 2012 உலக அழிவப் பத்தி , பொதுமக்கள்கிட்ட இருந்து பல கேள்வி வர்ரத பார்த்துட்டு இதுல என்னதான் இருக்குன்னு கண்டுபிடிக்க ஒரு ஆராய்ச்சி பண்ணாராம்!
அந்த ஆய்வோட முடிவில அவரு கண்டுபிடிச்ச விஷயங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்றதுக்காக கேள்வி-பதில் அடங்கிய ஒரு ஆய்வறிக்கைய தயாரிச்சிருக்காங்க.அதவிட முக்கியமா/சுவாரசியமா  அவரு கண்டுபிடிச்சது என்னன்னா,  இந்த உலகம் அழியபோகுதுங்கற புரளியைப் பயன்படுத்தி மக்கள குழப்புரதுக்காகவே “2012″ அப்படின்னு ஒரு திரைப்படத்த எடுத்துருக்காங்க அமெரிக்காவுல! அந்த படம் வர்ர நவம்பர்ல திரைக்கு வருதாம். அது பத்தின ஒரு ட்ரெய்லர நீங்க கீழே பார்க்கலாம்…..
மோரிசன் அவர்களோட ஆய்வைப் பத்தியும், 2012-ல உலக அழிவு அப்படிங்கறது வெறும் புறளிதான் உணமையில்ல அப்படிங்கறத புரிஞ்சிக்கிறதுக்கும் வசதியா ஒரு உரை தயாரிச்சிருக்காங்க.அதாங்க….. நம்ம கோணார் தமிழ் உரை மாதிரி! அந்த உரையை நீங்கள்இங்கு சென்று படிக்கலாம்.
இந்த புரளி சம்பந்தப்பட்ட இன்னொரு குறும்படமும் இருக்கு மக்களே! இந்த படத்தைப் பாருங்க இது ஒரு புரளிதான்னு உங்களுக்கே நல்லாப் புரியும்……
சரி நட்புகளே….இப்போ நீங்க இந்த புரளி பத்தி என்ன  நெனைக்கிறீ ங்கன்னு, முடிஞ்சா ஒரு மறுமொழி எழுதி சொல்லிட்டுப் போங்களேன்!