Saturday 7 June 2014


தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் !

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

உண்மையை மற்றவருக்கும் பகிருங்கள்...!
பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில்:
Sai Madhavan added 2 new photos.
பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில்:
========================================================
இத்திருக்கோயில், தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில்,காரைக்குடியிலிருந்து 12 வது கிலோமீட்டர் தொலைவில் திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடியை அடுத்து அமைந்திருக்கிறது. திருப்பத்தூரிலிருந்து ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது.
குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக்கோயில் தான் பிள்ளையார்பட்டி. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
ஆக, இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில். பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர்தான்.
எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் உண்டு. கல்வெட்டுக்கள் மூலம் இத் தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. கோயிலையும் சுற்றியுள்ள வயல் வெளிகளையும் நகரத்தார்கள் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர்.
கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சமாக இத் தலத்தில் அமர்ந்திருப்பவர் கற்பக விநாயகர். இத்தலத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை மக்கள் கற்பக விநாயகர் என்றே அழைக்கின்றனர். ஆனால், அவருக்கு தேசி விநாயகர் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க விநாயகர், அழகுள்ள விநாயகர் என்று பொருள். தேசிகன் என்ற சொல் வணிகர்களைக் குறிப்பிடும் சொல். வணிகர் குலம் தழைக்க அருள் புரியும் விநாயகர், கற்பக விநாயகர். "கற்பக விநாயகர்" திரு உருவம் காலத்தால் பழைமை வாய்ந்த வடிவமாகும்.
வலது கையில் ஒரு சின்ன லிங்கமும் இடது கரத்தைத் தனது தொந்தியைச் சுற்றியுள்ள வயிற்றுக் கச்சையின் மீது வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். தும்பிக்கை வலமாக சுழித்துக் கொண்டிருக்கும். வலம்புரியாக வளைந்த தும்பிக்கையும் தந்தங்களின் அமைப்பும் அழகாக அமைந்திருக்கிறது. மார்பில் முப்புரி நூல் இல்லாமல், வயிற்றை முப்பட்டையாலான உதரபந்தம் அலங்கரிக்க தலையில் மகுடம் சூடி வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் இடமே பிள்ளையார்பட்டி.
விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொன்று விடுகிறார். இந்த பழி விலக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார் விநாயகப் பெருமான்.சிவபெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து பூஜித்தற்கான ஐதீகத்தைக் கொண்டது இக்கோயில்.புதிய கணக்கு தொடங்கல், வியாபாரம் ஆரம்பித்தல் போன்ற காரியங்களுக்கு இத்திருக்கோயில் மிக சிறப்பு வாய்ந்தது.
கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. குடைவரைக் கோயிலை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களின் திருப்பணி. கற்றளியை அமைத்த பெருமை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பெரும்பணி. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இக் குடைவரைக் கோயில். அமைப்பிலும் அழகிலும் தனித்தன்மையுடன் அமைந்திருக்கிறது. மற்ற குடைவரைக் கோயில்களிலிருந்து மாறுபட்ட வடிவமுடையது. பெரும்பாலும் முகப்புத் தூண்களும் அரைத் தூண்களும் இல்லாத குடைவரைக் கோயில்கள் அமைந்ததில்லை, இது ஒன்றைத் தவிர.
விநாயகர் சந்நிதிக்கு எதிர்புறம் அமைந்த வடக்கு கோபுர வாயில் வழியாகச் சென்று வழிபாடு முடித்து கிழக்கு ராஜ கோபுர வாயில் வழியாக வெளியே வரவேண்டும். இதுவே மரபாகக் கொண்டுள்ளனர். வடக்கு கோபுர வாயிலின் வழியாக நுழைந்ததும் இரண்டு பக்கங்களிலும் அழகான மண்டபங்களைக் கொண்டுள்ளது. உள்ளே குடைவரைக் கோயிலைக் குடைந்து அமைக்கப்பட்ட ஆறு அடி உயர கற்பக விநாயகர் அர்த்தச் சித்திரமாகக் காட்சி தருகிறார். அவருக்கு எதிர்புறமாக கொடிமரமும் பலி பீடமும் பெரிய மூஞ்சூறின் உருவமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. குடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார்.
இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. கற்றளி எனப்படும் இந்த மருதீசர் சந்நிதி நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் திருப்பணியால் சிறப்பிக்கப்பட்டது. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.
மருதீசர் கோயிலை வலம் வருவதற்காக எழுப்பப்பட்டுள்ள திருச்சுற்றுப் பாதை நல்ல நீள, அகலத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது. திருச்சுற்று மாளிகையின் தூண்களில் வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களையும், மாளிகைப்பத்தியில் இருக்கும் பரிவார தெய்வங்களையும் நேரில்தான் பார்க்க வேண்டும். அவ்வளவு அற்புதமாக அமைக்கப்பட்டிருப்பதைச் சொல்வதற்குத்தான் வார்த்தைகளே இல்லை. மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது. நகரத்தாரின் முதல் திருப்பணியின்போது இச்சந்நிதி அமைக்கப்படு அம்மன் பிரதிட்சை செய்யப்பட்டுள்ளது. காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.
கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. ராஜகோபுரத்தைவிட காலத்தால் பழைமை வாய்ந்தது இக்கோபுரம்.
விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப்ப்ரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது.
பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்பது நாள்கள் முன்பாக காப்புக் கட்டி, கொடியேற்றம் செய்து திருவிழா தொடங்குகிறது. இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நிகழும்.

கருக்கலைப்பு செய்தால் பாவமா?

 
 
கேள்வி
நானும், என் கணவரும் அடுத்த மூன்று வருடங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக இப்போது கர்ப்பமாகி இருக்கிறேன். இந்தக் குழந்தையைக் கலைத்துவிடலாம் என்று நினைக்கிறேன். இது கடவுளுக்கு எதிரான குற்றம் என்கிறாள் அம்மா. கருக்கலைப்பு என்பது கடவுளுக்கு எதிரான பாவமா?
சத்குரு:
கடவுளை எதற்கு அநாவசியமாக இழுக்கிறீர்கள்? நீங்கள் கர்ப்பமானதற்கு நீங்கள்தான் பொறுப்பு அல்லவா? கருக்கலைப்பு கடவுளுக்கு எதிரான பாவமோ, இல்லையோ பொறுப்பில்லாமல் கர்ப்பமாவது மனித குலத்துக்கு எதிரான பாவம். எப்போது ஒரு புதிய உயிர் உங்களுக்குத் தேவையில்லையோ, அதற்கு முதலில் இடம் கொடுத்திருக்கவே கூடாது தானே?
உங்களுக்குள் உருவாகும் உயிரே உங்களுக்குப் பொருட்டில்லாமல் போகும்போது, வெளியில் இருக்கும் வேறு எந்த உயிர்தான் உங்களுக்கு மதிப்புள்ளதாகத் தோன்றப் போகிறது?
கடவுள் கருக்கலைப்பை ஏற்பாரா, மாட்டாரா என்பதல்ல கேள்வி. உங்கள் மீதும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மீதும், உருவாகிக் கொண்டிருக்கும் உயிர் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் மனிதநேயத்தைப் பற்றியதே இந்தக் கேள்வி.
சக உயிர்களை மதிக்கத் தெரியாதது சந்தேகம் இல்லாமல் பாவச் செயல்தான்!
கேள்வி
அப்படியானால், கருக்கலைப்பே பாவம் என்று முத்திரை குத்திவிட முடியுமா?
சத்குரு:
ஒரு தாயைக் காப்பாற்றவோ, சரியாக உருவாகாததால் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டோ மருத்துவ ரீதியாக ஒரு கரு கலைக்கப்படுவது வேறு. ஆனால், மருத்துவத்தில் இந்த வசதி இருக்கிறது என்கிற தைரியத்தில் பொறுப்பற்று கர்ப்பமாவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
தனக்கு எதிரில் வந்த நின்ற உதவியாளரை அமெரிக்க ஜனாதிபதி நிமிர்ந்து பார்த்தார். “சட்ட அதிகாரி இதை உங்களிடம் காட்டச் சொன்னார்…” என்று கையில் ஒரு சீட்டுடன் அவர் தயங்கி நின்றார்.
“என்ன?” என்றார் ஜனாதிபதி.
“அபார்ஷன் பில்!”
ஜனாதிபதியின் நெற்றி சுருங்கியது. “அதை எதற்குச் சட்ட அதிகாரியிடம் காட்டினீர்கள்? நானே செட்டில் செய்து விடுகிறேன்…!”
கருக்கலைப்பு மசோதா என்பதைத்தான் ‘அபார்ஷன் பில்’ என்று உதவியாளர் சொன்னார் என்பது கூடவா ஜனாதிபதிக்குப் புரியாது என்று கேட்காதீர்கள். மருத்துவ வசதி இருப்பதால், பொறுப்பாக இருக்க வேண்டியவர்கள் கூட எப்படிப் பொறுப்பற்று நடந்து கொள்கிறார்கள் என்பதற்காகச் சொல்லப்பட்ட நகைச்சுவை இது.
ஆனால், கருக்கலைப்பு என்பது நகைச்சுவையான விஷயம் அல்ல. சொந்தக் காரணங்களையோ, குடும்பச் சூழ்நிலைகளையோ, சமூக அவமதிப்பையோ காரணமாக்கிக் கருக்கலைப்பு செய்து கொள்வது இன்றைக்கு அதிகமாகிவிட்டது. இதைப் பாவம் என்றோ, புண்ணியம் என்றோ பார்க்க நான் தயாராக இல்லை. இன்னொரு உயிரை எடுத்தெறிவது மனிதகுலத்துக்கு மிக எதிரானது; இது உங்களுக்கு நல்லது செய்யாது என்றுதான் சொல்கிறேன்.
கேள்வி
கவனமன்றி தவறுதலாகக் குழந்தை வந்துவிட்டது. அதை வேண்டாவெறுப்பாக பெற்றுக் கொண்டால், அதற்கல்லவா வேதனை? அதைவிட கருவிலேயே கலைக்கப்படுவது மேலானது இல்லையா?”
சத்குரு:
குழந்தையா தவறு செய்தது? தவறு செய்தது பெற்றோர்தானே? அதற்காகக் குழந்தையைத் தண்டிப்பது என்ன நியாயம்? அந்த தம்பதிகளுக்கல்லவா தண்டனை தரப்பட வேண்டும்? வேண்டாம். எந்த உயிரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
அந்தச் சிறுவனுக்குப் பன்னிரண்டு வயதானபோது, மோசமான போலியோ தாக்கியது.
“உங்கள் மகன் இந்த இரவைத் தாண்டுவது கஷ்டம்” என்று தன் பெற்றோரிடம் மருத்துவர் சொல்வதை அவன் கேட்டான். அவன் அம்மா அழுகையின் உச்சத்துக்குப் போனாள். அந்த இரவைக் கடந்துவிட்டால், அம்மாவின் துயரம் சற்றே தீரும் என்று அவன் நம்பினான். இரவு முழுக்கத் தூங்காமல் விழித்திருந்தான்.
விடிந்ததும் அம்மாவை உலுக்கி எழுப்பி, “அம்மா, பாருங்கள். நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்!” என்று கட்டிக் கொண்டான்.
அம்மாவின் சந்தோஷக் கண்ணீர், அவன் மனதில் ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்தியது. அடுத்துவரும் ஒவ்வொர் இரவையும் இதேபோல் கடக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.
இறுதியாக அவனை மரணம் வென்றபோது, அவன் வயது என்ன தெரியுமா? 75.
அந்தச் சிறுவன் மில்டன் எரிக்சன்.
மனிதனுக்கு அவனேதான் தடை என்பது பற்றி அவர் எழுதிய பல புத்தகங்கள் இன்றைக்கும் பிரபலம். மனநல சிகிச்சைகளில் பல புதிய தலைமுறைகளை அறிமுகம் செய்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் அவர்.
12 வயதோடு முடிந்து போயிருந்தால், உலகம் மில்டன் எரிக்சனை இழந்திருக்கும்.
புரிந்து கொள்ளுங்கள்… எந்த உயிரும் அர்த்தமின்றி இவ்வுலகுக்கு வருவதில்லை.
கேள்வி
வெளிப்படையாகவே கேட்கிறேன்… நீங்கள் கருக்கலைப்புக்கு எதிரானவரா?”
சத்குரு:
இல்லை. நான் எதற்கும் எதிரானவன் அல்ல!
ஒரு வாகனம் வாங்கியிருக்கிறீர்கள். சாலையில் யார் மீதும் மோதாமல் அதைச் செலுத்துங்கள் என்று சொன்னால், நீங்கள் வாகனத்துக்கு எதிரானவரா என்று கேட்பது போலிருக்கிறது இது. மின்சாரத்தையோ, நெருப்பையோ, தண்ணீரையோ பொறுப்புடன் பயன்படுத்துங்கள் என்று சொன்னால், நீங்கள் மின்சாரத்துக்கு எதிரா, நெருப்புக்கு எதிரா என்று கேட்பீர்களோ?
முழுமையான விழிப்புணர்வுடன் வாழ்க்கை கவனமாக நடத்தப்பட்டால், அதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், நவீன மருத்துவ வசதிகளைப் பொறுப்பில்லாமல் பயன்படுத்த நினைத்தால், அதைத்தான் எதிர்க்கிறேன்.
மிருகங்களிடம் பொறுப்புணர்வை எதிர்பார்க்க முடியாது. மனித குலத்திடம் எதிர்பார்ப்பது தப்பா? உயிர்களைப் பற்றிய பொறுப்பான விழிப்புணர்வுடன் செய்யப்படும் எதற்கும் நான் எதிரானவன் அல்ல. பொறுப்பற்ற செயல்களுக்கு மட்டுமே எதிரானவன்.
எது விஷம், எது அமுதம் என்று இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?

Friday 6 June 2014

 

பாபா விரும்புவது

ஒருமுறை ராம் பாபா என்ற மகா யோகி ஷீரடிக்கு பாபாவை தரிசிக்க வந்தார். அவர் யோகாவை நன்கு கற்றுத் தேர்ச்சிப்பெற்றவர். ஆகவே தனது சமாதி நிலைக்கு பாபா உதவுவார், அருள் புரிவார் என்றுதான் ஷீரடிக்கு வந்தார். அங்கே பாபா மக்கிப் போன ரொட்டியையும், வெங்காயத்தையும் சாப்பிட்டுகொண்டிருந்தார்.

இதைப் பார்த்த யோகி, இவரா எனக்கு சமாதிநிலையை கற்றுத்தரமுடியும் என சந்தேகித்தார். இவரது எண்ணத்தை அறிந்த பாபா, வெங்காயத்தை சாப்பிட்டு யாரால் செரிக்க முடியுமோ அவர்கள் மட்டுமே அதை சாப்பிடவேண்டும் என்றார். இதைக்கேட்ட யோகி பாதத்தில் வீழ்ந்து பணிந்தார்.

வைதீகம், பட்டினி, சிலவற்றை ஒதுக்கி வைக்கும்முறை - இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.
 
சித்தர் சட்டைமுனியின் வரலாறு

சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டு அவரிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருப்பதை உணர்ந்து சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார்.

போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.
சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார்.
இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர்.

அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது
திருவண்ணாமலை கிரிவலம் அனைத்துப் பாவங்களையும் போக்கி மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது. கிரிவலம் பற்றிய தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

மலையின் பெருமை

இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது.

சீல முனிவோர்கள் செறியு மலை..

சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..

ஞான நெறி காட்டு மலை..

ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..

- என்றெல்லாம் அண்ணாமலை வெண்பாவில் குரு நமசியாவர் இம்மலையைப் போற்றுகிறார்.

ராஜ கோபுரம்

கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கிரிவலம்

இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. அதன் பெயர் கிரிவலமும் அல்ல. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார். அதன் பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும். அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்க்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களில், கிழக்கிற்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை முதலில் வழிபடவேண்டும். மலை சுற்றும் சாலையில் உள்ள நந்திகேசுவரர் சன்னதியை வணங்கி வழிபட்டு பின்னர் தான் மலைவலம் வர வேண்டும். தென்கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.

வழியில் உள்ள சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. கேட்ட வரத்தைத் தர வல்லது. இங்கு கிட்டத்தட்ட 22க்கு மேற்பட்ட மகான்கள் ஜீவ சமாதியில் உள்ளனர். வழிபடுதல் சிறப்பு. தொடர்ந்து ரமணாஸ்ரமம் ஆன்ம அமைதியைத் தர வல்லது. சற்றுத் தொலைவில் விசிறி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. மன அமைதியைத் தர வல்லது. தியானம் செய்ய ஏற்ற இடம் அது.

அடுத்து வழியில் தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது. எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது நம்பிக்கை.

அடுத்து தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி, சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம் ஆகும். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியின் தலையை வணங்கிச் செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. அதனை வழிபட வேண்டும். வழியில் அடிமுடி சித்தர் ஜீவ சமாதி இருக்கும். இங்கு தியானம் செய்தால் மகத்தான புண்ணிய பலன்கள் கிடைக்கும்.

அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட வருண லிங்கம் ஆகியவை உள்ளது. அதனை வழிபட்ட பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். இங்கு அவசியம் தரிசனம் செய்தல் வேண்டும். இது மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய இடம். இவ்வாலயம் செல்லும் வழியில் மாணிக்கவாசகரின் ஆலயம் உள்ளது.

அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேர லிங்கம் காணப்படும். அடுத்து இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. இதனை பஞ்ச முக தரிசனம் என்பர். அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனையும் வழிபட்டு, வழியில் உள்ள ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும். அதனை அடுத்து எதிரே ஒரு சிறிய விருஷபாரூடர் சன்னதி இருக்கும். அதை அவசியம் வணங்க வேண்டும். ஏன் என்றால் அந்த இடத்தில்தான் உமையம்மைக்கு சிவன் காட்சி அளித்து இடப்பாகம் தந்தருளினான். ஆதலால் அதையும் தரிசித்தல் மிக மிக முக்கியமானது. அதன் பிறகு மீண்டும் பூதநாராயணர் ஆலயம் அடைந்து அவருக்கு நன்றி கூறி, தீபம் ஏற்றி வழிபட்டு, வழித்துணையாக விக்னங்கள் இல்லாமல் காத்த இரட்டைப் பிள்ளையாரையும் வணங்கி வழிபட்டு, பின் அருணாசலேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் முழுமையாகப் பூரணத்துவம் அடைகிறது.

கிரிவலம் செல்லும் முறை

நடந்துதான் செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். அங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாலவே செல்ல வேண்டும்.

திரிமூர்த்தி தரிசனம்

மலை வலம் வர உகந்த நாட்கள்:
எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே! இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும். ஏகாதசி, நீத்தார் நினைவு நாள்களிலும் கிரிவலம் வரலாம். அமாவாசை, பிறந்த நாள், திருமண நாள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களிலும் மலை வலம் வரலாம்.

கிரிவல மகிமை

புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.

சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.

சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் செவ்வாயன்று மலை வலம் வருதலை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

ஆகவே, மலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.

பிரபஞ்சத்தின் இயக்கமெல்லாம் ஒரு பூஜ்ஜிய(சூன்யம்) நிலையிலிருந்தே உருவானது. ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்தே எல்லாம் உருவானது. இயக்கங்கள் அனைத்துமே நேர், எதிர் கூறுகளின் கூட்டுத் தொகுப்பே. சமமான இடத்தை தோண்டும் போது ஒரு பள்ளமும், அதே அளவிலான மேடும் உருவாகிறது. ஆக ஒன்றுமில்லாத சமமான இடத்திலிருந்து ஏதோ ஒன்று உருவாகும் போது அதற்கு எதிரான மற்றொன்று உருவாகியே தீரும் இது இயற்கையின் விதி.

இதையே நாம் அனுபவமாக இரவு-பகல், இன்பம் - துன்பம், அகம்-புறம், ஆண்-பெண், லாபம்-நஷ்டம், பாசிடிவ்-நெகடிவ், சிவம்-சக்தி என்று காண்கிறோம். ஒரு விளையாட்டை எடுத்துக் கொண்டால் கூட ஒருவன் வெற்றியடைகிறான் என்றால் மற்றொருவன் தோல்வி அடைந்தே தீருவான் அது விதி.

இதையே கணித அடிப்படையில் பார்த்தோமானால் 1 -1= 0 . இது ஒரு சமன்பாடு. அதாவது +1 யும் -1 யும் கூட்டினால் வருவது 0 . இதில் சூக்குமம் என்ன வென்றால் 0 லிருந்தே +1ம், -1ம் உருவாகிறது. நமது பொதுவான வாழ்க்கைத் தத்துவமும் இந்த அடிப்படையில்தான் அமைந்துள்ளது. அதுவே கீதையின் தத்துவமான ''எதை நீ கொண்டு வந்தாய் ? அதை இழப்பதற்கு. எதை நீ படைத்தாய் ?அதை வீணாக்குவதற்கு. எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்து எடுக்கப்பட்டது. எதை நீ கொடுத்தாயோ அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது''. எல்லாம் பூஜ்ஜியமே. பூஜ்ஜிய நிலையில் ஆரம்பித்து பூஜ்ஜிய நிலையிலேயே முடிவதுதான் மனித வாழ்வு. இந்த உலகின் எந்தக் கோணத்தில் இருந்து எதைப் பார்த்தாலும் இதுவே இயற்கையின் நிதர்சனம்.

ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பூஜ்ஜியம் என்கிற சூனியம் என்பது ஒன்றுமே இல்லாதது அல்ல. அது அனைத்தையும் தன்னுள் ஒடுக்கி சமநிலையில் இயங்காமல் அமைதியாக இருப்பது. பூஜ்ஜியம் என்பது இதன் உட்கருத்து இதுவே. இறையாற்றலைப் போல சம நிலையில் அதாவது சுத்த வெளியாக இருக்கும் வரை எந்தச் சிக்கலும் இல்லை. அதெல்லாம் நடக்கிற கதையா ? என்று கேட்டால், முடியும். முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை. நம் முன்னோர்கள் அவ்வாறு வாழ்ந்து காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்களையே நாம் ரிஷிகள் என்றும், மகான்கள் என்றும், அவதார புருஷர்கள் என்றும், முனிவர்கள், சித்தர்கள் என்றும் போற்றி வணங்குகிறோம். நம் உடல் நிலையில் கூட இந்த சம நிலைத் தத்துவமே செயல்படுகின்றது. இரத்தஅழுத்தம், சர்க்கரை, ஹார்மோன்கள் சுரப்பது இவையெல்லாம் கூடினாலோ குறைந்தாலோ சிக்கல்தான். சமநிலையில் இருக்கும் வரை பிரச்சினைகள் இல்லை, வியாதிகள் இல்லை. இது வரவு செலவு கணக்காகட்டும், நம் பிறவிக் கணக்காகட்டும் எல்லாவற்றிலும் இந்த சமநிலைத் தத்துவம் செயல்படும். Tally அதாவது 0 ஆக வேண்டும். இந்த பூஜ்ஜிய நிலையைப் புரிந்துகொண்டு நெறியுடன் வாழ்வோமானால் நாமும் பூஜ்ஜிய நிலையை அடையலாம். அதுவே பிறவியின் நோக்கம். அதுவே பிறப்பின் இரகசியம். அதுவே மோட்ச நிலை. அதுவே பேரின்ப நிலை. அமைதிநிலை. சிதம்பர இரகசியமும் அதுதான்.

ஒரு குழந்தையானது நிமிர்ந்து அமரவோ அல்லது நிற்க்கவோ செய்யும் வரை அதற்கு மனவளர்ச்சி என்பது கிடையாது. மனவளர்ச்சி அடைந்த பிறகுதான் சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் ஆரம்பிக்கிறது. அதன் பிறகு கேள்விகளுக்கு முடிவு என்பது இல்லை. கருவில் இறையாற்றலின் வசப்பட்டிருந்த போது இருந்த 'ஸோஹம்'(நானும் நீயும் ஒன்று) என்ற நிலை வெளியே வந்த உடன் 'கோஹம்'(நான் யார்) என்ற நிலைக்கு வந்து விடுகின்றது. மீண்டும் 'சோஹம்' என்ற நிலைக்கு வருவதுதான் முக்தி என்றும், ஞானம் என்றும், மோட்சம் என்றும், விடுதலை என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு மூலாதாரத்தில் விளங்கும் சக்தியை ஸுஷும்னா நாடி வழியாக சகஸ்ராரத்தில் உள்ள சிவனிடம் கொண்டு சேர்ப்பது ஒன்றுதான் வழி. அதற்கு பூஜை, மந்திரங்கள், ஜபம், கோவில், திருவிழாக்கள், வேத சாஸ்த்திர புராணிதிகள் எல்லாம் ஆரம்ப நிலைதானே அன்றி, யோகம்(ஒன்று சேரல்) மட்டுமே சிவசக்தி ஐக்கியத்தை ஏற்படுத்தும் என்று கண்டுதான் பிரம்ம வித்தையைத் தந்தார்கள்.

விந்துவும், நாதமும், மேருவில் ஓங்கிடிற்
சந்தியிலான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே. தி.ம-619

விந்துவும் நாதமும் தலைக்குச் சென்று ஒடுங்கினால் முடிவடையும். சமாதியில் கூடிடும். முடிவில்லாத அறிவின் சிறந்த பொருள் அழகிய வெளிச்சம் தோன்றிடும். மூலாதாரத்து சக்தி தலைக்குப் போனால் இறைவனைக் காணலாம். அதாவது இந்திரியங்களை ஜெயித்தவன், வைராகி, தர்மன், தேவர்கள், பிரம்மா யாராக இருந்தாலும் சரி யார் யோகியோ அவனுக்கே மோட்சம். அதற்கு ஆத்மாவைத் தெரிந்து கொள்ள வேண்டும். சற்குருவின் உபதேஷத்தினால்தான் அது சித்தியாகும். அதற்கே அஷ்டாங்க யோகம், குண்டலினி யோகம் எல்லாம். நம் சுழுமுனை நாடியில் இயங்கும் மூலாதாரம் தொடங்கி ஆக்ஞா வரை உள்ள ஆறு ஆதாரங்களில் நடக்கும் பரிவர்த்தனத்தின் முழுமையே மனம். புற உலகில் புலன் மயக்கத்தில் விளங்கும் இது ஒரு பௌதிக விஷயமாகக் காட்சியளிக்கிறது. இந்த பௌதிக ஓட்டத்தை நிறுத்திவிட்டுப் பார்த்தால் நமக்குள் இருக்கும் மௌனத்தை(ஆத்மாவை) தெரிந்து கொள்ளலாம். அதுவே உண்மை நிலை. அதுவே ஸ்திரமாகும் போது சமாதி எனப்படுகிறது

இறந்து போதல் என்றால் என்ன?

அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.'

இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான்.

' இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.' வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.

வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.

' அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.' இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று . இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.

அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது, மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது. மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.

மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது. தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.

' நான்' என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது. முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.

திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.

தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.

' என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு' ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.

' உள்ளே இருப்பது நான். அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.

' இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல' ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.

'உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.

ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. 'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்' பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.

' இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா'

அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான். மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.

ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது. அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.

வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள். வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி.. இராமனாதபுர சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும் பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு அழகான சிவன் கோயில் இருந்தது. உலகில் பிரளயம் ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி.

வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம் எல்லாம் நனைத்தது.
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.
நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி 

அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். .

ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்.

விளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.

அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே!

அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.

எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டுபண்ணும்.

ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை

...

பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.

இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வோம்.
ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்
நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி 

அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். .

ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்.

விளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.

அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே!

அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.

எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டுபண்ணும்.

ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை

...

பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.

இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வோம்.
ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

* இதயத்தை வலுவாக்கும்.

* சிறுநீரைப் பெருக்கும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

* இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

* தாதுவை விருத்தி செய்யும்.

* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

கண் பார்வை குறைவை தீர்க்கும் வெந்தயக்கீரை...

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது. வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது
சீதாப் பழம்..!

சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்:

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்:

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்:

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்:

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:

சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

பூண்டு

நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.

தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.

தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.

பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.
சப்போட்டா பழம்

1) தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). . சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சப்போட்டாவிற்கு, ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப் பெயர் உண்டு. 

2) 100 கிராம் சப்போட்டாப் பழத்தில் புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ச் சத்து 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மில்லிகிராம், இரும்புச் சத்து 2.0 மில்லி கிராம், தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரிபோஃபிளோவின் 0.03 மில்லி கிராம், நியாசின் 0.02 மில்லி கிராம் மற்றும் வைட்டமின் சி 6.1 மில்லி கிராம் உள்ளது.

தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன் தரும். இளமைக்கு கியாரன்டி.

3) சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது., எலும்புகள் வலுவடையும்

4) இரவில் உறக்கம் வராமல் கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்து இந்த சப்போட்டா. இதை சாறாக்கி அருந்தலாம். பழக்கூழ், ஜாம், சிரெப், மில்க் ஷேக், என்று விதவிதமாய் இதைத் தயாரித்துச் சாப்பிடலாம். சப்போட்டா பழக்கூழுடன், காய்ச்சின பால்சேர்த்து கீர் மாதிரி செய்து பருகலாம். அவரவர் கற்பனைக்கும் ரசனைக்கும் ஏற்றாற் போல் செய்து கொள்ளலாம். அல்லது வழக்கம் போல 'அப்படியே சாப்பிடலாம்'.

5) இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது. சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு

6) உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும் ஆற்றல் இதற்கு உண்டு.

வாழை இலையின் பயன்கள்

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.
ஞ்சள் காமாலைக்கு எலுமிச்சை

எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, கண் நோய், ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவை குணப்படும். எலுமிச்சம் பழங்களை ஊறுகாய் போடும் முறை தவறானது. கிச்சிலி மற்றும் நார்த்தங்காய் போன்ற எலுமிச்சங் காய்களையே ஊறுகாய் தயார் செய்ய சிறந்ததாகும். எலுமிச்சம் பழத்தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவுக்கு பொரித்த படிகாரம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் தேமல் என்ற சரும நோய்க்கு இப்பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து இரவு நேரத்தில் தேகத்தின் மேல்பூசி காலையில் குளித்து வர விரைவில் தேமல் மறையும்.
மருந்தாகும் அகத்தி

அகத்திக் கீரையை உண்பவருக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்துக்கு ஒருமுறையேனும் தவறாமல் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் தேகத்தில் உஷ்ணம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும். மலம், சிறுநீர் தாரளமாக கழியும். குடல் புண் ஆற்றும்.
அகத்திக்கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிட நோய்கள் அகலும்.
பிமருத்துவம் வெந்தயம்

வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

வெந்தயம் ஒரு மா மருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள்.

இஸ்லாமியர்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கூட்டும் ஒன்றாகும். பொதுவாக சமையல் பொருளாக அனைவரின் பழக்கத்திலிருக்கும் வெந்தயத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கின்றது.

நம் நாட்டில் அனைத்துப் பாகங்களிலும் வெந்தயச் செடியைப் பயிரிடுவார்கள். இதன் இலைகளைக் கீரையாகக் சமையலில் பயன்படுத்துவார்கள்.

மழைக்காலங்களில் அதிகமாக விளையும் வெந்தயச் செடியில் பூக்கள் பூத்தபிறகு சுமார் இரண்டு செண்டி மீட்டர் நீளமான காய்கள் காய்க்கும். உலர்ந்த காய்களில் மஞ்சள் நிற விதைகள் இருக்கும். இதைத்தான் வெந்தய விதைகள் என்று கூறுவார்கள்.

மருத்துவ விஞ்ஞானிகள் வெந்தயத்தை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் மீன் எண்ணெய்க்கு சமமாக எண்ணெய்ச் சத்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, பாஸ்பேட், லெசித்தின் மற்றும் நியூக்லோ அல்பூமிக் ஆகியவை அதிகளவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனவே ஊட்டச்சத்துக்காக மீன் எண்ணெய்க்கு மாற்றாக வெந்தயத்தைப் பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நரம்புத் தளர்ச்சி, நாள்பட்ட வியாதிகளுக்குப் பிறகு ஏற்படும் பலவீனம், நரம்பு வலி, தொண்டை வலி, கழலைக் கட்டிகள், வீக்கங்கள், மார்புச் சளி, நிமோனியா ஆகியவற்றுக்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம்.

மாதவிலக்கில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கைத் தடுப்பதற்கு 3 கிராம் வெந்தயத்தைத் தேனில் கலந்து இரண்டு வேளை தரலாம். வெட்டை நோயால் தொடை மடிப்புகளில் வரும் அரையாப்புக்கட்டி, கழலைக் கட்டிகள், பொதுவான வீக்கம் ஆகியவற்றைக் குணமாக்க வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துப் பற்றுப்போடலாம்.

5 கிராம் வெந்தயத்தைப் பவுடராக்கிச் சிறிது சமையல் உப்புடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொந்தரவு, இரைப்பை பலவீனம் ஆகியவை குணமாகும். 6கிராம் வெந்தயம், சர்க்கரை ஆகிய இரண்டையும் பாலில் கொதிக்க வைத்துப் பாயசமாகக் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். 9 கிராம் வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துத் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.

ஹைதராபாத்தில் ராஷ்டிரிய போசன் அனுசந்தான் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகள் சர்க்கரை வியாதியைப் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இருதய நோயாளிகளுக்கும் தினசரி 20 கிராம் வெந்தயத்தை அரைத்து 10 நாட்கள் கொடுக்கப்பட்டது. இதன் பலனாக இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் குறைந்திருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படவில்லை என்றும், தினசரி 20 கிராம் முதல் 100 கிராம்வரை தேவைக்கேற்றபடி சாப்பிடலாம் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்க்கரை வியாதியைக் குணமாக்க சில யுனானி வைத்தியர்கள் வெந்தயத்தை மட்டும் தனியாகப் பயன்படுத்துவார்கள். பலர் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வெந்தயம் அகியவைகளைச் சமஅளவில் கலந்து பவுடராக்கி ஒரு டீஸ்பூன் அளவில் தினசரி இரண்டு வேளை சாப்பிடுவார்கள். கிராமத்தில் சில யுனானி வைத்தியர்கள் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வேப்பிலை, பிரிஞ்சி இலை, வெந்தயம் ஆகிய 5 பொருட்களையும் பவுடராக்கி வேளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் இரண்டு வேளைதருவார்கள்.

டாக்டர் காலித் கஜனவி என்பவர் கருஞ்சீரகம் 12 கிராம், காசினி விதை 6 கிராம், வெந்தய விதை 6 கிராம் அளவில் சேர்த்துப் பவுடராக்கி மூன்று கிராம் வீதம் காலை- மாலை இரண்டு வேளை தருகின்றார். தொடர்ந்து 6 மாதங்கள் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும் என்றும் அவர் கூறுகின்றார். நம் நாட்டில்; வெந்தயத்தை மூலப் பொருளாக கொண்ட பல யுனானி மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன

நெல்லிக்காயின் மகிமை

நெல்லிக்காயை விதை நீக்கி இடித்து சாறு பிழிந்து சம அளவு சர்க்கரைத் சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம். அல்லது நெல்லி வற்றலை இடித்து தூளாக்கி சம அளவு சர்க்கரைத் சேர்த்து காலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வென்னீர் அருந்தலாம். இதனால் கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக மன உளைச்சலால் ஏற்படும் கை உதறல் குணமாகும்.

பெரும்பாலும் கைகள் நடுங்குவதை நரம்புத் தளர்ச்சி என்றோ, நடுக்கல்வாதம் என்றோ எண்ணி பல உயர்ந்த மருந்துகளை அளித்தும் பலன் கிட்டாத நிலையில் நெல்லி வற்றல் சம்பந்தப்பட்ட மருந்துகள் சிறப்பான குணத்தை அளிக்கும்.

மதுமேக நோயாளிகளுக்கு நெல்லியுடன் கறிமஞ்சளும், நாவல் கொட்டையும் சம அளவுக்கு சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர நோய் விரைவில் கட்டுப்படும்.

தர்பூசணிப் பழம்

கோடைக்காலத்தில் அதிகமாக விற்கப்படும் தர்ப்பூசணி கோடைக் கனி என்றும் கூறப்படும். தாகத்தையும் நாவறட்சியையும் தவிர்க்கும் தன்மை கொண்ட தர்ப்பூசணிப்பழம் நீர்ச்சத்து மிகுந்தது இவைகள் சிவந்த நிறத்தில் மட்டுமல்லாமல் வெண்மையாகவும் கூட காணப்படும். நிறம் எதுவாயினும் இதை உண்ணலாம். சில இனிப்பாகயிருக்கும். சில ருசியே இல்லாமல் சப் பென்றும் இருக்கும். இதில் 90 சதவிகிதம் நீர் சத்தும் 3.37 சதவீதம் நார்ச் சத்தும் உண்டு. தவிர இரும்பு சத்து, தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து பாஸ்பரஸ் போன்றவைகள் சிறிய அளவில் கொண்டது. இது வைட்டமின் சி, பி. ஆகியவைகளுடன் நியாசினும் உண்டு. உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது இது, சிறுநீரை நன்கு பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்ட சத்து மிகுந்த பானம் இது.
பொன்னாங்கண்ணி

தினமும் இந்த கீரையை தினந்தோறும் உண்டு வாழ்வோருக்கு உடல் பொன்போல பளபளப்பாகும் என்பர். புரதம், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் சீயும் நிறைந்த இந்தக் கீரை குளிர்ச்சி தரக் கூடியது. பத்தியக் கீரை இது. உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலுக்கு பலம் தரவல்ல இந்தக் கீரை சொறி சிரங்குகளை போக்கி மேனியின் அழகைக் கூட்டும். கண்கள் சம்பந்தமான நோய்கள் அனைத்தையும் போக்கி நல்ல பார்வையைத் தரவல்லது இது, மூல நோய், மண்ணீரல் பாதிப்புகள் போக்கும் தன்மை இதற்கு உண்டு.

பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி என்றும், நாட்டுப் பொன்னாங்கண்ணி எனவும் இரு வகை உண்டு. வைட்டமின் ஏ செறிந்த இந்தக் கீரை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் நல்ல பளிச்சென்ற பார்வை கிடைக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும். சத்து மிகுந்த நாட்டுப் பொன்னாங்கண்ணிதான் மருத்துவத்திற்குப் பயன்படுவது, பலன் பல கொடுத்து, பலவித நோய்களையும் தீர்க்கும் இந்த கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும்.