Tuesday 27 March 2012

இறைவன் இருக்கிறாரா?

மன்னன் ஒருவனுக்கு இறைவன் இருக்கிறானா, இல்லையா என்ற சந்தேகம் வந்தது. அரசவைப் புலவரிடம் விளக்கம் கேட்டார். மறுநாள் அரசவைக்கு கறுப்பு நிற பசுவுடன் வந்தார் புலவர்.

அரசர் முன் பசுவை நிறுத்தி, காவலனை அழைத்து பால் கறக்கச் சொன்னார்.

"மன்னா, இது என்ன நிறப்பசு? கேட்டார் புலவர். பதில் - கறுப்புநிறப்பசு என்றார்."

"இதன் பால் என்ன நிறம்? வெண்மை என்றார்."

"இதன் உணவான புல் என்ன நிறம்? பசுமை என்றார்".

"அரசே... பச்சைநிறபுல்லை தின்னும் கறுப்பு நிற பசு, வெண்மை நிறப்பாலைக் கறந்திட எவர் காரணமோ, அவரே கடவுள்.

புலவர் சொன்னதைக் கேட்டதும் மன்னனின் சந்தேகம் தீர்ந்தது.
ஒரு நாள் ஸ்ரீராமசந்திர மூர்த்தி குளிக்க ஆற்றுக்கு போனார். கையில் வில் இருந்தது. பொதுவாக வீரர்கள் கையில் வில்லை எடுத்தால் எய்யாமல் வைக்க கூடாது. 

அப்படி வைக்கும் நிலைமை வந்தால் அதை பூமியில் தான் குத்தி வைக்க வேண்டும். அந்தநாள் ராமன் வில்லை ஆற்று கரையில் குத்தி வைத்து விட்டு குளிக்க சென்றார். 

திரும்பி வந்து அம்பை எடுத்த போது, வில்லின் நுனியில் ஒரு தேரை குத்து பட்டு துடித்து கொண்டிருந்தது. அதை பார்த்த ராமன் துடித்து விட்டார். 

யே.... தேரையே நான் வில்லை குத்தும் போதே நீ சத்தம் போட்டுருந்தால் இவ்வளவு நேரம் நீ வழியால் துடித்துருக்க மாட்டாயே. ஏன் மௌனமாக இருந்து விட்டாய் என்று கேட்டார். 

அதற்கு அந்த தேரை... பகவானே... எனக்கு எதாவது துன்பம் வந்தால் ராமா என்றுதான் அழைப்பேன். ஆனால் அந்த ராமனே என்னை துன்புறுத்தும் போது நான் யாரை அழைப்பது என்று தெரியவில்லை... அதனால் தான் அமைதியாக இருந்து விட்டேன் என்று சொன்னதாம். ராமனால் பதில் சொல்ல முடியவில்லை
பூஜையறையில், கண்ணாடிபோல் இருக்கும் ஸ்படிக லிங்கம் வைத்து வழிபடுவோர் ஏராளமாக இருக்கிறார்கள். இதை வழிபடும்போது,மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஸ்படிகலிங்க வழிபாட்டின் போது, உங்கள் மனதில் என்ன தோன்ற வேண்டும் தெரியுமா?
ஸ்படிகலிங்கத்திற்கு நிறம் கிடையாது. ஆனால், அதன் பின்னால் ஒரு செவ்வரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். வில்வத்தை வைத்தால் பச்சையாக இருக்கும். அதாவது, எதை வைத்துள்ளோமோ, அந்த நிறத்தை அப்படியே உள்வாங்கி நம்மிடம் காட்டும். அதே போல், நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும். நம் எதிரிக்கு கூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்கக்கூடாது. அவ்வாறு கேட்டால், அது நம்மையே வந்தடையும். எனவே, ஸ்படிக லிங்க வழிபாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமக்கு ஒரு கஷ்டம் என்றால், ""நீ பார்த்துக்கொள்'' என்று அந்த கஷ்டத்தையும் அவனிடமே சமர்ப்பித்து விடுங்கள். நடவடிக்கை எடுக்க வேண்டியது அவன் பொறுப்பு. ஸ்படிகலிங்கத்தின் முன்னால் நின்று வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மையை மட்டும் கேளுங்கள்

Sunday 25 March 2012

ஒரு பெரிய ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படவே நடுவழியில் திடீரென கவிழ்ந்தது. படகில் இருந்த பலர் மூழ்கி விட, நீச்சல் தெரிந்த இரண்டு ஆண்களும், படகோட்டியும் மட்டும் தப்பி, ஒரு பாறையில் ஏறி நின்று கொண்டனர். அப்போது, இன்னொரு படகு வந்தது. ஏறுங்கள், ஏறுங்கள்! வெள்ளம் அதிகமானால் மேலும் ஆபத்து. உங்களை கரை சேர்த்து விடுகிறேன், வாருங்கள், என்றான் அதை ஓட்டி வந்தவன்.
படகோட்டியும், தப்பி நின்ற ஒரு பயணியும் மட்டும் அதில் ஏற, இன்னொருவன் வர மறுத்தான். பயணி அவனிடம்,வந்து விடு! இதுதான் சந்தர்ப்பம், தப்பி கரைக்கு போய் விடலாம், என்றான். வேண்டாமப்பா! இந்தப் படகும் கவிழ்ந்தால் நிலைமை என்னாவது! நான் வரவில்லை. வெள்ளம் வற்றிய பிறகு தான் வருவேன், என்று அடம்பிடித்தான். படகு கிளம்பி விட்டது. அவர்கள் கரையேறி தப்பித்தனர். வெள்ளம் அதிகமாகவே பாறையே மூழ்கி அதில் நின்றவன் மூழ்கிவிட்டான். வாழ்க்கையில் எப்போதாவது தான் நல்ல சந்தர்ப்பம் வரும். குறிப்பாக மாணவர்கள் படிக்கும் காலத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். இளமையை வீணாக்கிவிட்டால், வாழ்வில் முன்னேறுவது மிகவும் கடினமாகி விடும்! 

Sunday 18 March 2012

story

ஒரு காட்டிற்கு பசுபதி, ராமன் என்ற நண்பர்கள் சென்றனர். பேசிக்கொண்டே காட்டின் அடர்ந்த பகுதிக்கு வந்துவிட்டனர். திசை தெரியாமல் எங்கு செல்வதென திகைத்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு புலி வந்து கொண்டிருந்தது.""என்னடா இது! திசையும் தெரியவில்லை, புலியும் வருகிறது. எப்படி தப்பிப்பது?'' என்றான் பசுபதி.""கவலைப்படாதே! கடவுளிடம் நம்மை ஒப்படைத்து விடுவோம். அவர் பார்த்துக் கொள்வார் என்றான் ராமன்.""நண்பா! கடவுளை நாம் ஏன் கஷ்டப்படுத்த வேண்டும். எதற்கெடுத்தாலும் கடவுளை அழைக்கும் பழக்கத்தை முதலில் நிறுத்து. அவர் நமக்கு அறிவைத் தந்துள்ளார். அதை நாம் பயன்படுத்த வேண்டும். இதோ! இந்த மரத்தில் ஏறு! புலியின் கண்ணில் படாமல் மறைந்து கொள்வோம். அது இந்த இடத்தைக் கடந்தவுடன் வந்த வழியே திரும்பிச் செல்வோம். காட்டை விட்டு வெளியேறி விடலாம்,'' என்றான் பசுபதி.ராமனும் அதைப் புரிந்து கொண்டான்.""பசுபதி! நீ சொல்வது சரி தான்! நாம் யார் மீது அதிக அன்பு வைத்திருக்கிறோமோ, யாரை அதிகம் நம்புகிறோமோ அவர்களுக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாது. நீ சொன்னபடியே செய்வோம்,'' எனச்சொல்லி மரத்தில் ஏறி மறைந்து கொண்டனர்.புலி சென்றதும், காட்டை விட்டு வெளியேறின 

Saturday 17 March 2012

கண்ணனின் காவியம்


                                                                     காலனிகளை பத்திரமாக விடுவது எப்படி 

நாம் கோவில் செல்லும் போது எப்போதும் நல்ல உடை நல்ல காலணிகள் அணிந்து செல்வது வழக்கம்.நாம் சாமி கும்பிட போகும் போது காலனியை வெளிய விட வேண்டும் சில இடத்தில் காலனி பாதுகாப்பு கடை இருக்காது.நாம் காலனியை வெளிய விட்டு சாமி கும்பிட உள்ள செல்வோம்.அப்போது நமது எண்ணம் சாமி மேல் இருக்காது.நமது கவனம்  காலனி மேல் இருக்கும்.நம்மால் சரியாக சாமி கும்பிட முடியாது.அதனால்    காலனிகளை எப்படி விட வேண்டும் என்றால் கதவின் இரு பக்கத்தில் காலனிகளை விடுவார்கள்.நாம் ஒரு காலனியை ஒரு பக்கத்தில் மற்ற வேறு பக்கத்தில் தலை கிழாக விட வேண்டும் இப்படி செய்தால் உங்க காலணிகள் திருடு போகாது.காலனி திருட வறுவர்கள் தேடி பிடித்து எடுக்க மாட்டார்கள்.சோடியாக இருந்தால் உடனே எதுத்து சென்று விடுவார்கள்.அதனால் தனி தனியாக விடுவதால் பாதுகாப்பானது

Thursday 15 March 2012

கண்ணனின் காவியம்


                                                         உயீர் என்றால் என்ன 
 உயீர் என்றால் நாம் சுவாசிக்கும் காற்று என்று நாம் நினைக்கிறோம்.அப்படி நினைத்தால் காற்று    உயீர் என்று குறிப்பிடலாம்.காற்று வேறு  உயீர் வேறு .உயீர் என்பது நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் மற்றும் நாம் வெளி அனுப்பும் கார்பன்டை ஆக்சைடு இவையோ  உயீர் எனப்படும்.நாம் எப்போதும் உயீர் மேல் கவனம் வைத்து செயல் பட வேண்டும்.அப்படி செய்தால்.நமது நடை முறை செயல் அனைத்தும் நல்ல முறையல் அமையும் 

Sunday 11 March 2012

கண்ணனின் காவியம்


                                                                     தானே புயல் 
தமிழ் நாட்டில்   தானே புயல் வந்து மக்களை பெரும் அவதி பட வைத்து விட்டது.பல மரம் வேரோடு  அழிந்து விட்டது.தற்போது கடலூர் பாண்டி காரைக்கால்.ஆகிய மாவட்டத்தில் நிறைய மரம்   வேரோடுஅழிந்து விட்டது.அதனால் நாம் அனைவரும் நிறைய மரம் நட வேண்டும் அதனால் நாம் குடும்பத்தில் உள்ளவர்கள் பிறந்த நாளில் கட்டாயம் ஒரு மரம் நட வேண்டும்.அப்படி பிறந்த நாள் கொண்டாடத குடும்பத்தில் உள்ளவர்கள். முக்கிய பண்டிகை தீபாவளி,பொங்கல் .தமிழ் திருநாள் ஆகிய தினத்தில் கண்டிப்பாக  குடும்பத்தில் உள்ளவர்கள்அனைவரும் ஆளுக்கு ஒரு மரம் நட வேண்டும் .நம்முடைய குழந்தைக்கு ஒரு ஒரு பிறந்த நாளில் ஒரு மரம் நட்டு அதில் தேதி. வருடம் குரிப்பிடவம்.அப்படி செய்தால் ஒருவன் எத்தனை ஆண்டுகள் உள்ளானோ அத்தனை மரம் வளரும் .நம்முடைய குழந்தைக்கு மரத்தின் பயன் பற்றி கண்டிப்பாக சொல்லி அவனுடைய மனதில் பதிய செய்ய வேண்டும் அப்படி செய்தால் நாம் நாட்டில் அதிக வெப்பம் இருக்காது நல்ல மழை கிடைக்கும் அதனால் கண்டிப்பாக மரம் வளர்ப்போம் 

Tuesday 6 March 2012

கண்ணனின் காவியம்


                                                            நண்பர்கள் 
நம்முடைய நண்பர்கள் எப்படி இருப்பார்கள் தெரிமா பனை மரம் மாதரி ஒருவகை .பனை மரத்தை நாம் வைப்பது கிடையாது தானாக முளைத்து நமக்கு பயன் அளிக்கும் அதொபோல் ஒரு வகை நண்பர்கள் இருப்பார்கள் .மற்ற வகை பசு மாடு போல் நாம் தினமும் தவிடு தண்ணிர் கொடுத்தால் நமக்கு பால் தரும் இந்த மாதரி நண்பர்கள் இருப்பார்கள் மற்ற வகை தேள் மாதரி தேள் எங்கு இருக்கும் எப்படி வரும் என்பது தெரியாது வந்து கொட்டி விட்டு சென்று விடும் இதோ போல் போல் ஒரு வகை நண்பர்கள் இருப்பார்கள்.நம்முடைய நண்பர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை பார்த்து நாம் பழக வேண்டும்.நல்ல நண்பர்களுடன் நாம் பழக வேண்டும் அப்படி பழகினால் நாமும் மற்றவரும் நலமாக இருக்கலாம்.கேட்ட நண்பர்கள் கூட பழகினால் நமக்கு பல தொல்லை வந்து சேரும்.நாம் பழகும் போது நல்ல நண்பர்களுடன்பழக வேண்டும்