Sunday 18 March 2012

story

ஒரு காட்டிற்கு பசுபதி, ராமன் என்ற நண்பர்கள் சென்றனர். பேசிக்கொண்டே காட்டின் அடர்ந்த பகுதிக்கு வந்துவிட்டனர். திசை தெரியாமல் எங்கு செல்வதென திகைத்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு புலி வந்து கொண்டிருந்தது.""என்னடா இது! திசையும் தெரியவில்லை, புலியும் வருகிறது. எப்படி தப்பிப்பது?'' என்றான் பசுபதி.""கவலைப்படாதே! கடவுளிடம் நம்மை ஒப்படைத்து விடுவோம். அவர் பார்த்துக் கொள்வார் என்றான் ராமன்.""நண்பா! கடவுளை நாம் ஏன் கஷ்டப்படுத்த வேண்டும். எதற்கெடுத்தாலும் கடவுளை அழைக்கும் பழக்கத்தை முதலில் நிறுத்து. அவர் நமக்கு அறிவைத் தந்துள்ளார். அதை நாம் பயன்படுத்த வேண்டும். இதோ! இந்த மரத்தில் ஏறு! புலியின் கண்ணில் படாமல் மறைந்து கொள்வோம். அது இந்த இடத்தைக் கடந்தவுடன் வந்த வழியே திரும்பிச் செல்வோம். காட்டை விட்டு வெளியேறி விடலாம்,'' என்றான் பசுபதி.ராமனும் அதைப் புரிந்து கொண்டான்.""பசுபதி! நீ சொல்வது சரி தான்! நாம் யார் மீது அதிக அன்பு வைத்திருக்கிறோமோ, யாரை அதிகம் நம்புகிறோமோ அவர்களுக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாது. நீ சொன்னபடியே செய்வோம்,'' எனச்சொல்லி மரத்தில் ஏறி மறைந்து கொண்டனர்.புலி சென்றதும், காட்டை விட்டு வெளியேறின 

No comments:

Post a Comment