Sunday 25 March 2012

ஒரு பெரிய ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படவே நடுவழியில் திடீரென கவிழ்ந்தது. படகில் இருந்த பலர் மூழ்கி விட, நீச்சல் தெரிந்த இரண்டு ஆண்களும், படகோட்டியும் மட்டும் தப்பி, ஒரு பாறையில் ஏறி நின்று கொண்டனர். அப்போது, இன்னொரு படகு வந்தது. ஏறுங்கள், ஏறுங்கள்! வெள்ளம் அதிகமானால் மேலும் ஆபத்து. உங்களை கரை சேர்த்து விடுகிறேன், வாருங்கள், என்றான் அதை ஓட்டி வந்தவன்.
படகோட்டியும், தப்பி நின்ற ஒரு பயணியும் மட்டும் அதில் ஏற, இன்னொருவன் வர மறுத்தான். பயணி அவனிடம்,வந்து விடு! இதுதான் சந்தர்ப்பம், தப்பி கரைக்கு போய் விடலாம், என்றான். வேண்டாமப்பா! இந்தப் படகும் கவிழ்ந்தால் நிலைமை என்னாவது! நான் வரவில்லை. வெள்ளம் வற்றிய பிறகு தான் வருவேன், என்று அடம்பிடித்தான். படகு கிளம்பி விட்டது. அவர்கள் கரையேறி தப்பித்தனர். வெள்ளம் அதிகமாகவே பாறையே மூழ்கி அதில் நின்றவன் மூழ்கிவிட்டான். வாழ்க்கையில் எப்போதாவது தான் நல்ல சந்தர்ப்பம் வரும். குறிப்பாக மாணவர்கள் படிக்கும் காலத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். இளமையை வீணாக்கிவிட்டால், வாழ்வில் முன்னேறுவது மிகவும் கடினமாகி விடும்! 

No comments:

Post a Comment