Saturday, 30 June 2012

கண்ணதாசன் 25

'காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!' பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது. 'நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்...

கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. 'அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்' என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.

சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.

'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்று 'கன்னியின் காதலி'யில் எழுதியது முதல் பாட்டு. 'மூன்றாம் பிறை'யில் வந்த, 'கண்ணே கலைமானே' கவிஞரின் கடைசிப் பாட்டு.

எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும். திடீரென்று காணாமல் போய்விடும். 'பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு' என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும்தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

'கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டேன்' என்பது கவிஞரின் வாக்குமூலம்.

'முத்தான முத்தல்லவோ' பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது, 'நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!'

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், 'திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமன் நாராயணா.' தனக்குப் பிடித்த பாடல்களாக, 'என்னடா பொல்லாத வாழ்க்கை', 'சம்சாரம் என்பது வீணை' ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம். 'நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்துதான்' என்பார்.

காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால், முற்றுப்பெறவில்லை!

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில் 'பராசக்தி', 'ரத்தத்திலகம்', 'கறுப்புப்பணம்', 'சூரியகாந்தி' உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் மனைவி பெயர் பொன்னம்மா. அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வயதில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

'கண்ணதாசன் இறந்துவிட்டார்' என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது!

'உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன?' என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... 'புத்தகங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!'

தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர். 'வனவாசம், மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங் கள்' என்றார்.

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர், கரு ணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத், ஜெயகாந்தன், சோ, பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல்ரீதியாக நெருக் கமான நண்பர்கள். 'கவிஞரின் தோரணையைவிட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்' என்பார் ஜெயகாந்தன்.

திருமகள், திரையலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள். தென்றல், தென்றல் திரை, முல்லை, கடிதம், கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை. 'இது எனக்குச் சரிவராது' என்றார்.

'குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை' என்று தனது தவறுகளுக்கு வெளிப் படையான விளக்கம் அளித்து உள்ளார்.

'பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப்போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது' என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!

'அச்சம் என்பது மடமையடா', 'சரவணப் பொய்கையில் நீராடி', 'மலர்ந்தும் மலராத...', 'போனால் போகட்டும் போடா...', 'கொடி அசைந்ததும்', 'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை', 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்', 'எங்கிருந்தாலும் வாழ்க', 'அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்', 'சட்டி சுட்டதடா கை விட்டதடா...' ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுதும் இருக்கும் காவியங்கள்.

இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...

'ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு

காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்
--------------------------------------------------------------------------------------

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினான். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தின் பின்பகுதி வருமாறு:-

ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.

சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினான்.

Thursday, 28 June 2012


சமையல் எரிவாயு(Gas Sylinder) கலன் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை குறிப்பு..!

நாள்தோறும் நாம் பயன்படுத்துகிற சமையல் எரிவாயு கொள்கலனின் ஆயுட்காலத்தை நாம் என்றேனும் எண்ணிப்பார்ப்பதுண்டா..

அவசர யுகத்தில் இதற்கெல்லாம் நமக்கேது நேரம் என்கிறீர்களா?

ஒரு நிமிடம் மட்டும் அதற்கு ஒதுக்குங்களேன்..

ஒரு பெரும் ஆபத்தை தவிர்க்க இந்த ஒரு நிமிடம் உதவுமென்றால் நீங்கள் நிச்சயம் இதற்கு ஒதுக்கித்தான் ஆக வேண்டும்.

இறைவனைத் தவிர எதற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம், காலாவதியாகும் காலம் என்று உண்டல்லவா?

அதுபோலத்தான் நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு கலனின் ஆயுட்காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கும். அது மேலிருக்கும் மூன்று வட்டவடிவ கைப்பிடியை தாங்கி நிற்கும் மூன்று பட்டையான கம்பிகள் இருக்கிறதல்லவா? அதில் உட்பக்கம் பார்த்தால் கொள்கலனின் ஆயுட்காலம், காலவதியாகும் தேதி போட்டிருக்கும்.

அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.. அதில் ஒரு வருடத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு எழுத்தை கொடுத்திருப்பார்கள். அதாவது
முதல் காலாண்டிற்கு A எனவும்,
இரண்டாம் காலாண்டிற்கு B எனவும்,
மூன்றாம் காலாண்டுக்கு C...
இப்படி மொத்தம் நான்காக A,B,C,D எனப்பிரித்து காலாவதியாகும் ஆண்டையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

படத்தில் B.21 என்று போட்டிருக்கிறது. இதில் B என்பது இரண்டாம் காலாண்டையும், 21 என்பது இரண்டாயிரத்து இருப்பத்தொன்றாவது வருடத்தையும் குறிக்கிறது.

அதுபோலவே தங்களுடைய சமையல் எரிவாயு கலனில் இருப்பதையும் ஒரு முறை பார்வையிட்டு சரியானதுதானா என்பதை சோதித்துக்கொள்ளுங்கள்..

ஒருவேளை முந்தைய வருடங்களாக இருந்தாலோ முந்தைய மாதங்களாக குறிக்கப்பட்டிருந்தாலோ அந்த சமையல் எரிவாயு கொள்கலனை திருப்பி தந்துவிட்டு நடப்பு தேதியிட்ட, நடப்பாண்டிலிருக்கும் கொள்கலனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

அதுபோலவே பெற்றுக்கொண்ட கொள்கலனை பாதுகாப்பான முறையில் திறந்து பழகிக்கொள்ள வேண்டும்.

மேல் மூடியை அதில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றை நம்மை நோக்கி வருமாறு ஒரு கையில் இழுத்து வைத்துக்கொண்டு, மறு கையில் அம்மூடியை மேலே இழுத்து மூடியை அகற்றலாம். நாம் பாதுகாப்பாக கையாளும் முறைகளாலும் பெரும் ஆபத்தை தவிர்க்கலாம்.!
 — with Muhamed Shifan.

Wednesday, 27 June 2012

உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும் சப்போட்டா பழம் !!!

சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.

100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.

ஒல்லியாக தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக இருக்கும். அவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்த உதவிபுரிகிறது. தோல் நீக்கியா சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடன் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
கன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிருக்கிறதா? கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும்.

ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளித்து வர அவை வறட்சி நீங்கி மென்மையாக மிளிரும். சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை கரைக்கிறது. இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வயிற்றெரிச்சல், மலச்சிக்கல், மூலநோய்க்கு சிறந்த தீர்வாகிறது.

தூக்கம் தரும் சப்போட்டா ஜூஸ்

இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸ் குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் நம்மை தாலாட்டும். பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.
பித்தம் குணமாகும்

சப்போட்டா பழ ஜூசு டன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.

முடி கொட்டுவது கட்டுப்படும்

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? கவலைவேண்டாம். உங்களுக்கு கைகொடுக்கிறது ‘சப்போட்டா கொட்டை தைலம்’. ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். பின்னர் ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த தைலத்தை சிறிதளவு பஞ்சில் நனைத்து படிப்படியாக தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். சீயக்காய், கடலைமாவு தேய்த்து குளிக்க ஒரு மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது.
நாம் சாப்பிடும் நூறு கிராம் சப்போட்டாப் பழத்தில் கீழ்க்கண்ட அளவு சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மி.கி, இரும்புச் சத்து 2.0 மி.கி, தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரைபோஃபிளோவின் 0.03 மி.கி, நியாசின் 0.02 மி.கி, வைட்டமின் சி 6.1 மி.கி.சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை.

இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.
ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும்.மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு.

சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து.சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.
அஷ்டாங்க யோகம்: ஈசன் திருவருளால் தெளிந்த ஞானத்தைப் பெற்று, அதனால் யோகத்தைக் கடைப்பிடித்தால் பிறவாப் பேரின்பமாகிய முக்தி கிட்டும். ஈசன் சனகாதி முனிவர்களுக்கு கூறிய யோக சாரம் ஜனகர், அத்திரி, வியாசர் முதலியோரால் உலகின் பிரசித்தமாயிற்று.

1. பற்றின்றி இருத்தல் இயமம். இது உண்மை பேசுவதாலும் ஒழுக்கம் வழுவாமையாலும் பற்றற்ற தன்மையாலும் ஏற்படும். மனம், வாக்கு, காயம் இம்மூன்றாலும் பெண்களைத் தீண்டாது இருப்பது பிரம்மச்சரிய நெறி, தூய்மையாக இல்லறத்தை நடத்துவதும் பிரம்மச்சரிய நெறியைச் சேர்ந்ததே. வானப்பிரஸ்த ஆசிரமம் கடைபிடிப்போர் முற்றும் துறந்த சந்நியாசிகள், மனைவியருடன் காட்டில் உறைவர்.

2. பற்றற்று இருக்குமாறு உள்ளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நியமம். இதன் மூலம் சவுசம், தவம், மகிழ்ச்சி, ஜபம், சிவ பிரணிதானம் ஆகியவற்றை அடையலாம். ஆசையின்மை என்ற மண்ணால், ஞான நீரில் உள்ளத்தை நீராட்டித் தூய்மை செய்தல் அகச்சவுசம் எனப்படும். புனித நீராடி, திருநீறு அணிதல் புறச்சவுசமாகும். தவம் என்பது சாந்திராயண விரதம் அனுஷ்டிப்பதாகும். அதாவது, வளர்பிறை அமாவாசை அன்று உபவாசம் இருந்து மறுநாள் முதல் நாள் ஒரு கவளம், இரண்டாம் நாள் இரண்டு கவளம் என்று கூட்டிக் கொண்டே சென்று பௌர்ணமி அன்று மறுபடியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்னர் தேய்பிறையில் நாளொன்றுக்கு ஒரு கவளமாக குறைத்துக் கொண்டே வந்து அமாவாசை தினம் திரும்பவும் உபவாசம் இருக்க வேண்டும். மறைநெறிகளில் நின்று ஆசிரம நிலைகளுக்கு ஏற்ப இருப்பது மகிழ்ச்சி ஆகும். ஈசனைத் தியானித்தல் சிவப்பிரணிதானம் ஆகும்.

3. ஆசனம் : யோக நிலைக்கான அங்கங்களில் ஆசனமும் ஒன்று. அது பத்மாசனம் போன்ற பல. அவற்றில் ஒன்றைக் கடைபிடிக்க வேண்டும்.

4. பிராணாயாமம் : ஏதேனும் ஒரு பொருத்தமான ஆசனத்தில் அமர்ந்து பிராணாயாமம் செய்ய வேண்டும். அது மூன்று வகை. பிராணாயாமம் செய்யும் போது வியர்வை தோன்றினால் அதமம், மனதில் சஞ்சலம் இருந்தால் மத்திமம், சிந்தையில் மகிழ்ச்சி ஏற்படின் உத்தமம். ரேதஸ் மேல் நோக்கி எழும் மந்திரம் ஜபித்துப் பிராணாயாமம் செய்வது சகற்பம் என்றும், இன்றி செய்வது விகற்பம் என்றும் பெயர் பெறும். நம் உடலில் பத்து வித வாயுக்கள் உள்ளன.

1. உயிருக்கு அத்தியாவசியமானதால் இதயத்தில் தங்குவது பிராணவாயு.
2. கீழ்நோக்கிப் பிரிவது அபானவாயு.
3. உடலெங்கும் நிறைந்து இரத்த ஓட்டம், சீரணமான உணவு உடலில் பரவ உதவுவது வியானவாயு.
4. உறுப்புகளின் சந்திகளில் தங்குவது உதானவாயு.
5. உடலைச் சமனப்படுத்தவது சமன வாயு.
6. விக்கல், கக்கல் ஏற்படக் காரணமானது கூர்ம வாயு.
7. தும்மலை உண்டாக்குவது கிரிகா வாயு.
8. கொட்டாவிக்கு உதவுவது தேவதத்தவாயு.
9. உடலை வீங்கச் செய்வது தனஞ்செய வாயு.
10. நாகன் வாயு - பாடுதல், கண் சிமிட்டல், மயிர்க்கூச்சலுக்கு உதவுவது.

இந்தப் பத்துவித வாயுக்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளல் மிகவும் அவசியம்.

5. பிரத்தியாகாரம் : இச்சைகளினால் பாதிக்கப்படும் ஐம்புலன்களைத் தடுத்து நிறுத்துவது இது.
6. புலன்களை அடக்கி மனதில் தெளிவை ஏற்படுத்தி ஒரு நிலையில் நிறுத்துவது தாரணை.
7. ஆதியந்தமில்லாப் பரம்பொருளை மனக்கண்முன் நிறுத்தி நிலைப்பது தியானம் ஆகும்.
8. ஈசனைத் தியானித்து மனம் உருகி மெய் மறந்த நிலையில் இருப்பது சமாதி ஆகும். இந்த எட்டும் யோக அங்கங்கள் ஆகும்.

Monday, 25 June 2012


பாண்டிச்சேரி மெகா வகுப்பு பங்கேற்பாளர்களின் பகிர்தல்கள்........

“எனக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் நான் வெகு நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தேன். நேற்று இரவு நான் ஆழ்ந்து தூங்கினேன். இன்று தான் என் வாழ்வில் முதல் முறை அலாரம் இல்லாமல் எழுந்திருக்கிறேன். இவ்வளவு நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருந்தும் எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை. என் முதுகுவலியிலிருந்து விடுதலை ஆனது போல் உணர்கிறேன்,” கூறுகிறார் பாண்டிச்சேரியை சேர்ந்த இல்லத்தரசி அபர்ணா.

“மைக்ரைன் (migraine) தலைவலியால் அவதிப்பட்டு வந்த நான், இன்று காலை யோகப் பயிற்சி செய்தவுடன் புது ரத்தம் பாய்ந்தது போல் உணர்ந்தேன். தலைவலி போய் விட்டது” கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணிபுரியும் அன்புமதி ஆச்சர்யத்துடன் கூறுகிறார்.

“இந்த யோகா பண்ணுவது எனது உடலை நானே கவனிப்பது போல் இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் இங்கே நடக்கும் ஒவ்வொரு செயலும் மிகக் கச்சிதமான முறையில் நடப்பதைப் பார்க்க அருமையாக இருக்கிறது. மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் ஈடுபாடு ஆச்சர்யத்தை கொடுக்கிறது, மற்ற இடங்களைலெல்லாம் காசு கொடுத்தால் கூட இத்தனை ஈடுபாட்டோடு செயலாற்ற மாட்டார்கள்” – சுமித்ரா, தட்டான்சாவடி.
10,069 பங்கேற்பாளர்களும், 2000 தன்னார்வத் தொண்டர்களும் சத்குரு நடந்து வரும் அந்த நடைமேடையை நோக்கி கூப்பிய கரங்களுடன் கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு, நெஞ்சில் ஆழ்ந்த அமைதியோடு நகர்கிறார்கள். அனைவருடனும் சத்குரு, கூப்பிய கரங்களுடன் கண்கள் ஈரமாக…

முதல் முறையாக தன்னார்வத் தொண்டு புரிவதற்காக பாண்டிச்சேரி வகுப்புக்கு சென்னையில் இருந்து வந்திருந்த திருமதி. மஹேஷ்வரி, இங்கு நடந்த நிகழ்வுகளைப் பார்த்து பிரமித்துப் போய் பகிர்ந்து கொள்கிறார்.

“இங்கு வருவதற்கு முன்பு சந்தேகங்களின் குவியல்களாக இருந்த மக்களின் இதயங்களை சத்குருவின் சக்திவட்டம் ஆட்கொண்டுவிட்டது.

பெற்ற தாயால் மகனை மாற்ற முடியவில்லை. ஆசிரியரால் மாணவர்களை மாற்ற முடியவில்லை. முதலாளிகள் தொழிலாளர்களை திருப்திபடுத்த முடியவில்லை. சத்குரு என்ற ஒரு தனிமனிதர் இந்த 2 1/2 நாட்களில் 10,069 மக்களை எந்தவித போதனையும் இன்றி அவர்களது வாழ்வின் அடிப்படையையே மாற்றியது எப்படி?

ஏன் சத்குருவை விளம்பரம் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டவர்கள் அனைவரும் சத்குரு போன்ற ஒரு மனிதரை உலகம் முழுவதும் தெரியப்படுத்தாவிட்டால், அது நமது தலைமுறையின் குற்றமாகிவிடும் என்று இப்போது கூறுகிறார்கள்.

சத்குரு அப்படி என்ன செய்தார்? பித்தளையை தங்கமாக்கினாரா? காற்றிலிருந்து விபூதி எடுத்தாரா? எதுவும் இல்லை. பிறகு அப்படி என்னதான் நடந்தது?

ஒவ்வொருவரையும் உள்நிலையில் இயல்பாக மலரச் செய்தார்.

இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பரிமாணமாக இருந்தாலும் கடினமான வழி அல்ல. விருப்பதோடு வந்து அமர்ந்தால் சாதாரண மனிதரும் எளிதில் இதை உணர்ந்து செல்ல முடியும். என்று கண்ணீர் மல்க நம்மிடம் பகிர்ந்து கொண்டு, உள்ளே செல்கிறார், தானும் சத்குருவுடன் சேர்ந்து கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள…

இந்த வகுப்பின் வெற்றிக்கு, ஈஷா-பாண்டிச்சேரி மக்களின் அன்பும் ஈடுபாடும்தான் காரணம் என்று மீண்டும் மீண்டும் சொல்லி பெருமிதம் அடைந்த சத்குரு, இவ்வளவு சிறிய நகரில் 10,000திற்கும் மேற்பட்ட மக்களை ஒரே இடத்தில் பிசிரில்லாமல் ஒருங்கிணைத்து அற்புதம் நிகழ்த்தி இருக்கிறார்கள் இவர்கள் என்றும் பாராட்டினார்.

“நீங்கள் திறந்த நிலையில் இருந்தால் ஒவ்வொரு ஷணமும் உங்களுடன் இருப்பேன்,” என்ற சத்குருவின் சத்திய வார்த்தைகள் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது…

பிரிய மனமில்லாமல் தன்னை சூழ்ந்துக் கொண்ட கூட்டத்திடம் கை கடிகாரத்தை காட்டி பிரிந்து சென்றார் சத்குரு

Wednesday, 20 June 2012

பொதுவாக சிலர் சொல்வார்கள், “இப்போதெல்லாம் வீட்டில் அமாவாசை பூஜை செய்ய நேரமே இல்லை, வருடத்திற்கு ஒருமுறை திதி கொடுத்து விடுகிறோமே அது போதாதா?” என்று. 

உடலை பரிசோதிக்க ஒரு மருத்துவமனைக்கு சென்றால் பாதி நாட்கள் அந்த மருத்துவமனையிலேயே தவம் கிடக்கிறோம். அப்பொதெல்லாம் கிடைக்கும் நேரம், ஒரு சில நிமிடங்கள் மட்டும் போதுமான அமாவாசை பூஜை செய்ய மட்டும் நேரம் இல்லை என்பதற்கு அக்கறையின்மை ஒரு காரணமாக இருந்தாலும் இன்னொரு காரணம், தமது குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு முன்னோர்களின் ஆசியை கிடைக்கவிடாமல் கொடிய விதி அவர்களை தடுக்கிறது.

இந்த முன்ஜென்ம கர்மாவானது, முன்னோர்களை வணங்கி பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவர்களின் மனதில் உருவாகாமல் செய்யும்.

பித்ருக்களை வணங்கவில்லை என்றால், அவரவர் குடும்பத்திற்கு திரும்பி வரும் ஆத்மாக்கள், தலைவாசலோடு நின்றுவிடும். நம் குடும்பத்தினரே நம்மை மதிக்கவில்லையே என்று அந்த ஆத்மாக்கள் வேதனை அடைந்து கண்ணீர் விடும்.

சங்கை காதில் வைத்தால் கடலோசை கேட்பது போல, பித்ருக்களின் அழுகை ஒலி ஸ்ரீமகாலஷ்மிக்கு கேட்கும். தன் கணவரால் அனுப்பப்பட்ட அவரவர் குடும்பத்தினரின் ஆத்மாகளை மதிக்காமல் இருக்கிறார்களே என்ற கோபத்தில் அந்த இல்லத்தை விட்டு ஸ்ரீமகாலஷ்மியும் விலகி விடுவாள்.

இறைவனை வணங்கினாலும், இறந்தவர்களையும் வணங்கினால்தான் சகல வளங்களையும் கொடுத்து செல்வந்தராக்கும் என்கிறது கருடபுராணம். ஸ்ரீமந் நாராயணனே கருடபுராணத்தில், “முன்னோர்களுக்கு பூஜை செய்தால்தான் தெய்வத்தின் ஆசியும், நன்மையும் கிடைக்கும்“ என்றார். மேலும் படிக்க 

Tuesday, 19 June 2012

கற்றாழை (Aloe vera)

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

கூந்தல் வளர

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால்

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

குளிர்ச்சி தரும் குளியலுக்கு

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

Saturday, 16 June 2012

கோடையை குளுமையாக்க...

1/2 லிட்டர் மோருடன் கடுகு, பெருங்காய கரைசல், உப்பு, கருவேப்பிலை கரைத்து இத்துடன் வறுத்த வெந்தயப் பொடி, சிறிது எலுமிச்சை பழச் சாறு கலந்து அருந்தினால் உடல் சூடு தணியும்.

வெள்ளரிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி உப்பு மிளகுத்தூள் சேர்த்து எலுமிச்சை பிழிந்து சாப்பிட குளிர்ச்சியைக் கொடுக்கும்.

பயத்தம் பருப்பை தால் செய்து சாப்பிட உஷ்ணம் குறையும்.

நிறைய இடங்களில் மண்பானை கிடைக்கும். அதை வாங்கி தண்ணீரில் ஊறப்போட்டு, அதில் குடிநீர் ஊற்றி குடியுங்கள். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள்.

இரவு படுக்கும் முன்பு உள்ளங்கால்களில் விளக்கெண்ணெய் தடவினால் சூடு குறையும்.

சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி மோர் சாதத்துடன் கலந்து காலையில் சாப்பிடலாம்.

அதிக எண்ணெய், காரம், சூடான பானங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

குளிர்பானம், ஐஸ்கிரீம் என அதிகம் செலவு செய்யாமல் வீட்டிலேயே பானங்களை தயாரித்தால் உடலுக்கும் நல்லது.

Tuesday, 12 June 2012

பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச்சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட்ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

இந்த செல்போன் சார்ஜர் கருவியை பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல்போன் சார்ஜரில் உள்ள விசிறியை சுற்றும். அந்த விசிறி மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுற்றும். டைனமோ சுற்றுவதால் ஏசி மின்சாரம் உற்பத்தியாகிறது. செல்போனை டிசி மின்சாரம் மூலமே சார்ஜ் செய்யமுடியும். இதையடுத்து கிடைக்கும் ஏசி மின்சாரத்தை டிசி மின்சாரமாக மாற்ற சிறிய டையோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இதனுடன் இணைத்துள்ள செல்போன் சார்ஜ் ஆகிறது. இதற்கு தயார்செய்ய அதிகபட்சமாக ரூ.350 வரை செலவாகிறது. சைக்கிள் டைனமோ(6 வோல்ட்), தகடால் ஆன விசிறி, டையோடு(4007), வயர், சிறிய பெட்டி ஆகிய பொருட்களை கொண்டு இதை தயாரிக்கலாம். பஸ், ஆட்டோ, கார், பைக் கோன்ற வாகனங்களில் நெடுந்து£ரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என அவர் கூறினார்.

Thursday, 7 June 2012


எதிர்காலத்தை முன்னதாகவே தெரிந்துகொள்ள பலரும் விரும்புகிறீர்கள்.உங்கள் வாழ்கையின் இறுதிக்கட்டம் எது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்,என்னெனில் ,அதில் ஒன்றும் ஒளிவு மறைவு இல்லை .இறுதிக்கட்டம் என்பது இறப்புதான்,இல்லையா ?எனவே நாளை என்ன நடக்கும் என்று தெரிந்து என்ன செய்யபோகிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் இன்று என்ன நடக்கிறது என்பதே தெரியாதபோது,நாளைபற்றி என்ன பிரச்சனை?அது உபயோகமில்லாத வேலை.எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்று நீங்கள் தெரிந்துகொண்டால் , அது நிச்சயமாக இப்பொது இருபதையும்விட முட்டாள்தனமான வாழ்க்கையைத்தான் வாழ்வீர்கள். எங்கோ ,கணித்து வந்தவர்கள்தான் ,மிக மோசமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
நீங்கள் இந்தப் பூமிக்கு வந்ததே வாழ்க்கையை உணர்வதற்குதான்.நாளை நரகமேதான் நடக்கட்டுமே!அதை மனம் கோணாமல் ஏற்றுக்கொண்டு அதில் இருந்து எதாவது கற்றுக் கொள்ளுங்களேன்!ஏனெனில்,வெளிப்புறத்தில் எது நடந்ததோ அது எபோதும் முக்கியமில்லை.ஓரளவு முக்கியம்தான்,இருந்தாலும் நீங்கள் அதை மனதளவில் எப்படி எதிர்கொண்டீர்கள் என்பதுதான் அதைவிட முக்கியமானது.எப்போதோ ஒரு முறை உங்கள் வாழ்வில் மிகவும் கடினமான காலத்தை மிகவும் எளிதாக எதிர்கொண்டு ,இப்பொது நன்றாக இருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்,கடந்து வந்த அந்தச் சோதனையான காலத்தை இப்பொது பெருமிதத்தோடு நினைத்து கொள்வீர்கள்தானே!எனவே,சோதனையானே காலம் என்பது எபோதுமே பிரச்னை இல்லை,அதை நீங்கள் எந்த அளவு வேதனையாக மாற்றிகொண்டீர்கள் என்பதுதான் பிரச்சனை.எது நடந்தாலும் அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருந்தால்,உங்கள் வாழ்க்கையில் வேதனையைவிட சாதனைதான் அதிகமாக இருக்கும் .எனவே வாழ்க்கையை அதன்போக்கில் உணர்வதற்கு கற்றுக்கொள்ளுங்கள்..------- சத்குரு ஜக்கி வாசுதேவ்..

Tuesday, 5 June 2012

விவசாயிகள் விஞ்ஞானத்தைக் கத்துக்கணும்!

பாண்டிச்சேரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கூடப்பாக்கம் கிராமம் கொண்டாட்டத்தில் இருக்கிறது. 'எங்க மாநிலத்துக்குக் கிடைச்சிருக்கும் முதல் பத்ம விருது இது'' என்கிறார்கள் ஊர்க்காரர்கள். பூரிப்பில் இருக்கிறார் 'பத்மஸ்ரீ’ வெங்கடபதி. ''தோட்டத்துக்குப் போலாமா?'' என்று 'ஹுண்டாய் வெர்னா’ காரில் செல்கிறார்.

வெங்கடபதி தோட்டத்தில் அவர் உருவாக்கிய புதிய ரக கனகாம்பரச் செடிகள் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிறப் பூக்களால் நிரம்பிவழிகின்றன. சவுக்கு மரங்கள் இயல்பான வடிவத்தைக் காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்கின்றன. கொய்யாப் பழங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடைக்குக் காய்த்துத் தொங்குகின்றன. வெங்கடபதி நான்காவது வரைக்கும்தான் படித்திருக்கிறார். ஆனால், பேசத் தொடங்கினால் தாவரங்களின் தகவமைப்பு, குரோமோசோம்கள், மரபணு மாற்றம், அணுக்களின் ஆற்றல் என்று பின்னி எடுக்கிறார்.

''விஞ்ஞானத்தில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?''

''ஆர்வம் எல்லாம் இல்லை. நிர்பந்தம். பரம்பரை பரம்பரையா விவசாயம்தான் தொழில். முப்போகம் பண்ணினோம். ஆனா, உழவன் கணக்குப் பார்த்தா உழக்குக் கூட மிஞ்சாதுங்கிறது ஒருநாள் எனக்கும் நேர்ந்துச்சு. ஊரைச் சுத்திக் கடன். தற்கொலை முடிவுக்கே வந்துட்டேன். கடைசியா ஒருமுறை வேளாண் துறை ஆளுங்களைப் பார்த்து யோசனை கேட்டுப் பார்ப்போம்; ஏதாவது வழி கிடைக்குமானு கிளம்பினேன். பெரியகுளம் தோட்டக்கலைத் துறை இயக்குநரா இருந்த சம்பந்தமூர்த்தியைச் சந்திச்சேன். மலர் சாகுபடி நல்ல வருமானம் தரும்னு சொன்னார். நெல்லை விட்டுட்டு, டெல்லி கனகாம்பரத்தைக் கையில் எடுத்தேன். நல்ல ஈரப்பதம் வேணும் அது வளர; சீதோஷ்ண நிலை 23 டிகிரியைத் தாண்டக் கூடாது; இங்கே எல்லாம் வளர்க்கவே முடியாது. ஆனா, வளர்த்தால் நல்ல வருமானம் கிடைக்கும். என்ன செய்யலாம்? அப்பதான் விஞ்ஞானத்தை வரிச்சுக்கிட்டேன்.''

''அயல் மகரந்தச் சேர்க்கை, மரபணு மாற்றம், திசு வளர்ப்பு முறை... இந்த விஷயங்களை எல்லாம் எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்?''

''அய்யா, நான் கைநாட்டுதான். ஆனா, ஒரு விஷயம் தோணுச்சுன்னா, அதை யார்கிட்ட கேட்டா முடிக்கலாமோ, அவங்ககிட்ட போய்டுவேன். உயர் ரக மலர் உற்பத்தியில் ஜெர்மனிக்காரர்கள் கில்லாடிகள்னு சொன்னாங்க. அப்ப இந்தியாவுக்கு வந்திருந்த ஜெர்மனி அமைச்சர் ஒருத்தர் 'இந்தியாவுக்கு வேண்டிய ஒத்துழைப்பை நாங்க வழங்குவோம்’னு பேசியிருந்தார். அவருக்குக் கடிதம் எழுதி, உயர் ரகப் பூக்களை உருவாக்கும் தொழில்நுட்பம் தொடர்பா எனக்கு உதவணும்னு கேட்டேன். அவர் ஒரு ஜெர்மானிய விவசாயியோட தொடர்பை எனக்கு உருவாக்கிக் கொடுத்தார். நானே ஒரு ஆய்வுக்கூடம் அமைச்சு, திசு வளர்ப்பு முறையில் கன்னுங்களை உருவாக்கக் கத்துக்கிட்டேன்.

ஒருநாள் என்னோட சம்சாரம் விஜயாள், கனகாம்பரத்தை ஏன் வெவ்வேற நிறத்துல உருவாக்கக் கூடாதுனு கேட்டாங்க. கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழக இயக்குநரா இருந்த ஸ்ரீரங்கசாமி அய்யா வைப் போய்ப் பார்த்து யோசனை கேட்டேன். வழிகாட்டினார். அப்துல் கலாம் அய்யா அப்போ ஸ்ரீஹரிகோட்டாவில் விஞ்ஞானியா இருந்தார். அவரோட பழக்கம் ஏற்படுத்திக்கிட்டேன். கல்பாக்கம் போய் காமா கதிர்வீச்சு முறையில் கனகாம் பரத்தோட குரோமோசோம்களைப் பிரிச்சு ஒரு புதிய வகையை உருவாக்கினேன். அந்தக் கன்னுக்கு 'அப்துல் கலாம்’னு பேர் வெச்சேன். சாதாரண டெல்லி கனகாம்பர ரகம் ஒரு செடிக்கு 30 பூக்கள்தான் பூக்கும். அதுவும் பத்து மணி நேரம் கூடத் தாங்காது. ஆனா, 'அப்துல் கலாம்’ ரகம் ஒரு செடிக்கு 75 பூக்கள் பூக்கும். 17 மணி நேரம் வரைக்கும் பொலிவா இருக்கும். இதேபோல, கல்பாக்கம் அணு விஞ்ஞானி பாபட் உதவியோட புது சவுக்கு ரகத்தை உருவாக்கினேன். சாதாரண சவுக்கு ஏக்கருக்கு 40 டன் விளைஞ்சா, இந்த ரகம் 200 டன் கொடுக்கும். கொய்யாவும் அப்படித்தான். இன்னும் நிறைய ஆய்வுல இருக்கு.''