Monday 25 June 2012


பாண்டிச்சேரி மெகா வகுப்பு பங்கேற்பாளர்களின் பகிர்தல்கள்........

“எனக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் நான் வெகு நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தேன். நேற்று இரவு நான் ஆழ்ந்து தூங்கினேன். இன்று தான் என் வாழ்வில் முதல் முறை அலாரம் இல்லாமல் எழுந்திருக்கிறேன். இவ்வளவு நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருந்தும் எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை. என் முதுகுவலியிலிருந்து விடுதலை ஆனது போல் உணர்கிறேன்,” கூறுகிறார் பாண்டிச்சேரியை சேர்ந்த இல்லத்தரசி அபர்ணா.

“மைக்ரைன் (migraine) தலைவலியால் அவதிப்பட்டு வந்த நான், இன்று காலை யோகப் பயிற்சி செய்தவுடன் புது ரத்தம் பாய்ந்தது போல் உணர்ந்தேன். தலைவலி போய் விட்டது” கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணிபுரியும் அன்புமதி ஆச்சர்யத்துடன் கூறுகிறார்.

“இந்த யோகா பண்ணுவது எனது உடலை நானே கவனிப்பது போல் இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் இங்கே நடக்கும் ஒவ்வொரு செயலும் மிகக் கச்சிதமான முறையில் நடப்பதைப் பார்க்க அருமையாக இருக்கிறது. மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் ஈடுபாடு ஆச்சர்யத்தை கொடுக்கிறது, மற்ற இடங்களைலெல்லாம் காசு கொடுத்தால் கூட இத்தனை ஈடுபாட்டோடு செயலாற்ற மாட்டார்கள்” – சுமித்ரா, தட்டான்சாவடி.

No comments:

Post a Comment